உலகில் 5வது பெரிய வைர மோதிரத்தை பரிசாக பெற்ற தமன்னா : கவுண்டமணியை சந்திக்க விருப்பம்!

உலகில் 5வது பெரிய வைர மோதிரத்தை பரிசாக பெற்ற தமன்னா : கவுண்டமணியை சந்திக்க விருப்பம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். கேடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில காலத்திலேயே முன்னணி நாயகி பட்டியலில் இடம் பிடித்தவர் தமன்னா.

இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் "சைரா நரசிம்ம ரெட்டி" படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில், சிரஞ்சீவியின் காதலியாகவும், சுதந்திரப் போராட்டத்திற்காக போராடும் இந்திய வீராங்கனையாகவும் நடித்துள்ளார். 

அமிதாப், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் கலெக்‌ஷனை அள்ளிவருகிறது. இந்த படத்தில் ஹீரோயின் என கூறப்பட்ட நயன்தாராவின் ரோலை விட தமன்னாவிற்கு (tamannaah) தான் அதிகம் முக்கியத்துவம் இருந்தது.

twitter

இந்நிலையில் தமன்னாவின் நடிப்பை பாராட்டும் விதமாக சைரா படத்தின் தயாரிப்பாளர் ராம் சரணின் மனைவி உபஸனா அவர்கள் ஒரு பெரிய வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார். இந்த வைர மோதிரம் உலகில் 5 வது பெரிய வைர மோதிரம் என்று தகவல்கள் வெளியானது. 

இதன் விலை மட்டும் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்பதது. அதற்கு சான்றாக சில புகைப்படங்களையும் இணையத்தளங்களில் வெளியானது. மேலும் தமன்னா வைர மோதிரத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

பட வாய்ப்புகள் குறைவு.. திருமணத்துக்கு தயாரான நடிகை லட்சுமி மேனன் : விரைவில் டும் டும்!

இவ்வளவு பெரிய பரிசளிப்பின் பின்னணி என்ன என்பது தெரியாமல் சக நடிகைகள் திகைத்து இருக்கின்றனர். இந்நிலையில் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா, யோகி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள பெட்ரோமாக்ஸ்  படம் நாளை வெளியாக உள்ளது. 

twitter

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாரர் காமெடி கதையை மையப்படுத்திய இப்படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமன்னா, தேவி, தேவி 2 படங்களில் நடித்த பின்னர் மீண்டும் பேய் படத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. 

ஆனால் இது தெலுங்கில் அனந்த பிரம்மோ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம். மற்ற பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என கூறியுள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை யாராவது படமாக எடுக்க முன்வந்தால் அதில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார். 

twitter

மேலும் கொஞ்சமும் ஓய்வு இல்லாமல் வேலையாக நடித்துக் கொண்டிருப்பதால் இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை. ஆனால் கிசுகிசு எழுகிறவர்கள் எப்போதும் யாருடனாவது இணைத்து என் காதல் கதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். 

அப்படி இணைத்து எழுதுகிற ஒருவரை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தால் அவரைக் காதலிக்கக்கூட தயாராக இருக்கிறேன் என்று தமன்னா வேடிக்கையாக கூறியுள்ளார். மேலும் கவுண்டமனி – செந்தில் ஆகியோரது பெட்ரோமாக்ஸ் காமெடியை கேள்வி பட்டதில் இருந்து உடனடியாக கவுண்டமனியை சந்திக்க வேண்டும் என்று விரும்புவதாக தமன்னா (tamannaah) கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அம்மாவும் தெய்வம்தான்..சினேகாவின் பிரசவ வலி பற்றி மனம் திறக்கும் பிரசன்னா !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!