கடந்த பல வருடங்களாக பெண் தொழிலதிபர்கள் (women) வளர்ந்து வரும் நிலையில், அவர்களுடைய சாதனைகளையும், அதன் பாதையையும் கணக்கில் கொண்டு 25 பெண் ஆற்றல்மிகு சாதனையாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. “முதலாளித்துவத்தின் கருவி”யாக விளங்கும் அமெரிக்க தொழில்துறை இதழான ஃபோர்ப்ஸ் உருவாக்கிய ஆசியாவின் ஆற்றல்மிகு பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம் பெற்ற நான்கு பெண்களைப் பற்றி பார்க்கலாம்.
போர்ப்ஸ்ஸில் இடம்பெற்ற 4 இந்திய பெண் தொழிலதிபர்கள்
1. உபாசனா தாக்கு – துணை நிறுவனர் , மோபிகுவிக்
கடந்த வேலை : பேபால் (Paypal) சீனியர் ப்ரோடக்ட் மேனேஜர் மற்றும் க்ரீன் கார்டு வைத்திருக்கும் இவர் 2008ல் சிலிக்கான் வாலியை விட்டு இந்தியா வந்தார்.
சிறப்பு : மோபிகுவிக்கின்(MobiKwik) துணை நிறுவுனரான தாக்குவின் நோக்கம் அனைத்து இந்திய வியாபாரிகளுக்கும்/ சில்லறை விற்பனையாளர்களுக்கும் கட்டணம் செலுத்துவதை எளிதாக்குவதே ஆகும். இதற்காக இவர் ஒரு வருடம் வரை கிராமப்புறத்தில் என்ஜிஓவில் வேலை பார்த்து, கிராம மக்களின் நிதி தேவையைப் புரிந்துகொண்டு 2009ல் மோபிகுவிக் ஆரம்பித்தார். உபெர், சோமேட்டோ போன்ற வாடிக்கையாளர்களுக்கு தற்போது மோபிகுவிக் டிஜிட்டல் வாலட் தீர்வுகளைத் தருகிறது. 100 மில்லியன்க்கும் மேற்பட்ட பயனாளர்களையும், ஒரு மில்லியனுக்கு மேல் தினமும் பரிவர்த்தனையும் செய்து கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.
படித்தது : இவர் என்ஐடி(NIT) ஜலந்தரில் பொறியியல் படித்து, பின்பு ஸ்டாண்டபோர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு(MS) முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘வளருவதற்கு இன்னும் நிறைய இடம் இருக்கிறது’ என்று கூறுகிறார்.
2. ஃபால்குனி நாயர் – நிறுவனர்,நைகா
கடந்த வேலை : கோடக் மஹிந்திராவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றியுள்ளார்
சிறப்பு : ஃபால்குனி நாயர் தனது வேலையைத் துறந்து இரண்டு மில்லியன் டாலர் செலவில், நைகா என்ற அழகு சார்ந்த சில்லறை வியாபாரத்தைத் துவங்கினார். இன்று இந்திய அளவில் 46 கடைகளும், ஒவ்வொரு மாதமும் 45 மில்லியன் வாடிக்கையாளர்களை தன் இணையதளத்திலும், மொபைல் ஆப்பிலும் கொண்டிருக்கிறது.
படித்தது : பி.காம் மற்றும் டிம்ப்ளோமா இந் மேனேஜ்மென்ட் – மும்பை மேலாண்மை பல்கலைக்கழகத்திலும் ஐ.ஐ.எம் அகமதாபாதிலும் முடித்திருக்கிறார்.
ஃபோர்ப்ஸிடம் அவர், ‘நான் ஏதாவது ஒன்றை அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்துப் பார்க்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
3. ஸ்மிதா ஜட்டியா – நிர்வாக இயக்குனர், ஹார்ட்காஸ்ட்ல் ரெஸ்டாரண்ட்ஸ்
கடந்த வேலை : தன் குடும்ப நிறுவனமான வெஸ்ட்லைஃப் டெவெலப்மென்டோடு(westlife development) ஒரு அங்கமாக, ஹார்ட்காஸ்ட்ல் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் தான் ஸ்மிதா கடந்த பத்து வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
சிறப்பு : ஒரு தலைமை நிறுவனமான HRPL, மெக் டொனல்ட்ஸ் பிராண்ட் ரெஸ்டாரண்ட்ஸ்களை நடத்தி, 5.6 மில்லியன் டாலர்கள் மூன்று மடங்கு லாபத்தை ஈட்டி 23 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2022ல் மேலும் 100 கடைகளைத் திறக்க இருக்கும் ஸ்மிதா, ‘சந்தை முன்னோக்கி சென்றுகொண்டே இருக்கிறது, நீங்கள் உங்களை அதற்குத் தயார் செய்யவில்லை என்றால் நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்’ என்று கூறுகிறார்.
4. அனிதா டோங்க்ரே – ஹவுஸ் ஒப் அனிதா டோங்க்ரே , துணை நிறுவனர்
சிறப்பு : 1995ல் தன் மும்பை அபார்ட்மெண்டில், இரண்டு தையல் இயந்திரங்களைக் கொண்டு, தன் தங்கை மீனா செஹ்ராவுடன் அனிதா டோங்க்ரே ஃபேஷன் பேரரசையே உருவாக்கினார். இன்று மொரிசியஸ் முதல் மேன்ஹாட்டன்வரை 272 கடைகளை கொண்டுள்ளது அனிதா டோங்க்ரேவின் ப்ராண்ட். அவருடைய சிக்னேசர் ஸ்டைல் அனைவரையும் கவரும் வகையில் மாடர்ன் அழகில் அவரை இந்தியாவின் முன்னணி ஃபேஷன் டிசைனராக உருவாக்கி இருக்கிறது. நியூயார்க்கை தழுவிய பிஈ ஃபிர்ம் ஜெனரல் அட்லாண்டிக்(PE firm General Atlantic)கில் 40 சதவிகித பங்குகளை வைத்துள்ளார். மேலும் அவருடைய நிறுவனம், எண்ணற்ற கிராமப்புற பெண்களுக்கு தொழிலைக் கற்றுக்கொடுப்பதோடு அவர்கள் வாழ்க்கையையும் மேன்படுத்துகிறார்.
படித்தது : எஸ்.என்.டி.டி மகளிர் பல்கலைக்கழகத்தில் பேஷன் டிசைன்
“அமெரிக்காவில் ஏராளமான வாய்ப்புகள் இருந்தாலும், இந்திய விஷயங்களை உருவாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும், இங்கு பல வாய்ப்புகள் உள்ளன” என்று அவர் கூறுகிறார்.
உங்களுக்கான வாழ்க்கைப்பாதையை எப்படித் தேர்ந்தெடுப்பது? (How to choose your career?)
முதலில் உங்கள் வாழ்க்கைப் பாதையில் இருக்கும் வளங்களை ஆராய்ந்து பரிட்சை செய்து தேர்வு செய்வோம். இந்த வேலையை எளிதாக்க நமக்கு பல இணைய தளங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில சிறந்தவற்றைப் பார்க்கலாம்.
வாழ்க்கைப் பாதையில் இருக்கும் வளங்கள் (Career path resources)
Pexels
முதலில் உங்கள் வாழ்க்கைப் பாதையில் இருக்கும் வளங்களை ஆராய்ந்து பரிட்சை செய்து தேர்வு செய்வோம். இந்த வேலையை எளிதாக்க நமக்கு பல இணைய தளங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில சிறந்தவற்றைப் பார்க்கலாம்.
1. மைபாத் (mypath)
நீங்கள் ஒரு புதிய வாழ்க்கைப்பாதையை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் அல்லது மாற்ற நினைக்கிறீர்கள் என்றால் இளைய தலைமுறை வல்லுநர்கள் உருவாக்கிய இந்த இணையதளத்தில் உள்ள எண்ணற்ற பரிந்துரைகளும், குறிப்புகளும் உங்களுக்கு மிகவும் கைகொடுக்கும். நீங்கள் ஒரு துறையை தேர்ந்தெடுத்து விட்டீர்கள், அதில் எப்படி முன்னேறுவது, அடுத்த படி என்ன என்ற விளக்கங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்
2. லேர்ன் ஹௌவ் டு பிகம் (Learn how to become)
நீங்கள் ஒரு நடிகராக விரும்புகிறீர்கள், டிசைனராக விரும்புகிறீர்களா, இசைக்கலைஞர் ஆகா வேண்டுமா, படம் எடுக்க ஆசையா? இப்படி எந்த விருப்பமாக இருந்தாலும், அதற்கான தனிப்பட்ட குறிப்புகளை இந்த இணைய தளத்தில் காணலாம். மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.
3. ஹார்ட்வார்ட் பிசினஸ் ரிவியூ (Harvard business review)
இந்த இணையதளத்தில் இருக்கும் கட்டுரை உங்களை நீங்கள் விரும்பும் வாழ்க்கை பாதையை எப்படி அமைத்துக்கொள்வது என்று ஊக்கப்படுத்தி திட்டமிட உதவும். மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.
உங்கள் திறமைக்கு ஏற்ற சரியான வாழ்க்கைப் பாதையை தேர்வு செய்ய (To choose a career matching your skills)
Pexels
உங்கள் திறமையை ஆய்வு செய்து கொள்ளுங்கள். அதற்கான சில பிரமாதமான இணைய தளங்களைப் பற்றி பார்க்கலாம்.
1. கேரியர் பர்ஃபெக்ட்
இந்த இணைய தளத்தில் நீங்கள் இலவசமாக உங்கள் திறமையை சோதித்துக்கொள்ள ஒரு பரீட்சை மேற்கொண்டால் போதும். இதற்காக நீங்கள் ஒன்றும் தயாராக வேண்டியதில்லை. வரும் கேள்விகளுக்கு உங்கள் மனதில் தோன்றும் பதில் கொடுங்கள் போதும். விரைவாக செய்ய ஒன்றும், முக்கியமான வேலை மதிப்புகளையும் தெரிந்துகொள்ளவும் என்று இரண்டு விதமான தேர்வுகளை பயன்படுத்தி உங்கள் திறமையை சோதித்து உங்கள் வாழ்க்கைப் பாதையை தேர்வு செய்யுங்கள். மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்
2. மைண்ட் டூல்ஸ்
வேலை இடங்களில் நீங்கள் ஒரு தலைவராக, குழு உறுப்பினராக, முதன்மையாகத் திகழ இந்த இணைய தளத்தில் உள்ள மைண்ட் டூல்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கேரியருக்கு தேவையான தகுதியை வளர்த்துக்கொள்ள, பிரச்சனைகளை சமாளிக்க, சரியான முடிவுகளை தேர்ந்தெடுக்க, நேரத்தை மேலாண்மை செய்ய என பல தலைப்புகளில் உங்களை ஊக்குவித்து உங்கள் திறமையை வளர்க்க இந்த இணையதளம் உதவும். மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.
3. சிமிலர் மைண்ட்ஸ்
இந்த இணைய தளத்தில் நுழைந்ததும் உங்களுக்கு 55 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு சரியானபதிலளித்து, பின் அதன் முடிவைப் பொருத்து உங்கள் வாழ்க்கைப் பாதையை (career ) தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.
நீங்கள் தற்போது செய்யும் வேலை திருப்திகரமாக இல்லையெனில் (For a job change)
Pexels
வேறு வேலைகளை செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்றால், அதற்கும் பல்வேறு இணைய தளங்கள் உங்களுக்கு வழிகாட்டும். அவற்றுள் சில,
1. பிரேசன்
நீங்கள் மேலும் ஒரு டிகிரி படிக்காமல், வேறு வேலைகளுக்கு எப்படி மாறலாம் என்று இந்த பிளாக்கில் ஏழு விதமான வாழ்க்கைப் பாதையைப் பற்றியும், உங்களுக்கு என்ன தேவை, அந்தத் துறையில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதுவரை விளக்கமாக கொடுத்துளார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்
2. கேரியர் ஷிஃப்டர்ஸ்
இந்த இணைய தளத்தில், பிரகாசமான உந்துதல் கொண்ட நபர்கள் தவறான கேரியரில் மாட்டிக்கொண்டதாக நினைத்தால், அவர்களுக்கு சரியான தேர்வை தர உதவும் இந்த இணையதளம்.மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்
3. லைவ்கேரியர்
2005ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக சரியான உறுதியான தற்குறிப்பை(resume) தயாரிக்க உதவுகிறது லைவ்கேரியர். இவர்கள் பதினோரு வழிகளில் திட்டமிட்டு கேரியரை எப்படி மற்ற வேண்டும் என்று விளக்கியுள்ளார்கள். மேலும், மாதிரி தற்குறிப்புகளையும், உங்களுக்கு ஏற்ற தற்குறிப்பையும் இலவசமாக இந்த இணைய தளத்தில் உருவாக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.
தற்கால பெண் சாதனையாளர்களையும், சரியான வாழ்க்கைப் பாதையை எப்படி தேர்வு செய்வது என்றும் இதுவரை பார்த்தோம். சாதாரண நிலையில் இருந்துதான் இவர்கள் படிப்படியாக உயர்ந்திருக்கிறார்கள்! பொறுமையாக, இடைவிடாது உங்கள் முயற்சியை நீங்கள் விரும்பும் தொழிலில் ஈடுபடுத்தினால், பெரிய வெற்றிகள் நிச்சயம்.
மேலும் படிக்க – நேர்காணல் எதிர்கொள்ளும் சமயத்தில் உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை உருவாக்குவது எப்படி? மேலும் படிக்க – வெற்றிகரமான பெண்மணிகள் அலுவலகத்தில் முதல் மணிநேரத்தை எவ்வாறு கையாளுகிறார்கள் ?
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!