அலுவலக வேலையை சாமார்த்தியமாக கையாள : வெற்றிகரமான பெண்மணிகள் அலுவலகத்தில் முதல் மணிநேரத்தை எவ்வாறு கையாளுகிறார்கள் ?

அலுவலக வேலையை சாமார்த்தியமாக கையாள : வெற்றிகரமான  பெண்மணிகள் அலுவலகத்தில் முதல் மணிநேரத்தை எவ்வாறு  கையாளுகிறார்கள் ?

ஒரு ஒரு நாளும் (கணமும் ) நமக்கு ஆயிரம் விஷயங்களை கற்று கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அதே போல,எல்லா அனுபவங்களும் நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கும். அதை புரிந்து நடப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.


அலுவலகம் (office) செல்லும் பெண்கள் தனது வேலையை சரியாகவும் திட்டமிட்டதுபோல் செய்யவும் முயற்சிப்பார்கள். இதனால் மன அழுத்தத்தையும் எளிதில் அகற்றலாம்.ஒரு நாளில், எல்லாம் சரியாக திட்டமிட்டதுபோல் நடந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே! இருப்பினும், அதை செய்வதற்கு முன் ஆயிரம் தொந்தரவுகள் வரும், போகும்.
இதை  எவ்வாறு கையாள்வது என்று சிந்திக்கிறீர்களா? நாங்கள் உங்களுக்கு சில யோசனைகளை அளிக்க உள்ளோம். உங்கள் பணியில் முதல் ஒரு மணிநேரத்தை (first hour) கீழ் கூறி இருக்கும் விதத்தில் கையாளுங்கள். அதன் பிறகு மீதம் உள்ள நேரங்களை எளிதில் சமாளிக்கலாம்.


வாழ்த்துக்களை தெரிவியுங்கள் -


gifskey %282%29ஆம் ! நீங்கள் உங்கள் நாளின் அதிக பட்சச நேரத்தை உங்கள் சக ஊழியர்களுடன் செலுத்துவதினால், முதலில் அந்த நாள் நன்றாக அமைய  அவர்களுக்கு உங்கள் வாழ்த்தை தெரிவியுங்கள். அதன் பிறகு அவர்களின் விருப்பங்கள், வேலையின் நோக்கம் என்று சில சுவாரசியமான விஷயங்களையும் பிரேக் டைம்மில் தெரிந்து கொள்ளுங்கள். இது அவர்களுடன் மகிழ்ச்சியாக வேலை செய்ய உதவும். முக்கியமாக காசிப்பை (gossip) இந்த முதல்மணிநேரத்தில் தவிர்க்கவும் !


உங்களை  பிரதிபலிக்கவும் -


காலையில் எழுந்ததில் இருந்து ஒரு நாளில் ஆயிரம் யோசனைகள் வரும். ஒரு புதிய நாள், வேலை, உடல் நலம் என்று அனைத்திற்கும் நன்றி கூறி, சில நிமிடங்கள்  ஒதுக்கி, உங்கள் திறமைகளை நினைத்து சந்தோஷம் அடையுங்கள் (#StrengthOfAWomen).


உங்கள் தேவைகளை (வேலைகளை) பட்டியல் இடவும் (to-do list) -


giphy %281%29


முதலில், உங்களுக்கு எது  தேவை, எது தேவை இல்லை என்று தெளிவாக தெரியவேண்டும். நாம் அனைவரும் நினைப்பது என்னவோ நம் நேரத்தை மிக  சிறந்த வழியில் பயன்படுத்தி எல்லா வேலைகளையும் (work) சிறப்பாக முடிக்கவேண்டும் என்றுதான். இருப்பினும் நம் சிந்தனைகளோ அலைபாயும்.முன்தினம் பட்டியலிட்ட வேளைகளில் எது முடிந்தது, எது மீதம் இருக்கிறது, மேலும் அந்த பட்டியலை மேம்படுத்த என்ன மாற்றம் தேவை என்று யோசித்து சரிசியுங்கள்.நீங்கள் பார்க்கவேண்டிய விஷயங்கள் மற்றும் வேலைகள் ஆயிரம் இருந்தாலும், எதை முதலில் முடிக்க வேண்டும், எவை சிறிது நேரம் கழித்து செய்யலாம் என்று தெளிவாக சிந்தித்து செயல்படுங்கள்.


 


முதலில் கடினமானவை கையாளவும் -


உங்கள் வேலைகளை பட்டியல் போட்டுவிடீர்கள் என்றால் முதலில் நீங்கள் அதிகம் தயங்கும் / பயப்படும் பணியை முடித்து விடுங்கள். இந்த ஒரு மணிநேரத்தில் இதை முக்காவாசி முடித்து விட்டால், உங்கள் மீதி நேரத்தில் எளிதாக உள்ள பணிகளை கையாளலாம்!இதற்கு மாறாக மதியம் உணவிற்கு பிறகு உங்கள் முக்கிய பணிகளை செய்ய நினைத்தீர்கள் என்றால், உங்கள் வயிறு நிரம்பிய சாப்பாடு, அதற்கு மேல் வரும் அந்த சோம்பலான (ஆழமான ) தூக்கம், உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்பது சந்தேகம்தான் !


கவனச்சிதறல்களை அகற்றுங்கள் -


gifskey %284%29
உங்கள் தொலைபேசியில் வரும் தேவையற்ற அழைப்பு(உங்கள் பாஸ் அழைப்பை தவறவிடாதீர்கள்!) , அந்த தேவையற்ற திசை திருப்பும் உரையாடல்கள், மெஸேஜ், புறம் பேசுவது, இவை அனைத்தையும் அகற்றுங்கள். மேலும் உங்கள் இன்பாக்சில் (inbox) இருக்கும் தேவையற்ற மின்னஞ்சல்களை தவிர்க்கவும்.முதலில் எதை படித்து பதில் அளிக்க வேண்டும், அதில் எவை சிறிது நேரம் காத்திருக்கலாம் என்று தெளிவு வேண்டும். இல்லாவிட்டால், முதல் மணிநேரம் உங்கள் மின்னஞ்சலை பார்த்தபடியே கழிந்து விடும். உங்கள் முக்கியமான வேலைகள் அனைத்தும் நின்று விடும்.


மேலும் படிக்க -வேலையில் கவனச்சிதறல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்


எனவே, உங்கள் முதல் மணிநேரத்தில் உங்கள் நாளிற்கான அணைத்து திட்டங்கள், கடினமான வேலைகள் அனைத்தையும் செய்து முடிங்கள். அலுவலகத்தில் நீங்கள் உங்கள் முதல் மணிநேரத்தை எவ்வாறு கழிப்பீர்கள் என்று எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


பட ஆதாரம்  - பிக்ஸாபெ,ஜிபி,ஜிப்ஸ்கி ,பேக்செல்ஸ் 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.