நேர்காணல் எதிர்கொள்ளும் சமயத்தில் உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை உருவாக்குவது எப்படி!

நேர்காணல் எதிர்கொள்ளும் சமயத்தில் உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை உருவாக்குவது எப்படி!

பொதுவாக ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு சென்றால் இனம்புரியாத பதற்றம் தொற்றிக்கொள்வது வழக்கம். அறிமுகமில்லாத நிறுவனத்தில் நேர்காணல் (interview) செய்யும் போது உங்கள் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

உங்கள் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்ட நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு விரிவாக காண்போம்!

 • முதலில் நேர்காணல் செல்லும் போது எவ்வித பயமும் இல்லாமல் செல்லுங்கள். மற்ற நபர்களுடன் தொடர்புகொள்வதில் நம்பிக்கையுடன் இருங்கள். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி பயப்பட வேண்டாம்.
 • ஸ்மார்ட்டான 'டிரெஸ் கோட்' நேரான பார்வை, கம்பீரமான தோற்றம் உங்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கும். கம்மல்ல இருந்து செப்பல் வரை டிரெஸ்ஸுக்கு மேட்சா போடணும்கிற கொள்கையில் ரொம்பவே உறுதியா இருக்கிறது தப்பில்லை. 
 • அதே சமயம் ரொம்ப அதிகமான நகைகளோ, மேக்கப்போ இல்லாம பத்துகிறது ரொம்ப முக்கியம். நல்ல ஸ்மார்ட் ஃபார்மல் உடைகளை அணிவது சிறப்பு. இந்த ஸ்மார்ட்டான 'டிரெஸ் கோட்' தான் உங்களை டல் ஆகாம பார்த்துகிறதோட, உங்களுக்கு தைரியத்தையும் கம்பீரத்தையும் கொடுக்கும்.
pixabay

 • அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல புன்னகையோடு பதில் சொல்லுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும். நேர போய் இன்டெர்வியூவில் மட்டும்தான் பெர்பாமென்ஸ் பண்ணனுங்கற அவசியம் இல்லை. நாம முதன்முதலில் சந்திக்கும் ரிசப்ஷனிலிருந்து கூட ஆரம்பிக்கலாம். 
 • இன்டெர்வியூக்கு டைம் மேனேஜ்மெண்ட் என்பது இன்றியமையாத ஒன்று. இன்டெர்வியூக்கு அழைக்கப்பட்டால் சரியான நேரத்துக்குச் சற்று முன்பே சென்றுவிடுவது நல்லது. பணியிடம், நிர்வாக சூழல் போன்றவைகளை அறிய ஒரு வாய்ப்பாக அமையும்.

கல்லூரி செல்லவிருக்கும் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு சில பயனுள்ள குறிப்புகள்

 • நிர்வாகம் அலுவலக ஊழியர்களிடம் தன்மையாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை எங்கிருந்து வேண்டுமானாலும் நோட்டமிடலாம் என்பதை மறவாதீர்கள். 
 • தெளிவாக, நிதானமாக பதில் அளிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஏற்கெனவே நேர்முகத்தேர்வு குறித்து உங்களுக்கு பயமாக இருந்தாலும், உங்களை இன்னும் பயமுறுத்தும் படி கேள்விகள் அமையலாம், அதனால் பதற்றப்படாமல் நிதானமாக இருங்கள்.  
pixabay

 • நீங்கள், ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும்போது ​​உங்கள் முதுகில் குனிந்து வைத்திருந்தால் சோம்பேறித்தனம், பலவீனம் அல்லது ஆர்வமின்மை போன்ற அறிகுறிகளை உங்களில் அடையாளம் காணலாம். பேச்சுவார்த்தைகளில் உட்கார்ந்துகொள்வது ஒரு நேரான முதுகில் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

கருப்பை பிரச்சனையா? பெண்களின் கருப்பையை வலுவாக்கும் சிறந்த உணவுகள்!

 • தேர்வு கண்காணிப்பாளரிடம் பவ்யமாக பேசுவது போல் அல்லாமல் நேர்காணல் செய்பவரை நேருக்கு நேராக பார்த்து இயல்பாக பேசுங்கள். பேசும் போது அவரது கண்களை பார்த்து பேசுங்கள். நீங்கள் பதற்றமாக இருந்தால் உங்கள் கண்களில் தெரிந்து விடும் என்பதால் கவனம் தேவை. 
 • உங்களின் அனுபவங்களை வளவள என்று அளக்க வேண்டாம். இரண்டு நிமிடங்களுக்குள் பேசி முடிப்பது நல்லது. சம்பந்தம் இல்லாமல் பேசுவதை தவிர்த்து தேவையானவற்றை மட்டுமே பேச வேண்டும். இதனால் உங்கள் மீது நல்ல அபிப்ராயம் கிடைக்கும்.
pixabay

 • நேர்காணலில் (interview) கேள்விகள் கேட்கும் போது கவனமாக இருக்க வேண்டும். கவனிக்கும் ஆற்றலை அதிகப்படுத்துவதன் மூலம் எளிதில் கேள்வியை புரிந்து கொண்டு பதிலளிக்கலாம். மீண்டும் கேட்டுத் தெளிவு பெறுவது உங்கள் மீது தவரான பிம்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 
 • உங்களின் நிலையைத் தைரியமாக, தெளிவாகவும் சொல்லவும். ஊதியம் குறித்து பேசுகையில் உடும்பு பிடியாக இருக்க வேண்டாம். எனக்கு 15 ஆயிரம், 25 ஆயிரம் வேண்டும் என்று விடாபிடியாக கேட்காமல். 15-30 ஆயிரத்திற்குள் என ஒரு தோராயமாக கூற வேண்டும்.  

தெய்வ தரிசனம் : தமிழகத்தின் சிறப்பு மிக்க நவகிரக கோயில்களை வலம் வருவோம்!

 • குழு நேர்காணலின் (interview) போது நீங்கள் அதிகம் வாதாடக் கூடியவரா, மற்றவர்களுக்கு வாய்ப்புத் தருபவரா என்று தெரிந்து கொள்ள விவாதம் போல நடைபெறும். குழுவாக செயலாற்றும்போது நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை இதன் மூலம் அறிய முடியும் என்பதால் கவனம் தேவை.
 • அதிகாரம் செலுத்துவது உங்களை பக்குவமற்ற மனிதராக காட்டிவிடும். மற்றவர்கள் பேசும் போது இடையே குறுக்கிடாமல், பின்னர் உங்கள் கருத்தை தெளிவாக எடுத்துரையுங்கள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.