குடிசை வீட்டில் தான் இருந்தோம்.. யாரும் வரவே சங்கடமா இருக்கும்..பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

குடிசை வீட்டில் தான் இருந்தோம்.. யாரும் வரவே சங்கடமா இருக்கும்..பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சித்ரா. அதன் பின்னர்தான் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்சில் முக்கிய கதாபாத்திரமான முல்லை பாத்திரத்தில் இவர் நடிக்க ஆரம்பித்தார்.                   

அதனால் இவர் இப்போது தமிழக தொலைக்காட்சி ரசிகர்களின் விருப்பமான நடிகை. ஆனால் முல்லையின் நடிப்பு திறனுக்கு முந்தைய நாட்கள் சோகம் நிறைந்தவை. அதனை பற்றி பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது சித்ரா (chitra) கூறியிருக்கிறார்.                         

அனுஷ்கா மிகவும் அழகான பெண்.. சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள போகிறேன்.. பிரபாஸ் !

Youtube

நான் கருவில் இருக்கும்போதே அம்மா என்னை அழிக்க நினைத்தார்கள் அப்படியும் நான் பிறந்து விட்டேன் எனும் நடிகை சித்ரா அதற்கான காரணத்தையும் கூறி இருக்கிறார். என் அண்ணனும் அக்காவும் என்னை விட பல வருடங்கள் வயதில் மூத்தவர்கள். இதனால் இன்னொரு குழந்தை வேண்டாமென என் அம்மா மருந்தெல்லாம் சாப்பிட்டார்கள். அப்படியும் நான் பிறந்து விட்டேன். அதனை எதிர்த்து போராடித்தான் நான் பிறந்தேன்.

என் பரம்பரையில் இருப்பவர்களை பெருமை படுத்துவது போல முதல் டிகிரி வாங்கியவளும் நான்தான். அதிலும் முதுகலை பட்டமே வாங்கினேன். ஆனாலும் என் வீட்டுல என்னை டிவி பக்கமே போக கூடாதுனு நினைச்சாங்க.

பயபக்தியும் அதிக அக்கறையும் உள்ளவரே என் கணவர்.. கல்யாண கனவுகளில் காஜல் அகர்வால் !

Youtube

ஒரு பிரென்ட் மூலமா விஜய் டிவில நடக்கற இன்டெர்வியு அட்டென்ட் பண்ணேன். ஒரு பிரேமிலாவது வந்துர மாட்டமா னு இருந்தது. அதன்பின் மக்கள் டிவில தான் எனக்கு வாய்ப்பு கிடைச்சது.

முதல்ல நாங்க குடிசை வீட்லதான் குடியிருந்தோம். அதுக்கப்புறம் அரசு குடிசை மாற்று வாரியம் மூலமா தீப்பெட்டி மாதிரி இருந்த ஒரு வீட்ல குடியிருந்தோம். ரொம்ப சின்னதா இருந்த அந்த வீட்டுக்கு யாரையும் கூப்டு போகவே சங்கடமா இருக்கும்.                                            

கருக்குழியில் இருந்து வந்த குழந்தை எருக்குழியில் புதைந்தது.. சுர்ஜித்தின் கடைசி நிமிடங்கள்

Youtube

ஆனால் இப்போ அப்பா அம்மாவுக்கு நல்லதா ஒரு வீடு கட்டி கொடுத்திருக்கேன். அது கூடவே சின்னதா ரெண்டு வீடு கட்டி வாடகை வர மாதிரி பண்ணிருக்கேன். அந்த வருமானம் அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும் என தன்னுடைய கடினமான நாட்களை கடந்து வந்த நடிகை சித்ரா எல்லோருக்கும் பிடித்தமான அந்த புன்னகையை வீசுகிறார்.

ஒரு சிலரை பார்க்கும்போது எதுவும் முடிவு செய்து விட முடியாது என்பதற்கு சித்ரா ஒரு நல்ல உதாரணம். கடவுள் யாரையும் கைவிடுவதில்லை என்பதும் தொடர்ந்து துயரங்கள் சூழும் வாழ்க்கை யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பதும் சீரியல் நடிகை சித்ராவின் (முல்லை) நிஜக்கதை மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!