இருபது வயதிலேயே திருமணம் - நீலிமா ராணியின் வெளிவராத குடும்ப புகைப்படங்கள் உங்களுக்காக !

இருபது வயதிலேயே திருமணம் - நீலிமா ராணியின் வெளிவராத குடும்ப புகைப்படங்கள் உங்களுக்காக !

நீலிமா ராணி இந்தப் பெயரைக் கேட்டாலே பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் .. அந்த அளவிற்கு பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துப் போன நடிகை நீலிமா (neelima) . சின்னத்திரை வெள்ளித்திரை என எதுவாக இருந்தாலும் இவருக்கு தனிப்பட்ட ரசிகர்கள் அதிகம்.

இவரது சினிமா அறிமுகமே திரையுலகின் கலைநாயகர்கள் நடுவில்தான் ஆரம்பித்தது. ஆமாம். தேவர் மகன் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் இருவருடனும் சேர்ந்து சிறுமியாக நடித்தவர் நீலிமா ராணி.                                                                        

Youtube

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனாலும் பல திரைப்படங்கள் சீரியல்கள் எனத் தொடர்ந்து சிறந்த நடிகையாக நல்ல பெயர் எடுத்திருக்கிறார் நீலிமா. திரையுலகில் நடிகையாக இருந்து நல்ல பெயர் எடுப்பது என்பது சாதாரண விஷயமே அல்ல.                                                 

தமிழில் வாணி ராணி சீரியல் செல்லமே போன்றவை இவருக்கு புகழை அள்ளித் தந்தன. இதுவரை 50 சீரியல்கள் மற்றும் 30 திரைப்படங்கள் என செஞ்சுரி நோக்கி சென்று கொண்டிருக்கிறார் நீலிமா. இது மட்டும் அல்லாமல் தற்போது தயாரிப்பாளர் ஆகவும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்,

Youtube

எல்லோருக்கும் பிடித்த நீலிமா ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பத்தை சார்ந்தவர் என்றால் நம்ப முடிகிறதா. தான் வேலைக்கு சென்றால்தான் உணவு என்கிற நிலையில்தான் நீலிமா நடிக்க ஆரம்பித்தார். சொந்த முயற்சியால் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறார்.                                    

திமிரு, நான் மஹான் அல்ல, பாண்டவர் பூமி போன்ற படங்களில் நீலிமா நடித்திருக்கிறார். நான் மகான் அல்ல திரைப்படம் இவருக்கு சிறந்த துணை நடிகை விருதை பெற்றுக் கொடுத்தது. நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும்போதே தன்னுடைய திருமணத்தை நடத்திக் கொண்டார் நீலிமா.

Youtube

இவருக்கு இருபது வயதிலேயே திருமணம் நடந்திருக்கிறது. இசைவாணன் என்பவரை மணம் முடித்த நீலிமாவிற்கு மிகப்பெரிய உறுதுணை அவருடைய கணவர்தான். இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தையும் இருக்கிறார். இசை என்பது குழந்தையின் பெயர். ஒவ்வொரு வருடமும் குழந்தையின் பிறந்த நாளுக்கு வெளிநாடு செல்வது இவர்கள் வழக்கமாம்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு நீலிமா ராணி எனும் பெண்ணின் இந்த வெற்றிக்கு பின்பு அவரது கணவர் இருக்கிறார் என்பதே நிஜம்.

Youtube
Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!