logo
ADVERTISEMENT
home / Food & Nightlife
கொலு நிவேத்தியம் – நவராத்திரி பூஜை பலகாரங்கள்

கொலு நிவேத்தியம் – நவராத்திரி பூஜை பலகாரங்கள்

நவராத்திரி வந்து விட்டாலே, ஆராவாரமும், கொண்டாட்டமும் தான். நவராத்திரியில் (navratri) கொலு ஒரு முக்கிய பகிகின்றது என்றல், ஒவ்வொரு நாளும் பூஜைக்காக செய்யும் நிவேதியமும் (pujai prasad recipe)மற்றும் ஒரு சிறப்பே. இவை நிச்சயம் குழந்தைகளை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

நீங்கள் கொலு கொண்டாட்டத்திற்கு எந்த மாதிரியான நிவேத்தியம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள், இங்கே உங்களுக்காக;

1. சக்கரை பொங்கல்

செய்முறை

Pinterest

ADVERTISEMENT
  1. பச்சை அரிசியை நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்
  2. நன்கு குலைந்த பின், இதனுடன் தேவையான வெல்லத்தை நன்கு பொடியாக இடித்து இதனுடன் சேர்க்கவும்
  3. பின்னர் ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, காய்ந்ததும், அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை பழத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பொங்கலுடன் சேர்க்கவும்
  4. சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்
  5. இறுதியாக நெய் சேர்த்து இறக்கி விடவும்
  6. சுடச் சுட இனிமையான சர்க்கரை பொங்கல் தயார்

2. வெண் பொங்கல்

செய்முறை

  1. சிறிது பாசி பருப்பு மற்றும் பச்சை அரிசியை நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்த உடன் அதில் மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய், கருவேப்பிள்ளை மற்றும் முந்திரி பருப்பு போட்டு வறுத்துக் கொள்ளவும்
  3. இதை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும்
  4. தேவைப்படும் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ளவும்
  5. தேவைப்படும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  6. வெண்பொங்கல் தயார்

3. சுண்டல்

Pinterest

செய்முறை

  1. கொண்ட கடலை, காராமணி, பச்சை பயிர் என்று, ஏதாவது ஒரு பயிர் வகையில் தேவையான அளவு எடுத்து நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்
  2. பின்னர், சிறிது உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிள்ளை சேர்த்து போரிட்க்கவும்
  4. பின்னர் வேக வைத்த பயிரை சேர்க்கவும்
  5. இறுதியாக சிறிது துருவிய தேங்காய் பூ மற்றும் சிறிதாக நறுக்கிய கொத்தமல்லை இலைகளை சேர்த்து கிளறவும்

4. மிளகு சாதம்

செய்முறை

  1. நன்கு உதிரியாக சாதத்தை வடித்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், அதில் சிறிது கடுகு உளுந்தம்பருப்பு, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய், கருவேப்பிள்ளை சேர்த்து பொரிக்க விடவும்
  3. தேவைப்படும் மிளகை நன்கு பொடியாக நுனிக்கிக் இதனுடன் சேர்க்கவும்
  4. சிறிது பெருங்காயத் தூள் மற்றும் தேவைப்படும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  5. பின்னர் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும்.

5. அரிசி பாயாசம்

Pinterest

ADVERTISEMENT

செய்முறை

  1. சிறிது பாசி பருப்பு மற்றும் பச்சை அரிசியை நன்கு குழைய வேக வைத்து, தண்ணீரை வடிக்காமல் அப்படி எடுத்துக் கொள்ளவும்
  2. இதனுடன் சிறிது வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்
  3. பின்னர் தேவைப்படும் அளவு ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறவும்
  4. சிறிது தேங்காய் துருவலை இதனுடன் சேர்த்தால், மேலும் சுவையாக இருக்கும்

6. தேங்காய் சாதம்

செய்முறை

  1. சாதத்தை உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. தேவையான தேங்காயை துருவிக் கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, சீரகம் / சோம்பு சேர்த்து நன்கு பொரிய விடயம்
  4. பொரிந்த பின், காய்ந்த மிளகாய், மற்றும் கருவேப்பிள்ளை சேர்த்து வறுக்கவும்
  5. பின்னர் சிறிதாக நறுக்கி தட்டிய இஞ்சியை சேர்க்கவும்
  6. தேவையான உப்பு சேர்க்கவும்
  7. பின்னர் துருவிய தேங்காய் பூவை சேர்த்து கிளறவும்
  8. இதனுடன் சிறிது கொத்தமல்லியையும் சேர்த்துக் கொள்ளவும்
  9. இப்போது சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்

7. எலுமிச்சைப் பழ சாதம்

Pinterest

செய்முறை

  1. சாதத்தை உதிரியாக வடித்து எடுத்துக் கொள்ளவும்
  2. தேவையான எலுமிச்சைபழ சாறு எடுத்துக் கொள்ளவும்
  3. வாணலியில், நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பின், அதில் கடுகு உளுந்தம்பருப்பு, மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொரிக்க விடவும்
  4. பின்னர் இதனுடன் கருவேப்பிள்ளை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்
  5. பின்னர் எழுமிச்சைபழ சாற்றை சேர்த்து, இதனுடன் உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  6. தேவைப்பட்டால் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்
  7. இப்போது வடித்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்
  8. சுடச் சுட எழுமிச்சைபழ சாதம் தயார் 

 

மேலும் படிக்க – நவராத்திரி/சரஸ்வதி பூஜை மற்றும் கொலு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள சில சுவாரசியமான தகவல்கள் மேலும் படிக்க – அழகிய ரங்கோலி கோலங்கள் : உங்கள் வீட்டை அழகுப்படுத்த சில புதிய வண்ணமயமான டிசைன்ஸ்!

பட ஆதாரம் – Pinterest

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

01 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT