அழகிய ரங்கோலி கோலங்கள் : உங்கள் வீட்டை அழகுப்படுத்த சில புதிய வண்ணமயமான டிசைன்ஸ்!

அழகிய ரங்கோலி கோலங்கள் : உங்கள் வீட்டை அழகுப்படுத்த சில புதிய வண்ணமயமான டிசைன்ஸ்!

ஆதிகாலை வேளையிலேயே பெண்கள் துயில் எழுந்து வீட்டின் வாசலில் தினமும் கோலம் போடுவதால் அந்த வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடப்பதற்குக் குறைவே இருக்காது. பெண்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வாசலை சுத்தம் செய்து கோலமிடுவது அருமையான உடற்பயிற்சி என்கின்றனர் மருத்துவர்கள்.

நீண்ட நேரம் குனிந்தும், நிமிர்ந்தும், விரல்களை பயன்படுத்தியும் கோலம் தீட்டுவது எலும்புகளுக்கு நல்லது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது.

Table of Contents

  instagram

  ரங்கோலி கோலங்கள் வகைகள் (Types of Rangoli designs)

  பெண்கள் தங்கள் படைப்பாற்றலையும் கற்பனைத்திறனையும் வெளிப்படுத்த உதவும் மகத்தான கலையல்லவா கோலம்! அந்தக் கலையில் நீங்கள் கைதேர்ந்தவர்கள் என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலுமே, உங்களுக்கு மேலும் மேலும், பலவித டிஸைன்களில் புள்ளிக் கோலங்களையும், ரங்கோலி கோலங்களையும் விதம்விதமாக அள்ளித்தந்திருக்கிறோம். தீபாவளி, நவராத்திரி மற்றும் ஓணம், கார்த்திகை போன்ற பண்டிகைகள் ரங்கோலி இல்லாமல் முழுமையடைவதில்லை. அத்தகைய ரங்கோலி (rangoli) கோலங்களின் வகைகள் குறித்து இங்கே பாப்போம். 

  அரிசி மாவு ரங்கோலி

  instagram

  தென்னிந்திய மாநிலங்கள் முழுவதும் அறியப்பட்ட அரிசி-மாவு ரங்கோலி பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. வாசலில் அரிசி மாவினால் ஆரம்பக் காலங்களில் கோலங்களை தீட்டியுள்ளனர் நமது முன்னோர்கள். அதன் மூலம் மண்ணில் ஊரும் உயிரினங்களுக்கு கோலமாவு உணவாக இருக்க வேண்டுமென்ற நோக்கில் அரிசி மாவினை பயன்படுத்தி கோலங்களை தீட்டியுள்ளனர். தற்போதையை காலத்திலும் பெரும்பாலான வீடுகளில் அரிசி மாவை கொண்டு கோலங்கள் வரையப்படுகிறது. 

  புள்ளியிடப்பட்ட ரங்கோலி

  instagram

  விரிவான சமச்சீர் ரங்கோலியை உருவாக்குவதற்கான எளிய  வழி புள்ளியிடப்பட்ட ரங்கோலி. தரையில் சமமான புள்ளிகளை வைப்பதன் மூலம் இதனை எளிமையாக வரையலாம். வடிவமைப்பின் எல்லையில் ரங்கோலி தூளை நேரடியாக இணைப்பதன் மூலம் வடிவமைப்பை வரைய முடியும். எல்லா வீடுகளிலும் ரங்கோலியின் (rangoli)  மிகவும் பயன்படுத்தப்படும் நுட்பங்களில் இதுவும் ஒன்றாகும்.

  சிக்கு கோலம்

  instagram

  நின்ற நிலையில் குனிந்தபடி அசையாது நின்று மனதிற்குள் ஒரு கணக்கோடு போடும் கோலம் தான் சிக்குக்கோலம். முதலில் அதிக எண்ணிக்கையில் வரைந்த இந்த கோலங்கள் தற்போது எண்ணிக்கை குறுகிய வடிவத்தில் அழகான சிக்குக் கோலமாக வரைகின்றனர். பல வகையான கோலங்களை இன்று பெண்கள் வரைந்தாலும் சிக்குக்கோலம் என்றும் மாறாது இருக்கிறது. எண்ணற்ற வடிவங்களில் சிக்கோலங்கள் விழாக்காலங்களில் போடப்படுகின்றன. 

  மலர் இதழ்கள் ரங்கோலி

  instagram

  கோலம் போடும்போது சிக்கல்கள் இல்லாத பூ கோலங்கள் போடுவது நல்லது. மலர் இதழ்கள் ரங்கோலி என்பது மலர்களை கொண்டு ரங்கோலி கோலங்கள் வரைவதாகும். தாமரை, ரோஜா, சாமந்தி, மல்லி உள்ளிட்ட பல்வேறு பூக்களின் இதழ்களை கொண்டு கோலத்தின்  வடிவமைப்பில் நிரப்ப வேண்டும். உதாரணமாக ஓணம் பண்டிகையின் போது இந்த கோலங்கள் அதிகமாக பிரபலம். அல்லது மாவு கோலம் போட்டு நடுவில் பூ வைப்பது மிகவும் நல்லது. 

  மிதக்கும் ரங்கோலி

  instagram

  மிதக்கும் ரங்கோலி (rangoli) என்பது கோலங்கள் தண்ணீரில் போடப்பட்டும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் இந்த கோலங்கள் போடப்படுகிறது. வரபேற்பறையில் இந்த கோலங்கள் போடப்படுவதால் அழகாக இருக்கும். தண்ணீரில் முதலில் கோலப்பொடியை சலித்து தூவ வேண்டும். பின்னர் அதில் பூக்களால் அலங்கரிக்கலாம். அல்லது கலர் பொடிகளால் கோலங்கள் வரையலாம். பல்வேறு மலர்களின் இதழ்களால் அலங்கரிக்கப்படும் இந்த மிதக்கும் ரங்கோலி கோலங்கள் கண்ணை கவரும் வகையில் இருக்கும்.

  கண்ணாடி ரங்கோலி

  instagram

  கண்ணாடி ரங்கோலி என்பது வழக்கமான ரங்கோலி கோலங்கள் வரைந்து அதில் கண்ணாடி துண்டுகளை கொண்டு அலங்கரிப்பது. உடைந்த கண்ணாடி துண்டுகளை தூக்கி எரியாமல் அதனை பாதுகாப்பாக சேகரித்து வைத்து கொள்ள வேண்டும். விழாக்காலங்களில் அழகான ரங்கோலி கோலங்கள் வரைந்து அதில் கண்ணாடி துண்டுக்களை கொண்டு உங்கள் விருப்பம் போல டிசைன் பண்ணலாம். சமீபத்தில் இந்த கோலங்கள் அதிகமாக போடப்படுகிறது. 

  குந்தன் ரங்கோலி

  instagram

  நீங்கள் பல்வேறு வகையான மணிகள், வண்ணக் கற்கள், வண்ண வில்லைகள் அல்லது ஜிகினா மற்றும் வண்ணக் காகிதங்கள் கொண்டு இதனை செய்யமுடியும். உங்களுக்குப் பிடித்தமான வண்ணங்களில் காகிதங்களை வெட்டி வடிவங்களை உருவாக்குங்கள். அதில் இந்த மணிகள் மற்றும் ஜிகினா வில்லைகளை ஒட்டுங்கள். அதனை உங்களுக்கு விருப்பமான இடத்தில் வைக்கவும். சிறிய காகித ரங்கோலிகள் மெழுகுவத்தி வெளிச்சத்தில் மிகவும் அழகாக இருக்கும்.

  சதுர வடிவம் ரங்கோலி

  instagram

  இந்த வகை ரங்கோலிகள் சதுர வடிவங்களில் வரையப்படும். அதாவது சதுர வடிவம் ரங்கோலி கோலங்கள் பார்க்க சிறிய மற்றும் பெரிய பெட்டிகள் போன்று காட்சியளிக்கும். இந்த வகையான கோலங்கள் அடிப்படை டிசைன் காலங்களாக உள்ளன. இன்று தொட்டில் கோலம், ஹிர்தய கோலம், பாம்புக் கோலம், மனை கோலம், கம்பிக் கோலம், தந்திரிக் கோலம் என என்ற வகையிலான கோலங்கள் இருந்தாலும் வட்ட மற்றும் சதுர வடிவம் ரங்கோலி கோலங்கள் என்றும் முதன்மையானவை.

  கை நுட்ப ரங்கோலி

  instagram

  விசேஷ நாட்களில் வீடுகளில் நம்மை முதலில் வரவேற்பது கோலம் தான். இன்றைய காலத்தில் கோலம் போடுவதை பெண்கள் மறந்து போனாலும் விசேஷங்கள், பண்டிகைகள் மற்றும் மார்கழி மாதத்தில் மறக்காமல் வாசல்களில் கோலம் போட்டு அசத்துகின்றனர். கை நுட்ப ரங்கோலி கோலங்கள் பெண்களால் விரும்பி போடப்படும் கோலங்களாகும். வளைந்து, நெளிந்து போடப்படும் ரங்கோலி கோலங்களை கையை எடுக்காமல் ஒரே கோட்டால் இணைக்கக்கூடிய கோலமே கை நுட்ப ரங்கோலி காலமாகும். 

  மர ரங்கோலி

  instagram

  இவை வடிவமைக்கப்பட்ட மரத் தகடுகள் ஒன்றாக ஒட்டப்பட்டு அல்லது ஒரு முழு மரத் தகடு செதுக்கப்பட்ட வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ரங்கோலியின் அலங்காரம் பிராந்தியத்திற்கு ஒரு பகுதியைப் பொறுத்தது. இது பஞ்சாரஸ் மற்றும் நாடோடி பழங்குடியினரிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. இன்று ஒரு நகர்ப்புற பெண்கள் இவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர். மரக்கட்டைகள் பல்வேறு டசைன்களில் செதுக்கப்பட்டு அலங்கரிப்பட்டிருப்பதே மர ரங்கோலியாகும். 

  வட்ட வடிவ ரங்கோலி

  instagram

  வட்ட வடிவ ரங்கோலியில் எந்த ஒரு கடினமான டிசைனும் இல்லை. இதில் சீரான வட்டம் போட்டு அதற்குள் நிறங்களை நிரப்பி பின் ஆங்காங்கு டிசைனை வரைந்துவிட்டால் போதுமானது. இத்தகைய ரங்கோலி போடும் போது அதில் நிறங்களை நிரப்ப பொதுவாக கோலப் பொடியில் கலந்து தான் நிரப்புவோம். ஆனால் தற்போது சற்று வித்தியாசமாக உப்பில் கலந்தும் போடலாம். இதனால் கோலமா எடுப்பாக தெரியும். வட்ட வடிவ ரங்கோலி போட அனைவரும் விரும்ப காரணம் இதனை எளிதாக போட்டுவிடலாம் எனபதால் ஆகும்.

  சல்லடை நுட்ப ரங்கோலி

  instagram

  அன்றைய காலத்தில் எல்லாம் பெண்கள் புள்ளி வைத்து தான் கோலங்களைப் போடுவார்கள். பின்னர் ரங்கோலி தான் பிரபலமாக இருந்தது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு கோலம் போடா தெரிவித்தில்லை. அவர்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்தது தான் கோல அச்சுக்கள். மிக அழகாக சல்லடையில் ஓட்டை போட்டு, அதில் கோல மாவை சீராக நிரப்பினால் ஓட்டைகள் வழியே கோலம் டிசைன் டிசைனாக விழுந்தது. தற்போது எண்ணற்ற டிசைன்களில் கோல அச்சுக்கள் கிடைக்கின்றன.  

  பெயிண்ட் ரங்கோலி

  instagram

  பெயிண்ட் ரங்கோலி கோலம் பெயிண்டை கொண்டு என்றும் அழியாத வகையில் வரையப்படும் கோலமாகும்.. பெரும்பாலானோர் ரங்கோலி போடுவதில் தான் அதிக ஆர்வத்தை செலுத்துகின்றனர். ஏனெனில் ரங்கோலி என்றால்  எளிமையாக இருப்பதாலேயே அனைவரும் இதை போடுகின்றனர். இன்றைய நவீன காலத்தில் தினமும் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட பெரும்பாலோனோருக்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்கள் ஒரு முறை பெயிண்ட் கோலத்தை வரைந்துவிட்டு இருந்து விடுகின்றனர். 

  விழாக்கால ரங்கோலி கோலங்கள் (Festival rangoli )

  விழாக்கால ரங்கோலி கோலங்கள் ஒவ்வொரு பண்டிகை காலங்களின் போதும் வரையப்படும் ஸ்பெஷல் ரங்கோலி கோலங்களாகும். தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி போன்ற விஷேச காலங்களில் அதெற்கென சிறப்பு கோலங்கள் உள்ளன.

  instagram

  ஒவ்வொரு பண்டிகையையும் குறிக்க சில குறியீடுகள் உள்ளன அவற்றை வைத்தே விழாக்களை கோலங்கள் வரையப்படுகின்றன பொங்கல் பண்டிகையை குறிக்கும் வகையில் பானைகள், கரும்புகளை வாசலில் காலங்களாக வரைந்து அழகுப்படுத்துவர். 

  instagram

  தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் அல்லது விளக்குகளை குறிக்கும் வகையிலான ரங்கோலி கோலங்கள் வரையப்படுகின்றன. அதன் நடுவில் விளக்கை வைத்து உங்கள் தீபாவளி எவ்வாறு ஒளிமிக்கதாகிறது எனப் பாருங்கள்.

  instagram

  விழா நாட்களில் இலை கோலம் போடுவது சிறப்பாக இருக்கும். செடிகளில் இருந்து பறிக்கப்படும் இலைகளை கொண்டு வரையப்படும் இந்த கோலங்கள் சிறப்பு வாய்ந்தவை ஓணம் பாண்டியின் போது பூக்கள் ரங்கோலியால் வீடுகள் அழகாக்கப்படும். 

  பார்டர் ரங்கோலி டிசைன்ஸ் (Border rangoli desings)

  பார்டர் ரங்கோலி டிசைன்ஸ்கள் பல்வேறு வடிவங்களில் உள்ளன. வரவேற்பறையில் இந்த கோலங்கள் போட்டால் அழகாக இருக்கும். மேலும் வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது.

  instagram

  கொடிகள் டிசைன்: இந்த வகை டிசைன்கள் கொடிகள் போன்று வாசற்படிகளில் வரையப்படும். இதில் கலர்பொடிகளை கொண்டு அழகுபடுத்தினால் பார்க்க புத்துணர்ச்சியாக இருக்கும்.

  instagram

  பூக்கள் டிசைன் : பூக்கள் போன்று வரையப்படும் இந்த பார்டர் கோலங்கள் பண்டிகை காலங்களில் வரையலாம். வாசலின் அல்லது ஹாலின் வரவேற்பு பகுதியில் இரண்டு புறமும் இந்த கோலங்கள் வரைந்தால் வீட்டிற்கு வருபவர்களை நாம் வரவேற்க தேவையில்லை, கோலங்கள் வரவேற்கும்! 

  instagram

  மலரிதழ்கள் டிசைன் : பூக்களை பயன்படுத்தி வரையப்படும் இத்தகைய டிசைன்கள் தற்போது பிரபலமாக போடப்படுகிறது. சிறிய பார்டர் கோலங்களை வரைந்து அதில் டிசைன்களுக்கு ஏற்ப மலர் இதழ்களை கொண்டு அழகுப்படுத்தாலாம்.

  instagram

  விளக்கு டிசைன் : இந்த டிசைன்களில் வழக்கமான பார்டர் ரங்கோலி கோலங்கள் வரைந்து அதில் விளக்குகள் வைக்கலாம். சிறிய விளக்குகளை கோலங்கள் இடையில் வைத்து அழகுப்படுத்தினால் பார்க்க நன்றாக இருக்கும்.

  instagram

  சிம்பிள் டிசைன் : சிம்பிள் டிசைன் என்பது பார்டர் கோலத்தை சாதாரணமாக போட்டு அதனை கை விரல்களை பயன்படுத்தி அழகுப்படுத்துவது. விரலைகளை கொண்டு வட்ட வடிவமாக, அல்லது கோடி போன்று வரைவது உள்ளிட்டவை இதில் அடங்கும். 

  வண்ணமயமான ரங்கோலி கோலங்கள் (Colourfull rangoli desings)

  ரங்கோலி கோலங்களில் வண்ணங்கள் பயணபடுத்தினால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். இதில் எண்ணற்ற வடிவங்கள் உள்ளன. அவன் என்னென்ன என்பதை இங்கு காண்போம்.

  instagram

  ரங்கோலி கோலம் போட அதிக கற்பனை திறன் தேவை. ரங்கோலி கோலங்கள் பல வண்ண கலர் பொடிகளால் அலங்கரிக்கப்படுகிறது. கலர் பொடிகளை பயன்படுத்துவம் போது கோலங்கள் மேலும் அழகாகவே எடுத்து காட்டப்படுகிறது. இவ்வகை கோலங்கள் போட 2 முதல் 3 மணி நேரம் வகை ஆகும். இயற்கை காட்சி, படங்கள், தேச தலைவர்கள் டிசைன்களில் வண்ண ரங்கோலி போடப்படுகிறது.

  instagram

  வண்ண மயில் ரங்கோலி : இதற்கு மலர்கள், வண்ண மணல், வண்ணம் கலந்த அரிசி மாவு போன்றவற்றை பயன்படுத்தி இதை செய்யலாம். மயிலை விட அழகான ஒரு வடிவத்தை கோலத்தில் காண முடியாது. உங்கள் வீட்டின் வரவேற்பு பகுதில் அழகாக மயில் ஒன்றை வரைந்து அதை வண்ணப்பொடிகளால் அலங்காரம் செய்யலாம்.

  instagram

  வாழ்த்துக்கள் ரங்கோலி : வாழ்த்துக்கள் ரங்கோலியில் பண்டிகை கால வாழ்த்துக்களை கோலங்களாக வடிவமைத்திருப்பர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை கால வாழ்த்துக்கள் வண்ண பொடிகளால் வரைந்து அதனை சுற்றி ரங்கோலி கோலங்கள் வரையப்படும்.

  instagram

  ஸ்வஸ்திக் கோலம் : ஸ்வஸ்திக் வடிவ ரங்கோலி வரைந்து அதில் வண்ண பொடிகளை பயன்படுத்தி அலங்கரிக்கலாம். ஏதேனும் இரண்டு அல்லது மூன்று வண்ண கலர்களை கொண்டு வரைந்தால் எடுப்பாக இருக்கும். ஸ்வஸ்திக் கோலம் பூஜை அறைகள் மற்றும் சாமி மாடங்கள் முன்னிலையில் இந்த கோலத்தை வரையலாம். 

  instagram

  ட்ரெண்டிங் வண்ண ரங்கோலி : இதன் வகை ரங்கோலி கோலங்கள் தற்போது பெரும்பாலும் போடப்படுகிறது. ரங்கோலி கோலங்கள் வரைந்து அதில் புள்ளிகள் அல்லது கோடுகள் போட்டு கைகள் அல்லது மற்ற பொருட்களை பயன்படுத்தி டிசைன் செய்து அதில் வண்ணங்களால் அழகாக்கப்படும்.  

  instagram

  வானவில் நிற ரங்கோலி : வானவில் நிற ரங்கோலி என்பது பல வண்ணங்களில் வரையப்படும் ரங்கோலி கோலம் ஆகும். இத்தகைய கோலங்கள் பெரும்பலாலும் அனைத்து பண்டிகை மற்றும் விழாக்களில் வரையப்படும். பெரிய ரங்கோலி கோலங்கள் வரைந்து அதில் பல வித வண்ணங்கள் கொடுக்கப்படும். 

  கேள்வி பதில்கள் (FAQ's)

  கோலம் போடுவதால் நன்மைகள் கிடைக்குமா?

  ஆம். கோலம் போடுவதால் நமது உடலுக்கும், மனதிற்கும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அவையாவன, 

  • லட்சுமி தேவியை நம் வீட்டிற்கு வரவழைக்கும் ஒரு வழிமுறைதான் கோலம் போடுதல்.
  • கோலம் தீய மற்றும் துஷ்டசக்திகளை வீட்டிற்குள் வராமல் தடுக்கும்.
  • கோலம் போடும்போது மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைத்துவிடும். 
  • குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் உடலுக்கு யோகப் பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது.
  • கோலம் நம் கற்பனைத் திறனையும் நினைவாற்றலையும் வளர்க்கிறது.
  • பல்வேறு சூழல்களால் சஞ்சலத்தில் இருக்கும் மணமும் கூட கோலம் போடும்போது ஒருமுகப்படும்.
  instagram

  என்ன கிழமைகளில் குறிப்பிட்ட கோலங்கள் போடுவதால் நன்மை கிடைக்கும்?

  கோலங்கள் குறிப்பிட்ட நாட்களில் சிறப்பாக போடுவதால் நமது குடும்பத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அவற்றை இங்கு காண்போம்.

  • ஞாயிற்றுக்கிழமை - செந்தாமரை கோலம்,
  • திங்கட்கிழமை அல்லி - மலர்க் கோலம், 
  • செவ்வாய்க்கிழமை - வில்வ இலை கோலம்,
  • புதன் கிழமை - மாவிலைக் கோலம்,
  • வியாழக்கிழமை - துளசி மாட கோலம்,
  • வெள்ளிக்கிழமை - எட்டு இதழ் தாமரை கோலம்,
  • சனிக்கிழமை - பவளமல்லி கோலம், 
  • பவுர்ணமி தினத்தன்று - தாமரைப்பூ கோலம்,

  கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும். 

  கோலம் போடும் போது பின்பற்றப்பட வேண்டியவ விதிகள் என்ன?

  • கோலம் போடும் போது இரட்டை கோடுகளாக கோலம் போடவேண்டும். ஒரு கோடுமட்டும் வரைந்து கோலம் போடுவது அசுபகாரியங்களுக்கு தான் என்கிறது சாஸ்திரம்.
  • தெற்குதிசை பார்த்தபடி கோலத்தை ஆரம்பிக்கவும் கூடாது, முடிக்கவும் கூடாது.
  • தினமும் அரிசிமாவில் கோலம் போட்டால், நம்மை அறியாமலே பல புண்ணியங்கள் தேடிவரும். 

  இப்படி தினமும் கோலங்கள் போட்டு பல நன்மைகளை பெறுவோம்!.

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!