நவராத்திரி/சரஸ்வதி பூஜை மற்றும் கொலு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள சில சுவாரசியமான தகவல்கள்

நவராத்திரி/சரஸ்வதி பூஜை மற்றும் கொலு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள சில சுவாரசியமான தகவல்கள்

நவராத்திரி பண்டிகை, வெகு விமர்சையாக இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகின்றது. ஒவ்வொரு மாநிலத்தவரும், அவர்களுக்குரிய பாரம்பரிய மோரைப்படியும், இந்த பண்டிகை தமிழ்நாட்டில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது. புராணங்களின் அடிப்படையிலும், இந்த பண்டிகையை ஒன்பது நாட்கள் கொண்டாடி வருகின்றனர், இந்த பண்டிகை, ஒரு திருவிழா போல அனைவரும் தங்கள் வீடுகளிலும், கோவில்களிலும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு, நவராத்திரி (navrathri) பண்டிகை செப்டம்பர் 29, 2019 அன்று தொடங்கி, அக்டோபர் 7, 2019 அன்று நிறைவடைகின்றது. ஒவ்வொரு நாளும், ஒரு தனித்துவத்தோடு இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இந்த பண்டிகையை, முகவும் எதிர் பார்ப்புகளுடன் காத்திருந்து, கொண்டாடுவார்கள்.

இந்த பண்டிகையை பற்றி நீங்களும், பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொண்டு, உங்கள் வீடுகளில் கொண்டாட விரும்புகின்றீர்கள் என்றால், இந்த தொகுப்பு, உங்களுக்கானது! தொடர்ந்து படியுங்கள்!

Table of Contents

  நவராத்திரி பண்டிகை (History of Navratri festival)

  பொங்கல், தீபாவளி போன்று, நவராத்திரியும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை. இது ஒரு முக்கியப் பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இது குறிப்பாக துர்க்கை அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பண்டிகை. இது ஒன்பது நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகின்றது.

  ஒரு சில மக்கள், இந்த பண்டிகையை ஒரு ஆண்டில் இரு முறை கொண்டாடுவார்கள். அதாவது, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாள் பண்டிகை காலத்தில், அனேக மக்கள் விரதம் இருந்து, தினமும் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டு, வீடுகளிலும் பூஜைகள் செய்வார்கள்.

  இந்த பண்டிகையின் ஒரு முக்கிய அம்சம், கொலு. பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளில் கொலு வைத்து, வீடுகளை அலங்கரித்துக் கொண்டாடுவார்கள். இது குறிப்பாக குழந்தைகளுக்கு மிக சுவாரசியமான ஒன்றாக இருக்கும்.

  இந்த ஒன்பது நாள் பண்டிகை, பத்தாம் நாளான விஜயதசமி நாளன்று முடிவடைகின்றது. இந்த ஒன்பது நாளும், ஒவ்வொரு பெண் தெய்வங்கள் முக்கியத்துவத்தோடு வணங்கப்படுகின்றது.  குறிப்பாக; 

  1. பால அம்மன் / மகேஸ்வரி
  2. கருமாரி / ராஜேஸ்வரி
  3. வராளி அம்பிகை / வராஹி
  4. லட்சுமி
  5. வைஷ்ணவி
  6. சாந்தி தேவி
  7. அன்னபூரணி
  8. துர்கா
  9. சரஸ்வதி

  இந்த ஒன்பது நாளும், ஒவ்வொரு நாளுகேன்றே சிறப்பான பலகாரங்கள் செய்து துர்க்கை அம்மனுக்கு படைக்கப்படுகின்றது.

  ஒவ்வொரு மாநிலத்தவரும், இந்த பண்டிகையை, வெவ்வேறு புராணங்களோடு தொடர்புபடுத்தி கொண்டாடுகின்றன. அதில் குறிப்பாக, துர்க்கை அம்மன், மகிசாசுரனை வதம் செய்து வெற்றி பெற்ற நாளை, முன் வைத்து கொண்டாடுகின்றன.

  இந்த பண்டிகையன்று, மக்கள் வீட்டில், ஐந்து படி, எழு படி, ஒன்பது படி, பதினொன்று படி என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி கொலு வைத்து, மேலும் சில அலங்காரங்களை செய்து கோலாகலமாக வழிபடுகின்றனர்.

  தமிழ்நாட்டில் நவராத்திரி (How navrathri celebrated in tamil nadu)

  Instagram

  தமிழ்நாட்டில் நவராத்திரி (navarathri) பண்டிகை அனைவராலும் கொண்டாடப்படுகின்றது. இந்த பண்டிகை நாட்களில், துர்க்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி, ஆகிய மூன்று பெண் தெய்வங்களையும் மக்கள் வழிபடுகின்றனர். இந்த பண்டிகை நேரத்தில், கலை நிகழ்சிகள், குறிப்பாக பாரம்பரிய கலைகள், இசை என்று ஒவ்வொரு நாளும், குழந்தைகளும், பெரியவர்களும், உற்சாகத்தோடு ஈடுபட்டு கொண்டாடுகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும், இந்த பூஜையை, பாடல்களோடும், சிறப்பு பாசுரங்களுடனும் தொடங்குகிநிட்றனர்.

  கொலு வைப்பது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக தமிழ்நாட்டில் கருதப்படுகின்றது. இந்த கொலு, மனிதர்களின் வாழ்க்கை தத்துவத்தையும், இயற்கையின் பரிணாமத்தையும், மக்களுக்கு உணர்த்தும் வகையில் அமைக்கப்படும். குறிப்பாக இதில் ஆதி முதல், இன்று வரை இந்த உலகில் தோன்றியுள்ள உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல வகையான பறவைகள், செடி, மரங்கள், விலங்குகள், என்று ஒவ்வொரு படிகளிலும் அலங்கரிக்கப்படும். பிறகு, மக்களும், சித்தர்களும், தேவர்களும், மேல் படிகளில் அவரவர் உயர்ந்த நிலைக்கேற்ப வைக்கப்படுவார்கள். இறுதியாக, உயரத்தில் இருக்கும் படியில், கலசமும், கடவுளின் சிலைகளும் வைக்கப்படும்.

  இது மட்டுமல்லாது, ஒரு சிறய அல்லது, வசதிகேற்ப, இந்த கொலு படிகளுக்கு அருகில், ஒரு கிராமம் போன்ற அமைப்பும், வயல் வெளியும், விளையாட்டு மைதானம், நகரம், கோவில் வளாகம் என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொம்மைகள் கொண்டு அலகாரம் செய்து, மேலும் இந்த நவராத்திரி கொண்டாட்டத்தை சுவரசியப்படுத்துவார்கள்.

  தமிழ்நாட்டில், அனைத்து கோவில்களிலும், இந்த கொலு படிகள் அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, ஒன்பது நாட்களும், கோலாகலமாக கொண்டாடப்படும். இது மட்டுமல்லாது, ஒவ்வொரு நாளும், ஒரு சிறப்பு பலகாரம் செய்து, கடவுளுக்கு படைத்து, பின் அனைவரும் அதனை பகிர்ந்து உண்டு, மகிழ்ச்சியாக  கொண்டாடுவார்கள். இது ஒவ்வொரு நாளையும், மேலும் சுவாரசியமாக்கும் நிகழ்வாக இருக்கும்.

  இந்த நவராத்திரி பண்டிகை, குறிப்பாக தீய சக்திகளிடம் இருந்து, சக்தி வடிவான துர்க்கை அம்மன் அனைவரையும் காத்தருளும் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.

  அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு நாளும், துர்க்கை அம்மனுக்கு அந்த நாளுக்கு உரிய பெண் தெய்வத்தின் அலங்காரத்தை செய்து வழிபடுகின்றனர். இதனால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பெண்தெய்வத்தின் அருளை பெறுவதாக மக்கள் நம்புகின்றனர். இதனால், ஆரோக்கியம், ஆயுள் மற்றும் சகல செல்வங்களோடு அவர்கள் வாழ்க்கை மேம்படும் என்றும் நம்பப்படுகின்றது.

  இந்த பண்டிகை அன்று, அனைவரும், குறிப்பாக வீட்டில் கொலு வைப்பவர்கள், தங்கள் வீட்டின் அருகாமையில் இருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் பூஜைக்கு அழைத்து, விருந்தளித்து, பரிசுகளையும் வழங்கி, மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். குறிப்பாக பெண்கள், இந்த பண்டிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

  ஒன்பது நவராத்திரி பலகாரங்கள்(main recipes for 9 days Navratri celebration)

  Pinterest

  நவராத்திரி பண்டிகை காலத்தில், மக்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலகாரத்தை செய்து துர்க்கை அம்மனுக்கு படைத்து வழிபடுவார்கள். அதிலும், ஒவ்வொரு நாளுக்கென்றே, ஒரு குறிப்பிட்ட பலகாரம் செய்யப்படுகின்றது. அப்படி, நீங்களும் அதை தெரிந்து கொண்டு, ஒன்பது நாட்கள், ஒன்பது பலகாரங்களை செய்ய, இங்கே உங்களுக்காக சில பயனுள்ள தகவல்கள:

  நாள் 1: வெண் பொங்கல் / பருப்பு சாதம் / பச்சைபயிறு சுண்டல்

  நாள் 2: ரவை கேசரி / புளியோதரை / காராமணி சுண்டல்

  நாள் 3: சர்க்கரை பொங்கல் / மிளகு சாதம் / பருப்பு வடை வேர்கடலை சுண்டல்  

  நாள் 4: கோதுமை அப்பம் / கதம்ப சாதம் / பட்டாணி சுண்டல்

  நாள் 5: அரிசி பாயாசம் / தயிர் சாதம் / மொச்சை பயிர் சுண்டல்

  நாள் 6: ரவா லட்டு / தேங்காய் சாதம் / தட்டைபயிறு சுண்டல்

  நாள் 7: பச்சை அரிசி இட்லி / எழுமிச்சைபழ சாதம் / கடலை பருப்பு சுண்டல்

  நாள் 8: தேங்காய் பர்பி / பால் சாதம் / பல வகை பயிர் சுண்டல்

  நாள் 9:  5 வகை சாதம் / முழு படையல் சாப்பாடு / வடை / கொண்டைக்கடலை சுண்டல்

  நாள் 1௦: வெத்தலை பாக்கு / பழங்கள் / இனிப்பு பலகாரம் / உலர்ந்த திராட்சை

  தென்னிந்திய எளிய நவராத்திரி பூஜை பலகாரங்கள்(South indian Navratri recipes)

  நீங்கள் எளிய முறையில் நவராத்திரி திருவிழா கொண்டாட, ஒவ்வொரு நாளும் விரைவாகவும், சுவையாகவும் செய்ய, சில பலக்காரங்கள், உங்களுக்காக இங்கே:

  1. பாசிபருப்பு உண்டல்

   செய்முறை:

  • ஒரு கப் அல்லது தேவையான அளவு பாசிபருப்பை எடுத்துக் கொள்ளவும்
  • அரை மணி நேரம் ஊற வைத்து, பின் தேவையான உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  • வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்த பின், கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் காந்த மிளகாய் சேர்த்து பொரிய விடவும்
  • பின் சிறிது கருவேப்பிள்ளை சேர்க்கவும்
  • இதனுடன், வேகவைத்த பருப்பை சேர்த்து கிளறவும்
  • சிறிது தேங்காய் துருவலையும், கொத்தமல்லித் தலையை சிறிதாக நறுக்கியும் இதனுடன் சேர்த்து, கிளறி இறக்கி விடவும்

  2. பட்டாணி சுண்டல்

  Pinterest

  செய்முறை

  • பட்டாணி தேவையான அளவு எடுத்து குறைந்தது 5 மணி நேரமாவது நன்கு ஊற வைக்க வேண்டும்
  • பின் சிறிது உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிள்ளை சேர்த்து பொரிக்கவும்
  • பின் வேக வைத்த பட்டாணியை சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் சிறிது பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்
  • இதனுடன் சிறிதாக நறுக்கிய கொத்தமல்லைத் இல்லை மற்றும் சிறிது தேங்காய் துர்வளை சேர்த்து கிளறி இறக்கி விடவும்
  • இது போலவே, வேர்கடலை சுண்டல், கொண்டைகடலை சுண்டல், தட்டபயிறு மற்றும் காராமணி சுண்டலும் செய்யலாம்

  3. பொட்டுகடலை உருண்டை

  செய்முறை

  • ஒரு கப் பொட்டுகடலை எடுத்துக் கொள்ளவும்
  • அரை கப் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்
  • இவை இரண்டையும், மிக்சியில் போட்டு தனித்தனியாக நன்கு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக எடுத்துக் கொண்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • இப்போது பொட்டுகடலை பொடி, சர்க்கரை பொடி வறுத்த முந்திரி பருப்பு மற்றும் சிறிது ஏலக்காய் பொடி ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்
  • இதனுடன் சூடாக உருக்கிய நெய் தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறவும்
  • இந்த சூட்டுடனே, சிறு உருண்டைகளாக பிடித்து எடுத்து வைக்கவும்

  4. வெல்லம் புட்டு

  Pinterest

  செய்முறை

  • பச்சரிசி மாவு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்
  • இதனை ஒரு வாணலியில் போட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, இட்லி கொப்பரையில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்
  • தேவையான வெல்லம் எடுத்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்
  • இப்போது, நன்கு வெந்த பச்சை அரிசி மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் பொடி செய்த வெல்லம், சிறிது ஏலக்காய் மற்றும் சிறிது தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்
  • இப்போது வெல்லம் புட்டு தயார்

  5. தேங்காய் சாதம்

  செய்முறை

  • உதிரியாக வடித்த சாதத்தை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்
  • தேவையான அளவு தேங்காய் துருவல் எடுத்துக் கொள்ள வேண்டும்
  • வாணலியில், தேவையான நல்லெண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்த பின், சிறிது கடுகு, உளுந்து, மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொரிக்க விடவும்
  • இதனுடன் சிறிது சோம்பு சேர்த்துக் கொள்ளலாம்
  • சிறிதாக நறுக்கிய 2 பச்சை மிளகாய் மற்றும் 5 காந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்
  • இதனுடன் தேவையான அளவு கருவேப்பிள்ளை சேர்த்துக் கொள்ளவும்
  • தேவைப்பட்டால், ஒரு நீளவாக்கில் அல்லது பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் நீங்கள் விரும்பினால் இதனுடன் சிறிது இஞ்சி மற்றும் 5 பூண்டு பற்களை இடித்து அல்லது பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்  
  • இப்போது தேவையான உப்பு சேர்த்து, தேங்காய் துருவல் மற்றும் சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கிளறவும்
  • இதனுடன் வேக வைத்த சாததத்தை சேர்த்து கிளறவும்
  • சூடான தேங்காய் சாதம் தயார்

  தமிழ்நாட்டில் எப்படி கொலு வைக்கப்படுகின்றது (Golu set in tamil nadu)

  Instagram

  நவராதிர் 9 நாள் பண்டிகையில் கொலு (golu/kolu) வைக்கப்படுவது ஒரு முக்கிய நிகழ்வு. இந்த கொலு வைக்க சில விதி முறைகள் உள்ளன. அவற்றை சரியாக புரிந்து கொண்டும், பின்பற்றியும் கொளுககளை அமைக்க வேண்டும். நீங்களும், உங்கள் வீட்டில் கொலு வைக்க விரும்பினால், இங்கே உங்களுக்காக சில பயனுள்ள தகவல்கள:

  • கொலு வைக்க முதலில் 5, 7, 9 அல்லது 11 படிகளை அமைக்க வேண்டும். ஒரு சில 3 படிகளும் அமைப்பார்கள்
  • பின் இந்த படிகளை சுத்தமான பருத்தி துணியால் அழகாக அலங்கரிக்க வேண்டும். அப்படி சித்தாள், பொம்மைகள் வைக்கும் போது, அழகாகத் தெரியும்
  • கொலு வைக்கும் மூன்று நாட்களுக்கு முன் முலப்பாரையை தயார் செய்ய வேண்டும்
  • முதல் படியில் குறிப்பாக ஓரறிவு உயிர்கள் வைக்கப்பட வேண்டும். புள், செடி, மரம் போன்ற தாவரங்கள் வைக்கப்பட வேண்டும்
  • இரண்டாம் படியில், இரண்டு அறிவு கொண்ட உயிரினங்கள் வைக்கப்பட வேண்டும். குறிப்பாக சங்கு, ஊர்வன, போன்றவை
  • மூன்றாம் படியில், மூன்று அறிவு கொண்ட உயிரினங்கள் வைக்கப்பட வேண்டும். எறும்பு போன்றவை வைக்கலாம்
  • நான்காம் படியில், நான்கு அறிவு கொண்ட உயிரினங்கள் வைக்கப்பட வேண்டும். மீன், நண்டு போன்றவை வைக்கலாம்
  • ஐந்தாம் படியில், ஐந்தறிவு கொண்ட உயிரினங்களான, பறவைகள், விலங்குகள் போன்றவை வைக்கலாம்
  • ஆறாம் படியில், ஆறறிவு கொண்ட உயிரினங்கள் வைக்க வேண்டும். குறிப்பாக மனிதர்களை குறிக்கும் பல வகை பொம்மைகள்
  • ஏழாம் படியில் மனித நிலையில் இருந்து உயிர் நிலைக்கு சென்ற சித்தர்கள், முனிவர்கள் போன்றவர்களின் சிலைகளை வைக்கலாம்
  • எட்டாம் படியில், தேவர்களை குறிக்கும் சிலைகளை வைக்கலாம்
  • ஒன்பதாம் படியில் சிவன், பெருமாள் ஒன்ற கடவுள்கள், தங்கள் பெண் கடவுளான, பார்வதி, லட்சுமி தேவியோடு இருக்கும் சிலைகளை வைக்கலாம். சில பெரிய கலச கும்பங்களையும் வைப்பார்கள்
  • நீங்கள் 11 படிகள் வைக்க விரும்பினால், ஒன்பது மற்றும் பத்தாம் படிகளில் கடவுள்களின் சிலைகளை வைத்து, பதினோராம் படியில் கலச கும்பத்தை வைக்கலாம்

  நவராத்திரி ஒவ்வொரு நாளின் சிறப்பு (How is each day of navartri celebrated)

  நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள், ஒன்பது பெண் தெய்வங்களை அவரவருக்கான முக்கியத்துவன்களோடு வழிபட உருவாக்கப்பட்ட பண்டிகை. இந்த பண்டிகை நாட்களில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சிறப்பு அம்சங்களோடு மக்கள் கொண்டாடுகின்றனர். அவற்றை பற்றி, தெரிந்து கொள்ள, உங்கே உங்களுக்காக சில தகவல்கள்:

  • நாள் 1: மகேஸ்வரி. சக்தியின் வடிவமாய் இருக்கும் பார்வதி தேவி இந்த நாளில் வணங்கப்படுகின்றாள்.
  • நாள் 2: கருமாரி / ராஜேஸ்வரி. கம்பீரமான தோற்றம் கொண்ட, அனைத்து உயிர்களையும் காத்தருளும் கருமாரி அம்மன் இந்த நாளில் வணங்கப்படுகின்றாள்
  • நாள் 3: வராளி அம்பிகை / வராஹி. அனைத்து இன்னல்களையும் போக்கி, அமைதியான வாழ்க்கையை வேண்டி, இந்த நாளில், வராஹி அம்மன் வணங்கப்படுகின்றாள்
  • நாள் 4: லட்சுமி. சகல செல்வங்களும் பெற்று செல்வசெளிப்போடு வாழ வேண்டி இந்த நாளில், லட்சுமி வணங்கப்படுகின்றாள்.
  • நாள் 5: வைஷ்ணவி. ஆரோக்கியமும், ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை வாழ அருள் பெற, வைஷ்ணவி தேவி வணங்கப்படுகின்றாள்
  • நாள் 6: சாந்தி தேவி.  நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை பெற, இந்த நாளில் சாந்தி தேவி வணங்கப்படுகின்றாள்
  • நாள் 7: அன்னபூரணி. என்றும் நிறைவான வாழ்க்கை பெற்று, அனைத்து உயிர்களும் பசியின்றி, ஆரோக்கியமான வாழ்க்கை பெற அன்னபூரணி இந்த நாளில் வணங்கப்படுகின்றாள்
  • நாள் 8: துர்கா. அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும், எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் எண்ணியபடி நிறைவேறவும், துர்க்கை அம்மன் இந்த நாளில் வணங்கப்படுகின்றாள்
  • நாள் 9: சரஸ்வதி. இந்த நாளில் ஞானத்தின் வடிவமான சரஸ்வதி தேவி வணங்கப்படுகின்றாள். இந்த தினம் அனைத்து மக்களாலும் கோலாகலமாக தமிழகம் எங்கும் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் மாணவர்கள், தொளில்புரிவோர்க்ள, அலுவலகம் செல்பவர்கள் என்று அனைவரும் தங்கள் புத்தகங்கள், தொழிலுக்கு உதவியாக இருக்கும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் என்று அனைத்தையும் கடவுளாக கருதி பூஜை செய்கின்றனர.
  • நாள் 1௦: விஜயதசமி. இந்த நாளில், கொலுவில் இருக்கும் ஏதாவது ஒரு பொம்மையையோ அல்லது சரஸ்வதி பூஜை அன்று வைக்கப்பட்ட கருவிகள், புத்தகங்கள் என்று ஏதாவது ஒன்றையோ சற்று அதன் இடத்தில் இருந்து நகர்த்தி வைப்பார்கள். இதனுடன் இந்த 9 நாள் பண்டிகையும் இனிதே நிறைவேறுகின்றது

  நவராத்திரி / சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை வாழ்த்துக்கள்(Navrathri wishes)

  Shutterstock

  1. படிப்பிற்கும் , தொழிலுக்கும், செல்வத்திற்கும் உரிய தெய்வங்களை வணங்கி அனைத்து வளங்களையும் பெறுவோம். ஆயுத பூஜை வாழ்த்துக்கள் (wishes) !

  2. வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
  வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
  கொள்ளை இன்பம் குலவு கவிதை
  கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
  சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

  3. படிப்பிற்கும், தொழிலுக்கும், செல்வத்திற்கும் உரியவளை வணங்கி அனைத்து செல்வங்களையும் இந்த திருநாளில் பெற, இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

  4. அனைத்து நண்பர்களுக்கும் அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துக்கள். எல்லோர் வீடுகளிலும் மங்களம் பொங்கட்டும். எல்லோர் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

  5. செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும்,
  அறிவாகவும் இருந்து செயல்படும் நம் இறைவனுக்கு
  என்றென்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
  இன்று தொடங்கும் நம் அனைத்து காரியங்களிலும்
  இறைவன் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியை
  நமக்கு தரட்டும்.  நண்பர்கள் அனைவருக்கும் இனிய
  ஆயூத பூஜை  தின நல்வாழ்த்துக்கள்.

  வாட்ஸ் ஆப் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்(Whats app navarathri wishes)

  1. இந்த இனிய சரஸ்வதி பூஜை திருநாளில்
  உங்கள் எண்ணங்கள் நிறைவேற, உங்கள வாழ்வில் கல்வியும், வளமும், செல்வமும், ஆரோக்கியமும் நிறைந்திட
  இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!

  2. கேட்ட வரம் தருவாள்
  அன்னை ஸ்ரீ சரஸ்வதி
  அன்னை ஸ்ரீ லக்ஷ்மி
  அன்னை ஸ்ரீ பராசக்தி
  அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

  3. விலையில்லா சொத்து கல்வி
  கலைமகள் திருநாள் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள். அன்பு மலர்
  எழுதும் எழுத்துக்கள் சிலருக்கு ஆயுதம்,
  வாழ்த்தும் வார்த்தைகள் சிலருக்கு ஆயுதம்
  யாவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

  4. பாடத்தை படிக்க யாசிக்கும் இத்திருநாளில்
  மனதையும் படிக்க யாசிப்போம்
  கற்றுக்கொள்வோம் கல்வியையும் வாழ்க்கையையும்
  இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

  உறவினர் நண்பர்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்கள்(Navarathri messages for relatives and friends)

  Shutterstock

  1. வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்
  வீணை செய்யும் ஒளியில் இருப்பாள்
  கொள்ளையின்பம் தரும் கவிதை கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
  அனைவர்க்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!

  2. வலைப் பூக்கள் வடிக்கும்- தேன்
  கலை பாக்கள் தொடுக்கும்
  விலை மதிப்பில்லாத -புகழ்
  மலைபோல் உயர்ந்து நிற்கும்
  நிலை தாழாத  - தமிழ் ஓலை
  தமிழுக்கு சாற்றும்
  அன்பு நட்புறவுகளுக்கு,
  இனிய "சரஸ்வதி பூஜை/ விஜய தசமி"
  நல்வாழ்த்துகள்

  3. பற்றுடன் பணியைச் செய்தாலே
  பணியும் வெற்றி உன்னிடமே
  கலைமகளை போற்றி நின்றாலே
  கனவுகள் நிறைவேறும் தன்னாலே
  இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

  4. படிக்காம
  சரஸ்வதிய கும்பிட்டாலும்,
  உழைக்காம
  லக்ஷ்மிய கும்பிட்டாலும்,
  கல்வியும்கிடைக்காது
  செல்வமும்கிடைக்காது
  பொரியும் சுன்டலும்
  தான் கிடைக்கும்
  என்ற அறியா தகவலுடன்
  ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

  5. அன்புடன்
  உங்களுக்கும்
  உங்கள் குடும்பத்தார்க்கும்
  விஜயதசமி
  சரஸ்வதி பூஜை
  மற்றும்
  ஆயுத பூஜை
  நல்வாழ்த்துக்கள்...!

  கேள்வி பதில்கள்(FAQ)

  1. நவராத்திரி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது?

  ஒன்பது நாட்கள் இந்த பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகின்றது, இது குறிப்பாக துர்க்கை அம்மன், மகிசாசுரனை வதம் செய்து வெற்றி பெற்று, மக்களை காத்தருளிய துர்க்கை அம்மனை போற்றும் வகையில் கொண்டாடப்படுகின்றது. இந்த நாட்களில், மக்கள் விரதம் இருந்து, பூஜைகள் செய்து வழிபடுவார்கள். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு வகையில், அவரவர் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்திற்கேற்ப இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

  2. துர்க்கை அம்மனின் ஒன்பது அவதாரம் என்ன? 

  துர்கை அம்மனின் ஒன்பது அவதாரம் பின்வருமாறு: மகேஸ்வரி, ராஜேஸ்வரி, வராஹி, லட்சுமி, வைஷ்ணவி, சாந்தி தேவி, அன்னபூரணி, துர்கா, மற்றும் சரஸ்வதி.

  3. நவராத்திரி பண்டிகை எப்படி கொண்டாடப்படுகின்றது?

   நவராத்திரி பண்டிகை ஒன்பது இரவுகள் கொண்டாடப் படுகின்றது. இந்த பண்டிகை காலத்தில், மக்கள் வீடுகளை சுத்தம் செய்து, கொலு வைத்து, தினமும் பூஜை செய்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சக்தி ரூபமான லட்சுமி, வைஷ்ணவி, மகேஸ்வரி போன்ற பெண் கடவுளுக்கு பலகாரங்கள் மற்றும் பழங்கள் படைத்து, கலை நிகழ்சிகள் நடத்தி, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை பொதுவாக தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில், அல்லது செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படுகின்றது.

   

  மேலும் படிக்க - விழாக்கால நேரங்களில் உங்களை விதம் விதமாக அலங்கரிக்க சில குறிப்புகள்

  பட ஆதாரம் - Shutterstock,Instagram

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.