ஸ்ட்ரெச் மார்க்ஸை குறைக்கும் புதிய பொருட்கள்!

ஸ்ட்ரெச் மார்க்ஸை குறைக்கும் புதிய பொருட்கள்!

உடல் அதிக எடையில் இருந்து பின்னர் மிகவும் மெலிதாக ஆனாலும், மகப்பேறு காலங்களுக்கு பிறகும், வயிற்றுப் பகுதிகளிலும், இடுப்பு பகுதியை சுற்றியும், கைகளிலும் தோன்றும் ஸ்ட்ரெச் மார்க்ஸை (reduce stretch mark) போக்க நிறைய தீர்வுகள் இருக்கிறது. மிகவும் எளிதாகவும், நல்ல பலனைக் கொடுக்கக் கூடிய ஐந்து பொருட்களின் பட்டியல் இதோ! அவற்றைப் பற்றி விரிவாக எப்படி பயன்படுத்துவது(வழி), ஒவ்வொன்றின் பயன்கள் என்ன என்றும் பார்க்கலாம். 

1. ஆர்கான் எண்ணெய்

Shutterstock

மொரோக்கோ நாட்டின் ஆர்கான் மர கொட்டைப்பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் ஆர்கான் எண்ணெய்.

பயன்கள்:
1. ஆர்கான் எண்ணெய்யிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை உள்ளது.
2. வைட்டமின் ஈ அதிகமாக இருக்கிறது.
3. இது சருமத்திற்கு ஊட்டத்தை அளித்து, வடுக்களை சரி செய்கிறது.

செய்முறை:
ஆர்கானிக் ஆர்கான் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த எண்ணெய் விரைவில் சருமத்திற்குள் உறுஞ்சப்படும்.
இதை கழுவவோ, துடைக்கவோ தேவையில்லை.
தினமும் இரண்டுமுறை தடவி மசாஜ் செய்து வந்தால், வடுக்கள் மறையும்.

2. ஷியா பட்டர்

ஷியா பட்டர் என்பது ஒரு ஆப்பிரிக்க தாவிர கொட்டையில் இருந்து எடுத்த கொழுப்பு. 

பயன்கள்:

1. இதில் நல்ல மருத்துவ குணங்கள் உள்ளது.
2. ஆன்டி-இன்ஃபிலமேடரி தன்மை இருக்கிறது.
3. சருமத்தை சூரிய (யூவி)கதிரில் இருந்து காக்கிறது.
4. சருமத்திற்கு ஈரத்தன்மையை கொடுக்கும்.
5. சருமத்தில் சேதமடைந்த செல்களை சரி செய்து, சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

செய்முறை:

ஷியா பட்டரை பயன்படுத்தி வடுக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்ய வேண்டும்.
அப்படியே விட்டுவிடலாம். கழுவ வேண்டாம்.
ஒரு நாளில் இரண்டு, மூன்று முறை இந்த வெண்ணையை பயன்படுத்தலாம்.

3. காஃபி ஸ்கரப்

Shutterstock

பயன்கள்:

1. காஃபியில் உள்ள காஃபைன், சருமத்திற்குள் ஊடுருவும் தன்மை கொண்டது. 
2. சருமத்தில் இருக்கும் கொழுப்பை கரைக்கக் கூடியது.
3. மேலும், அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை உள்ளது.
4. மென்மையாக தேய்ப்பது ரத்த ஓட்டத்தை சீராக்கும். 
5. இவை அனைத்தும் சேர்ந்து சருமத்தில் இருக்கும் வடுவை (மார்க்) குறைக்கும்.
6. இத்தகைய  நலன்கள் கொண்ட காஃபி ஸ்கரப் எப்படி தயாரிப்பது என்று  பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

காஃபித்தூள் - 1 கப்
தேங்காய் எண்ணெய் அல்லது 
ஆலிவ் எண்ணெய் அல்லது 
கற்றாழை ஜெல் - ½ கப்
நாட்டுச்சக்கரை - 1 கப்
வெண்ணிலா - ½ தேக்கரண்டி

செய்முறை:

எல்லாப் பொருட்களும் சேர்த்து நன்றாக கலந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
குளிப்பதற்கு முன் ஸ்ட்ரெச் இருக்கும் இடங்களில் பூசி வட்டவடிவில் நன்றாக ஐந்து நிமிடங்கள் தேய்த்து விடுங்கள். 
பிறகு நன்றாக வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவிட்டு, சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். 
கண்களிலும், முகத்திலும் படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

4. டீ ட்ரீ எண்ணெய்

டீ ட்ரீ எண்ணெய் ஸ்ட்ரெச் மார்க்ஸை சரி செய்வதோடு, புண்ணையும், தொற்றையும் நீக்கும்.

தேவையான பொருட்கள்:


1. டீ ட்ரீ எண்ணெய் - 4 அல்லது 5 துளிகள்
2. ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 ½ தேக்கரண்டி

செய்முறை:


இரண்டு எண்ணெய்யையும் நன்றாக கலந்து, தழும்பு உள்ள இடங்களில் மசாஜ் செய்யுங்கள்.
சருமத்தில் அது ஊடுருவட்டும். கழுவ வேண்டாம்.

5. ஆப்பிள் சிடர் வினீகர்

Pixabay

அமிலத்தன்மை கொண்டதால் ஆப்பிள் சிடர் வினீகர், சருமத்தில் உள்ள தழும்புகளை குறைக்கும். 

செய்முறை:

தூங்குவதற்கு முன் ஆப்பிள் சிடர் வினீகரை மார்க்ஸ் உள்ள இடங்களில் ஸ்ப்ரே செய்து கொண்டு தூங்கிவிடுங்கள்.காற்றில் அது காயட்டும். 
காலையில் நன்றாக சுத்தப்படுத்துங்கள். 
பின்னர் ஏதாவது ஒரு ஈரத்தன்மை கொடுக்கும் பொருளை உங்கள் சருமத்தின் மீது பயன்படுத்துங்கள்.

உங்கள் ஸ்ட்ரெச் மார்க்ஸை நீக்க, விளக்கெண்ணெய், கற்றாழை, எலுமிச்சை, மஞ்சள்தூள், பேபி ஆயில் போன்றவற்றை பயன்படுத்தி அழுத்து விட்டீர்களா? சரும ஆரோக்கியத்தையும் பாதுகாத்து, பயன்படுத்தவும் எளிதாக இருக்கும் வித்யாசமான மேலே சொன்ன பொருட்களை கொண்டு உங்கள் ஸ்ட்ரெச் மார்க்ஸை குறைக்க முயற்சியுங்கள். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை கொண்டு பயன்படுத்தி, எது உங்களுக்கு நல்ல தீர்வைத் தருகிறதோ அந்த பொருட்களை பயன்படுத்துங்கள். இவை யாவும் இயற்கையான பொருட்களே. அதனால், சந்தேகமின்றி தைரியமாக பயன்படுத்திப் பாருங்கள்.

 

மேலும் படிக்க - சாயிஷாவை போன்ற குறைபாடற்ற பிரகாசமான தோற்றத்தை பெற இந்த 5 முக்கிய படிகள் போதுமானவை!

மேலும் படிக்க - வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் குணப்படுத்துவதற்கான டிப்ஸ்!

பட ஆதாரம்  - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!