சாயிஷாவை போன்ற குறைபாடற்ற பிரகாசமான தோற்றத்தை பெற இந்த 5 முக்கிய படிகள் போதுமானவை!

சாயிஷாவை போன்ற குறைபாடற்ற பிரகாசமான தோற்றத்தை பெற இந்த 5 முக்கிய படிகள் போதுமானவை!

பளபளப்பான சருமம் வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை. சினிமா பின்னணி கொண்ட பரம்பரையில் பிறந்து, ஆர்யாவை திருமணம் செய்து கொண்டு அவருடன் இணைந்து தற்போது திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் சாயிஷாவின் பளபளக்கும் சருமத்தை பார்த்து ரசிக்காத பெண் இருக்க முடியாது. ஆனால், ஹார்மோன் பிரச்சனை, மாசு, தூசு, இவற்றிற்கு இடையே களங்கமில்லாத தூய்மையான சருமம் பெறுவது சாத்தியம் ஆகுமா? 

சயிஷாவை (sayesha) போன்ற  பளபளக்கும் (glowing skin) மாசு மருவற்ற சருமத்தை பெறுவதற்கான  ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா ?  அதற்கு நீங்கள் செய்யவேண்டிய விஷயங்கள் (tips) என்ன என்று பார்க்கலாம் வாருங்கள். 

1. சரும ஆரோக்கியம்

முதலில் சருமத்தின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். வெளியில் இருந்து சருமத்திற்கு(skin) ஏற்படும் பாதிப்புகளை முதலில் களைய வேண்டும். 

 • சருமத்தை நன்றாக சுத்தம் செய்வதுஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். சுத்தம் செய்ய நீங்கள் கிலென்சர்(Cleanser) பயன்படுத்தலாம். அல்லது உங்கள் சமையலறையில் உள்ள கடலைமாவு, மஞ்சள்தூள், பால் கொண்டு ஒரு முகப்பூச்சு போட்டு ஊறவிடுங்கள். 20 நிமிடங்கள் களித்து கழுவுங்கள்.
 • தூங்குவதற்கு முன் மேக்கப்பை நீக்கி விடுங்கள்சருமம் ஆரோக்கியமாக சுவாசிக்க, தூங்கும்முன் மேக்கப்பை நீக்கி விடுவது நல்லது. ஆலிவ் ஆயில் கொண்டு உங்கள் முகத்தை லேசாக மசாஜ் செய்து மேக்கப்பைத் துடைத்து அழுக்கையும் நீக்குங்கள்.
 • சூரியக் கதிர்எஸ்பிஎஃப்(SunProtectorFactor) குறைந்தது 15 இருக்கும் சன்சகிரீன் பயன்படுத்தி உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து காத்துக்கொள்ளுங்கள். சரும ஓட்டைகளை அடைக்காத பொருட்களை வாங்கி பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.

மேலும் படிக்க  - உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்கிரீன் லோஷனை தேர்ந்தெடுப்பதற்கான முழுமையான வழிகாட்டி !

2. உணவு

Pexels

நீங்கள் உண்பதில்தான் உங்கள் உடல் ஆரோக்கியம் இருக்கிறது. 

 • பாதாம் போன்ற நட்ஸ்; ஆப்பிள்  கேரட் பீட்ரூட் போன்ற பல நிற காய்களும், பழங்களும்; சருமத்திற்குத் தேவையான வைட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்கள்; ஆளிவிதைகள் போன்ற பொருட்களை உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு  மிகவும் உதவும் உணவுகளாகும்.
 • பொறித்த உணவு, துரித உணவு, பேக்கிங் செய்யப்பட்ட உணவு இவை அனைத்தையும் தவிர்க்கவும். இதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடையாளம்.
 • நீங்கள் மாமிசம் உண்பவராக இருந்தால், சால்மன் மீன் எடுத்துக்கொள்ளுங்கள். மீனில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 சருமத்தை வயதான தோற்றத்தில் இருந்து காப்பாற்றும். 
 • ஆன்டி பாக்டீரியல்(anti-bacterial) தன்மை கொண்ட பூண்டை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

3. நன்றாக உறங்குங்கள்

 • ஆறு முதல் எட்டுமணி நேரத்தூக்கம் உங்கள் உடலுக்குத் தேவை. அரைகுறை தூக்கம் உங்கள் சருமம் பலவீனமாக சோர்ந்து போக காரணமாகும். 
 • சிலருக்கு உறங்கும்போது முகத்தில் ஏதாவது தடவிக்கொண்டு தூங்குவது வளக்கம். வாரத்தில் எல்லா நாட்களிலும் அப்படி செய்யாமல் ஓரிரு நாட்கள் மட்டும் முகத்தில் எதுவும் போடாமல் சருமம் சுவாசிக்க விடுங்கள். அது மிகவும் தேவை. 

4. உடற்பயிற்சி

Pixabay

தினமும் போதிய அளவு உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். சாயிஷா தினமும் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்கிறார் எண்றதுக்கான்னா சாட்சி அவரது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அளிக்கிறது!

 • 30 முதல் 40 நிமிடங்கள் தினமும் ஓடுவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, ஒர்க் அவுட் செய்வது போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வதால் உங்கள் உடல் முழுவதும் நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். 
 • உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளிவரும். 
 • உடற்பயிற்சி செய்ததற்குப்பின் உங்கள் சருமத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்வது மிகவும் அவசியம். 

5. ஆரோக்கியமான வாழ்க்கை முறை

உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்வதும் உங்கள் உடல் ஆரோக்கியத்தின் மிக முக்கியமான ஒரு அங்கமாகும்.

 • உங்களுக்கான சில நேரத்தை ஒதுக்கி உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். 
 • மூச்சுப் பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றில் எது உங்களுக்கு எளிதாகவும் நிம்மதியைத் தருவதாகவும் இருக்கிறதோ அதை பின்பருங்கள்.
 • பொதுவாக பயிற்சி செய்யும்போது, முகத்தில் உள்ள தசைகளுக்கு எந்தவிதமான பயிற்சியும் நாம் கொடுப்பதில்லை. தாடை எலும்பையும், முகத்தின் தசைகளையும் அசைத்து ஒரு ஐந்து நிமிடமாவது பயிற்சி செய்யுங்கள். 
 • இதற்கு எளிய வழி நன்றாக மனம்விட்டு சிரிப்பது. அனைத்தையும் மறக்கடித்து உங்கள் முகத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் நன்றாக இயங்குமாறு செய்துவிடும். 

6. நீர் அருந்துதல்

Pexels

போதிய நீர் அருந்தி உங்களை நீரோட்டமாக வைத்துக்கொள்வது சருமத்திற்கு மிகவும் நல்லது.

 • ஒரு நாளிற்கு குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும். 
 • ரோஸ் வாட்டர் உங்கள் கண்களின் எரிச்சலில் இருந்து உங்களை பாதுகாத்து உங்கள் சருமத்தையும் ஈரப்பதமாக வைக்க உதவும். 

இவை எதுவும் கடினமான குறிப்புகள் இல்லையே. சாயிஷா போன்ற பொலிவான, அழகான சருமம் வேண்டுமென்றால், மேலே சொன்ன சில டிப்ஸ் / குறிப்புகளை  பின்பற்றி பாருங்கள், உங்களுக்கும் நிச்சயம் பொலிவான (பிரகாசமான) சருமம் கிடைக்கும். வாழ்த்துக்கள்!

 

மேலும் படிக்க - கரும்புள்ளிகளால் பொலிவிழந்த முகத்திற்கு கல் உப்பு வைத்தியம்.. செலவில்லாமல் அழகாகுங்கள் !

பட ஆதாரம்  - Instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!