வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் குணப்படுத்துவதற்கான டிப்ஸ்!

வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் குணப்படுத்துவதற்கான டிப்ஸ்!

வாய் புண் வைட்டமின் சி குறைவால் ஏற்படுகிறது. வாய் புண் தீவிரம் அதிகரிக்கும் போது அது கேன்சராக கூட மாற வாய்ப்புள்ளது. உதட்டு ஓரங்களிலும், நாக்கிலும் சிறு கொப்புளங்கள், சிவந்து போதல், வெடிப்பு, இரத்தக்கசிவு ஆகியவை வாய் புண் இருப்பதற்கான அறிகுறிகள். வாய்ப்புண் உடையவர்கள் தொடர்ந்து வாய்ப்புண்ணால் அவதிப்படுவதை காண முடிகிறது. 

எந்த உணவை சாப்பிட்டாலும் காரமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும். அதிக இனிப்பையும் புளிப்பு சுவையையும் கூட இவர்களால் சுவைக்க முடியாது. வாய்ப்புண் (mouth ulcers) உண்டாவதற்கான காரணங்கள் மற்றும் அதனை இயற்கை முறையில் அதனை சரிசெய்வது குறித்து இங்கு காண்போம். 

pixabay

வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள்

 • ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு, இரைப்பையில் புண், குடலில் அழற்சி நோய்கள், ரத்தச்சோகை, நீரிழிவு, பல் ஈறு கோளாறுகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வருகிற சாத்தியம் அதிகமாக உள்ளது. 
 • வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடும் பழக்கம் இருந்தாலும், புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களாலும் வாய்ப்புண் வரலாம்.
 • அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும் வாய்ப்புண் நிரந்தரத் தொந்தரவாகிவிடும். 
 • ஆண்களைவிட பெண்களுக்கு வாய்ப்புண் தொல்லை அதிகம். ஏனெனில் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் வாய்ப்புண் வருகிறது.
pixabay

 • வலிப்பு நோய் மாத்திரைகள் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவது உண்டு. 
 • எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் தொல்லை கொடுக்கும்.
 • வாய்ப்புண்ணிற்கு (mouth ulcers) முதன்மையான காரணம் வயிற்றிலும் அல்சர் இருப்பதே ஆகும். இரைப்பையில் உணவுக் குடல் வால்களில் சுரக்கும் அதிகப்படியான அமிலம் அல்லது நேரந்தவறிய உணவு முறைகளால் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது. இது வாயிலும் வெளிப்படுகிறது.

வாய்ப்புண்ணை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்

 • வெது வெதுப்பான தண்ணீரில் சிறதளவு உப்பு போட்டு வாய் கொப்பளிக்க்கலாம். இது வாய் புண் சீக்கிரம் குணமாக உதவுகிறது.
 • வாய்ப்புண் உள்ள இடத்தில் சுத்தமான தேனைத் தடவலாம். இது புண்களை விரைவில் ஆற்றும். 
 • ஆர்கானிக் ரோஜாப்பூ இதழ்கள் அல்லது கொட்டைப்பாக்கை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரை கொண்டு வாய்கொப்பளிக்க வேண்டும். 
 • வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் குடிக்காலம். மேலும் தேங்காய் பாலை தினமும் உணவில் சேர்த்து வரலாம். 
pixabay

 • தினமும்  காலையில் வெறும் வயிற்றில் சிறு மஞ்சள் துண்டுகள் சாப்பிட்டு வந்தால் வயிற்று மற்றும் வாய் புண் குணமடையும்.  
 • மணத்தக்காளி இலைகளை பறித்து தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து  சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
 • கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண்  விரைவில் ஆறிவிடும். 
 • தினமும் மூன்று வேலை கொய்யா இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வந்தால் வாய் புண் விரைவில் குணமாகும். 
pixabay

 • வாழை பூ உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண் மற்றும் வாய் புண் குணமாகும். 
 • நெல்லிக்காய் இலைகளை வேகவைத்து அந்த நீரில் அடிக்கடி வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய்க்கொப்பளிக்க புண் குணமாகும். 
 • உடல் குளிர்ச்சியாக இருக்க அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை  எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • வெந்தயக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தாலும் வெந்தயக் கீரையை பச்சையாகவே அரைத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாய்ப்புண்ணையும் (mouth ulcers) அறவே ஆற்றுகிறது. 
pixabay

 • சூடான நீரில் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து டீ போல தயாரித்து அத்துடன் எலுமிச்சை சாறு, ஒரு கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து டீயாக பருகினாலும்  வாய்ப்புண் குணமாகும். 
 • காலையில் எழுந்ததும் சுத்தமான நல்லெண்ணையை ஒரு தேக்கரண்டி எடுத்து வாயில் நிரைத்துக் கொண்டு தொடர்ந்து 15 நிமிடங்கள் லேசாக கொப்பளித்து ஆயில் புல்லிங் செய்து வந்தாலும் வை புண்கள் விரைவில் குணமாகும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!