காஃபின் நற்பலன்கள் – காஃபினால் கிடைக்கும் நன்மைகள்!

காஃபின் நற்பலன்கள் – காஃபினால் கிடைக்கும் நன்மைகள்!

காஃபின், அதிக அளவு காபி மற்றும் தேயிலையில் காணப்படுகின்றது. இதை பற்றி பல தவறான கருத்துகளும், நம்பிக்கைகளும் இருந்தாலும், இந்த காஃபின்னில் இருந்தும் பல நன்மைகள் கிடைகின்றன. காஃபின்னை (caffeine) சரியான அளவு எடுத்துக் கொள்ளும் போது, அது பல நன்மைகளை உங்களுக்குத் தரும். மேலும் உடல் நலம் மட்டுமன்றி, உங்கள் சருமம் மற்றும் தலைமுடி வளர்ச்சி போன்றவற்றிக்கும் இது அதிகம் பயன்படுகின்றது.

நீங்கள் தினமும் காபி மற்றும் தேநீர் போன்ற வடிவில் இந்த காஃபின்னை எடுத்துக் கொண்டாலும், இதன் நன்மைகளோடு (benefits) சேர்த்து, இது எப்படி உங்கள் சரும ஆரோக்கியம் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்.

Table of Contents

  காஃபின்னை பற்றிய சில விரைவான தகவல்கள் (fast facts of caffeine)

  • காஃபின் ஒரு ஊக்கமூட்டி. இதை கோடிக்கணக்கான மக்கள் தினமும் அருந்தி வருகின்றனர்
  • இது மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றது
  • மயக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகளை போக்கி, கவனம் மற்றும் புத்துணர்ச்சியைத் தருகின்றது
  • ஒருவர் ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் அளவு மட்டுமே காஃபின்னை எடுத்துக் கொள்ளலாம்
  • பரிந்துரைக்கப்பட்ட அளவு காஃபின்னை எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையும் குறைய வாய்ப்பு உள்ளது
  • காஃபின் விழிப்புணர்வை அதிகப்படுத்தும்
  • காஃபின் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால், கர்ப்பிணி பெண்கள் இதனை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்
  • இதை மதுவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு உயிர் கொல்லியாகவும் இது மாறி விடலாம்
  • பாதுகாப்பான அளவு காஃபின்னை எடுத்துக் கொள்ளும் போது வாய் மற்றும் தொண்டையில் ஏற்படும் புற்றுநோயை 5௦% அளவு குறைக்க உதவும்
  • ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பை 22% குறைக்க உதவும்
  • பல வகை புற்றுநோய்களை போக்க இது உதவும்
  • நீரழிவு நோயின் தாக்கத்தை பெரிய அளவு குறைக்க உதவும்
  • ஒரு நாளைக்கு 4 கப் காபி அருந்துவர்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது
  • கொதிக்க வைத்த காபியை அருந்தும் போது இருதயத்தின் ஆரோக்கியத்தை இது அதிகப்படுத்துகின்றது
  • மார்படைப்பு வந்த பின் காபி அருந்துபவர்களுக்கு மரணத்திற்கான சாத்தியம் பெரும் அளவு குறைகின்றது

  காஃபின்னில் நிறைந்திருக்கும் சத்துக்கள் (nutritional value of caffeine)

  Pexels

  காஃபின் பிரபலமாக வறுத்து அரைக்கப்பட்ட காப்பி கொட்டைகளில் நிறைந்துள்ளது. ஒரு கப் காபியில் நிறைந்திருக்கும் சத்துக்களை பற்றி இங்கே பார்க்கலாம்;

  • ரிபோஃப்ளேவின் - வைட்டமின் பி 2: 11%.
  • பாந்தோத்தேனிக் அமிலம் - வைட்டமின் பி 5: 6%.
  • மாங்கனீசு மற்றும் பொட்டாசியம்: 3%.
  • மெக்னீசியம் மற்றும் நியாசின் - வைட்டமின் பி 3: 2%.

  காஃபின்னால் கிடைக்கும் உடல் நல பலன்கள் (health benefits of caffeine)

  காஃபின்னை தினமும் அருந்தும் போது பல நன்மைகள் கிடைகின்றன. காபி மற்றும் தேயிலையை மக்கள் பல ஆண்டு காலமாக அருந்தி வந்ததால், இதற்க்கு வழக்கமாகியும் விட்டனர் என்றும் கூறலாம். இது உடனடி உற்சாகத்தை தந்து, உடலை சுறுசுறுப்பாக ஆக்குகின்றது என்பதே இதனை மக்கள் அதிக அளவு அருந்த ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதில் சத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகம் இல்லை என்றாலும், பல நன்மைகளை இது தருகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி,    காஃபின் உடலுக்கு என்னென்ன நன்மைகளைத் தருகின்றது என்று இங்கே பார்க்கலாம்:

  1. ஞாபக சக்தியை அதிகரிகின்றது

  ஜப்பானில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், காஃபின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது மனதை ஊக்கப்படுத்தி, உற்சாகத்தை அதிகப்படுத்துவதால், எந்த ஒரு செயலையும் ஆர்வத்தோடு செய்யும் திறனை அதிகரிக்க உதவுகின்றது. இதனாலேயே ஞாபக சக்தியும் அதிகரிகின்றது என்று நம்பப்படுகின்றது

  2. சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்கும்

  Pexels

  காஃபின்னை தினமும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு அருந்தி வரும் போது, சிறுநீரகத்தில் கல் உண்டாவதை இது பெரிதும் குறைகின்றது. இதற்கு முக்கிய காரணம் இது சிறுநீரை நீர்க்க செய்கின்றது. மேலும் அதிக பிரச்சனைக்குறிய சிறுநீரக நோய்களையும் இது ஏற்படாமல் தவிர்க்க உதவுகிண்ட்ரகுடு.

  3. நன்கு சிந்திக்க உதவுகின்றது

   காஃபின் ஒருவருக்கு தூக்கம் சரியாக வரவில்லை என்றாலோ, அல்லது சரியாக சிந்திக்க முடியாமல், சரியான அல்லது தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் அவதிப்பாடாலோ, அந்த நேரத்தில் ஒரு கப் காபியை எடுத்துக் கொள்ளும் போது, மூளை புத்துணர்ச்சி பெற்று, நன்கு சிந்திக்கும் திறனைப் பெறுகின்றது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  4. ஆஸ்த்மாவை குறைகின்றது

  மேலும் ஆய்வில் காஃபின் ஆஸ்த்மா அறிகுறி இருப்பவர்களுக்கு, அதன் தாக்கம் அதிகரிக்காமலும், மேலும் நல்ல உடல் நலத்தைப் பெறவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது சுவாச குழாய்களை சுத்தம் செய்து, காற்று நன்கு செல்ல உதவுகின்றது.

  5. வாகனம் ஓட்டும் திறனை அதிகரிக்கும்

  ஒரு ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையின் ஆய்வுப் படி, வாகனம் ஓட்டுபவர்கள் காபியை அருந்தும் போது, சிறப்பாக வாகனம் ஓட்ட முடிகின்றது என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் இது தவறு இல்லாமல் வாகனம் ஒட்டவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனம் ஓட்டும் போது தூக்கம் வராமல் இருக்க உதவுகின்றது.

  6. உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவும்

  Pexels

  காஃபின் உடல் எடை அதிகரிக்காமல் சீரான அளவு இருக்க உதவுகின்றது. குறிப்பாக ஒரு நாளைக்கு 2 முதல் 4 கப் காபி அருந்துபவர்கள் உடல் எடை குறைவதை கவனிக்கலாம். காஃபின் பழுப்பு கொழுப்பு அணுக்களை தூண்டுகின்றது. இதனால் அவை கலோரிகளை அதிக அளவு எரிகின்றது. இது உடல் எடை குறைய ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

  7. நாள் பட்ட அழற்சியை போக்குகின்றது

  காஃபின் வயதாகும் போது ஏற்படும் பல பிரச்சனைகளை போக்க அல்லது குறைக்க உதவுவதாக ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக் அனால் பட்ட அழற்சி போன்ற பிரச்சனைகளை இது அதிக அளவு குறைக்க உதவுகின்றது. இந்த பிரச்சனை உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றை உண்டாக்கக் கூடும். மேலும் காஃபின் வயது முதிர்வு காரணமாக உருவாகும் பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவுகின்றது.

  8. இருதய ஆரோகியதிருக்கு உதவும்

  ஒரு நாளைக்கு 2 முதல் 4 கப் காஃபின் அல்லது காபியை எடுத்துக் கொள்ளும் போது, இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு பெரும் அளவு குறைகின்றது. இது இருதய தசைகளில் இருக்கும் அணுக்களை பலப்படுத்தி, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ உதவுகின்றது.

  9. முன்கூட்டிய பிறக்கும் குழந்தைகளுக்கு உதவும்

  காஃபின் முழு வளர்ச்சி அடையாமல் முன்னதாகவே பிறக்கும் குழந்தைக்கு அதன் நுரையீரல் செயல்பாடு மற்றும் வாழும் சாத்தியத்தை அதிகரிக்க உதவுகின்றது. மேலும் இது எந்த வித பக்க விளைவுகளையும் குழந்தைக்கு கொடுக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது.

  10. விழிப்புணர்வு

  Pexels

  75 மில்லி கிராம் காஃபின் விழிப்புணர்வு மற்றும் கவனத்தை அதிகரிக்க உதவுகின்றது. இது மூளைக்கு உற்சாகத்தை தருகின்றது. மேலும் நினைவாற்றலை அதிகப்படுத்தி, மூளை உடனுக்குடன் பதில் தரவும், செயல்படவும் உதவுகின்றது.

  11. விளையாட்டில் சிறப்பாக செயல்பட உதவுகின்றது

  காஃபின் உடல் சுறுசுறுப்பாக செயல்பட உதவும். குறிப்பாக உடற் பயிற்சி மற்றும் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது திறமையாக செயல்பட உதவும். இது ஒருவரின் செயல் திறனை அதிகரிக்கும்.

  12. அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்

  இந்த அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்களை குணப்படுத்த அல்லது இதன் தாக்கத்தை குறைக்க காஃபின் பெரிதும் உதவுகின்றது. இது இந்த நோய் ஏற்படாமல் தடுக்க அதிகம் உதவியாக உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  13. கல்லீரல் மற்றும் பெருங்குடல்

  காஃபின் பெருங்குடல் மற்றும் கல்லீரலின் செயல் திறனை அதிகரிக்க உதவுகின்றது. இது குடல் கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவியாக உள்ளது. மேலும் குடல் சுவற்றின் வாயிலாக கழிவுகள் எளிதாக கடக்க உதவுகின்றது. இதில் நிறைந்திருக்கும் ஆக்சிஜநேற்றிகள் கல்லீரலில் ஏற்படும் நச்சுத் தன்மையை போக்க உதவுகின்றது.

  14. கண் புரை

  Pexels

  காஃபின் கண்ணில் ஏற்படும் புரை போன்ற பிரச்சனைகளை போக்கி, லென்ஸ்கள் ஆரோக்கியமாக இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் உதவுகின்றது. இதனால் கண் பார்வை அதிகரிகின்றது.

  15. சரும பாதுகாப்பு

  காஃபின் சரும புற்றுநோய் ஏற்படாமல் இருக்க பெரிதும் உதவுவதாக மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஊதா கதிர்வீச்சால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க உதவுகின்றது.

  16. புற்றுநோய்

  காஃபின் வாய், தொண்டை, மற்றும் பிற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை பெரிதும் குறைகின்றது. மார்பக புற்றுநோயின் தாக்கத்தை பெரிய அளவு குறைகின்றது.

  17. நீரழிவு நோய்

  தினமும் காபி அருந்துபவர்களுக்கு நீரழிவு நோயின் தாக்கம் பெரும் அளவு குறைவாக உள்ளது. தினமும் காப் அருந்துபவர்களை, அருந்தாதவர்களுடன் ஒப்பிடும் போது, காபி அருந்துபவர்களுக்கு நீரழிவு நோயின் பிரச்சனைகள் குறைவாகவே உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது இன்சுலின் சீரான அளவு சுரக்கவும் உதவுகின்றது.

  18. சக்தியின் அளவை அதிகரிக்கும்

  Pexels

  காஃபின் உடலுக்குத் தேவையான சக்தியை உடனடியாக பெற உதவும். இது ஒரு ஊக்கமூட்டியாக செயல்படுவதாலும், இரத்த ஓட்டத்தில் உடனடியாக சார்ந்து விடுவதாலும், மூளைக்கு புத்துணர்ச்சி உடனடியாக கிடைகின்றது. மேலும் இதன் காரணமாக சக்தியும் உடலுக்கு அதிகம் கிடைகின்றது.

  19. கொழுப்பை எரிக்க உதவும்

  காஃபின் உடலில் இருக்கும் அதிக கொழுப்பை கரைக்க அல்லது எரிக்க பெரிதும் உதவுகின்றது. இதனால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடலும் ஆரோகியமாகின்றது. மேலும் இது உடல் எடை குறையவும் உதவுகின்றது.

  20. மன அழுத்தத்தை குறைக்கும்

  காஃபினின் ஒரு முக்கிய வேலை, உங்கள் மனதிற்கு அமைதியை உண்டாக்கி, மன அழுத்தத்தைக் குறைப்பது. இதன் காரணமாகவே, பலரும் காபியை அதிகம் அருந்துவதுண்டு. மேலும் இது மனதில் எழும் சிந்தனைகளையும் சீர்படுத்தி உறசாகத்தை ஏற்படுத்துகின்றது.

  21. ஆக்சிஜனேற்றம் நிறைந்தது

  காபியில் அதிக ஆக்சிஜனேற்றம் இருகின்றது. மக்கள் பழங்கள் மற்றும் காய்களில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜனேற்றத்தை விட, காபியில் அதிக கிடைப்பதாக நம்புகின்றனர்.

  22. டின்னிடசை குறைகின்றது

  Pexels

  காபி அதிகம் அருந்திய பெண்கள் டின்னிடஸ் பிரச்சனை குறைவதாக கூறுகின்றனர். இதன் காரணமாக, காஃபின் இந்த பிரச்சனையை குறைக்கும் என்று கருதப்படுகின்றது.

  23. வலி நிவாரணி

  காபி உடலில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகின்றது. இது ஒரு இபுப்ரோபின் மற்றும் மோர்பின்னாகவும் செயல்படுகின்றது. இதனால் இது ஒரு நல்ல வலி நிவாரணியாக செயல்படுகின்றது.

  காஃபினில் கிடைக்கும் சரும பலன்கள் (caffeine and skin health)

  காஃபின் பல சரும நலன்களை தருகின்றது. சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளை இது போக்க உதவுகின்றது. இதனால், இதை சரும ஆரோகியதிர்க்காக பல முறைகளில் மக்கள் பயன்படுத்துகின்றனர். காஃபின் எப்படி சரும நலனுக்காக பயன்படுகின்றது என்று இங்கே பார்க்கலாம்:

  1. சருமத்தில் தோன்றும் வெடிப்புகள் விரிசல்கள்

  காஃபின் சருமத்தில் ஏற்படும் விரிசல் அல்லது வெடிப்புகளை போக்க உதவுகின்றது. குறிப்பாக இதற்கு காரணமாக இருக்கும் இறந்த அணுக்களை அகற்ற இது உதவும். இதனால் சருமம் நல்ல மிருதுவாகி, ஆரோக்கியத்தைப் பெறுகின்றது.

  2. கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கத்தை போக்கும்

  காஃபின்இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இதனால் இரத்த குழாயில் இரத்த ஓட்டம் சீர் பெற்று, கண்கள் மற்றும் கண்களை சுற்றி இருக்கும் பகுதிகளுக்கு போதிய இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகின்றது. மேலும் இதனால் கண்களில் இருந்து நீர் வருவதும் குறைகின்றது.

  3. சூரிய கதிரில் இருந்து பாதுகாப்பு

  Pexels

  காஃபின் சருமத்தை ஊதா கதிர்கள் மற்றும் சூரிய கதிர்களிடம் இருந்து பாதுகாக்க உதவுகின்றது. இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் மற்றும் போளிபனோல் சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

  4. செல்லுளைடுகளை குறைகின்றது

  காஃபின் சருமத்தில் தோன்றும் செல்லுளைடுகளை குறைக்க உதவுகின்றது. இதனால் சருமம் நல்ல தோற்றத்தைப் பெறுகின்றது. மேலும் மிருதுவாகின்றது.

  5. பருக்களை போக்கும்

  காஃபினில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் மற்றும் க்லோரோஜெனிக் அமிலம் முகத்தில் பருக்கள் தோன்றுவதை போக்க பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் இதனால் முகமும் நல்ல தெளிவாக உள்ளது.

  6. மிருதுவான சருமம்

  Pexels

  காஃபினில் சுத்திகரிக்கும் திறன் உள்ளது. இதனால் அது சருமத்தை மிருதுவாகவும், பலபலப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் சருமத்தில் இருக்கும் இறந்த அணுக்களை அகற்றவும், இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தை மேலும் ஆரோகியமாக்கும்.

  7. நிறத்தை மேம்படுத்தும்

  காஃபினை தினமும் சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரித்து, நல்ல அழகையும் உண்டாக்கும். இதனால் மிருதுவான, மென்மையான சருமமும் கிடைக்கும்.

  சரும அழகிற்கு எப்படி காஃபினை பயன்படுத்தலாம் (skin care procedures)

  காஃபினை சரும அழகிற்காக பல்வேறு பாதுகாப்பான முறைகளில் அழகு நிபுணர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இன்னும் சிலருக்கு எப்படி பயன்படுத்துவது என்பது மிகந்த சந்தேகமாக இருக்கும். கீழே உள்ள குறிப்புகளை பயன்படுத்தி காஃபினை எளிமையாக பயன்படுத்தலாம்.

  1. கரும் வளையத்தைப் போக்க:

  • அரை தேக்கரண்டி காப் தூளை எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
  • இந்த கலவையை முகத்தில், குறிப்பாக கண்களுக்கு கீழ் இருக்கும் பகுதியில் நன்கு தேய்க்கவும்
  • சிறிது நேரம் மிருதுவாக மசாஜ் செய்து, அப்படியா 1௦ நிமிடம் வரை விட்டு விட்டும்
  • பின்னர் நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

  2. சூரிய கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க

  • ஒரு கப் காபி டிகாஷனை போட்டு எடுத்துக் கொள்ளவும்
  • இது குளிர்ந்த உடன் ஒரு பருத்தி நுதியால் நனைத்து லேசாக பிழிந்து உங்கள் சருமத்தின் மீது மெதுவாக வைத்து எடுக்கவும்
  • இப்படி பல முறை செய்ய வேண்டும்
  • இவ்வாறு செய்து வந்தால், சருமத்தில் இருக்கும் வீக்கம் மற்றும் சிவந்தால் மற்றும் சூரிய கதிரால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும்

  3. காஃபின் பேஸ் மாஸ்க்

  • சரி சமமான அளவு காபி தூள் மற்றும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணை எடுத்துக் கொள்ளவும்
  • இதனை நன்கு கலந்து சருமத்தில் சுழற்சி முறையில் தடவவும்
  • சிறிது நேரம் மெதுவாக மசாஜ் செய்யவும்
  • அப்படியே ஒரு மணி நேரம் வரை விட்டு விடவும்
  • பின்னர் மிதமான சூடு இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்
  • இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

  தலைமுடி வளர்ச்சிக்கு காஃபின் (caffeine for hair growth)

  காஃபின் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்த பெரிதும் உதவுகின்றது. இதை சரியான முறையில் பயன்படுத்தினால் பல பலன்களைப் பெறலாம். எப்படி காஃபின் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்;

  • தலைமுடி உதிர்வை குறைக்கும். காஃபினை வேர் பகுதியில் தேய்த்து வந்தால், தலைமுடி உதிர்வதை பெரிய அளவு குறைக்க உதவுகின்றது.
  • மேலும் இது வேர்களுக்கு நல்ல போஷாக்கைப் பெற உதவுவதால், தலைமுடியின் வேர்கள் திடமாகின்றது
  • தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றது. இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் தலைமுடி சேதம் அடைவதை தவிர்த்து, நல்ல வளர்சியைப் பெற உதவுகின்றது
  • மேலும் இந்த ஆக்சிஜனேற்றம் தலைமுடி நல்ல ஈரப்பதத்தோடும் இருக்க உதவுகின்றது
  • காஃபின் எளிதாக தலைமுடியை பராமரிக்க உதவுகின்றது, இதனால் தலைமுடி பலம் பெற்றும் அடர்த்தியாக வளருகின்றது
  • காஃபின் தலைமுடி நல்ல நிறத்தைப் பெறவும் உதவுகின்றது

  தலைமுடி வளர்ச்சிக்கு காஃபின் எப்படி உதவுகின்றது (How to use caffeine)

  Pexels

  1. தலைமுடி வளர்ச்சிக்கு

  • தேவையான அளவு காபி தூளை எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் தேங்காய் எண்ணையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  • இந்த கலவையை தலைமுடியின் வேர் முதல் நுணி வரை நன்கு தடவி சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும்
  • பின்னர், குளிர்ந்த நீரில் தரமான ஷாம்பூ அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலைமுடியை நன்கு அலசி விடவும்
  • இப்படி செய்து வந்தால் தலைமுடி நல்ல வளர்ச்சிப் பெரும்

  2. தலைமுடி நல்ல நிறம் பெற

  • ஒரு கப் குளிர்ந்த காபி டிகாசனை எடுத்துக் கொள்ளவும்
  • இந்த டிகாசனை தலைமுடி முழுவதும் நன்கு நனைவது போல தடவ வேண்டும்
  • பின்னர் குறைந்தது ஒன்று முதல் இரண்டு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்
  • பின்னர் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி விட வேண்டும்
  • இப்படி பல முறை செய்து வந்தால் நல்ல அடர் நிறத்தைப் பெறலாம்

  காஃபினால் ஏற்படும் உபாதைகள் ( health risks of caffeine)

  Pexels

  காஃபினால் கிடைக்கும் பல நன்மைகளை பற்றி பார்த்தோம். எனினும், இதனை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது சில உபாதைகளையும் உண்டாக்கி விடக் கூடும். அப்படி, காஃபின் என்னென்ன விளைவுகளை உண்டாக்கக் கூடும் என்று இங்கே பார்க்கலாம்:

  • தூக்கமின்மை
  • நரம்புத் தளர்ச்சி
  • ஓய்வின்மை
  • தலைச்சுற்று
  • அதிக சிறுநீர் கழித்தல்
  • வயிற்றுப்போக்கு
  • வாந்தி
  • தசை இழுத்தல்

  கேள்வி பதில்கள் (FAQs)

  1. காஃபின் உடலுக்கு நல்லதா?

  ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் காபி அருந்தினால் பெரிதாக எந்த பாதிப்புகளும் ஏற்படாது. எனினும், இதனை அதற்கு மேல் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது சில உபாதைகளை உண்டாகும். குறிப்பாக தூக்கமின்மையை உண்டாக்கி, சரியாக தூங்க முடியாமல் செய்யக் கூடும்.

  2. காஃபின் உடலுக்கு என்ன செய்யும்?

  காஃபின் நரம்பியல் அமைப்பை உற்சாகப்படுத்தும். இது மூளைக்கு செல்லும் போது விழிப்புணர்வை உண்டாக்கும். இதனால் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதை போல தோன்றும். சோர்வு அகலும். தலைவலி மற்றும் மைக்ரைன் பிரச்சனைகளை போக்க இது உதவும்.

  3. எவ்வளவு காஃபின் உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்?

  இதன் அளவுகோல் ஒருவருக்கொருவர் வேறுபாடும். எனினும், பொதுவாக 1௦௦ மில்லி கிராம் காஃபினின் அளவு ஒருவருக்கு ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படுகின்றது.

  4. காஃபின் கொழுப்பை எரிக்குமா?

  காஃபின் மெட்டபாலிசம் அளவை அதிகரித்து, கொழுப்பு விரைவாக எரிய உதவுகின்றது. இதனால் அதிக கலோரிகளும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இது பசியின்மையை உண்டாக்கும். இது உடல் எடையை குறைக்க ஒரு முக்கிய காரணமாகி விடுகின்றது.

  5. சிறுநீரகங்களுக்கு காஃபின்பாதுகாப்பானதா?

  காஃபின் எதிர்பாராத விதமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் கூடும். ஓர் நாளைக்கு 3 கப் அல்லது அதற்கும் மேலாக காபி அருந்தும் போது, சிறுநீரகத்தில் பிரச்சனை உண்டாக வாய்ப்புகள் உள்ளன. மேலும் இது சிறுநீரகத்தின் செயல் திறனையும் பாதிக்கும் வகையில் இருக்கும். அதனால் அதிக அளவு காபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

  6. சருமத்தின் வழியாக காஃபின் உடலுக்குள் செல்லுமா?

  ஆம். காஃபின் சருமத்தில் சாரக் கூடும். இதனால் ஒருவர் தினமும் எடுத்துக் கொள்ளும் அளவும் அதிகரிக்கும்.

  7. இரவு முழுவதும் காஃபினை தலையில் விட்டு விடலாமா?

  இது அசௌகரியத்தை உங்களுக்கு உண்டாக்கக் கூடும். தலைமுடி வளர்ச்சிக்காக நீங்கள் காஃபினை தேய்க்கும் போது, 3 மணி நேரம் வரை அப்படியே விட்டு விடலாம். எனினும், அதன் பின் தலைமுடியை நன்கு அலசி விட வேண்டும். இரவு முழுவதும் விட்டு விடுவதால், பெரிதாக பலன் இருக்கப் போவதில்லை.

   

  மேலும் படிக்க - காபி குறித்த ஆச்சர்யமூட்டும் தகவல்கள் மற்றும் நன்மைகள்!

  மேலும் படிக்க - உடல் நல ஆரோக்கியத்திற்கும், சரும அழகிற்கும், கூந்தலுக்கும் ஏற்ற பிளாக் டீ!

  பட ஆதாரம்  - Shutterstock

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!