உடல் நல ஆரோக்கியத்திற்கும், சரும அழகிற்கும், கூந்தலுக்கும் ஏற்ற பிளாக் டீ!

உடல் நல ஆரோக்கியத்திற்கும், சரும அழகிற்கும், கூந்தலுக்கும் ஏற்ற பிளாக் டீ!

பிளாக் டீ(Black Tea), அதாவது பால் சேர்க்கப்படாமல் செய்யப்படும் தேநீர், இன்று மிகவும் பிரபலமாகிக் கொண்டிருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இதில் நிறைந்துள்ளா சத்துக்கள். வழக்கமாக அனைவரும் பால் சேர்க்கப்பட்ட தேநீரை அருந்துவார்கள். இது மிகவும் விரும்பி அருந்தப்படாலும், தேயிலையை மட்டும் பயன்படுத்தி செய்யப்படும் தேநீர் மட்டுமே ஆரோக்கியமானது. மேலும், இதுவே தேநீர் செய்ய சரியான முறை.

தேநீரில் அதிகம் ஆக்சிஜனேற்றம் உள்ளது. இதனால் அது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி, உடலுக்குத் தேவையான சக்தியை உடனடியாகத் தருகின்றது. இந்த தேநீரை சூடாகவும், அல்லது குளிரவைத்தும் அருந்தலாம். இந்த தேநீர் சரும ஆரோக்கியத்திற்கும், தலை முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றது. 

தேநீரை பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள, உங்களுக்காக இங்கே சில சுவாரசியமான தகவல்கள். மேலும் படியுங்கள்!

Table of Contents

  பிளாக் டீ வகைகள்(Types of black tea)

  தேநீர் செய்வதற்கு தேயிலை தான் வேண்டும் என்று இல்லை. எந்த ஒரு மூலிகையைக் கொண்டும், அல்லது வீட்டில் தினமும் சமையலுக்காக பயன்படுத்தும் ஒரு சில பொருட்களைக் கொண்டும் நீங்கள் தேநீர் செய்து விடலாம். ஒவ்வொரு தேநீரும், ஒவ்வொரு பலனைத் தரும். எனினும், நீங்கள் தினமும் பயன்படுத்தும் தேயிலையோடு  வேறு சில பொருட்களை சேர்த்து தேநீர் செய்யலாம். 

  பல வகை தேயிலைகள் தேநீர் செய்ய பயன்படுத்தபப்டுகின்றது. அது போன்றே, ஒவ்வொரு தேயிலை வகைக்கும், அல்லது பயன்படுத்தப்படும் மற்ற பொருளுக்கும் தனித்துவங்கள் உள்ளன. இதனால் அதன் பலனும் வேறுபாடும். ஒவ்வொரு தேநீருக்கும் அதன் மனமும், திடமும் மாறுபடும். 

  நீங்கள் அறிந்து கொள்ள, இங்கே சில வகை தேயிலை தேநீர்கள்: 

  • டார்ஜலிங் பிளாக் டீ 
  • அஸ்ஸாம் பிளாக் டீ
  • சிலோன் பிளாக் டீ 
  • நீலகிரி பிளாக் டீ 
  • கென்யா பிளாக் டீ 
  • இங்கிலீஷ் ப்ரேக்பாஸ்ட் 
  • ஐரிஷ் ப்ரேக்பாஸ்ட்
  • ரோஸ் பிளாக் டீ
  • ரஸ்சியன் கேரவன்
   இந்த தேநீர் அதிக சுவை கொண்டதாக இருக்கும் இப்படி பயன்படுத்தப்படும் தேயிலைகள், பிளாக் டீ செய்வதற்கென்றே பிரத்தியேகமாக தயார் செய்யப்படுகின்றது. இதனுடன், தேன், எழுமிச்சைபழ சாறு, இஞ்சி போன்ற மற்ற பொருட்களும் சேர்த்து தயார் செய்யலாம். இது மேலும் சுவையை அதிகப்படுத்துவதோடு, ஆரோகியத்தையும் அதிகமாக்கும்.
  pixabay

  தேநீரில் நிறைந்துள்ள சத்துக்கள்(Nutrition fact of black tea)

  பிளாக் டீயில்(Black Tea) பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. மேலும் சோடியம், புரதம், பொட்டாசியம், ப்ளோரைடு, மங்கனீஸ், அமினோ அமிலம் மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் அதிக அளவு உள்ளது. மேலும் இதில் க்லோரோபில், அலுமினம், அல்களைட்ஸ், ஆகிய சத்துக்கள் நிறைந்துல்லாது. 
  1௦௦ கிராம் தேயிலையில் நிறைந்துள்ள சத்துக்கள் விவரம்: 

  • கலோரிகள் 1
  • ஆக்சிஜனேற்றம் 0.06 -4.96
  • ஒமேக 3 கொழுப்பு அமிலம் 3 கிராம் 
  • ஒமேட 6 கொழுப்பு அமிலம் 1 மில்லிகிராம் 
  • சோடியம் 5 மில்லிகிராம் 
  • பொட்டாசியம் 37 மில்லிகிராம்
  • ப்லோரிட் 373 மைக்ரோ கிராம்

  தேநீரால் கிடைக்கும் உடல் நல பலன்கள் (Health benefits of black tea)

  பிளாக் டீ பல நன்மைகளை உடலுக்குத் தருகின்றது. இதனை சரியான அளவு, முறையாக செய்து அருந்தி வந்தால், நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கலாம். இந்த பிளாக் டீயில் கிடைக்கும் நன்மைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தகவல்கள்

  1. வயிற்று போக்கை குணப்படுத்தும்

  வயிற்று போக்கு, அல்லது குடலில் பிரச்சனை இருந்தால், இந்த தேநீர் குணப்படுத்த உதவும். இது வயிற்றில் இருக்கும் புண் அல்லது பிற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்.

  2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

  பிளாக் டீ சுரம், வயிற்று போக்கு மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நோய் உண்டாக காரணமாக இருக்கும் வைரஸ்களை எதிர்கின்றது. மேலும் இதில் அல்கைலாமைன் ஆன்டிஜென்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது. இதனால் ஆரோக்கியம் அதிகமாகின்றது. 

  3. எலும்பு மற்றும் இணைப்பு திசுக்களை பலப்படுத்துகின்றது

  இந்த தேநீரை தொடர்ந்து அருந்தி வந்தால், எலும்புகள் பலமாவதோடு, இணைப்பு திசுக்கலும் உருதியாகின்றது. இது குறிப்பாக இந்த தேநீரில் இருக்கும் பைத்தோகெமிக்கல்களின் காரணமாக ஏற்படுகின்றது. அதனால், எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். 

  4. உடலில் சக்தியை அதிகப்படுத்துகின்றது

  தேநீரில் உள்ள கபையின் வளர்சிதைவை அதிகப்படுத்துகின்றது. மேலும் இது மூளையின் செயல்பாட்டுத் திறனையும் அதிகப்படுத்துகின்றது. அதனால் அதிக விழிப்புணர்வு உண்டாகின்றது. மேலும் இது தசைகள், இருதயம், சுவாச அமைப்பு போன்ற அனைத்து உறுப்புகளையும் சிறப்பாக வேலை செய்ய தொட்னுகிறது.

  5. இருதய ஆரோக்கியம்

  உடல் நன்றாக செயல்பட வேண்டும் என்றால், இருதயம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். அப்போது தான், இரத்தத்தில் பிராணவாயு சீராக கலந்து, பிற உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும். இந்த விதத்தில், பிளாக் டீ உடலுக்குத் தேவையான சத்துக்களை தருவதால், இது இருதய செயல்பாட்டையும் சிறப்புற செய்கின்றது. இதனால் இருதய நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைகின்றது.

  6. கர்ப்பப்பை புற்றுநோய்

  இந்த தேநீரில் கேட்டசின்கள் மற்றும் தியப்லேவின் இருப்பதால், இது கர்ப்பப்பையில் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகளை குறைக்கின்றது. இதனால் தினமும் இந்த தேநீரை அருந்துவது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் என்று நம்ப்பப்படுகின்றது.

  pixabay

  7. நீரழிவு நோயை குறைக்கும்

   பிளாக் டீயில் இருக்கும் கேட்டசின்கள் மற்றும் தியப்லேவின் நீரழிவு நோய் உண்டாகும் வாய்ப்புகளை குறைகின்றது. இது உடலில் அதிக இன்சுலின் சுரக்க உதவுகின்றது, அதனால் இந்த நோய் உண்டாகும் சாத்தியம் வெகுவாக குறையும். 

  8. நோய் எதிர்ப்பு சதியை அதிகப்படுத்தும்

  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் மட்டுமே நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க முடியும். அந்த வகையில், இந்த தேநீரில் ஆக்சிஜன் ரடிகல்ஸ் அணுக்களின் செயல்த்திரனை அதிகப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது. இதனால் உடலும் சீராக செயல்படுகின்றது. 

  9. பார்கின்சன் நோயை தடுக்கும்

  இந்த நோய் நரம்பு மண்டலத்தை பெரிதாக பாதிக்கும். குறிப்பாக வயதானவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பிளாக் டீயில் இருக்கும் பாளிபநோல் மூலையில் இருக்கும் நரம்பு மண்டலத்தை சீராக செயல்பட செய்யும். இதனால் இந்த நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும். 

  10. நல்ல ஜீரணம்

   பலரும் இன்று சரியான உணவு பழக்கங்கள் இல்லாமலும், சரியான நீரதிற்கு, சரியான உணவை உண்ண முடியாமலும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், ஜீரண பிரச்சனை ஒரு முக்கிய சவாலாகவே உள்ளது. ஆனால், பிளாக் டீயில் இருக்கும் போளிபநோல் நல்ல பக்டீரியா உருவாக உதவுகின்றது. அதனால் வயிற்றில் இருக்கும் உணவு எளிதாக ஜீரனமாகவும் உதவுகின்றது. மேலும் தீய பக்டீரியா வளர்ச்சியை இது தடுக்கின்றது. 

  11. கொழுப்பு சத்தை குறைக்கும்

  சீரற்ற மற்றும் முறையற்ற உணவு பழக்கங்களால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்க வாய்புகள் அதிகம் உள்ளது. இதனால் உடல் எடை அதிகரிப்பது, நீரழிவு நோய், என்று மேலும் பல நோய்கள் உண்டாகின்றது. பிளாக் டீயில் அண்டி ஹைபர் கோலெஸ்டேரோலேமிக் தாக்கம் இருப்பதால், இது கொழுப்பு சத்தை குறைத்து, உடல் எடை அதிகரிப்பு, இருதய நோய் அறிகுறி போன்ற பிரச்சனைகள் ஏறப்டாமல் இருக்க உதவுகின்றது. 

  12. உடல் எடையை குறைக்க உதவும்

  உடல் எடை அதிகரிக்க ஒரு முக்கிய காரணம், நீரழிவு நோய் மற்றும் அதிக கொழுப்பு. பிளாக் டீ ட்ரைகிளிசரைடு அளவை குறைக்கும் பண்பு உடையது. அதனால், இது எளிதாக உடல் எடை அதிகரிபப்தை குறைத்து. இருதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதோடு, கொழுப்பு சத்தை குறைத்து, நீரழிவு நோய் உண்டாகாமலும் இருக்க உதவுகின்றது. இதனால் உடல் எடை அதிகரிப்பதை குறைக்கலாம். தினமும் இந்த தேநீரை குறைந்தது இரண்டு முறையாவது அருந்தி வந்தால், நல்ல பலனை எதிர் பார்க்கலாம். 

  13. சிறுநீரக கல்

  சிறுநீரகத்தில் கல் ஏறப்ட்டால் அது மிகுந்த வலியை உண்டாக்குவதோடு, வேறு பல பிரச்சனைகளையும் உண்டாக்கும். ஒரு மருத்துவ ஆய்வின் படி, இந்த தேநீரை தினமும் அருந்தி வந்தால், இது உடலுக்குத் தேவையான தாது பொருட்களை தந்து, சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

  14. ஆஸ்த்மாவை போக்கும்

  இந்த தேநீரில் இருக்கும் கபையின் மற்றும் ப்லவோனைட்ஸ் சுவாச குழாயை சீராக செயல் பட செய்து, எளிதாக மூச்சு விட உதவி செய்கின்றது. இதனால், ஆஸ்த்மா மற்றும் சுவாச பிரச்சனைகள் எளிதாக குனமாகின்றது. மேலும் அத்தகைய பிரச்சனைகள் உண்டாகாமலும் தடுக்கலாம். 

  15. ப்ரீ ராடிகல்சுகளை அகற்றுகின்றது

  பிளாக் டீயில் அதிக ஆக்சிஜனேற்றம் இருப்பதால், இது ப்ரீ ரடிகல்சுகளை உடலில் தங்க விடாமல் அகற்ற உதவுகின்றது. இதனால் உடலில் உயிர் அணுக்களின் உற்பத்தியும் அதிகரிகின்றது. 

  16. தீய பக்டீரியாவை கொள்ளும்

  உடலில் இருக்கும் அனைத்து பக்டீரியாக்களும் நன்மைத் தருபவை இல்லை. சில பக்டீரியா பல பிரச்சனைகளை உடலில் உண்டாக்கும். இந்த வகையில், பிளாக் டீயில் அதிக ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் இருப்பதால், இது தீய பக்டீரியா உண்டாவதை தடுக்கின்றது. இது உடல் ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்க உதவுகின்றது.

  17. மன அழுத்தத்தை குறைக்க உதவும்

  பிளாக் டீயில் அழுத்தத்தை குறைக்க உதவும் பொருட்கள் உள்ளதால், இது உடலையும் மனதையும், தளர்வாக வைத்து, மன அழுத்தத்தில் இருந்து விடு பட உதவுகின்றது. இது நரம்புகளை தளர்வாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதனால் மனமும் அமைதியாக இருக்கும். 

  18. அல்சீமர் நோய்

  இந்த நோய் ஒரு வகை டிமென்ஷியா வகையை சேர்ந்தது. இது ஞாபக சக்தியை இழக்க செய்வதோடு, ஒரு மனிதனின் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை உண்டாகும். மேலும் ஒருவர் சிந்திக்கும் திறனையும் பாதிக்கும். ஆனால், பிளாக் டீயை தினமும் அருந்தி வந்தால், நரம்பு மண்டலத்தை இது நல்ல செயல்பாட்டுடன் வைக்க உதவும். அதனால், இந்த நோய் உண்டாவதற்கான வாய்புகள் வெகுவாக குறையும்.

  19. வாய் ஆரோக்கியம்

  இது மிகவும் முக்கியமான ஒன்று. வாயின் ஆரோக்கியம் குன்றினால், பற்களுக்கு பாதிப்புகள், வாய் துர்நாற்றம், ஈறுகளில் பிரச்சனை என்று பல உபாதைகள் வரக் கூடும். அதனால், இதனை உடனடியாக கவனிக்க வேண்டும். பிளாக் டீயில் இருக்கும் அக்சிஜனேற்ற பண்புகளும், பக்டீரியா எதிர்ப்பு பண்புகளும், இத்தகைய பிரச்சனைகள் உண்டாகாமல் தடுக்க உதவும். இதனால் வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கப்படுகின்றது. 

  20. விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்தும்

  உங்களுக்கு கவன சிதறல் உண்டாகும் பிரச்சனை இருந்தால், அதற்கு இந்த பிளாக் டீ ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இதில் இருக்கும் எல்-தியனைன் மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தி, கவனச்சிதறல் உண்டாகாமல் இருக்க உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் காபையின் விழிப்புணர்வை தூண்டுகின்றது.

  pixabay

  21. இரத்த அழுத்தத்தை சீர்படுத்தும்

  பிளாக் டீ இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பெரிதும் உதவியாக உள்ளது. இதில் இருக்கும் சத்துக்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இரண்டையும் சீர் செய்து, சரியான அளவில் வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதனால் ஆரோக்கியம் அதிகமாகும். இது இருதய நோய் மற்றும் பிற நோய்கள் உண்டாகும் வாய்ப்புகளை குறைக்கும். 

  22. குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

  குடலில் இருக்கும் தேவையற்ற பக்டீரியா உற்பத்தியால் பல உபாதைகள் உண்டாகக் கூடும். ஆனால், அதனை தடுத்து நல்ல பக்டீரியா உற்பத்தியை உண்டாக்கினால் மட்டுமே குடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். இதற்கு பிளாக் டீயில் இருக்கும் பண்புகள் பெரிதும் உதவியாக உள்ளது. 

  23. பக்கவாதத்தை தடுக்கும்

  பக்கவாதம் மூலையில் இருக்கும் இரத்த நாணங்களில் அடைப்பு ஏற்படும் போது உண்டாகின்றது. இதனால் உயிர் இழக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றது. பிளாக் டீ இத்தகைய பக்கவாத அறிகுறிகளை குறைக்க மற்றும் வரவிடாமல் தடுக்க உதவியாக உள்ளது. 

  சரும ஆரோக்கியத்திற்கு பிளாக் டீ (Black tea for skin health)

  இந்த தேநீர் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. பிளாக் டீ உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தவகல்கள்

  1. சருமத்தில் இருக்கும் கறைகளை குறைகின்றது

  சருமத்தில் புண், பரு அல்லது வேறு பிரச்சனைகளால் தழும்புகள் உண்டாவது இயல்பு. ஆனால் இது முக அழகை பாதிக்கக் கூடியதாக இருக்கும். இதை குணப்படுத்த ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்தினால் மேலும் சருமத்தை இது பாதிக்கக் கூடும். பிளாக் டீயில் இருக்கும் அக்சிஜனேற்ற பண்புகள் சருமத்தில் இருக்கும் தேவையற்ற நச்சுகளை அகற்ற உதவுகின்றது. இதனால் சருமம் நல்ல பொலிவை பெறுகின்றது. 

  2. சரும நோயை குணப்படுத்துகின்றது

  உடலில் சருமத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இது வெறும் வெளி தோற்றத்தை தருவது மட்டுமல்லாமல், உங்கள் உடலை முற்றிலுமாக வெளி எதிரிகளிடம் இருந்து காக்கின்றது. இந்த தேநீரில் இருக்கும் கேடசின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் சருமத்தில் எந்த நோய் தொற்றும் ஏற்படாமல் இருக்க உதவுகின்றது. தினமும் சரியான முறையில் இந்த தேநீரை பயன்படுத்துவதாலும், தினமும் இதனை அருந்தி வருவதாலும், நல்ல பலனை நாளடைவில் எதிர் பார்க்கலாம்.

  3. வீக்கத்தை குறைக்கும்

  அனேக பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரு முக்கிய கவலை என்னவென்றால், முகம் உப்பி காணப்படுவது. அதாவது, முகத்தில் வீக்கம் போன்ற தோற்றம் ஏற்படுவது. இது பொதுவாக 3௦ வயதை கடந்தவர்களுக்கு அதிக அளவு உண்டாகும். இந்த தேநீரை ஒரு பருத்தி துணியில், மிதமான சூட்டுடன் இருக்கும் போது நனைத்து, முகத்தில் ஒத்தடம் கொடுத்தால், விரைவாக வீக்கம் குறையும். முகமும் இளமையான தோற்றத்தைப் பெரும். 

  4. இளம் வயதில் ஏற்படும் முதிர்ந்த தோற்றத்தைப் போக்கும்

  இந்த தேநீரில் இருக்கும் அக்சிஜனேற்றம் மற்றும் பாலிபநோல்ஸ் சருமம் விரைவாக தன் இளமையான தோற்றத்தை இழப்பதை தடுக்கும். இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் மறையும். இது நல்ல இளமையான தோற்றத்தை உங்கள் சருமத்திற்கு தந்து, புத்துணர்ச்சியை உண்டாக்கும். 

  5. சரும புற்றுநோயை எதிர்க்கும்

  இதில் அதிக அளவு ஆக்சிஜனேற்றம் இருபதாலும். நோய் எதிர்ப்பு சக்தி பண்புகள் அதிகமாக இருப்பதாலும், புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகளை வெகுவாக குறைக்கும். அதனால், உங்கள் சருமம் நல்ல ஆரோக்கியத்தோடும், இளமையாகவும் இருக்கும்.

  pixabay

  6. ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாக்கும்

  ஊதா கதிர்களால் சருமத்திற்கு பல பிரச்சனைகள் உண்டாகின்றது. அதில் குறிப்பாக சரும புற்றுநோய், தோல் நிறமி, மற்றும் பிற சரும நோய்கள் உண்டாகின்றது. தினமும் இந்த தேநீரை அருந்தி, சருமத்திற்கு ஏற்றவாறு முறையாக பயன்படுத்தி வந்தால், ஊக கதிர்களிடம் இருந்து பாதுகாப்பை தருவதோடு, நல்ல ஆரோகியத்தையும் உண்டாக்கும். 

  7. சரும மீளுருவாக்கத்தை அதிகப்படுத்தும்

  சருமத்தில் இறந்த அணுக்களும், தூசியம், அழுக்கும் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களும் இருக்கும். இதனை போக்க பிளாக் டீ பெரிதும் உதவுகின்றது. இது விரைவான நிவாரணத்தை சருமத்திற்கு தருகின்றது.

  8. நிறமூட்டலை குறைகின்றது

  சருமத்தில் பாதிப்பை உண்டாக்கக் கூடிய ஊதா கதிர்கள் மற்றும் சூரிய கதிர்கள் படுவதால், சருமத்தின் இயற்கையான நிறம் பாதிக்கப்படுகின்றது. இது உங்கள் சரும அழகையும், தோற்றத்தையும் பெரிதும் பாதிக்கின்றது. பிளாக் டீயில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள், இத்தகைய பிரச்சனைகளை குறைக்க உதவுகின்றது.

  சரும ஆரோக்கியத்திற்கு குறிப்புகள்(Tips to use black tea for skin health)

  பிளாக் டீயை பற்றி உங்களுக்கு பல அறிய தகவல்கள் கிடைத்திருக்கும். இது சரும பாதுகாப்பிற்கு எப்படி உதவுகின்றது என்பதை பற்றியும் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது, எப்படி இந்த பிளாக் டீயை பயன்படுத்தினால், நீங்கள் எதிர்பார்த்த பலனைப் பெறலாம் என்று பார்க்கலாம்

  1. உதட்டில் இருக்கும் வெடிப்பை குணப்படுத்த

  உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் இதனை கவனிக்காமல் விட்டு விட்டால், அதிக பாதிப்புகளை உண்டாகி விடக் கூடும். இதை குணப்படுத்த பிளாக் டீ பெரிதும் உதவியாக உள்ளது. 

  செய்முறை 

  • ஒரு கிரீன் டீ பையை எடுத்துக் கொள்ளவும் 
  • அதனை சுடுதநீரில் நன்கு ஊற விடவும் 
  • பின் அதனை எடுத்து உங்கள் உதடுகள் மீது சிறிது நேரம் வைக்க வேண்டும் 
  • இது சற்று எரிச்சலை உண்டாக்கலாம், ஆனால், உங்கள் உதடுகளுக்கு நல்ல ஈரத்தன்மையை தந்து விரைவில் குணமடைய உதவும்

  2. உப்பிய கண்கள் மற்றும் கரும் வளையத்தை போக்க

  பிளாக் டீயில் இருக்கும் கபையின் ரத்த நாணங்களை சுருங்க செய்யும். குறிப்பாக கண்களுக்கு கீழ் பகுதியில் இருக்கும் கரும் வளையம் மற்றும் வீக்கத்தை போக்க இது உதவும். 

  செய்முறை

  • ஒரு டீ பையை எடுத்துக் கொண்டு தண்ணீரில் நன்கு மூழ்க செய்து, பின் கண்களை சுற்றி இருக்கும் பகுதியில் வைக்க வேண்டும் 
  • இப்படி 5 முதல் 1௦ நிமிடங்கள் வைக்க வேண்டும் 
  • இதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கரும் வளையம் மறையும்

  3. சருமத்திற்கு இதம் தரும்

  சூரிய ஒளி, ஊதா கதிர், சுற்றுப்புற மாசு, சரும நோய் போன்ற காரனங்களால் சருமம் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இது முக அழகை பாதிப்பதோடு, சருமத்தின் ஆரோகியத்தையும் பாதிக்கும். இதனை போக்க, பிளாக் டீயை முறையாக பயன்படுத்தி பலன் பெறலாம்.

  செய்முறை 

  • சிறிது தேயிலைகளை எடுத்து நன்கு கொதிக்க விட வேண்டும் 
  • பின் இந்த நீர் குளிர்ந்த வுடன் ஒரு சிறிய பருத்தி துணியில் நன்கு நனைக்க வேண்டும் 
  • பின் இதனை பாதிக்கப்பட்ட இடத்தில் 3௦ நிமிடங்கள் வைக்க வேண்டும் 
  • இதற்கு பதிலாக நீங்கள் டீ பையையும் வைக்கலாம் 
  pixabay

  4. டோனராக செயல்படும்

  டீ பைகள் நல்ல டோனராக செயல்படுகின்றது. இதில் கட்டுபடுத்தும் பண்புகள் இருப்பதால், நீங்கள் எதிர் பார்க்கும் பலன்களைப் பெறலாம். 

  செய்முறை 

  • ஒரு டீ பையை தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் விட்டு விட வேண்டும் 
  • பின் அதனை எடுத்து உங்கள் முகத்தில் நன்கு தேக்க வேண்டும் 
  • பின் குளிர்ந்த நீரில் ஒரு பருத்தி துணியை நனைத்து முகத்தை துடைத்து விட வேண்டும் 

  5. ஸ்க்ரப்பர் செயல்படும்

  நீங்கள் ஒரு நல்ல சிறந்த ஸ்க்ரப்பரை தேடினால், அதற்கு இந்த பிளாக் டீ ஒரு நல்ல தேர்வாக இருக்கும். 

  செய்முறை 

  • சிறிது டீ தூளை எடுத்துக் கொள்ளவும் 
  • அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொண்டு முகத்தில் நன்கு தேய்க்கவும் 
  • சிறிது நேரம் அப்படியே விட்டுவிடவும் 
  • பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும் 
  • இப்படி செய்தால் உங்கள் சருமம் மிருதுவாகவும், நல்ல பொலிவோடும் இருக்கும்
  • இதில் ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ளதால், விரைவான பலனும் கிடைக்கும் 

  6. எண்ணை பிசுக்கை போக்கும்

  சிலருக்கு முகத்தில் இயற்கையாகவே அதிக எண்ணை உண்டாகும். இது எவ்வளவு தான் நீங்கள் முகத்தை சுத்தமாக கழுவினாலும், மீண்டும் சுரந்து கொண்டே இருக்கும். இதனால் சில அசௌகரியங்களும் உண்டாகும். அதனால், முகத்தில் அதிகமாக இருக்கும் எண்ணை பிசுக்கை போக்க, இந்த பிளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும். 

  செய்முறை 

  • சிறிதளவு டீ தூளை எடுத்து கொதிக்க வைத்துக் கொள்ளவும் 
  • குளிர்ந்த பின், அந்த தூளை முகத்தில் நன்கு தடவி சிறிது நேரம் விட்டுவிடவும் 
  • பின் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடலாம் 
  • இது முகத்தில் இருக்கும் பக்டீரியா மற்றும் பருக்களை உண்டாகும் கிருமிகளை போக்கவும் உதவும் 
  • இது சருமத்தில் இருக்கும் பி எச் அளவையும் சீராக வைத்துக் கொள்ள உதவும் 

  7. முகம் சுத்திகரிக

  தினமும் வேலைக்கு செல்லும் பெண்கள் பல சுற்றுப்புற மாசுகளுக்கு இடையில் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கும். இதனால் சருமம் பெரிதும் பாதிக்கப்படும். ஆனால், உங்கள் சருமத்தில் இருக்கும் தூசி மற்றும் அழுக்கை நீக்க, இந்த பிளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும். 

  செய்முறை 

  • தேவையான அளவு தேயிலைகளை எடுத்துக் கொள்ளவும் 
  • இதனை நன்கு பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும் 
  • இந்த பசியை முகத்தில் மாசக் போல பூசி சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும் 
  • சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும் 

  தலை முடி வளர்ச்சிக்கு பிளாக் டீ (Black tea for Hair growth)

  பிளாக் டீ உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதோடு, தலைமுடி நன்கு வளரவும் உதவுகின்றது. இந்த வகையில், பிளாக் டீ எப்படி உங்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்

  1. முடி உதிர்வை தடுக்கும்

  பெருமாலானவர்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை, தலைமுடி உதிர்வு. இதனால் அதிக அளவில் முடி உதிர்ந்து, ஆரோக்கியமற்ற தோற்றம் ஏற்படுகின்றது. பிளாக் டீயில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் மன அழுத்தத்தை குறைத்து, அமைதியான மனதை பெற உதவுகின்றது. இதனால் அதிக அளவு முடி உதிர்வது தடுக்கப்படுகின்றது.

  2. தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்

   பிளாக் டீ தலைமுடி நன்கு வளர உதவுகின்றது என்பது நிரூபணமாகி உள்ளது. இந்த தேநீரை தலைமுடி வேர்களில் நன்கு தேய்த்து, மசாஜ் செய்து, பின் அலசி விட வேண்டும். இப்படி செய்து வந்தால், தலைமுடி நன்கு வளரும்.

  3. அடர்ந்த கூந்தலை பெற உதவும்

  பிளாக் டீ பயன்படுத்தி  தலைமுடியை பராமரித்து வந்தால், நாளடைவில் நல்ல அடர்த்தியான கூந்தலைப் பெறலாம். இது தலைமுடிக்கு நல்ல பலபலப்பையும் தரும். மேலும் சில வாரங்களிலேயே உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும். 

  pixabay

  4. நல்ல நிறத்தை தரும்

  பிளாக் டீயை தலைமுடிக்கு பயன்படுத்தி வரும் போது, இயற்கையாகவே நல்ல நிறத்தை உங்கள் கூந்தலுக்குத் தரும். இதனால் நல்ல கருமையான கூந்தலை நீங்கள் பெறலாம். இதனால், செயற்கை சாயங்களை நீங்கள் தவிர்க்கலாம்.

  5. வறட்சியைப் போக்கும்

  தலைமுடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், நாளடைவில் வறண்டு போகும். இதனால் கூந்தல் காய்ந்த தோற்றத்தோடு, கடுமையாக இருக்கும். இது உங்கள் முக அழகையும் பாதிக்கும். பிளாக் டீயை நீங்கள் தலைமுடி பராமரிபிர்க்காக பயன்படுத்தி வரும் போது நல்ல பலனைப் பெறலாம். இது உங்கள் கூந்தல் நல்ல ஈரத்தன்மையைப் பெற உதவும். 

  6. நுணி வெடிப்பை போக்கும்

  பலருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தலை முடி வளர்ந்த பின், நுனியில் வெடிப்பு உண்டாகும். இதனால் தலைமுடி உதிரவும் அதிகமாகும். பிளாக் டீ அது போன்ற வெடிப்புகள் உண்டாகாமல் தடுக்க உதவும். இதனால் தலைமுடி நீண்டு வளர்ந்து அழகான தோற்றத்தைப் பெரும். 

  7. பொடுகை போக்கும்

  பலருக்கும் தலையில் பொடுகு உண்டாவதால் அரிப்பு, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் உண்டாகும். ஆனால், பிளாக் டீயை வாரத்தில் இரண்டு முறையாவது பயன்படுத்தி வரும் போது, நாளடைவில் பொடுகு பிரச்சனை குறையும். இதனால் ஆரோக்கியமான தலைமுடியையும் நீங்கள் பெறலாம். 

  8. அரிப்பை போக்கும்

  தலைமுடி வேரில் பலருக்கும் அரிப்பு உண்டாவது இயல்பு. இது குறிப்பாக தூசி, மாசு, மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால் உண்டாகும். பிளாக் டீயை நீங்கள் தவறாமல் பயன்படுத்தி வரும் போது, அரிப்பு நாளடைவில் குணமாகும். இதனால் முடி உதிரவும் குறையும்.

  தலைமுடி வளர்ச்சி, ஆரோக்கியத்திகு பிளாக் டீ( hair growth and rejuvenation)

  இளம் நரை, தலைமுடி உதிர்வு, வறண்ட தலைமுடி என்று பல பிரச்சனைகள் வரக் கூடும். இவற்றில் எந்த பிரச்சனை இருந்தாலும், அது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனை சரி செய்து, நல்ல அழகான மற்றும் ஆரோக்கியமான தலைமுடியைப் பெற இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்.

  செய்முறை 1 

  • ஒரு கப் பிளாக் டீயை எடுத்துக் கொள்ளவும். அது சற்று அடர்ந்து இருக்க வேண்டும். அதாவது, குறைந்தது 6 தேக்கரண்டி டீத் தூளை சேர்த்து செய்ய வேண்டுன் 
  • நன்கு கொதித்த பின், குளிர விட வேண்டும் 
  • பின் இந்த நீரை தலை முடியில் தடவ வேண்டும் 
  • 3௦ நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே விட்டு விடவும் 
  • பின் மிதமான சூடாக இருக்கும் தண்ணீரில் தலைமுடியை அலசி விட வேண்டும் 

  செய்முறை 2 
  உங்கள் கூந்தலுக்கு நல்ல நிறம் வேண்டும் என்றால், அதற்கு பிளாக் டீ ஒரு நல்ல தேர்வாக இருக்கும். 

  • 6 தேக்கரண்டி டீ தூளை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும் 
  • இதனுடன் சிறிது காப்பி தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும் 
  • இரண்டையும் நன்கு கலந்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும் 
  • இந்த கலவை குளிர்ந்த பின் ஒரு தூரிகை கொண்டு தலைமுடியில் தேக்க வேண்டும் 
  • பின் ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும் 

  செய்முறை 3 

  • 5 தேக்கரண்டி டீ தூளை எடுத்துக் கொள்ளவும் 
  • இதனுடன் சிறிது துளசி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் 
  • இதனை நன்கு கொதிக்க விட வேண்டும் 
  • சிறிது எலுமிச்சைபழ சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் 
  • பின் இந்த கலவையை தலை முடியில் தேய்த்து சிறிது நேரம் விட்டுவிட வேண்டும் 
  • பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி விட வேண்டும்
  pixabay

  சுவையான பிளாக் டீ(Black tea recipes)

  பிளாக் டீ ஒரே விதமாக குடிப்பதற்கு நமக்கு பிடிக்காது. இதை வெவ்வேறு சுவையிலும் விதவிதமாக குடித்து பருகலாம். அதை எப்படி என்பதை இங்கு சில ரெசிப்பிக்கலாக நாம் பார்க்கலாம்.

  1. இஞ்சி பிளாக் டீ

  • அரை தேக்கரண்டி டீ தூளை எடுத்துக் கொள்ளவும் 
  • ஒரு சிறிய இஞ்சி துண்டை இடித்து எடுத்துக் கொள்ளவும் 
  • ஒரு கப் தண்ணீரில் இவை இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் 
  • பின் இறக்கி, இதனுடன் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம் 

  2. எழுமிச்சைபழ பிளாக் டீ

  • அரை தேக்கரண்டி டீ தூளை எடுத்துக் கொள்ளவும் 
  • ஒரு கப் தேநீரில் இதனை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் 
  • பின் இறக்கி, இதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்து அருந்தலாம் 
  • தேவைப்பட்டால், தேன் சேர்த்துக் கொள்ளலாம்

  3. ஏலக்காய் பிளாக் டீ

  • அரை தேக்கரண்டி டீ தூளை எடுத்துக் கொள்ளவும் 
  • ஒரு கப் தண்ணீரில் இதனை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் 
  • இறக்குவதற்கு சிறிது நேரத்திற்கு மும் சிறிது ஏலக்காய் தூளை சேர்க்கவும் 
  • பின் வாடி கட்டி ஒரு குவளையில் ஊற்றி, தேவைப்பட்டால் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.

  4. மசாலா பிளாக் டீ

  • ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை நன்கு பொடி செய்து கொள்ளவும்
  • அரை தேக்கரண்டி டீ தூளை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து, அதனுடன் சிறிது மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும்
  • பின் இறக்கி, இதனுடன் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்

  5. மூலிகை பிளாக் டீ

  • அரை தேக்கரண்டி டீ தூள் எடுத்துக் கொள்ளவும் 
  • இதனுடன் சிறிது புதினா, சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், போன்று, உங்களுக்கு கிடைக்கும் மூலிகைகளை சேர்த்துக் கொள்ளலாம் 
  • ஒரு கப் தண்ணீர் வைத்து, இந்த மூலிகைகளுடன், தீ தூளையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் 
  • பின் இறக்கி, வாடி கட்டி, தேவைபட்டால் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம் 
  • தேவை பட்டால், சிறிது எலுமிச்சைபழச்சாறு சேர்த்துக் கொள்ளாலாம்
  • இது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை தருவதோடு, பல நோய்களையும் குனபடுத்த உதவும்
  pixabay

  கேள்வி பதிலகள்(FAQ)

  தினமும் பிளாக் டீ அருந்தலாமா?

  பிளாக் டீயை நீங்கள் தினமும் அருந்தலாம். எனினும், ஒரு முறை அல்லது இரண்டு முறைக்கு மேல் அருந்தக் கூடாது. மேலும் இந்த டீயுடன் நீங்கள் சில மூலிகைகளையும் சேர்த்து தயார் செய்து அருந்தலாம். இது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். அதிக அளவு வெறும் பிளாக் டீயை மட்டும் தினமும் எடுத்துக் கொண்டால், அது சில பக்கவிளைவுகளை உண்டாக்கக் கூடும்.

  2. பிளாக் டீ மற்றும் இருதய ஆரோக்கியம்?

  பிளாக் டீ ஆக்சிஜனேற்றத்தை அதிகப்படுத்தி, உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீர் படுத்துவதால், இது இருதய ஆரோக்கியத்திற்கு சிறப்பான ஒரு தேநீராக இருக்கும்.

  3. கிரீன் டீயை விட பிளாக் டீ சிறந்ததா?

  பிளாக் டீயை விட கிரீன் டீயில் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது. மேலும் கிரீன் டீயில், பிளாக் டீயில் இருக்கும் சத்துக்களை விட அதிக சத்துக்கள் உள்ளன. எனினும், பிளாக் டியிலும், உடல் நலத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளன. ஆக்சிஜனேற்றத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, கிரீன் டீ பரிதுரைக்கப்படுகின்றது.

  4. பிளாக் டீ உடல் எடையை குறைக்க உதவுமா?

  நிச்சயம் உதவும். ஒரு கப் பிளாக் டீயில் 2 கலோரிகள் மட்டுமே உள்ளது. மேலும் இதில் கொழுப்பு சத்து இல்லை. இது ஜீரணத்தை சீர் செய்ய உதவும். அதனால், உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமலும், அதிக கலோரிகள் சேராமலும், உங்கள் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த தேநீர் உதவும்.

  5. பிளாக் டீ முக அழகை அதிகப்படுத்த உதவுமா?

  பிளாக் டீயில் ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ளது. அதனால் அது சருமத்தில் இருக்கும் நோய், அரிப்பு, தழும்பு, மற்றும் பிற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது. குறிப்பாக சருமத்தில் ஏற்படும் சுருக்கம், மற்றும் மெல்லிய கோடுகள் ஆகியவற்றை போக்க இது உதவுகின்றது. அதனால், பிளாக் டீ நிச்சயம் உங்கள் முக அழகை அதிகப்படுத்தும்.

  6. ஒரு நாளைக்கு எத்தனை கப் பிளாக் டீ எடுத்துக் கொள்ளலாம்?

  ஒரு சிலர் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 கப் அல்லது அதற்கும் மேல் அருந்துவார்கள். ஆனால், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் பிளாக் டீ பாதுகாப்பானது.

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!