சரத்குமார் நடித்த ஏய் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நமீதா அறிமுகமானார். அதன் பின்னர் விஜயகாந்தின் எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆகிய நமீதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கின்றார்.
சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாட்களிலே அதிகமான ரசிகர்களின் எண்ணிக்கையை பெற்றவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தனது கட்டழகான கவர்ச்சியால் தன் கைப்பிடிக்குள் ஒளித்து வைத்திருந்தவர் நமீதா (namitha). கனவுக் கன்னியாக வலம் வந்த நமீதாவிற்கு அவரது ரசிகர்கள் கோயில் கூட கட்டினார்கள்.
தமிழ் ஹீரோயின்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நமீதாவுக்கு தெலுங்கு, மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். சினிமாவில் கவர்ச்சியான தோற்றத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகளை இழக்க தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் அவரது உடல் எடை வெகுவாக அதிகரிக்கவே, அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீனில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சில நாட்களிலேயே தன்னுடன் நீண்ட கால நண்பரான வீரேந்திர சவுத்ரியை மணந்து கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பேன் என்று கூறிய நமீதா, தற்போது கணவரை விழுந்து விழுந்து கவனிக்கிறாராம்.
அப்படியே சினிமா வாழ்க்கையிலும் கவனம் செலுத்து வருகிறார். அவ்வபோது சமூக வலைதளங்களில் ஏதேனும் பதிவுகளை போட்டு ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து வந்தார்.திருமணத்திற்கு பின்னர் மலையாளத்தில் மோகன்லாலின் புலிமுருகன் படத்தில் நடித்தார்.
அதன்பிறகு மியா என்ற தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படம் தாமதமாகி வருகிறது. அதனால் இப்போது டோலிவுட்டில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் நமீதா (namitha). தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் உடல் தோற்றத்துடன் தான் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகிறார்.
மிகவும் பாரம்பரியமாக செட்டிநாட்டு வீடுகளில் போட்டோ ஷூட் நடத்தி ஒரு புது விதமான நமீதாவாக ஜொலிக்கிறார். இடுப்பழகை காட்டி சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை மீண்டும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் நமீதா இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் என்னது நமீதா புடவையில் இவ்வளவு அழகா! என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஒரு வழியாக புதுமையான ஒரு போட்டோ ஷூட் ஒன்றினை நடத்தி நமிதா தன் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நமிதாவிற்கு கவர்ச்சி மட்டும் தான் வரும் என்று பல்வேறு நபர்கள் கூறி வந்த நிலையில் அனைவரின் வாயை எல்லாம் அடைத்துவிட்டார் நமீதா. இந்த போட்டோ ஷூட் பார்த்தபிறகு தங்களது எண்ண ஓட்டங்களை மாற்றிக்கொள்ளத் தான் வேண்டும். கூடிய விரைவில் நாம் நமீதாவை குடும்ப பாங்கான திரைப்படங்களில் பார்ப்போம் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் தான் இப்போது முன்பை விட ஸ்லிம்மாகி விட்டதை தெலுங்குப்பட இயக்குனர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஸ்லிம் உடல் தோற்றத்துடன் தான் எடுத்துக்கொண்டு ஒரு ஆல்பத்தையும் டோலிவுட்டில் நமீதா (namitha) சுற்றலில் விட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!