பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டிவிட்டது. பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி, வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக உள்ளே வந்த கஸ்தூரியும் இதுவரை வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஹலோ ஆப் டாஸ்க்கில் ” வருண பகவானும் கர்நாடகாவை சேர்த்தவரோ, மறை வடிவில் கூட மழை தர மறுக்கிறார்” என்று மதுமிதா கூறியது மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஷெரின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக மற்ற போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்து மதுமிதாவை தாக்கி பேசியுள்ளனர்.
இந்த பிரச்னை பிக்பாஸ் வீட்டுக்குள் பூதாகரமாக வெடிக்க அப்போது தனது கருத்தை நிலைநாட்ட மதுமிதா அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்தார். இதனால் பிக்பாஸ் விதியை மீறிவிட்டதாக கூறி மதுமிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டார். மதுமிதா வெளியேற்றப்பட்ட போது இதுகுறித்து எந்த தகவல்களும் தெரிவிக்காத நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போட்டியாளர்கள் சித்தரவதை காரணமாக தான் நான் தற்கொலை முயற்சி செய்தேன்.
போட்டியாளர்கள் சித்தரவதை..தற்கொலை முயற்சிக்கு இவர்கள் தான் காரணம் : மனம் திறந்த மதுமிதா!
அப்போது கூட அதற்கு காரணமானவர்கள் குற்ற உணர்வும் இல்லாமல் அதை கிண்டலாக பார்த்து சிரித்தது வேதனை அளிக்கிறது என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார். மதுமிதா கையை கிழித்துக்கொண்ட காட்சியோ, அவரது கையில் உள்ள காயங்களோ இதுவரை வெளியே காட்டப்படாத நிலையில், முதல் முறையாக மதுமிதா தன் கையை மிகவும் கொடூரமாக கிழித்து கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் மதுமிதாவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுமிதா தற்கொலை குறித்து பேசிய ஸ்ருதி சித்ரா (shruthi chithra), தமிழ்நாட்டில் பிறந்த பெண் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தமிழ்நாட்டிலேயே சொல்ல கூடாது என்றால் அவர் எங்கு சென்று முட்டிப்பார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
டிஷர்ட்டை வைத்து ‘குருநாதர்’ செய்த இன்டர்னல் பாலிடிக்ஸ்..சாண்டி மனைவி மூலம் அம்பலமான உண்மை
ஒரு பெண் தன் கையை அறுத்து கொள்கிறார் என்றால் அவர் எந்த அளவிற்கு காயப்பட்டிருப்பார்? கேங் ராகிங்கின் உச்சக்கட்டம் தான் மதுமிதாவை தற்கொலை செய்ய தூண்டியுள்ளது. தற்கொலை செய்யும் அளவிற்கு மதுமிதாவை இரிடேட் பண்ணும் வகையில் பேசியுள்ளனர். மற்றவர்கள் நமது உரிமை குறித்து பேசினால் கைதட்டும் நபர்கள், நம் நாட்டு பெண் கூறுவதை கேட்க தயாராக இல்லை என அவர் கூறியுள்ளார்.
உள்ளாடைகள் அணியாமல் மாலை நேரத்தில் பெண் போட்டியாளர்கள் வலம் வருவார்கள் என மதுமிதா கூறியிருந்தார். அது சரியானது என கூறிய ஸ்ருதி, மாடர்ன் உடை அணியலாம். ஆனால் அது அருவருப்பாக இருக்க கூடாது என தெரிவித்துள்ளார். வனிதா குறித்து பேசிய ஸ்ருதி சித்ரா, வனிதா ஷெரின் மீது கடுப்பில் உள்ளார்.
ஏனெனில் தர்ஷனை அவருக்கு பிடிக்காது என்பதால் அவருடன் ஷெரின் பழகுவதை வனிதா விரும்பவில்லை. அதனால் தான் ஷரின் – தர்ஷன் இடையே உள்ள நட்பை வனிதா சித்தரிக்கிறார். ஷெரினே தங்களுக்குள் காதல் இல்லை என கூறும் நிலையில் வனிதா வேண்டும் என்றே பிரச்சனையை வளர்க்கிறார்? சாக்ஷி இருக்கும் போது நண்பர்கள் என கூறிவிட்டு அவர் வெளியே சென்றது கவின் மற்றும் லாஸ்லியா காதலிக்கின்றனர். அதனை வனிதா கேட்கவில்லை.
சாக்ஷி தோழியான வனிதா, என் தோழிக்கு ஏன் துரோகம் செய்கின்றாய் என கவிடம் கேட்கவில்லை. காதலே இல்லை என சொல்லும் ஷெரினிடம் நீ காதலிக்கிறாய் என கூறி பிரச்சனையை உண்டு பண்ணுகிறாள். ஆனால் ஷெரின் தெளிவாக கூறிவிட்டது நல்லது என அவர் கருத்து கூறியுள்ளார். சனம் ஷெட்டி கண்ணீருடன் அழுது கொண்டே ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் நான் தர்ஷன் முன்னேற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் எடுத்திருக்கிறேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் துன்புறுத்தி வெளியேற்றினர் : மதுமிதா புகார்!
இந்த நிமிடத்தில் இருந்த நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை என்று கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதுகுறித்து பேசிய ஸ்ருதி சித்ரா(shruthi chithra), தர்ஷனை வைத்து சனம் வெளியில் விளம்பரம் தேடி கொள்கிறாள். தரஷனிடம் பேச வேண்டும் என்ற அவன் வெளியே வந்ததும் பேசலாம் அல்லவா? சனம் ஷெட்டி அவரது காதல் குறித்து முடிவு எடுப்பது அவரது சொந்த விஷயம். அதனை ஏன் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் ? உள்ளே இருப்பவர்கள் குறித்து வெளியே கமெண்ட்ஸ் அடித்து மூட்டிவிடுவது தேவையில்லாதது.
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம், ஆனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் குறித்து விமர்சிக்க தேவையில்லை. கடந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கூட இதே போன்று மகத்தின் காதலி கூறியிருந்தார். ஆனால் மகத் கொஞ்சம் ஓவராக சென்றார். மும்தாஜ் மற்றும் யாசிகாவிடம் கொஞ்சம் அதிகமாக நெருங்கி பழகினார். ஆனால் தர்ஷன் அப்படி இல்லை, அவர் அவரது வேலையை சரியாக செய்கிறார்.
ஷெரின் உடனான நட்பை கூட அழகாக கொண்டு செல்கிறார், பேசும் போது கூற தெளிவாக பேசுகிறார் என விளக்கினார். சேரன் வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் இருப்பது குறித்து பேசிய ஸ்ருதி, சேரனை நாமினேட் செய்து விட்டு அவர் வெளியே சென்ற போது லாஸ்லியா நான் வெளியே செல்கின்றேன் என கூறி நடிக்கிறார். அவரே நாமினேட் செய்து விட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என லாஸ்லியாவை விமர்சனம் செய்துள்ளார்.
சேரன் வெளியே சென்றவுடன் மிகவும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் லாஸ்லியா இருக்கிறார். வனிதா உண்மையாக சேரன் வெளியே சென்ற போது வருத்தப்பட்டார். சேரன் சார் சீக்ரெட் ரூம் சென்றது நல்லது. இப்போது தான் அனைத்து விஷயங்கள் குறித்து யோசிக்க சேரனுக்கு நேரம் கிடைத்துள்ளது. மேலும் லாஸ்லியாவிற்கு பச்சோந்தி என்ற பட்டம் குடுத்தது சரியானது.
அவர் விருதை தூக்கி எரிந்தது தவறு. விருது பிடிக்கவில்லை என்றால் அதனை வாங்கி வைத்திருக்கலாம். பச்சோந்தி என்ற விருதும் அவருக்கு பிடிக்கவில்லை, சாக்ஷி கையால் அந்த விருதை வாங்கவும் அவர் விரும்பவில்லை. மிகவும் திமிராக லாஸ்லியா இருக்கிறார். இதனை தொடர்ந்து தர்ஷன் தான் டைட்டில் வின்னராக வாய்ப்புள்ளது என ஸ்ருதி சித்ரா (shruthi chithra) தெரிவித்துள்ளார்.
Intha Oru vishyathukaga Than nan pesunathu @igtamil @behindwoods @gallatadotcom pic.twitter.com/XVudbJo0Yc
— Daniel Annie Pope (@Danielanniepope) September 10, 2019
இதனிடையே முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான டேனியல் மதுமிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுமிதாவின் கைக்கட்டை அகற்றி எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘இதுதான் மதுமிதாவுக்காக என்னை பேச வைத்தது’ என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.