இன்றைய காலத்தில் உள்ள காதல் ஜோடிகளில் பாதிப்பேர் சிறு பிரச்சனை வந்தால் கூட காதலை முறித்துக்கொள்ளும் அளவிற்குப் போய்விடுகிறார்கள். சிறிய சண்டைகளுக்காகப் பிரியும் காதல் ஜோடிகளைப் பார்த்தால், இவர்கள் உண்மையாகவே காதலித்தார்களா? என்று அவர்கள் காதலை (relationship) சந்தேகப்படும் அளவிற்கு யோசிக்க தோன்றும். இதுபோல் சிறிய சண்டைகளினால் பிரிகிறார்கள் என்றால் அவர்கள் காதலில் அந்யோனியம் இல்லை என்பதுதான் முக்கியக் காரணம்! காதலர்களுக்கு அந்யோனியம் உண்டாக அவர்களுக்குள் உள்ள பிரச்சனைகள் குறித்து தெரிந்துகொண்டு அதனை சரி செய்தாலே போதுமானது.
உங்கள் காதல் காயப்படாமல் இருக்க நீங்கள் கிழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
1. நேர்மை : காதலில் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும். காதலி/ காதலன் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் வாக்குறுதிகளை மீறக்கூடாது. உதாரணமாக புகைப்பிடிக்க மாட்டேன் என்று உங்கள் காதலிக்கு வாக்கு கொடுத்திருந்தால் அதனை எந்த சூழ்நிலையிலும் மீறக்கூடாது. அதேபோல் காதலனுக்கு பிடிக்காது என்றால்மற்ற ஆண்களுடன் பழகுவது போன்ற தவறுகளில் ஈடுபடக் கூடாது. இதுபோன்ற மறைமுகத் தவறுகள் காதலிக்கு தெரிய வரும்போது காதல் முறிந்து போகும் என்பது நிச்சயம்.
pixabay
2. பிரச்சனைகளை பெரிதாக்காதீர் : ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்துவதும், குற்றங்களை மிகைப்படுத்திப் பேசி பிரச்சினையை பெரிதாக்குவதும் பிரிவை உருவாக்கிவிடும். உதாரணமாக உங்கள் காதலன்/ காதலி எந்த நபருடனாவது நண்பன் ஒருவரிடம் காதலி (relationship) பேசியிருப்பது தெரிய வந்தால், அதை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதை அறிந்து கொள்ளும் ஆவலோடு துருவித் துருவி விசாரிக்காமல் பிரச்சனையை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
3. தன்மானத்தை பதிக்காதீர்கள் : உங்கள் காதலன்/ காதலியின் தன்மானத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஏளனமாக பேசவோ, நடக்கவோ கூடாது. பெண்கள் அல்லது ஆண்கள் பற்றிய இழிவான கருத்துகளை பேசிவிட்டு உங்கள் காதலர்களுடன் அதனை முடிச்சுபோடக் கூடாது.
4. அலட்சியம் : காதலை ஏற்றுக் கொள்ளும் வரை பின்னால் சுற்றுவது, கெஞ்சி இறங்கித் திரிவது, அன்பை வாரி வழங்குவது என்று இருந்துவிட்டு காதலை ஏற்றுக் கொண்ட பிறகு ஏனோதானோவாக பொறுப்பற்று நடந்து கொண்டால் காதல் கசந்து விடும். இதனால் முன்புபோல் அன்பாக இல்லை, சண்டை போடுகிறீர் என விவாதங்கள் எழுவது உண்டு. இதற்கு உங்களின் அலட்சியமே காரணம்.
pixabay
5. வெறுப்புகள் : காதலிப்பது என்பது என்றுமே மகிழ்ச்சியாக இருந்துவிடாது. பணம், வேலை, உடல்நிலை என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்போது காதல் என்றாலே பிரச்சனைகள் தான் என்று என்றுமே தோன்ற கூடாது. காதலித்த பிறகு, பிரச்சனையின் போது நம்மை தாங்கிப்பிடிக்க ஒரு தோள் இருக்கிறது என்று மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர,உன்னை காதலித்த பின்பு தான் என் வாழ்வே போர்க்களமானது என்று நினைப்பு வந்துவிடக்கூடாது.
6. சரியான திட்டமிடல் : காதலர்கள் (relationship) சந்திக்க பல்வேறு தடைகள் இருக்கலாம். அதனால் நினைத்த படி சந்திக்க முடியாமல் போகலாம். ஆனால் திட்டமிட்டு காரணங்களை உருவாக்கி சந்திப்பதை வேண்டும் என்றே தவிர்ப்பது காதல் முறிய காரணமாகிவிடும்.
7. பொய்கள் : காதலில் ஓரளவு பொய் இருக்கலாம். ஆனால் காதலே பொய்யாக இருக்கக்கூடாது. அவர்களிடம் கூறும் தகவல் அனைத்தும் கற்பனையானதாகவும், முழு பொய்யானதாகவும் இருந்துவிடக்கூடாது. கவர்ச்சி, கற்பனை, போலித்தனம் மூன்றும் எளிதாக காதலை காயப்படுத்திவிடும்.
pixabay
8. ஈகோ : காதலர்களுக்குள் அந்யோனம் குறைவதற்கு முக்கியக் காரணம் ஈகோ. பிரச்சனைக்குரிய விஷயங்களை உக்கார்ந்து பேசித் தீர்த்துவிட்டால் போதும். போட்டிபோட்டுக்கொண்டு இருந்தால் காதல் வளராது, கோபம் தான் வளரும்.
9. சஞ்சலம் : காதலர்களில் ஒருவர் மனதுகூட அலைபாயக்கூடாது. ஒருவரோடு மனம் இணங்கி காதலித்துக்கொண்டிருக்கும்போது, ‘இவரைவிட சிறந்தவர் கிடைத்தால், இவரை கைவிட்டுவிடலாம்’ என்ற எண்ணம் இருக்கவேகூடாது. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அந்த காதல் கண்டிப்பாக கல்யாணத்தில் முடியாது.
10. பொறாமை : பொறாமை என்பது பொதுவாக எல்லோருக்கும் இருப்பது தான். இத்தகைய பொறாமை ஒரு நல்ல உறவையும் அழிக்கும். காதலன் பொறாமை கொள்கிறான் என்றால் அதற்கு காதலியின் நடவடிக்கைகளாலே வரும். அதிலும் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் சொல்லவே வேண்டாம். ஆகவே பக்குவமாகப் பேசி சமாதானப்படுத்த வேண்டும். முடிந்த அளவு நண்பர்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்ளலாம்.
pixabay
11. மரியாதை : நீங்கள் காதலிக்கும் நபருக்கு மரியாதையை கொடுப்பது அவசியம். உங்கள் காதலன்/காதலி நீங்கள் சொல்வதை கேட்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். அவரவர் விருப்பம் போல் இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு. நீங்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் காதல் உணர்வை ஏற்படுத்தாமல் உங்கள் மேல் வெறுப்பை உண்டாக்கும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!