கவினின் நடவடிக்கைகளால் தொடர்ந்து பலர் பிக் பாஸ் (biggboss) வீட்டில் பாதிக்கப்படுவதும் காயப்படுவதுமாக இருக்கின்றனர். மற்றவர்களை அவமதிக்கும் முன்னர் தனக்கு அந்த தகுதி இருக்கிறதா என்பதைக் கவின் யோசிக்க வேண்டும்.. ஆனால் அவருக்கு அது பற்றிய கவலை இல்லை.
இங்கே நல்லவர் கெட்டவர் என்று யாரும் இல்லை. நமக்குப் பிடித்தமானவர் நல்லவர் நமக்குப் பிடிக்காதவர் கெட்டவர் என்கிற சொலவடை ஒன்று உண்டு. அதற்கு ஏற்றாற்போல கவினுக்கு சாக்ஷியை பிடிக்கும்போது சாக்ஷி நல்லவராகத் தெரிந்தார்.
சாக்ஷி எங்கே தன் மீதான காதலால் தான் அவரிடம் ப்ரொபோஸ் செய்ததை மற்ற ரகசிய விஷயங்களை வெளியே சொல்லி விடுவாரோ என்கிற பயத்தில் கவின் கண்டெடுத்த ஆயுதம்தான் சாக்ஷி கேம் விளையாடுகிறார் எனக்கு எதுவுமே தெரியாது என்பது.
யார் கவினின் காதலி.. லாஸ்லியாவா சாக்ஷியா..? லாஸ்லியாவின் கேள்வியால் தடுமாறும் கவின்..!
ஒரு வீட்டில் மூன்று நான்கு வாரங்கள் தன்னுடைய கண் முன்னால் ஒன்றாக இணைந்த ஜோடிகளான கவின்-சாக்ஷியை வேடிக்கை பார்த்து வந்த லாஸ்லியா எப்படி எதையும் யோசிக்காமல் ஐந்தாவது வாரம் முதல் கவின் கை பிடித்து நடக்கவும் பின்னிரவுகளில் கதைக்கவும் துணிந்தார் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.
அதனால்தான் சமூக வலைத்தளங்களில் லாஸ்லியா , ஃபேக்லியா வாக மாறியிருக்கிறார். இப்படி பல்வேறு விமர்சனங்கள் அவரவர் உல் மனசாட்சி கூக்குரல்கள் எல்லாவற்றையும் தாண்டி கவினுக்காக கூட நிற்கிறார் லாஸ்லியா. லாஸ்லியா நாம் வெளியில் சென்று யோசித்து முடிவெடுக்கலாம் என்ற போது யோசித்தால் எங்கே மனம் மாறி விடுவாரோ என்கிற பயத்தில் பாஸ்ட் இஸ் பாஸ்ட் என்று கூறிக் கவின் லாஸ்லியாவின் முடிவுகளை அவசரமாக எடுக்க வைக்கிறார்.
கவின் லாஸ்லியா உறவுக்கு இடைஞ்சலாக குறுக்கே இருக்கும் ஒரே நபர் தற்போது சேரன் மட்டுமே. சேரன் அப்பாவால் தான் அவ்வப்போது லாஸ்லியா மனம் தடுமாறுகிறார். அதனால் எங்கே தான் பேசி பேசியே கரெக்ட் செய்த லாஸ்லியாவை தன்னிடம் இருந்து அதே போல பேசிப்பேசியே பிரித்து விடுவாரோ என்று கவின் பயப்படுகிறார்.
அவரை இன்னொரு பெண்ணிடம் விட்டுக்கொடுக்க கஷ்டமாக இருந்தது - திருமதி. சூர்யா சரவணன்!
குற்றம் புரிந்தவன் மனம் பயப்பட்டுக் கொண்டேதான் இருக்க வேண்டும். அந்த பயத்தின் காரணமாகவே சேரன் லாஸ்லியா இடையே நடக்காதவைகளை சொல்லி அவர்களை பிரித்தே வைத்திருக்கிறார். சேரனுடன் நேரம் செலவழிக்க லாஸ்லியா விரும்பாமல் இல்லை ஆனால் ஏமாற்றும் கவினால் தடுக்கப்படுகிறார். இது லாஸ்லியாவிற்கு இப்போது புரியப்போவது இல்லைதான்.
சேரனின் பாசம் நாடகத்தனமானது என்பதை பல்வேறு இடங்களில் லாஸ்லியாவிற்கு கவின் சொல்லியபடியே இருந்தார். அதனை பார்வையாளர்களாகிற நாமும் பார்த்தோம். ஆனால் ஃப்ரூட்டி காலர் மூலம் இந்த உண்மை மற்ற அனைவருக்குமே தெரிந்தது. இதற்கு லாஸ்லியா பதில் சொன்ன விதம் சேரனை மிகவும் காயப்படுத்தியது.
அங்கேயே அனைவர் முன்னிலையிலும் அதற்கான விளக்கத்தை மட்டும் கொடுத்து விட்டு சேரன் ஒதுங்கி கொண்டார். லாஸ்லியாவின் குற்றமுள்ள மனமும் குறுகுறுக்க தொடங்க கவின் இவ்வளவு நாள் மறைத்து வைத்த ஆத்திரங்களை ஷெரினிடம் கூறியதைக் கேட்ட போது அதில் சம்பந்தப்படாத பார்வையாளர்களுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
ஆரம்பத்தில் நான் நிறைய தயங்கினேன்.. நயன்தாரா பற்றி முதன்முதலாக மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் !
நல்லவேளையாக இது சேரன் காதில் படவில்லை. அதே சமயம் இதனைப்பற்றி லாஸ்லியாவும் அறிந்து கொள்ளவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து கவின் லாஸ்லியா அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்குவது வரை யோசித்திருப்பதாக கூறுகிறார். எங்கள் காதலில் இவர் ஏன் நடுவில் வருகிறார் ? என்னமோ இவர் பெத்து வளர்த்த மாதிரி.. என்று பொருமுகிறார் கவின்.
கவினின் இந்த செயலை பார்க்கும்போது நாளை லாஸ்லியாவின் பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் கவின் இதனை வேறு விதமாகக் கையாள்வார். உன்னைப் பெற்று வளர்த்ததோடு அவர்கள் கடமை முடிந்தது காதலிக்க வேண்டியதும் கல்யாணம் செய்து கொள்வதும் உன்னிஷ்டம் தான் என்று நிச்சயமாக நாக்கூசாமல் கவின் கூறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன.
திடமான மனமோ அதற்கான வயதோ இல்லாத லாஸ்லியா தன்னை மகள் போல பாவிக்கும் சேரன் அப்பாவிடமே இதற்கான தீர்வுகளை கேட்டிருக்கலாம். நிச்சயம் ஒரு தந்தை தனது மகள் வாழ்வு சிதைந்து போக காரணமாக இருக்க மாட்டார். இதனை அவரது நிஜ வாழ்விலேயே மிகுந்த போராட்டங்களுக்கு இடையில் செய்தவர்தான்.
அப்பாவின் மீது சந்தேகப்படும் லாஸ்லியா .. நீங்கள் உங்கள் சந்தேகத்தை வைக்க வேண்டிய இடம் கவினிடம்தான். ஒருவரது (சாக்ஷி) சந்தோஷத்தை பறித்து அதனை தனதாக்கிக் கொண்ட உங்களுக்கு இந்த விஷயம் தெரிய நியாயம் இல்லைதான். ஆனால் உண்மையில் நீங்கள் சாக்ஷியிடம் இருந்து பறித்தது சந்தோஷத்தை அல்ல தண்டனையைத்தான். நீங்கள் இப்போது தவறான முடிவெடுத்தால் உங்கள் வாழ்நாள் முழுதுமே தண்டனையாகவே மாறி விடலாம். கவனம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.