யார் கவினின் காதலி.. லாஸ்லியாவா சாக்ஷியா..? லாஸ்லியாவின் கேள்வியால் தடுமாறும் கவின்..!

 யார் கவினின் காதலி.. லாஸ்லியாவா சாக்ஷியா..? லாஸ்லியாவின் கேள்வியால் தடுமாறும் கவின்..!

பிக் பாஸ் வீட்டில் சும்மாவே சண்டை என்பது கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நடந்து முடிகிறது. இதில் இது போதாதென்று நேற்று பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் தனியாக ஒவ்வொருத்தரையும் பற்றவைத்தது. மதிய நேரம் கூட ஓய்வின்றி பிக் பாஸ் போட்டியாளர்கள் அதனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதுவும் போதாதென்று யோசித்த பிக் பாஸ் (bigg boss) இன்று வீட்டில் உள்ள போட்டியாளர்களை வைத்து நீயா நானா நிகழ்ச்சி ஒன்றை நடத்த போகிறார் என்பதான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதற்கு நடுவராக மீராவைப் போட்டதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

கலந்து கொள்ளும் போட்டியாளர்களைப் பேச விடாமல் மீராவே பேசி கொண்டிருக்கிறார் போல முதல் ப்ரோமோ வெளியானது. அதன் பின்னர் இரண்டாவது ப்ரோமோ காட்டப்பட்டது.                                

இரண்டாவது ப்ரோமோவில் சாக்ஷி அகர்வால் கவினை வாங்கு வாங்கென்று வாங்குகிறார். கவினின் காதல் விளையாட்டு சீரியஸாக போவதை உணர்ந்த கவின் ஜகா வாங்குகிறார். கவினின் காதல் விளையாட்டை உண்மை என நம்பிய சாக்ஷிக்கு இது புரியத் தொடங்குகிறது. அதனால் இனிமேல் எனக்கும் உனக்கும் ஒன்றும் இல்லை என்று சாக்ஷி கவினிடம் கூறுகிறார்.         

விவாகரத்துக்குப் பின்பான வாழ்க்கை.. முன்னாள் கணவர் பற்றி மனம் திறந்த அமலா பால் !                    

லாஸ்லியாவிற்கு போட்டியாக வருகிறார் ஆல்யா ?எதிர்பாராததை எதிர்பாருங்கள்!      

இது முடிந்த நிலையில் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் நீயா நானா நிகழ்வை பயன்படுத்தி லாஸ்லியா கவின் மீதான குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக வீசுகிறார். ஏற்கனவே லாஸ்லியா கவினை பரிபூரணமாக நம்ப ஆரம்பித்து விட்டார் என்பது அவரது நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.

பேச பிடிக்கும் என்கிற நபராக கவினைக் கைக்காட்டும் லாஸ்லியாவின் முகத்தில் அத்தனை வெட்கம் வருகிறது. இதனைப் பார்க்கும் சாக்ஷியின் முகம் மாறுகிறது. சாக்ஷி பல இடங்களில் லாஸ்லியா மற்றும் கவினை பார்க்கையில் முகம் மாறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த பிரச்னை நீயா நானாவிலும் தொடர்கிறது. லாஸ்லியா எதையும் நேருக்கு நேராக கேட்கும் பெண் என்பதால் கவினை பற்றிய கேள்வியை நேரடியாகவே அவர் முன்வைக்கிறார். அதனை கவின் தனக்கான கழுவிய மீனில் நழுவிய மீனாக பதில் கூற சாக்ஷி லாஸ்லியாவிற்கு ஆதரவாக பேசுவது போலத் தெரிகிறது.

இதனால் கடுப்பான கவின் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது போன்ற ஒரு ப்ரோமோ காட்டப்பட்டுள்ளது. ஆக இன்றைக்கு இரவு நிச்சயம் சுவாரஸ்யமான சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்க இருப்பதாக தெரிகிறது.                                                   

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.