கதறிய லாஸ்லியா..உறைந்த கவின் - சேரன் சில குறிப்புகள் ! | POPxo

அருகில் இருக்கும்போது அருமை தெரியாது.. கதறிய லாஸ்லியா..உறைந்த கவின்- சேரன் சில குறிப்புகள்

அருகில் இருக்கும்போது அருமை தெரியாது.. கதறிய லாஸ்லியா..உறைந்த கவின்- சேரன் சில குறிப்புகள்

பிக் பாஸ் தமிழை இன்று பெரும்பான்மை தமிழ் மக்கள் இவ்வளவு விருப்பமாக பார்க்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் சேரன்.  தன்னுடைய நேர்மையான கதை சொல்லும் திறன் மூலம் பல்வேறு விதமான மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் சேரன். 

சினிமா துறையில் எப்படித் தனக்கென ஒரு தனி அடையாளத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டாரோ அதை போலவே தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு குடும்பத் தலைவன் அங்கே எப்படி இருந்து சிக்கல்களை சரி செய்ய வேண்டும் என்பதை தான் ஒரு முன்னுதாரணமாக மாறி செய்து காட்டி இருக்கிறார். தன்னுடைய கண்ணியமான நடத்தையால் தன்னிடம் தவறாக நடந்தவர்களிடம் கூட அவர் கடுமையாக நடந்து கொண்டதில்லை. 

என்னமோ இவர் பெத்து வளர்த்த மாதிரி..ஆத்திரத்தில் கவின்.. அதிர்ச்சியில் சேரன்..Hotstar
Hotstar

மீரா மிதுன் சேரனை வெளியேற்ற செய்த சீப் தந்திரம் .. அது மட்டுமே அவருக்கு தாங்க முடியாத வலியை கொடுத்தது. அப்போது மனிதர் மிகவும் உடைந்து போனார். அதன் பின்னர் அதற்கான நியாயம் மக்களிடம் கிடைத்த பின்னர் நிம்மதியாக தன்னுடைய பிக் பாஸ் பயணத்தை தொடர்ந்தார். 

ஆனால் லாஸ்லியா தனக்கும் கவினுக்கும் இடையில் இருந்தது நட்பு என்று சேரனிடம் அப்போது விளக்கம் அளிக்கவே தன்னுடைய எல்லைகள் புரிந்து மகளை அவளது சுதந்திரத்தில் இருக்க வழி விட்டார். அப்போதும் மகள் தன்னோடு நேரம் செலவழிக்காததும் தன்னை அப்பா என்று அழைக்காததும் அவருக்கு வருத்தத்தை தந்தது. ஷெரினிடம் சொல்லி கலங்கினார். 

எனக்கு அவளை பார்க்க இஷ்டம் இல்லை.. லாஸ்லியா அம்மா கருத்து - இலங்கைக்கு விரைந்த பிக்பாஸ் குழு

Hotstar
Hotstar

இது எதுவும் அறியாத லாஸ்லியா வழக்கம்போல கவினுடன் கதைத்துத் திரிந்தார். அப்பா மகள் என்கிற உறவுக்கு அவர் தந்த மதிப்பை போலவே மற்ற அனைவரையும் மதிக்கவே செய்தார். சரவணன் ஆரம்பத்தில் இருந்தே சேரனிடம் ஆட்டிட்யூட் காட்டி வந்தார். அதற்கு ஒரு பின்கதையையும் சொன்னார். சரவணன் சொந்த வாழ்வில் ஏற்பட்ட விஷயத்திற்கு பழிவாங்க சேரனை நெருங்க விடாமல் மற்ற கவின் சாண்டி போன்றோரைத் தனது கைக்குள்ளேயே வைத்துக் கொண்டார்.

இது எல்லாம் புரிந்தும் புரியாத மாதிரி கண்ணியமாகவே சேரன் நடந்தார். ஒரு முறை நான் வாடா போடா நீ என்று சரவணன் ஒருமையில் சண்டை போட அங்கிருந்தால் மேலும் சரவணன் மரியாதை கெடும் என்று அங்கிருந்து நகர்ந்து வந்தவர் சேரன். மிகவும் எளிமையான நபராகவே சேரன் எல்லோரிடமும் நடந்து கொண்டார்.

எப்போதும் உன்னை நேசித்துக்கொண்டே இருப்பேன்..குட் பை தர்ஷன்..சனம் ஷெட்டியின் கண்ணீர் வாக்கு

Hotstar
Hotstar

நியாயமாகவும் நேர்மையாகவும் இருந்த சேரனை இளவயது மக்களுக்கு பிடிக்காது போகவே காதல் என்கிற பெயரில் கண்ணாமூச்சி ஆடும் கவினை முதல் இடத்தில் நிறுத்தி பார்க்க விரும்புகின்றனர். அதற்காக கவின் மற்றும் லாஸ்லியாவை காப்பாற்றிய மக்கள் சேரனை வெளியேற்றினர். 

இதனை உண்மையிலேயே தாங்கி கொள்ள முடியாத லாஸ்லியா மிகவும் உடைந்து போனார். இது நியாயமே இல்லை. நான் போயிருக்கணும். நீங்க இருக்கணும் என்று மேலும் பேச முடியாமல் கதறி அழுதபடியே இருந்தார். இந்த விஷயங்களை அருகில் இருந்து பார்த்த கவின் உறைந்து தான் போனார். சேரனின் பாசத்தை நாடகம் என்று சொன்னோம்.. இப்போது இதை எப்படிக் கையாள்வது என்பது போல யோசித்துக் கொண்டிருந்தார்.

 

Hotstar
Hotstar

அதே சமயம் நாம் ஒரு நல்ல மனிதரை மிகவும் புண்படுத்தி இருக்கிறோம் என்கிற குற்ற உணர்ச்சி அவருக்கு இருக்கத்தான் செய்தது. மன்னிப்பு கேட்டார். லாஸ்லியாவை சேரன் அருகிலேயே செல்லாமல் பார்த்துக் கொண்ட கவின் முதல் முறையாக சேரனிடம் பலமுறை மன்னிப்பு கேட்டது சேரன் வெளியேறும் அந்த நிமிடம் மட்டும்தான். 

அதைப் போலவே லாஸ்லியாவிற்கும் அப்பா அப்பா என்று அழைத்தவருடன் தான் அதிக நேரம் இல்லாமல் போனது மனவேதனையை கொடுக்கவே அவரும் கிளம்பும்வரை மன்னிப்புக் கேட்டுக் கொண்டே இருந்தார். கவினின் உள்ளக்கிடக்கையை புரிந்து கொள்ளாத லாஸ்லியா சேரனின் பிரிவு தாங்க முடியாமல் கவின் தோளில் சாய்ந்து கதறினார். பின்னர் கவினிடம் புலம்பினார். 

Hotstar
Hotstar

இரும்பு மனுஷியாக இது ஒரு கேம் ஷோ யார் மீதும் எனக்கு எந்தப் பாசமும் இல்லை "I have no feelings " என்று வளைய வந்து கொண்டிருந்த வனிதாவும் மிக மோசமாக உடைந்து போயிருக்கிறார். நீங்க இருக்கீங்கன்னு நம்பிக்கைலதான் நான் உள்ளேயே வந்தேன் என்றார். இங்கே நேர்மையா நியாயமா கேம் விளையாண்டா ஜெயிக்க முடியாது என்று அவர் கூறியபோது பிரேமில் சேரனுக்கு பின்னால் கவின் நிற்பது தெரிந்தது. 


எனக்கு புரியவே இல்லை இதுதான் மக்கள் தீர்ப்பு என்றால் இனி நான் இங்கே இருக்கவே விரும்பவில்லை என்றார். சேரன் வெளியேறும் வரை அதிகமாக புலம்பியவர் அவர் மட்டும்தான். லாஸ்லியா அழுதபடி இருக்க லாஸ்லியா சேரன் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரா என்பதை நேரிடையாக உணர்ந்த கவின் அதிர்ச்சியில் உறைந்து போய்தான் நிற்கிறார். அடுத்து என்ன சொல்லி லாஸ்லியா மனதை மாற்றலாம் என்று யோசிக்காமல் நிலைமையைப் புரிந்து கொண்டு சேரனிடம் மன்னிப்பு கேட்கிறார். வெளியில் நாம் பேசலாம் என்கிறார். ஆகா கவின் நீங்க வேற லெவல் என்று கவின் ஆர்மியினர் கூவுவது அவருக்கும் கேட்டிருக்கும். 

Hotstar
Hotstar

தர்ஷன் அதிகமாக உணர்ச்சிகளை வெளிகாட்டிக் கொள்ளவில்லை. அல்லது இதனை எதிர்பார்த்திருந்தார் போல அமைதியாக இருந்தார். ஷெரின் நான் வெளியில் வந்து பேசுகிறேன் என்றார். கிளம்பும்போது கூட பிக் பாஸ் வீட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட்டுத்தான் சேரன் வெளியேறினார். நீ யாரோ நான் யாரோ என்று பிரிந்து போன தோழிகள் ஷெரின் மற்றும் வனிதாவை இணைத்து வைத்தார். 

சூழ்ச்சிகளும் வன்மங்களும் நிறைந்த இந்த பிக் பாஸ் (biggboss)வீட்டில் சேரன் தன்னுடைய கண்ணியம் தவறாத நடுநிலை மாறாத நேர்மைத்தன்மையோடு 77 நாட்கள் தாக்குப் பிடித்ததே அவருடைய முதல் வெற்றி. இது அவருக்கான வெற்றி மட்டும் அல்ல அவரை போலவே நேர்மையாக வாழ முயற்சி செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. 

Hotstar
Hotstar

இப்போது அவருக்கு ரகசிய அறை வழங்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து வீட்டைக் கண்காணிக்கிறார். அதுவும் ஒரு புது அனுபவம் என்கிறார். சேரன் வெளியே வந்த போது சொன்ன வார்த்தை அர்த்தம் மிகுந்தது. ஒரே இடத்தில் ஒரே வேலையைத் திரும்ப திரும்ப செய்து கொண்டு இருப்பதை விட புதிய புதிய சவால்களை தேடி செல்வதும் சாகசங்களை முயல்வதும் சலித்துப்போன நம் வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு புத்துணர்வைக் கொடுக்கும். எல்லோரும் இதனை செய்து பாப்போம். புதிய மனிதர்களோடு பழகி பார்ப்போம். நம்மால் இயன்ற நல்ல செய்திகளை உலகில் சேர்ப்போம். 

 

 

Hotstar
Hotstar

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.