ருசியான சாக்லேட் பிரௌனி, முட்டை இல்லாமல் ஓவன் இல்லாமலா ? ரெசிபி உள்ளே!

ருசியான சாக்லேட் பிரௌனி, முட்டை இல்லாமல் ஓவன் இல்லாமலா ? ரெசிபி உள்ளே!

பிரௌனி - பேரைப் போன்றே சாக்லேட் நிறத்தில் இருக்கும் ஒரு வகையான கேக். பொதுவாக ஐஸ்கிரீமுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும். குழந்தைகளில் இருந்து பெரியோர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடும் ஒரு டெஸெர்ட் ஆகும் . இதை கடைகளில் ஏன் வாங்கவேண்டும்?

அதை நாம் வீட்டிலேயே செய்து கொடுத்தால், நீங்கள் மற்றவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர் (ஃபேவரெட்) ஆகி விடுவீர்கள்.சரி! புரட்டாசி மாசம் ஆரம்பிச்சுடுச்சே..அல்லது நீங்கள் சுத்த சைவம் என்றால், முட்டை இல்லாமல், அவ்வளவு ஏன்... ஓவன் இல்லாமல் கூட இதை (brownie recipe) வீட்டிலேயே எளிதில் செய்யலாம். 

 

 

சாக்லேட் பிரௌனி எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்:

 • டார்க் சாக்லேட் - ½ கப்
 • வெண்ணை - ½ கப்
 • மைதா - 1 கப்
 • கோகோ - ¼ கப்
 • பேக்கிங் பவுடர் - ½ தேக்கரண்டி
 • பொடித்த சக்கரை - ¾ கப்
 • பால் - ½ கப்
 • வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை:

 1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதை கொதிக்க வைக்க வேண்டும் அதன் மீது மற்றொரு பாத்திரத்தில் டார்க் சாக்லேட் துண்டுகளை போட்டு உருக வைக்க வேண்டும். எப்போதும் சாக்லேட் உருகுவதற்கு இந்த முறையை கையாளுங்கள். நேரடியாக சாக்லேட் துண்டுகளை பாத்திரத்தில் போட்டு அனலில் வைத்தால் ஒட்டிக்கொள்ளும். 
 2. சாக்லேட் (chocolate) துண்டுகள் உருகியதும், அதோடு உருக்கிய வெண்ணையை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின் அதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.
 3. மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பொடித்த சக்கரை ஆகிவற்றை சலித்து, சாக்லேட், வெண்ணை கலந்த கலவையோடு  கலக்க ஆரம்பியுங்கள். இதோடு பால் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
 4. இதோடு வெண்ணிலா எசென்ஸை கலந்து மறுபடியும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். 
 5. உங்களுக்கு நட்ஸ்(பாதாம், பிஸ்தா, வால்நட், ஹஸில்நட்) பிடிக்கும் என்றால் அவற்றையும் இந்த கலவையில் சேர்த்துக்கொள்ளலாம்.
 6. ஒரு 7 இன்ச் உள்ள சதுர வடிவில் கேக் அச்சு(மோல்ட்) எடுத்து, அதை பட்டர் அல்லது எண்ணெய் கொண்டு உள்புறம் முழுவது தடவிக் கொள்ளுங்கள். இது பிரௌனி (brownie) ஒட்டாமல் வருவதற்காக தடவுவது.
 7. இந்த சதுர அச்சில் கலக்கி வைத்த கலவையை ஊற்றி, மேல்புறம் சமமாக இருக்குமாறு சரி செய்து, லேசாக தட்டி விடுங்கள். இது பிரௌனி மேற்புறம் சமமாக வருவதற்காக செய்ய வேண்டும்.
  இந்த அச்சு பொருந்துமாறு ஒரு அகலமான அடிகனமான பாத்திரத்தை, மூடியுடன் எடுத்து தண்ணீர் ஊற்றாமல் அடுப்பில் வைக்கவும். வெறும் பாத்திரத்தை 5 முதல் 7 நிமிடம் சூடாக்கவும்.
 8. பின் அதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன்மீது கலவை அச்சை வைத்து, பாத்திரத்தின் மூடி போட்டு மூடி விடுங்கள்.
 9. மிதமான சூட்டில் 35 முதல் 40 நிமிடங்கள் அப்படியே வேகட்டும். 
 10. நன்றாக வெந்திருக்கிறதா என்று ஒரு குச்சியை பிரௌனியில் குதிப் பாருங்கள். இல்லையெனில் இன்னும் ஒரு 10 நிமிடம் சூட்டில் வைக்கவும்.  பிறகு, ஓரங்களில் கத்தியால் இடைவெளி ஏற்படுத்தி, பிரௌனியை வெளியே எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
Pinterest

இப்போது அலங்கரிக்கும் நேரம்!

தேவையான பொருட்கள்:

 • விப்பிங் கிரீம் - ½ கப்
 • மில்க் சாக்லேட் - ½ கப்
 • வைட் சாக்லேட் - ¼ கப்
 • டார்க் சாக்லேட் - ¼ கப்

செய்முறை: 

 1. சூடான விப்பிங் கிரீமில்(¼ கப்) மில்க் சாக்லேட்(½ கப்) துண்டுகளைப் போட்டு கலக்குங்கள். சாக்லேட் துண்டுகள் உருகி விடும். ஒரு கிரீம் போல இந்த கலவை ஆகி விடும். 
 2. பிறகு இதை பிரௌனி மீது ஊற்றுங்கள். எல்லாப்பக்கமும் சமமாக பரவுமாறு மெதுவாக பரப்பி விடுங்கள்.
 3. வைட் சாக்லேட் துண்டுகளையும், டார்க் சாக்லேட் துண்டுகளையும் தனித்தனியாக வெவ்வேறு கிண்ணங்களில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சூடான விப்பிங் கிரீம் 2 தேக்கரண்டி ஒவ்வொன்றிலும் ஊற்றி கலக்குங்கள். இப்போது உங்களுக்கு இரண்டு நிறங்களில் அலங்கரிக்க கிரீம் கிடைச்சாச்சு. இவற்றைத் தனித்தனியாக கோனில் நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள்.
 4. பிறகு பிரௌனியின் மேலே கோடுகளாக அழகாக மாற்றி மாற்றி அலங்கரியுங்கள். ஒரு குச்சியை வைத்து நீங்கள் கோடு போட்டதற்கு எதிர்ப் புறமாக கோடுகளை இழுத்து விடுங்கள். ஒரு அலை போன்ற வடிவில் அழகிய அலங்காரம் பிரௌனி மீது வந்து விடும்.
 5. பின்னர் கத்தியால் பிரௌனியை சதுரங்களாக வெட்டிக்கொள்ளுங்கள். கொடுக்கப்பட்ட அளவைக் கொண்டு 9 பிரௌனி துண்டுகள் கிடைக்கும்.
 6. பிரௌனி துண்டுகள் மீது ஐஸ்கிரீமை உருண்டையாக வைத்து, அதன் மீது சாக்லேட் சிரப் ஊற்றி அலங்கரித்து சுவைத்துப் பாருங்கள். அருமையோ அருமை!
Pinterest

பிரௌனி செய்யும்போது நினைவில் கொள்ள வேண்டிய சில குறிப்புக்கள் 

 1. பிரௌனி (ரெசிபி) அதிகமாக வெந்து விட்டால், ஆறிய பிறகு பிஸ்கட் போல ஆகி விடும். 30 நிமிடங்கள் வெந்ததில் இருந்து கவனமாகப் பார்த்து பிரௌனியை எடுத்து விடுங்கள். ஒரு டூத்பிக் பயன்படுத்தி வெந்துவிட்டதா என்று ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் சரி பார்க்கலாம். இரண்டு மூன்று முறை செய்தால் உங்களுக்கே சரியாக தெரிந்துவிடும்.
 2. பிரௌனி செய்ய சரியான பாத்திரத்தைப் பயன்படுத்துங்கள். 
 3. கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக பயன்படுத்தினாலே அருமையான பிரௌனி கிடைத்துவிடும். 
மேலும் படிக்க - நாவூரும் மில்க் ஸ்வீட்ஸ் இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்!

மேலும் படிக்க - வார விடுமுறை வந்துவிட்டது!... சுட சுட மனமனக்கும் சூப்பரான ரெசிப்பிக்களுடன் அசத்துங்கள்!

பட ஆதாரம்  - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!