நாவூரும் மில்க் ஸ்வீட்ஸ் இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்!

நாவூரும் மில்க் ஸ்வீட்ஸ் இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்!

இனி அடுத்தடுத்து வீட்டில் பண்டிகைகள் வர தொடங்கிவிட்டன. ஒரே பலகாரங்களை செய்து நீங்களும் சாப்பிடுபவர்களும் அழுத்து போயிருப்பார்கள். உங்களுக்காகவே சில வித்தியாசமான வீட்டிலிருந்தே எளிமையாக செய்ய்க்கூடிய ரெசிபிக்களை இங்கு பதிவு செய்திருக்கிறோம்.

ரசமலாய்

மில்க் – 1 லிட்டர் 
சீனி - 200 கிராம் 
ஏலக்காய் - 4 
குங்குமப் பூ - அரை கிராம் 
வினிகர் - அரை மேசைக்கரண்டி

ரசமலாய் செய்முறை 
பாத்திரத்தில் முக்கால் லிட்டர் பாலை(milk) ஊற்றி சுண்ட காய்ச்சவும். அதில் வினிகரை ஊற்றி பாலை திரிய விடவும். பால் திரிந்ததும் இறக்கி வைத்து ஒரு துணியில் போட்டு தண்ணீரை முழுவதுமாக வடித்து விடவும். 10 நிமிடம் கழித்து தண்ணீர் வடிந்த பின்னர் தயாராக எடுத்துக் கொள்ளவும். ரசமலாய் செய்ய பனீர் தயார். இந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வேண்டிய வடிவங்களில் தட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் பாலை ஊற்றி காய்ச்சவும். அதில் ஏலக்காய் பொடி, குங்குமப் பூ, சீனி சேர்த்து கலக்கவும். மிதமான தீயில் காய்ச்சவும். பால் நன்கு காய்ந்ததும் அதில் தயார் செய்து வைத்திருக்கும் பனீர் உருண்டைகளை போட்டு மூடி விடவும். 5 நிமிடம் கழித்து திறந்து மெதுவாக உடைந்து போகாமல் கிளறவும். இப்போது சுவையான ரசமலாய் ரெடி. பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். ரசமலாயை தனியாக கிண்ணத்தில் போட்டு ஃப்ரிட்ஜ்சில் வைத்து ஜில் என்றும் சாப்பிடலாம் சுவை கூடுதலாக இருக்கும்.

பாசுந்தி

பாசுந்தி என்றதும் ஏதோ கஷ்டமான ஓர் இனிப்பு வகை என்று நினைக்க வேண்டாம். இது பாயாசம் போன்றது. ஆனால் இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு இதனை அவ்வப்போது செய்து கொடுத்தால், அதில் சேர்க்கப்படும் நட்ஸ்களில் இருக்கும் சத்துக்கள் கிடைத்து, குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது பண்டிகைக் காலங்களில் வீட்டில் செய்தால், வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இப்போது அந்த பாசுந்தியை எப்படி எளிமையாக செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து வீட்டில் செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: 
கொழுப்பு நிறைந்த மில்க்(milk) - 1 லிட்டர் கண்டென்ஸ்டு மில்க்(milk) - 1/2 கப் சர்க்கரை - 3-4 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் பாதாம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) முந்திரி - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) பிஸ்தா - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) குங்குமப்பூ - 1 சிட்டிகை

செய்முறை: 
முதலில் ஒரு பாத்திரத்தில் பால்(milk), சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, தீயை குறைத்து, தொடர்ந்து கிளறி விடவும். அப்படி தீயைக் குறைத்து கொதிக்கவிடும் போது, அதில் பாலாடை உருவாக ஆரம்பிக்கும். அந்த பாலாடையை தூக்கி எறியாமல், அப்படியே தொடர்ந்து பால் ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும். பால் நன்கு கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் ஏலக்காய் பொடி, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி, ஒரு பௌலில் ஊற்றி குளிர வைத்து, பின் ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் பரிமாறினால், பாசுந்தி ரெடி

ரசகுல்லா

குலாப் ஜாமூனுக்கு அடுத்த படியாக பலரும் விரும்பி சாப்பிடுவது ரசகுல்லா தான். இந்த ரசகுல்லா செய்வதற்கு பலருக்கும் தெரியாது. மேலும் இதனை எப்படி செய்வதென்று பலரும் இணையதளத்தில் தேடியிருப்பார்கள். இருப்பினும் சரியான செய்முறை கிடைத்திருக்காது. அதனால் தான் உங்களுக்கு இதை இங்கு பதிவு செய்கிறோம்.

தேவையான பொருட்கள்: 
மில்க் - 1/2 லிட்டர் எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 1 மற்றும் 3/4 கப் ஐஸ் கட்டிகள் - 4-5 சர்க்கரை - 3/4 கப் ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை பிஸ்தா - 3-4

செய்முறை
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் நன்கு திரியும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும். பாலில் இருந்து தண்ணீர் முற்றிலும் பிரிந்ததும், அடுப்பை அணைத்து, பின் பாலில் ஐஸ் கட்டிகளை சேர்த்து, ஐஸ் கட்டிகளை உருக வைக்கவும். ஐஸ் கட்டிகள் முற்றிலும் உருகியதும், அதனை மஸ்லின் துணியில் ஊற்றி அதில் உள்ள நீரை முற்றிலும் வடிகட்டி, ஓடும் நீரில் மஸ்லின் துணியில் உள்ள திரிந்த பாலை எலுமிச்சை வாசனை முற்றிலும் போகும் வரை நன்கு கழுவ வேண்டும். பின் அதில் உள்ள நீரை வடித்து, 30 நிமிடம் தனியாக வைக்க வேண்டும். பின்பு மஸ்லின் துணியில் உள்ள அந்த திரிந்த பாலை ஒரு தட்டில் போட்டு, அதனை பிசைய வேண்டும். பிறகு அதனை சிறு உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்க விட வேண்டும். சர்க்கரை நீரானது ஓரளவு கெட்டியான பின் அதில் உருட்டி வைத்துள்ளதை போட்டு, குறைவான தீயில் 3 நிமிடம் வேக வைக்கவும். பின் மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். முக்கியமாக இந்நேரத்தில் 3 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும். இறுதியில் அதனை இறக்கி, குளிர வைத்து, அதன் மேல் பிஸ்தாவை தூவினால், ரசகுல்லா ரெடி

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.