logo
ADVERTISEMENT
home / Food & Nightlife
வார விடுமுறை வந்துவிட்டது!…  சுட சுட மனமனக்கும் சூப்பரான ரெசிப்பிக்களுடன் அசத்துங்கள்!

வார விடுமுறை வந்துவிட்டது!… சுட சுட மனமனக்கும் சூப்பரான ரெசிப்பிக்களுடன் அசத்துங்கள்!

அடை தோசை ரெசிப்பி (recipes)

அடை தோசை மிகவும் அருமையான, ஆரோக்கியமான உணவு. பெரும்பாலான பருப்பு வகைகள் கலந்து இதை செய்வதால் நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். மேலும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு அடை தோசை ஆகச் சிறந்தது. இத்தகைய சுவைமிகுந்த அடை தோசையை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

அடை தோசை செய்ய தேவையான பொருட்கள்!

கடலை பருப்பு – ஒரு கப், துவரம் பருப்பு – அரை கப், பச்சரிசி – கால் கப், உளுந்து – ஒரு மேசைக்கரண்டி, மிளகாய் வத்தல் – 5 (காரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்), பெருங்காயம் – கால் தேக்கரண்டி, தேங்காய் – கால் மூடி, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி இலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு

ADVERTISEMENT

செய்யும் முறை!

கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து எல்லாவற்றையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்தவற்றுடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் நறுக்கின தேங்காய், வெங்காயம், பொடியாக நறுக்கின கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்க்கவும்.

 

ADVERTISEMENT

ஆப்பம் ரெசிப்பி (recipes) செய்யும் முறை 

தேவையான பொருள்கள்:

ஊற வைக்க:

பச்ச அரிசி – ஒரு கப்
புழுங்கல் அரிசி – ஒரு கப்
வெந்தயம் – கால் தேக்கரண்டி
ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – கால் கப்

ADVERTISEMENT

சேர்த்து அரைக்க:

சாதம் – ஒரு கை பிடி
தேங்காய் துருவல் – கால் மூடி

செய்முறை :

ஊற வைக்கவேண்டியவைகளை இரவு ஊற போட்டு காலையில் அரைக்கவும், அல்லது காலையில் ஊற போட்டு மாலையில் அரைக்கவும்.

ADVERTISEMENT

ஆப்பம் சுடும் போது பிஞ்சி பிஞ்சி வந்தால் முதலில் சூடான வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வெங்காயத்தை அரை வட்டமாக நறுக்கி சுற்றி முழுவதும் தடவவும். அப்பதான் ஒட்டாமல் வரும்.

ஊற்றும் போது தீயை அதிகமாக வைக்க வேண்டும். கையில் பிடித்து சுழற்றி தீயை குறைத்து வைத்து ஐந்து நிமிடத்திற்குள் வெந்துவிடும்

சுழற்றி விட்டு இட்லி சட்டி மூடி போட்டு (அ) குப்பி மூடி போட்டு மூட வேண்டும்.

இரண்டு கை பிடியிலும் தனித்தனியான சின்ன துணியாக பிடித்து கொள்ளவும். பெரிய துணி என்றால் கேஸ் அடுப்பில் மாட்டி தீ பிடிக்கும் அபாயம் இருக்கு.

ADVERTISEMENT

குறிப்பு

வெந்தயம் சேர்ப்பது மொறுகலாக சிவக்க, ஜவ்வரிசி, சாதம் சேர்ப்பது பஞ்சு போல் வருவதற்கு. எல்லா வகையான குருமாக்களுக்கும் இது பொருந்தும். முட்டை வட்டலாப்பம் ரொம்ப நன்றாக இருக்கும். தேங்காய் பாலும் ஊற்றி சாப்பிடலாம். தேங்காய் துருவலை சேர்த்து அரைப்பதற்கு பதிலாக, ஆப்பம் சுடும் போது ஆப்பத்திற்கு தொட்டு கொள்ள தேங்காய் பால் எடுக்கும் போது கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கூட சேர்க்கலாம்.

 

ADVERTISEMENT

பூரி ரெசிப்பி (recipes) செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 400 கிராம்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

பூரி செய்முறை: முதலில் ஒரு பவுலில் கோதுமை மாவு போட்டு அதனுடன் கடலை மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொள்ளவும். மாவு நன்றாக கட்டியாக இருக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ளவேண்டும்.

பிறகு அந்த மாவினை 15 நிமிடம் வரை ஊற வைக்கவும் . பிறகு மாவினை பூரி வடிவத்தில் திரட்டி வைத்து கொள்ளவும். மீதமுள்ள அனைத்து மாவினையும் உருட்டி தயார் செய்து கொள்ளவும். பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கி அதில் நாம் உருட்டி வைத்துள்ள பூரி மாவினை போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான பூரி தயார்.

ADVERTISEMENT

பூரி மசாலா ரெசிப்பி (recipes) செய்ய தேவையான பொருட்கள்:

அனைத்து டிபன் வகைகளுக்கும் வெவ்வேறு நிறைய தொட்டுக்கும் வகைகள் உள்ளது. ஆனால், பூரிக்கு மட்டும் எப்போதுமே பூரி மசாலா மட்டும் தான். அந்த அளவிற்கு பூரி மசால் சுவையாக இருக்கும். இந்த பதிவில் பூரி மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

பூரி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
கடலை பருப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் -2
இஞ்சி – 1/2 துண்டு
பச்சை மிளகாய் – 4
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
பச்சை பட்டாணி – தேவையான அளவு

பூரி மசாலா செய்முறை: வேகவைத்த உருளை கிழங்கினை ஒரு பவுலில் போட்டு நன்றாக நசுக்கி கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு போட்டு கடுகு பொரிந்ததும் அதில் சீரகம் போட்டு அதனுடன் கடலை பருப்பினை சேர்த்து வறுக்கவும்.

ADVERTISEMENT

பிறகு கடலை பருப்பு வறுபட்டவுடன் அதில் காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி , மஞ்சள் தூள், மற்றும் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் வெட்டிய வெங்காயத்தினை சேர்த்து நன்றாக செவரும் வரை வதக்கவும்.

பிறகு அதில் நாம் ஏற்கனவே நசுக்கிய உருளைக்கிழங்கினை கொட்டி அதனின் வேகவைத்த பட்டானி சேர்த்து நன்றாக வேகா விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் அதில் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான பூரி மசாலா தயார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளியாகின்றது. ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

28 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT