இயற்கை மருத்துவம் : வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் திரவத்தின் நன்மைகளை அறிவோம்!

இயற்கை மருத்துவம் : வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் திரவத்தின் நன்மைகளை அறிவோம்!

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நல்ல தூக்கமும் நல்ல உணவும் மிகவும் அவசியம். பசியும் தூக்கமும் இல்லாமல் இருந்தால் உடலில் நோய்கள் வரத் துவங்கி விடும். அதனால் மனமும் பாதிப்பிற்குள்ளாகிறது. எந்த நோயின் ஆரம்பமும் இப்படித்தான் இருக்கிறது. பசியை தூண்டி உணவை எளிதில் ஜீரணிக்க ஓமத்தை பயன்படுத்துங்கள்.ஓமம் சீரக வகையைச் சேர்ந்தது. இதில் பாஸ்பரஸ், கரோட்டின், லிபோக்ளோபின்,தயாமின், மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும், கால்சியம், இரும்புச்சத்து போன்ற கனிமச்சத்துக்களும் இருக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனைக்கும் இந்த ஓமத் திரவத்தை பயன்படுத்தலாம்.

இயற்கை தந்த ஒரு சிறிய பொருளில் எளிமையாக நம் வீட்டிலேயே தீர்வு காண முடியும் என்பது இதுவரை தெரியாதது நம் அலட்சியம். இனியும் அப்படி இருக்க வேண்டாமே! சரி ஓமத்தைப் பற்றி விளக்கமாகவும், அதன் அளவில்லா நன்மை/பயன்களையும் (benefits) , எப்படி சுலபமாக தயாரிப்பது, எப்படி பயன்படுத்துவது என்றும் பார்ப்போமா.

 

 

 

ஓமத் திரவத்தின் பயன்கள்

1. சுவாச பிரச்சனை

 • சளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓமத்தின் நீரை பயன்படுத்தலாம். 
 • காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு, ஓமம் (omam) ஒரு சிறந்த மருந்தாகும். ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும்.

2. கர்ப்பகாலத்தில்

Pixabay

 • கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல்கூட இந்த ஓமத் திரவம் பருகினால் நன்றாக இருக்கும். ஆனால் ஓமம் உடலில் சூட்டை அதிகரிக்கும் என்பதால், கர்ப்பிணி பெண்கள் இதை கவனமாக அடிக்கடி குடிக்காமல், வாரம் ஒரு முறை பருகினால் நல்லது. 
 • கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் இதை தாராளமாக பயன்படுத்தலாம். வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து.
 • பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஓமத் திரவம் நல்ல ஜீரண சக்தியை தரும்.ஜீரணத்திற்கு மட்டுமின்றி சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் திரவம் அருமருந்து.

3. மாதவிடாயின் போது

 • மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது.
 • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம்.

4. வயிற்று பிரச்சனை

Shutterstock

 • வயிற்றில் இருக்கும் புண் ஆறுவதற்கும் ஓமம் மிகவும் உதவியாக இருக்கும். 
 • ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். இன்னும் சிலர் பார்க்க பலசாலியாக இருந்தாலும், மாடிப்படி ஏறினாலோ, சிறிய பொருளை தூக்கினாலோ உடனே மூச்சு இறைக்கும். இவர்கள் ஓமத் திரவத்தை கருப்பட்டியோடு காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம் பெரும்.  
 • சுவை காரணமாக தேவையில்லாமல் அதிகம் உண்டு ஜீரணம் ஆகாமல் தவிப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு ஓமத் திரவம் அருமையாக வேலை செய்யும்.  பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் ஜீரணமாக ஓமக் கசாயம் மிகவும் நல்லது.மேலும், உடல் எடையை எளிதில்  குறைக்கிறது.உடலுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் குளிர்பானங்களைத் தவிர்த்து, ஓமத் திரவம் பயன்படுத்துங்கள்.
 • உமிழ்நீரைப் பெருக்கும் ஆற்றல் கொண்ட ஓமத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் அஜீரணம், வயிற்று உப்புசம், சீதபேதி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

ஓமத் திரவத்தை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது ?

முறை 1

 1. வெறும் கடாயில் கால் தேக்கரண்டி ஓமம் சேர்த்து வறுக்கவும். நன்கு பொரியும்வரை வறுக்கவும். மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும். 
 2. பின்பு அதோடு அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அரை கப் தண்ணீர் கால் கப் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க விடுங்கள். 

பெரியவர்கள் ஓமத் திரவத்தை அப்படியே அருந்தலாம், சின்ன குழந்தைகளுக்கு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து அருந்த வைக்கலாம்.

முறை 2

ஓம உப்பு கொண்டு எப்படி ஓமத் திரவம் செய்வது என்று பார்ப்போம் 

 1. எல்லா நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும் ஓம உப்பு வாங்கிக்கொள்ளுங்கள்.
 2. 1 லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் ஓம உப்பு ஒரு சிறிய துண்டு பெருங்காய கட்டியும் பயன்படுத்தினால் போதுமானது.
 3. முதலில் ஒரு லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதி வரும் வரை சூடாக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு சிறிய துண்டு பெருங்காயம் மற்றும் ஒரு கிராம் ஓம உப்பையும் நன்றாக கொதித்த தண்ணீரில் சேர்த்து மூடியால் மூடி வைத்து ஆர விடவும். ஆரிய பின் பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம்.

இதை ஆறு மாதம் ஆன குழந்தைகளில் இருந்து அனைவருக்கும் கொடுக்கலாம். ஏதேனும்  ஒவ்வாமை இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்.இப்படி ஓமத் திரவத்தை வீட்டிலேயே செய்வதால், ஆரோக்கியமான திரவமும் கிடைக்கும், எந்த பதனிடுதலும் சேர்க்காமல் செய்து பயன்பெறலாம்.

 

மேலும் படிக்க - பப்பாளி விதையின் பயன்கள் மற்றும் அதைப் பயன்படுத்தும் முறைகள்

பட ஆதாரம் - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.