தமிழகமெங்கும் பரவி இருக்கும் சீரியல் கலாச்சாரத்தில் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மிகவும் ஃபேமஸ் . ஆரம்ப காரணம் அதன் கதைக்களம் என்றாலும் அதன் பின்னர் ராஜா ராணி சீரியல் ஜோடிகளான ஆல்யா மானஸாவும் சஞ்சீவும் (alya manasa – sanjeev) சீரியஸாகவே காதலிக்க ஆரம்பித்தனர்.
அதன் பின்னர் இந்த சீரியலின் எதிர்பார்ப்புகள் அதிகமானது. இவர்களுக்கான காதல் காட்சிகள் அதிகமாக வைக்கப்பட அதற்காகவே இந்த சீரியல் சிறப்பாக ஓடியது. சீரியல் என்றால் வயதான குடும்ப பெண்மணிகளுக்கானது என்பதை மாற்றி இளைஞர் இளைஞிகளுக்கு இந்த சீரியல் விருப்பனமானதாக மாறியது.
ராஜா ராணி சீரியல் ஆல்யா மானஸா என்றாலே எப்போது திருமணம் என்கிற கேள்வி அடிக்கடி கேட்கப்பட்டபடியே இருந்தது. இதற்கு காரணம் சீரியலில் இவர்களது இயல்பான நடிப்பும் சமூக வலைத்தளங்களில் இவர்கள் செய்த அட்ரா சிட்டியும் தான்.
உங்கள் காதல் ஜென்ம ஜென்மங்களாகத் தொடரும் ஆத்ம பந்தம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது ?
Youtube
சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கெனவே தனி பக்கங்கள் உருவாக்கப்பட்டு திரைப்பட நடிகர்களின் காதல் கதைகளுக்கு இணையாக இவர்கள் காதல் கதையும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர்கள் காதல் கிசுகிசுக்களுக்கு மறுப்பு தெரிவிக்காத நிலையில் ஒரு நாள் நாங்க ரியலிலும் ஜோடிதான் என்று அறிவித்தார்கள். அதன் பின்னர் சீரியலைத் தாண்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாகவே சென்று வந்தனர். பல டிவி ஷோக்களில் காதலர்களாக தலையைக் காட்டினர்.
விஜய் டிவி விருது விழா மேடையிலேயே இந்த காதல் ஜோடிகளுக்கு மாலை மாற்றி நிச்சயம் செய்த வைபவத்தை இவர்கள் நண்பர்கள் நிகழ்த்தினார்கள். அடுத்தது இவர்கள் திருமணம்தான் என்று எதிர்பார்த்த நிலையில் ராஜா ராணி சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதைதொடர்ந்து அடுத்த சீரியலிலும் இவர்கள் ஒன்றாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது இணையம் எங்கும் ஆல்யா மானஸா சஞ்சீவ் ஜோடியின் ரகசியத் திருமணம் என்கிற விஷயம்தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சக டிவி நடிகர் மிர்ச்சி செந்தில் இவர்களின் திருமணம் நடந்து விட்டதாக ஒரு பதிவைப் போட இணையம் முழுக்க வைரல் ஆனது.
கர்மா இஸ் எ பூமராங்.. சாக்ஷியை கதற வைத்த கவின் .. கவினால் அவமானப்பட்டு கலங்கிய சாண்டி ..
Youtube
அதன் பின்னர் நேற்று சஞ்சீவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆமாம் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என அறிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து முன்னணி நாளிதழுக்கு பேட்டி அளித்தது சஞ்சீவ் ஜோடி.
அவர்களது திடீர் திருமணம் பற்றி குறிப்பிடும்போது ” ஆல்யா வீட்டுல பேசிப் பார்த்தோம் ஆல்யாவும் அவங்ககிட்ட சம்மதம் வாங்க எவ்வளவோ ட்ரை பண்ணினாங்க. அவங்க வீட்ல எங்க காதலை ஒத்துக்கலை. ஆல்யாவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க.
அதனாலதான் நாங்க உடனடியா ரகசியமா திருமணம் பண்ணிக்க வேண்டி வந்தது. மே மாசம் 27ம் தேதி ஆல்யா பிறந்த நாள் அன்னிக்கு ஈ சி ஆர் ல இருக்கற ஒரு கோயில் ல நெருக்கமான நண்பர்கள் முன்னிலைல எங்கள் திருமணம் நடந்தது.
அதுக்கப்புறம் ஜூலை வரைக்கும் ராஜா ராணி ஷூட்டிங் இருந்ததால இதனை நாங்க ரகசியமா வச்சுருக்க வேண்டியதா போச்சு. அதை முடிச்சுட்டுதான் எங்க வீட்ல நடந்ததை சொன்னோம். எங்க வீட்ல இருந்து ஆல்யா வீட்டுல பொண்ணு கேட்க போனாங்க.
வாழ்வில் நான் எடுத்த தவறான முடிவு என் திருமணம்.. இந்த வாழ்க்கை மிக அழகாக இருக்கிறது-ரேவதி
Youtube
அப்பவும் ஆல்யா வீட்டுல சம்மதிக்கலை. அதுக்கப்புறம் எங்க வீட்டு பெரியவங்க முன்னாடி முறைப்படி ஆகஸ்ட் 28ம் தேதி திருமணம் செய்தோம். இப்போ ஆல்யா எங்க வீட்லதான் இருக்கா. ஆல்யா அப்பா மற்றும் தங்கச்சி ரெண்டு பேரும் அவங்ககிட்ட பேசிகிட்டு இருக்காங்க. அவங்க அம்மாதான் இன்னும் கோபமா இருக்காங்க.
இந்த மாதிரியான நிலமைல எங்க கல்யாணத்த பத்தி எப்படி வெளிய சொல்றதுன்னு நாங்க சொல்லாம இருந்தோம். ரிஸப்ஷனுக்காக அழைக்க மிர்ச்சி செந்தில் அண்ணாகிட்ட சொன்னேன் அவர் சோஷியல் மீடியாவுல பதிவா போட்டுட்டார்.
இதுக்கப்புறமும் நாங்க பேசாம இருந்தா நல்லாருக்காதுனு நானும் என் இன்ஸ்ட்டா பக்கத்துல இதை வெளிப்படையாக சொன்னேன். எங்களுடைய ரசிகர்கள் எங்களை மன்னிக்கணும். சூழல் சரியில்லை அதனால உடனே சொல்ல முடியலை என்று கூறியிருக்கிறார் சின்னய்யா என்கிற சஞ்சீவ்.
இதனால் இவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் விஜய் டிவியில் அடுத்த சீரியலுக்கு கமிட் ஆகி இருப்பதாகவும் இருவரும் வெவ்வேறு சீரியலில் தனித்தனியாக நடிக்க இருப்பதாகவும் சஞ்சீவ் கூடுதல் தகவலைக் கூறி இருக்கிறார்.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் திருமணம் மூலம் இணைந்திருக்கும் ஆல்யா மானஸா – சஞ்சீவ் ஜோடிக்கு எங்கள் வாழ்த்துக்கள் !
அனைவர் முன்னிலையில் கவினை பளார் விட்ட நபர் யார்? குடும்பத்தின் நிலை என்ன?
Youtube