விஹான் இனி தனி ஆள் இல்லை ! ஸ்னேஹாவிற்கும் ப்ரசன்னாவிற்கும் பிறக்க போகுது அடுத்த குழந்தை!

விஹான் இனி தனி ஆள் இல்லை !  ஸ்னேஹாவிற்கும் ப்ரசன்னாவிற்கும் பிறக்க போகுது அடுத்த குழந்தை!

மிக நீண்ட நாள்கள் காதல் செய்த பின்னர் மணமுடித்த தம்பதிகள் ஸ்னேஹா மற்றும் பிரசன்னா. இருவருமே அமைதிக்கு பெயர் போனவர்கள். ஸ்னேஹா பங்கேற்ற அத்தனை மாடலிங் நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் தவறாமல் கலந்து கொண்டு ஊக்குவித்தவர் பிரசன்னா.

2012ம் வருடம் இவர்களின் காதல் திருமணம் என்கிற அடுத்த கட்டத்திற்குள் நுழைந்தது. எப்போது கல்யாணம் எப்போது கல்யாணம் என்று அனைவரும் கேட்டுக் கொண்டிருந்த திருமணம் என்பதால் இவர்கள் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

பிரபல டிவி நிகழ்ச்சியில் இவர்களின் திருமணம் ஒரு தொடர் போல காண்பிக்கப்பட்டது. அதனால் இவர்களின் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆனார்கள்.

"தாய்மை தான் எனக்கு எல்லாம்" - மகனோடு மகிழ்ந்திருக்கும் ஸ்னேகா!

Youtube

2015ம் வருடம் ஸ்னேஹா - பிரசன்னா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. விஹான் என்கிற அந்தக் குழந்தை ஸ்னேஹாவின் அழகியும் பிரசன்னாவின் அழகையும் ஒன்றாக இணைத்து பிறந்தது போல அத்தனை அழகு!

அதன் பின்னர் இருவருமே அதிக திரைப்படங்களில் நடிப்பதை பார்க்க முடியவில்லை. தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே பிரசன்னா ஜோடி நடித்து வருகிறது. தனுஷ் உடன் ஸ்னேஹா இணைய இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஸ்னேஹா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்று பெண்கள் நாளிதழ் ஒன்று கூறியிருக்கிறது. தங்களுடைய இரண்டாவது குழந்தையை வரவேற்க ஸ்னேஹா - பிரசன்னா தம்பதிகள் காத்திருப்பதாக அந்த நாளிதழில் குறிப்பிடபட்டிருக்கிறது.

அவருடைய பிரசவ தேதி பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. முன்னதாக விஹான் பிரசவம் நடந்து முடிந்த சமயத்தில் ஸ்னேஹா பேட்டி கொடுத்திருந்தார். தாய்மைதான் எனக்கு எல்லாம் என்று அதில் அவர் கூறியிருந்தார்.

"ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும்".. காதலில் இருக்கிறாரா அக்ஷரா ஹாசன் ?

Youtube

தான் தாய்மை அடைந்த நிமிடங்கள் பற்றி ஸ்னேஹா பேசுகையில் அது பற்றி அதிகம் எதுவும் தெரியாவிட்டாலும் ஒரு மிகப் பெரிய பொறுப்புக்குத் தன்னை தயார் செய்து கொண்டதாக அவர் கூறியது அற்புதமாக இருந்தது. பிரசவ நேரங்களும் அதன் பின்னர் வீட்டிற்கு குழந்தையோடு வந்ததும் சர்ரியலாக இருந்தது என்று கூறிய ஸ்னேஹா அதன் பின்னர் தனது கைகளில் ஒரு உயிர் தவழ்வதை சந்தோஷமாக பார்த்தார் என்று கூறியிருந்தார்.

மேலும் இன்னொரு முறை இது போன்ற தாய்மை அடையும் வாய்ப்பு கிடைத்தால் அதனை முன்பை விட சிறப்பாக நடத்த முயற்சிப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த முறை பயமில்லாமல் ரிலாக்ஸாக அந்த தருணங்களை கொஞ்சம் கொஞ்சமாக அவர் ரசிக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.

ஸ்னேஹா மற்றும் பிரசன்னா ஆகிய இருவருமே விஹானுக்கு நல்ல பெற்றோராக (parent)  இருப்பது எப்படி என்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களின் சொந்த வாழ்க்கையின் முக்கிய தருணங்களை அவர்கள் சந்தோஷமாக அனுபவித்து வருகின்றனர்.

அதற்கேற்ப அவர் இரண்டாம் முறை தாய்மை அடைந்திருக்கிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்திருக்கிறது. ஆம் இனி விஹான் தனி ஆள் இல்லை.. அவரோடு விளையாட சண்டையிட சந்தோஷப்பட இன்னொரு சகோதர உறவு வரப்போகிறது!

எதற்கடி வலி தந்தாய்..துருவ்வின் மென்குரலில் 50 லட்சம் வியூக்களை கடந்து சாதனை படைத்த பாடல்!

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                               

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.