"தாய்மை தான் எனக்கு எல்லாம்" - மகனோடு மகிழ்ந்திருக்கும் ஸ்னேகா!

"தாய்மை தான் எனக்கு எல்லாம்" - மகனோடு மகிழ்ந்திருக்கும் ஸ்னேகா!

இப்போதுதான் விரும்புகிறேனில் சிறிய பெண்ணாக ஸ்னேகாவை பார்த்த மாதிரி இருக்கிறது. அதற்குள் அவருக்கு திருமணமாகி மகன் விஹானிற்கு 3 வயது என்றால் கொஞ்சம் நம்பத்தான் முடியவில்லை. ஆனாலும் அதுதான் உண்மை.


பிரசன்னாவை காதலித்து மணந்த ஸ்னேகாவிற்கு (sneha) கொஞ்சம் குட்டி பிரசன்னா போலவே சாயல் இருக்கும் விஹான் மீது மேலும் அதிக பிரியத்தை ஏற்படுத்தும் என்பது போல இவர்கள் இருவரும் எங்கு போனாலும் இணைந்துதான் காணப்படுகிறார்கள்.ஸ்னேகா


நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் ஸ்னேகாவின் திறமைக்கான திரைப்படங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. தமிழில் அதிகம் தென்படாவிட்டாலும் மலையாளம் கன்னடம் தெலுங்கு படங்களில் அதிகம் நடிக்கிறார்.


சமீபத்தில்தான் புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு தனுஷ் உடன் இவர் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை பிஸியான நடிப்பிற்கு இடையிலும் தன் மகனுடன் நேரம் செலவழிப்பதை மிக முக்கியமான விஷயமாக பார்க்கிறார்.


நம்ம தீபிகா படுகோனா இது? அதிர்ச்சியில் பாலிவுட் !எங்கு சென்றாலும் ஸ்னேகா விஹான் மற்றும் பிரசன்னா ஆகிய மூவரும் ஒன்றாகவே காணப்படுகின்றனர். ஆகவே எல்லா புகைப்படங்களில் விஹான் இருக்கிறார்.


வேலையையும் குடும்பத்தையும் எப்படி சமன் செய்கிறீர்கள் என்கிற கேள்விக்கு நானும் ப்ரசன்னாவும் மாற்றி மாற்றி அவனுடன் நேரம் செலவழித்து பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்.


ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம்? வெளியான புகைப்படங்கள்


தாய்மை


தான் தாய்மை அடைந்த நிமிடங்கள் பற்றி பேசுகையில் அது பற்றி அதிகம் எதுவும் தெரியாவிட்டாலும் ஒரு மிகப் பெரிய பொறுப்புக்குத் தன்னை தயார் செய்து கொண்டதாக அவர் கூறியது அற்புதமாக இருந்தது. பிரசவ நேரங்களும் அதன் பின்னர் வீட்டிற்கு குழந்தையோடு வந்ததும் சர்ரியலாக இருந்தது என்று கூறிய ஸ்னேகா அதன் பின்னர் தனது கைகளில் ஒரு உயிர் தவழ்வதை சந்தோஷமாக பார்த்தார் என்கிறார். அவனோடு தூங்குவது அவனுக்கு உணவு ஊட்டுவது அவனை எழுப்புவது போன்ற எல்லாமே ஸ்னேகவிற்கு விஹான் மீதான அன்பை வலுப்படுத்தியது.


அதோடு மட்டுமல்லாமல் ப்ரஸன்னா எனும் தனது மூத்த குழந்தையையும் தான் பத்திரமாக பார்த்துக் கொண்டதாக ஸ்னேகா கூறியது அழகாயிருந்தது. ஆனால் குடும்பத்தில் தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவராகவும் ப்ரஸன்னா எப்போதும் கூல் டாட் எனவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல குழந்தை விகானுக்கு வெளி உணவுகள் என்பதை இவர்கள் இதுவரை கொடுத்ததில்லையாம்.வீட்டு உணவு


இப்போதெல்லாம் பள்ளிக்கு ஸ்விக்கியில் ஆர்டர் செய்யும் அம்மாக்கள் மத்தியில் இப்படி ஒரு செய்தியைக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இதில் சில சமயம் ப்ரஸன்னாவும் சமைப்பார் என்பது கூடுதல் செய்தி. கான்டினென்டல் வகைகளில் செஃப் ப்ரஸன்னாவின் கைகள் மாயம் செய்யும் என்கிறார் ஸ்னேகா.


இப்போது மூன்று வயதாகும் விஹான் டிவியில் அம்மா அப்பாவின் திரைப்படங்கள் வந்தால் அம்மா அம்மா என்று கூறுவானாம். ஸ்னேகா அருகில் இருந்தால் அவரது முகத்தை தொட்டு டிவியில் உள்ள முகத்தையும் தொடுவான் என்கிறார் ஸ்னேகா.மேலும் வெளியில் செல்கையில் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க விரும்புகையில் விகானையும் இணைத்துக் கொள்கிறார்கள் எனும் ஸ்னேகா, ஆரம்பத்தில் அது தனக்கு சங்கடமாக இருந்தாலும் இப்போது பழகி விட்டது என்கிறார். அதை விடவும் விஹானுக்கு தாங்கள் யார் என்பது புரிவதால் யாரேனும் புகைப்படம் எடுக்க கேட்டால் உடனே தயார் ஆகிறான் என்கிறார் ஸ்னேகா.


குழந்தைகள் எப்போதும் அற்புதமானவர்கள்தான். அவர்கள் அருகில் உள்ளவர்கள் வாழ்வை மட்டுமல்ல அவர்களை வெளியில் இருந்து வேடிக்கை பார்ப்பவர் வாழ்க்கையையும் அவர்கள் தங்கள் மழலையால் அலங்கரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த வகையில் விஹானின் இந்த படங்கள் நம் இதயத்தை மலர வைப்பதில் ஆச்சர்யம் இல்லை.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.