தனிமையான பெண்களைக் குறிவைக்கும் காமுகர்கள்-ரேவதியின் வேதனைக் கதை..என்று தீரும் இந்த சோகம்?

தனிமையான பெண்களைக் குறிவைக்கும் காமுகர்கள்-ரேவதியின் வேதனைக் கதை..என்று தீரும் இந்த சோகம்?

தனியாக இருக்கும் பெண்களை அதுவும் கணவர் இல்லாமல் விவாகரத்தான பெண்கள் அல்லது கணவர் குடும்பம் ஆகியவற்றுடன் தொடர்பில் இல்லாமல் இருக்கும் பெண்களைத் தான் மோசடி பேர்வழிகள் குறி வைக்கிறார்கள் என்பது மீண்டும் ஒரு சம்பவத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி கணவரிடம் விவாகரத்து பெற்றவர். பெற்றோருடன் பிரச்னை அதன் பின்னர் நடந்த திருமண வாழ்வின் துயரங்கள் ரேவதியை மிகப்பெரிய இருளில் இருக்க வைத்திருந்தது. அந்த நேரத்தில் கல்லூரி நண்பன் ஜிதின்ஷா என்பவன் ரேவதியின் வாழ்வில் நுழைகிறான்.

15 வருடம் கழித்து இன்ஸ்டாக்ராம் மூலமாக நட்பில் இணைந்த ரேவதி ஜிதின்ஷாவிடம் தனது துயரங்களை பகிர்ந்திருக்கிறார். ஜிதின்ஷா யாரோ ஒரு முகம் தெரியாத முகநூல் நண்பன் அல்ல. உடன் படித்த கல்லூரி நண்பன். ஆகவே நம்பி பழகி தனது துயரங்களைப் பகிர்ந்திருக்கிறார் ரேவதி.

அவரை இன்னொரு பெண்ணிடம் விட்டுக்கொடுக்க கஷ்டமாக இருந்தது - திருமதி. சூர்யா சரவணன்!

கொஞ்சம் கொஞ்சமாக ரேவதியின் நம்பிக்கையைப் பெற்ற ஜிதின்ஷா தனது அடுத்த கட்ட நடவடிக்கையான என்னைத் திருமணம் செய்து கொள்ள உனக்கு சம்மதமா என்று கேட்டிருக்கிறான். யாருமற்றவர்களிடம் வலை வீசும் ஆண்களின் அத்யாவசியக் கேள்வி இதுதான் இல்லையா? திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாய் வார்த்தையாகக் கூறி விட்டாலே பெண்களுக்கு பெரும் நம்பிக்கை வந்து விடுகிறது.

அது எந்தளவிற்கு உண்மையாக மாறும் .. சொன்னதை எல்லாம் செய்பவனைத்தான் நாம் நேசிக்கிறோமா என்கிற யோசனை எந்தப் பெண்ணுக்கும் வருவதில்லை. அந்த யோசனையை தனது அருகாமையாலும் முத்தங்களாலும் வரவிடாமல் பார்த்துக் கொள்வதில் வல்லவர்கள் இந்தக் குறிப்பிட்ட ஆண்கள்.

இந்தப் பெயரை சொல்லி ஒரு தனிமைப் பெண்ணின் வாழ்வில் நுழைகின்ற ஆண்களில் பெரும்பான்மை சதவிகிதம் பேர் இறுதி வரை அதில் உறுதியாக இருப்பதில்லை.

தற்போது காதலில் இருக்கும் சமயத்தில் கூட தான் பலருடன் பழகினாலும் தவறில்லை ஆனால் திருமணம் செய்ய வேண்டும் என்று வரும்போது பெண் என்பவளின் கடந்த காலம் கறுப்பாக இருந்து விடக் கூடாது என்பதில் சில ஆண்கள் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் உதட்டளவில் கூறும் வார்த்தைகளை உண்மையென நம்பி ஏமாந்த எத்தனையோ கோடி பெண்களின் கண்ணீர்த்துளிகளின் மிச்சம்தான் கடலாக மாறி இருக்கக் கூடும்.

"காணாமல் போன கணவரை டிக்டாக்கில் கண்டு பிடித்த மனைவி..
காவல்துறையின் அடுத்த நடவடிக்கை !"

தன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்கிற ஜிதின்ஷாவின் கேள்விக்கு முதலில் மறுத்தாலும் பின்னர் சம்மதித்திருக்கிறார் ரேவதி. இப்படி முடிவெடுத்த உடன் இருவர் இடையே உள்ள இடைவெளிகள் குறையத் தொடங்குகின்றன. அதுதானே அவளை ஏமாற்றிக் கொண்டிருக்கிற ஆணின் முக்கியத் தேவை? அதன் பின்னர் தனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்திருப்பதாகவும் ஏஜென்டிற்கு 10 லட்சம் விசாவிற்கு 2 லட்சம் வேண்டும் என்று ரேவதியிடம் கேட்டிருக்கிறான்.

திருமணம் செய்வதாக சொன்ன ஜிதின்ஷா திடீரென அமெரிக்கா செல்வதாக சொன்னதும் பயந்திருக்கிறார் ரேவதி. அதன் பின்னர் இருவர் நல்வாழ்க்கைக்காக தான் செல்வதாகவும் பின்னர் ரேவதியையும் உடன் அழைத்துக் கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறவே ரேவதி சம்மதித்து 7 லட்சம் வரைக்கும் கொடுத்திருக்கிறார்.

எந்த அமெரிக்காவிற்கு தான் ஜிதின்ஷா உடன் வாழப் போகிறோம் என்கிற சந்தோஷத்தால் ரேவதி இருந்தாரோ அதே அமெரிக்காவில் இருந்து ஜிதின்ஷா ஒரு ஏமாற்றுக்காரர் என்பது தெரிய வந்திருக்கிறது. ஜிதின்ஷாவின் மனைவி சின்னு ஜோசப் அமெரிக்காவில் இருந்து முகநூலில் ரேவதியைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அவரையும் ஜிதின்ஷா ஏமாற்றியதாகவும் இதனைப் போல பல பெண்களை ஜிதின்ஷா தொடர்ந்து ஏமாற்றுவதாகவும் (cheating) கூறி இருக்கிறார்.

தான் நம்பி நேசித்த ஒருவனே தன்னை ஏமாற்றியதை உணர்ந்த ரேவதி மனம் உடைந்தார். ஜிதின்ஷா விடமே இதனைப் பற்றி போனில் கேட்டிருக்கிறார். இதனால் உஷார் ஆன ஜிதின்ஷா நேரில் வருவதாகக் கூறி ஏமாற்றி விட்டு துபாய் செல்ல திட்டமிட்டிருக்கிறான்.

உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார் ரேவதி. போலீசார் நாட்டை விட்டு ஓட நினைத்த ஜிதின்ஷாவை வழியிலேயே மடக்கி பிடித்து செமத்தியாக கொடுத்து இப்போது சிறையில் அடைந்திருக்கின்றனர். விசாரணையில் ஜிதின்ஷா 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பெற்றது தெரிய வந்துள்ளது.

உடன் பழகுபவர் உங்கள் நண்பனாகவே இருந்தாலும் தனிமையில் இருக்கும் பெண்கள் சில பாதுகாப்பு உணர்வுகளோடு வாழ்வதும் உங்கள் நட்பை உலகிற்கு வெளிப்படையாகக் காட்டுவதும் இந்த மாதிரி மோசடிப் பேர்வழிகள் உங்கள் வாழ்விலும் ஊடுருவ விடாமல் உங்களைப் பல்வேறு மன உளைச்சல்களில் இருந்து காப்பாற்றும்.

தூரத்தில் நீ வந்தாலே.. என் மனசில் மழையடிக்கும்.. உங்கள் க்ரஷ்'சை ஈர்க்க சில வழிமுறைகள் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.