காணாமல் போன கணவரை டிக்டாக்கில் கண்டு பிடித்த மனைவி.. காவல்துறையின் அடுத்த நடவடிக்கை !

காணாமல் போன கணவரை டிக்டாக்கில் கண்டு பிடித்த மனைவி.. காவல்துறையின் அடுத்த நடவடிக்கை !

விழுப்புரம் வழுரெட்டி எனும் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரதா. இவருக்கு 2013ம் வருடம் சுரேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. சுரேஷ் கிருஷ்ணகிரி பூந்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றன.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு திடீரென மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு சுரேஷ் எங்கோ மாயமானார், இரண்டு பெண்குழந்தைகளை வைத்துக் கொண்டு ஜெயப்பிரதா தனது கணவனை தேடி அலைந்தார்.                   

இறுதியாக சோர்ந்த அவர் விழுப்புரம் காவல்நிலையத்தில் இதனைப் பற்றிய புகார் ஒன்றை அளித்தார். காவல்துறையினர் 3 வருடங்களாக தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை எனத் தெரிய வருகிறது.               

youtube

இதற்கிடையில் பிரபலமான டிக்டாக் (tiktok)ஆப் மூலமாக சுரேஷ் ஒரு திருநங்கையுடன் ஆடிப்பாடி கூத்தடிப்பதை ஜெயப்ரதாவின் உறவினர் யதேச்சையாக பார்த்திருக்கின்றனர். இதனை உடனடியாக ஜெயப்ரதாவிடமும் மற்ற உறவினர்களிடமும் காண்பித்திருக்கிறார்கள்.

அதன் பின்னர் அந்த வீடியோவில் இருப்பது சுரேஷ் தான் என்பதை உறுதி செய்த ஜெயப்பிரதா காவல்துறையினரிடம் இந்த தகவலை பகிர்ந்தார். விழுப்புரம் காவல்துறையினர் சுரேஷ் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதர்காக முதலில் திருநங்கை அமைப்பில் இருந்து விசாரணையைத் தொடங்கினர்.                                          

அவர்கள் உதவி செய்யவே ஓசூரில் இருக்கும் திருநங்கையை கண்டுபிடித்தனர். காவல்துறையினர் ஓசூருக்கு சென்று சுரேஷை கைது செய்தனர். அப்போதுதான் அவர் அந்த திருநங்கையுடன் 3 வருடங்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது.                              

youtube

சுரேஷ் வீட்டை விட்டு ஓடி வந்த பிறகு ஓசூரில் வேலை பார்த்ததாகவும் அப்போது சந்தித்த அந்த திருநங்கை மீது மனதை பறி கொடுத்ததால் அவரையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். 

அங்கிருந்து சுரேஷை அழைத்து வந்து ஜெயப்ரதாவிடம் ஒப்படைத்தனர். 3 வருடங்களாக வீட்டை விட்டு காணாமல் போன கணவனை திருநங்கையோடு டிக்டாக்கில் பார்த்த அதிர்ச்சியில் இருந்த ஜெயப்பிரதா இனி என்ன முடிவு செய்வார் என்பது தெரியவில்லை. கவுன்செலிங் நடக்கிறது.                                  

மனைவி குழந்தைகளை மறந்து விட்டு திருநங்கையுடன் உல்லாசமாக இருந்த சுரேஷ் டிக்டாக் (tiktok) மூலம் கையும் களவுமாக பிடிபட்டது இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.                       

youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.