காதலர்களுக்கு இடையேயான சண்டையும் நன்மைக்கே : ஆய்வுகளில் நிரூபணம்!

காதலர்களுக்கு இடையேயான சண்டையும் நன்மைக்கே : ஆய்வுகளில் நிரூபணம்!

காதலர்கள் (relationship) இடையே சண்டை நடப்பது இயற்கையே. சாதாரணமாக ஆரம்பிக்கும் சண்டையானது மிகப் பெரிய பிரச்சனைகளை வழிவகுக்கும். சிலர் சண்டை போட்டுக்கொண்டாலும் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகிவிடுவார்கள். சிலர் வாரக்கணக்கில், மாசக்கணக்கில் கூட பேசாமல் இருப்பார்கள். அது காதலர்களுக்கு இடையேயான புரிதலை அடிப்படையாக கொண்டது. சண்டை போடுவதும், வாக்குவாதம் செய்வதும் காதலை நிச்சயமாக வளர்க்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். இது உண்மை என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டையும் நன்மையே!

 • பிரச்சனைகளை உடனுக்குடன் விவாதித்து சண்டை போட்டு முடிப்பவர்கள் மற்றவர்களைவிட 10 மடங்கு அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம். 
 • பிரச்சனைகளை அப்படியே விட்டுவிட்டு பேசாமல் இருப்பது தான் காதலர்கள் செய்யும் பெரிய தவறு. அப்போதைக்கு சண்டை வேண்டாம் எனத் தள்ளிப்போடுவது பிரச்சனையின் வீரியத்தை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. 
 • காதலில் ஒவ்வொரு சூழலிலும் நமது உணர்வுகளின் மாறுபாடுதல்களை நாம் புரிந்துகொள்ளாமல் நமது துணை மீது பழிபோடுவது தான் காதலில் செய்யும் மிகப்பெரும் தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 • பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளை மட்டுமின்றி சில பழக்கவழக்கங்களும் ஜோடிகளுக்குள் சச்சரவுகளைக் கொண்டு வருமாம். உதாரணமாக ஈரத்துண்டுகளைப் பயன்படுத்திய பின்னர் படுக்கையில் போடுவது பலரது வீட்டிலும் சண்டையைத் தூண்டியுள்ளதாம். 
 • காதல் உணர்வு குறைவாக உள்ளவர்களிடம், மனஅழுத்த உணர்வு அதிகமாக இருக்கும். அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள், தங்கள் மீதே காதல் இல்லாதவர்களாகவும், மற்றவர்கள் மீது பாசம் காட்ட தயங்குபவர்களாகவும் இருப்பார்கள். அவர்களிடம் சுயநலம் அதிகமாக இருக்கும். அவர்கள் காதலிக்கப்படாததற்கு அதுவே காரணமாக இருக்கிறதாம்.

Also Read About ஒன்றாக உறவு

சண்டையும் நன்மையே!

 • எனினும் இதனால் கோபத்தால் ஏற்படும் சிறு சண்டைகளால் ப்ரேக்அப் எனப்படும் நிரந்தர பிரிவுகள் கூட ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மாதிரியான சூழ்நிலையைத் தவிர்க்க இருவரும் சிறிது நாட்கள் பிரிந்து இருப்பது காதல் வாழ்க்கையை வளமாக வைத்துக் கொள்ளும். 
 •  ஏனெனில் பிரிந்து இருக்கும் போது தான் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக தவறு யார் செய்தார்களோ, அதை பிரிந்திருக்கும் காலத்தில் உணர முடியும். * 
 • மேலும் இந்த பிரிவு காலங்களில் இருவருக்கும் இடையில் காதலானது அதிகம் பெருக்கெடுக்கும். ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருக்கும். இதனால் கோபம், சண்டைகள் அனைத்தும் நீங்கி இருவரும் அமைதியான காதல் வாழ்க்கையை வாழலாம்.
 • காதல் நீண்ட கால உறவுக்கு வழிவகுக்கும். அதனால், மனம்விட்டு அனைத்தையும் பேசிவிடுவது காதலுக்கு நல்லது என்றே கூறப்படுகிறது.
pixabay

காதல் சிறப்பாக அமைய கவனிக்கப்பட வேண்டியவைகள் :

 • காதலிக்க (relationship) விரும்புகிறவர்கள் இனக்கவர்ச்சிக்கும், காதலுக்கும் உள்ள வேறுபாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அறியுங்கள். உடல் ரீதியான ஒரு ஈர்ப்பே இனக்கவர்ச்சி. ஆனால் உள்ளத்தில் தூண்டுதலை ஏற்படுத்தாது. நிஜகாதல் என்பது இனக்கவர்ச்சியைக் கடந்தது எதிர்பாலினத்தவருடன் ஏற்படும் ஈர்ப்புதான். இது காதலுக்கு அடிப்படை என்றாலும் அந்த ஈர்ப்பானது பல பரிமாணங்களை கடந்துதான் காதலை பெற முடியும். 
 • ஒருவரை நீங்கள் காதலிக்கத் தொடங்கினால், அவரை காதலிப்பதற்கு என்ன காரணம் என்பதை உங்களுக்குள்ளே ஆராயவேண்டும். அவரிடம் உங்களை ஈர்த்த விஷயம் என்ன என்பது தெள்ளத் தெளிவாக உணரப்படவேண்டும்
 • உங்கள் காதலி/ காதலருடன் நெருக்கமான உறவு வைத்துக் கொள்ள நீங்கள் விரும்பும் அளவிற்கு அவரை புரிந்துகொள்ளவும் நீங்கள் முயற்சி செய்யவேண்டும். அவரை நன்றாக புரிந்துகொள்ளும் போதுதான் அவர் உங்களுக்கு இன்னும் நெருக்கமான, அன்பான உறவாக ஆகிறார். நீங்கள் அவரை நன்றாக புரிந்து வைத்திருந்தால், நீங்கள் அந்த நெருக்கத்தின் இன்பத்தை உணர்வீர்கள்.

உங்கள் ஈர்ப்புடன் எவ்வாறு பேசுவது என்பதையும் படியுங்கள்

காதல் சிறப்பாக அமைய கவனிக்கப்பட வேண்டியவைகள் :

 • ஒவ்வொருவரிலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். இதை புரிந்துகொண்டு அரவணைத்தால் அந்த உறவை உங்களுக்கு வேண்டியது போல் நீங்கள் உருவாக்கி கொள்ளலாம்.  உங்கள் துணைவருக்கு உங்களை நன்றாக புரிந்துகொள்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்க முயற்சி செய்யலாமே!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.