அபியிடம் ரகசியத்தை உடைத்த முகென்..லாஸ்லியா ஊமை குசும்பு, தர்ஷன் பச்சோந்தி : மீரா விளக்கம்

அபியிடம் ரகசியத்தை உடைத்த முகென்..லாஸ்லியா ஊமை குசும்பு, தர்ஷன் பச்சோந்தி : மீரா விளக்கம்

பிக்பாஸ் வீட்டில் நேற்று மொட்ட கடிதாசி டாஸ்க்கை பிக் பாஸ் (bigg boss) கொடுத்தார். அதன் படி போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களிடம் என்ன கேள்வி கேட்கிறீர்களோ அதை இந்த கடிதத்தில் எழுத வேண்டும் ஆனால் அவர்கள் பெயர் எழுத வேண்டாம் என கூறப்பட்டிருந்தது. அந்த டாஸ்கின்படி போட்டியாளர்கள் அனைவரும் மொட்ட கடிதம் எழுதி பலருக்கும் கேள்வியை வைத்தனர். இதில் மீண்டும் கவின் சாக்ஷி பிரச்சனை எழுந்தது. அதற்கு கவின் விளக்கம் கொடுத்தார். அப்போது நான் விளையாட்டாக செய்த விஷயங்கள் இவ்வளவு பெரிய பிரச்சனையாக எழுந்தது என்றும், தன் மீதான தவறுகளையும் கூறினார். 

கவின் - சாக்ஷி காதல் முறிவு, அபிராமியை எச்சரித்த முகென்... பிக் பாஸ் சுவாரஸ்யங்கள்!

சாக்ஷி என்னை மன்னிப்பதாக கூறிவிட்டு ஓபன் நாமினேஷனில் என்னை நாமினேஷன் செய்யும் போது வருத்தப்பட்டதாக கூறினார். அதற்கு பதில் அளித்த சாக்ஷி ஆரம்பத்தில் நடந்ததில் இருந்து சொல்ல ஆரம்பித்தார். அப்போது அவருக்குள் காதல் வலி. கமல் சார் வந்து பிரச்சனை தீர்த்து வைத்த பிறகு,கொஞ்சம் டைம் குடு நான் வெளியில வரணும்னு சொல்லி இருந்தேன். ஆனா நீ இன்னொரு பெண் கூட கை கோர்த்துக்கிட்டு சுத்திகிட்டு இருக்கே. இரவு 3 மணி 4 மணி வரைக்கும்பேசிகிட்டு இருக்கே. 

யார் கவினின் காதலி.. லாஸ்லியாவா சாக்ஷியா..? லாஸ்லியாவின் கேள்வியால் தடுமாறும் கவின்..!

அப்புறம் என் உணர்வுகளுக்கு என்ன மதிப்பு குடுக்கறே, உன்னால இது எப்படி உடனடியா முடிஞ்சுதுன்னு கேட்டார். இதற்கு நான் பதில் சொல்லறேன்னு வந்த லாஸ்லியா, ஆமாம் நான் கவின் கையைப் பிடிச்சுக்கிட்டுத்தான் சுத்தினேன். எனக்கு என்னோட லிமிட் தெரியும். நான் முகென் கூட எப்படி பழக்கறேன், தர்ஷன் கூட எப்படி பழக்கறேன்னு புரிஞ்சுதான் பழகறேன். எங்க இருவருக்குள் இருப்பது நட்புதான். கவினை எனக்கு அப்பவும் பிடிக்கும் இப்பவும் பிடிக்கும், எப்பவும் பிடிக்கும். எனக்கு இதுக்கு தனியா வந்து யார்கிட்டயும் விளக்கம் குடுக்கணும்னு அவசியம் இல்லை. 

அதுக்கான தேவையும் இல்லை.இதனால் என்னை பத்தி யார் என்ன நினைச்சாலும் கவலையும் இல்லைன்னு சொல்லிட்டு போனார். மேலும் எனக்கு பின்னே கதைக்கறவங்க பத்தி எனக்கு கவலை இல்லை. யாரைப் பத்தியாவது பின்னே போயி கதைக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.அதற்கான தேவையும் இல்லைன்னு கோவமாக பேசிவிட்டு சென்றார். மேலும் முகேனுக்கு மதுமிதா எழுப்பிய கேள்வியில், உங்களுக்கு வெளியில் காதலி இருந்தும் அபிராமியுடன் பழகுவது ஏன் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அதற்கு பதிலளித்த முகென், நான் பாசத்திற்கு ஏங்கும் பையன். 

அந்த வகையில் சாண்டியை எனக்கு பிடிக்கும். அதேபோல அபிராமி என்னிடம் அன்பு காட்டுகிறார். அவருடைய அன்பை எந்த கட்டத்திலும் நாம் கொச்சை படுத்தவில்லை. எனக்கு உன்ன பிடிக்கும் என அபிராமி என்னிடம் கூறிய தைரியம் எனக்கும் மிகவும் பிடித்தது. அபிராமியுடனான நட்பை நான் காலம் முழுவதும் தொடருவதையே விரும்புகிறேன். அதை அவரிடமும் கூறிவிட்டேன் என தெளிவாக அவரது நட்பை விளக்கி விட்டார். அதன் பின் ரேஷ்மா மற்றும் அபிராமி இது குறித்து பேசிக் கொண்டிருந்த போது, முகென் என்னிடம் சிங்கிளாக இருந்தால் உன்னை காதலித்திருப்பேன் என்று கூறினான்.

அதன் பின் நான் நல்ல தோழியாக இருப்பேன் என்று கூறினேன். அதுமட்டுமின்றி அவன் தன்னுடைய 19 வயது வரை எந்த ஒரு இதையும் அனுபவிக்கவில்லை என்று கூறினான் ஒரு தந்தை இல்லாமல் வளர்வது மிகப் பெரிய விஷயமல்ல. அவன் பல கஷ்டங்களை தன்னுடைய சிறுவயதில் இருந்தே அனுபவித்துள்ளான். இதனை நான் கேட்கும் போது இதயம் கிழ்ந்தது போல உணர்ந்தேன். அதை எல்லாம் நினைக்கும் போது கொஞ்சம் பெருமையாக இருக்கிறது என்று அபிராமி கூறினார்.

முகெனுக்கு ஐ லவ் யூ சொன்ன அபிராமி : பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த மற்றொரு காதல்!

போட்டியாளர்கள் குறித்து மீராவின் விளக்கம்!

இதனிடையே பிக்பாஸ் (bigg boss) வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய மீரா மிதுன், விஜய் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டரில் நேரலையில் ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நட்புக்கு இலக்கணம் என்றால் அது கவீன். ஊம குசும்பு என்றால் அது லாஸ்லியா. துரோகி என்றால் அது தர்ஷன். அழகு என்றால் அது முகென் தான். பஞ்சோந்தி என்றாலும் அது தர்ஷன் தான் என்று கூறியுள்ளார். 

அவரது முழு நேரலை வீடியோ இதோ…


மேலும் அபிராமி என்றால் போலியானவர், சேரன் ஆண் சர்வாதிகாரர், மதுமிதா டிராமா, சரவணன்  வேடிக்கையானவர், ஷெரின் போலியானவர் என்று கூறியுள்ளார். போட்டியாளர் குறித்து மேலும் பேசிய மீரா அங்குள்ள அனைத்து பெண் போட்டியாளர்கள் அனைவரும் தந்திரமாக தான் விளையாடுகிறார்கள் என்றார். மேலும், அந்த வீட்டில் மிகவும் வாசிகரமானவர் யார் என்ற கேள்விக்கு தனக்கு தானே பட்டம் கொடுத்துக்கொண்டார்.

இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் கவின்-சாக்ஷி தன்னை காலி செய்கிறாள் நான் இனி அந்த பக்கம் செல்ல மாட்டேன் என்று கூறி கவின் அழுகிறார். அப்போது லாஸ்லியா எல்லோரிடமும் வந்து சாக்ஷிக்கு நடந்த துரோகத்திற்கு நான் தான் காரணம், என்னிடம் யாரும் பேசவேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கேட்டபடி செல்கிறார். 

இதனை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், பிரேக் அப் ஆன அடுத்த செகண்டே நீங்கள் மற்றொரு பொண்ணுடன் பேசியது சாக்ஷிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என ரேஷ்மா கவினிடம் கூறுகிறார். இந்த சூழ்நிலையினை எப்படி கையாளுவது என தெரியாமல் சாக்ஷி தவித்து வருதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சரவணன், இது மனிதர்களின் இயற்கையான குணம். மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கூட இந்த குணம் இருக்கு என விளக்கம் அளிக்கிறார். லாஸ்லியாவிடம் கவின் பேசியதை வைத்தே அனைவரும் கவினை கேள்வி கேட்பது போல இந்த புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.