முகெனுக்கு ஐ லவ் யூ சொன்ன அபிராமி : பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த மற்றொரு காதல்!

முகெனுக்கு ஐ லவ் யூ சொன்ன அபிராமி : பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த மற்றொரு காதல்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் (biggboss) நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2வது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். பின்னர் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். இந்த டிவிஸ்டை அவரே எதிர்பார்க்கவில்லை. இதனை தொடர்ந்து மீரா மிதுன், சரவணன், அபிராமி, சேரன், மோகன் வைத்தியா ஆகியோர் எலிமினேஷனுக்கான நாமினேஷன் செய்யப்பட்டனர். 

youtube

வனிதா இல்லாத பிக்பாஸ் வீட்டில் முதல் காலைப் பொழுது ஆரவாரமாக தொடங்கியது. ஆனால் காலையிலே பஞ்சாயத்தை கூட்டினார் மோகன் வைத்தியா. சரவணன் தன்னுடைய உடல்மொழியை கேலி செய்வதாக கூறி தேம்பி அழுதார். சரவணன் தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று ஒரேடியாக பிரச்னையை முடிக்க பார்த்தார். எனினும் அடுத்து வந்த எலிமினேஷனுக்கான நாமினேஷனில் சரவணன் பெயர் எதிரொலித்தது. மேலும் மீரா பெயரை பலரும் குறிப்பிட்டனர். 

40 வயதான நடிகை ஸ்ருதி இன்னும் திருமணம் செய்யாதது ஏன் ? அவருக்கு இப்படி ஒரு துயரமா?

தர்ஷனை காதலிப்பதாக மீரா கூறினார். ஆனால் அதில் தர்ஷனுக்கு உடன்பாடு இல்லை என்று கூறியும் கூட அவரை தொந்தரவு செய்து வருகிறார். மேலும் நடக்காத ஒன்றை நடந்ததாகவும், ஒவ்வொருவரிடமும் ஒரு கதையை கட்டி விடுவதால் மீரா மிதுன் பார்வையாளர்களிடையே அதிருப்தியை சம்பாதித்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் மீது தவறான குற்றச்சாட்டை கூறி வருகிறார் என்ற கருத்தில் அடிப்படையில் மீராவின் பெயரை பல பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

youtube

அதேபோல மோகன் வைத்தியாவை கேளி செய்ததால் பலரும் சரவணின் பெயரை எலிமினேஷனுக்கு பரிந்துரைத்தனர். பெரும்பாலான போட்டியாளர்கள் அனைவரும் மீரா குறித்து எதிர்மறையான எண்ணங்களை பதிவு செய்தனர். அதற்கு பதிலடி தரும் விதத்தில், அனைத்தையும் போட்டியாகவே பார்ப்பதாக கூறி முற்றுப்புள்ளி வைத்தார் மீரா. அதனை தொடர்ந்து சமையல் அணியில் உள்ள மதுமிதா, சரவணன் மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். அது பிக் பாஸ் (biggboss) வீட்டுக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

youtube

எனினும் பெரியளவில் அந்த பிரச்னை தலைத்தூக்கவில்லை. அதற்கடுத்து நாளை மதூ சமைப்பார் என்று ஒருமனதாக சமையல் அணியினர் முடிவு செய்தனர். பிறகு நான் சொல்வதெல்லாம் உண்மை என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. யாருடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்ற கேள்விக்கு, அபிராமி என்று முகென் கூறினார். பின்னர் அதே கேள்விக்கு பதில் அளித்து பேசிய அபிராமி, முகென் என்று குறிப்பிட்டார். முகென் நண்பனாக கிடைப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நெஞ்சுக்குள் நுழைந்தாய்.. மூச்சினில் கலந்தாய்.. தமிழின் தேவதூதன் கவிஞர் நா.முத்துக்குமார்

ஒரு உண்மையான அனைத்தையும் ஷேர் செய்ய கூடிய ஒரு நட்பு தனக்கு கிடைத்துள்ளதாக பெருமையுடன் கூறினார். மேலும் அந்த அன்பை அதீதமாக வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு அபிராமி ஐ லவ் யூ சொன்னது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முகென் மற்றும் அபிராமிக்கு இடையே ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று போட்டியாளர்கள் சிலர் அரசல் புரசலாக பேசி வந்தனர். இந்நிலையில் அவர்களே இதனை உறுதி செய்யும் வகையில் நடந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

youtube

அதை தொடர்ந்து உணவுக்கூடத்தில் அனைத்து போட்டியாளர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது லோஸ்லியா, கவினை அண்ணா என்று அழைத்தார். இதனால் மனமுடைந்த கவின், நீச்சல் குளம் பகுதியில் அமைதியாக சென்று அமர்ந்து விட்டார். இதனிடையே வைல் கார்டு என்ட்ரியில் கவர்ச்சி நடிகை விசித்ரா உள்ளே செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அவரை தொடர்ந்து அடுத்த ஆளாக தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி நுழைய வாய்ப்பிருப்பதாக அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சனம் ஷெட்டி தர்ஷனின் காதலி என்பது ஒரு புறம் இருக்க, மீரா மிதுனிடம் இருந்து பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா பட்டமும் இவரின் கைக்கு தான் மாறியது என்பதால் இவர் பிக் பாஸ் (biggboss) வீட்டிற்குள் சென்றால் நிச்சயம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இன்று காலை வெளியாகியுள்ள புரோமோவில் மீரா மற்றும் கவின் இடையே மோதல் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.

மீராவிற்கு எதோ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து கவின், மீராவை சிரித்துக்கொண்டே கேலியாக கூறினார். இதனால் மீரா கோபமடைய, உன்னை கஷ்டப்படுத்த அவ்வாறு கூறவில்லை. சிரித்துக்கொண்டே தான் ஜாலியாக பேசினேன் என்று சாரி கேட்டு கவின் சமாதானப்படுத்த முயல்கிறார். ஆனால் அதற்கு மீரா, கோபமாக திட்டும் விதமாக காட்டப்பட்டுள்ளது. 

லாஸ்லியாவிற்கு போட்டியாக வருகிறார் ஆல்யா ?எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.