இன்று செவ்வாய் கிழமை பஞ்சமி திதி ரேவதி நட்சத்திரம் ஆவணி மாதம் 3ம் நாள். துர்க்கை வழிபாடு நலன் தரும். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷம்
வேலை மிக நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் தாமதமாகவே நடக்கும்.மனிதர்கள் பணத்திற்காக பழகுவார்கள. அவர்களுடைய ஈகோவை நீங்கள் மசாஜ் செய்வதன் மூலமே உங்கள் வேலைகளை நடத்தி கொள்ள முடியும். உங்கள் வேலையில் பற்றிய சரியான தெளிவில்லாமல் அதற்கான அனுமதிகளை நீங்கள் கேட்கவேண்டாம். குடும்பத்திற்கும் சமுகதிற்குமான இடைவெளிகளை சமன் செய்ய கற்று கொள்ளுங்கள். பழைய நண்பர்களுடன் இணைவீர்கள்.
ரிஷபம்
வேலையில் அடுத்தவர்களின் தவறை தாங்கி கொள்ள வேண்டிய நிர்பந்தம் வரலாம். தாமதங்களும் எரிச்சல்களை ஏற்படலாம். ஆனாலும் எது முக்கியமோ அதில் முன்னுரிமை கொடுங்கள்.யதார்த்தமாக இருங்கள். உங்கள் செயல்களில் அடுத்தவரின் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதீர்கள். உணவுகளை தவற விடாதீர்கள்.காற்றாட வெளியே சென்று வாருங்கள். உங்கள் துணை மீதான மனஸ்தாபம் அவர்களை விட்டு விலக சொல்லும்
மிதுனம்
புதிய வேலையில் உங்கள் மூத்த அதிகாரிகளை புதிய சிந்தனைகள் மூலம் கவருவீர்கள். உங்கள் கடந்த கால தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்று கொள்வதும் மூத்த அதிகாரிகளின் அறிவுரையை ஏற்பதும் நல்லது.உடல் நலன் குறையலாம். உங்கள் துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். அவர்களை கவனிப்பது உங்கள் பொறுப்பு.
கடகம்
ஒரு புதிய வேலை, வாடிக்கையாளர்கள் மூலம் உங்கள் வேலை முழுமையடையும். நல்ல செய்திகள் மேலும் உங்களை தன்னம்பிக்கையுடன் முன்னே நகர்த்தும்.நிறைய நல்ல விஷயங்கள் நடந்தாலும் வேலையில் உங்களை தொந்தரவு செய்யும் மனிதர்களால் இடையூறு வரலாம். நீங்கள் அமைதி காப்பது நல்லது.உங்கள் தொண்டை மற்றும் ஒவ்வாமையை கவனியுங்கள். துணையின் உடல்நலனிலும் அக்கறை செலுத்துங்கள்.
சிம்மம்
வேலை நிலைத்து நிற்பதனால் உங்களுக்கு உங்கள் பார்வைகளை பற்றி பேச நேரமோ வாய்ப்போ இருக்காது. மற்றவர்களை கண்களை மூடி கொண்டு பின்பற்றவும் அவர்களின் அறிவுரைப்படி நடக்கவும் நேரிடலாம். இது எரிச்சலாக இருக்கலாம். ஆனாலும் இதுவும் ஒரு கட்டம் என்பதை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலத்தை பற்றிய தெளிவு கிடைத்து விட்டால் உங்களுக்கு தேவையான மாற்றங்களை நீங்களே செய்து கொள்வீர்கள். கடந்த கால பிரச்னைகளுக்காக உங்கள் துணை மற்றும் உடன்பிறந்தவர்களுடன் உரசல்களை தவிர்க்கவும்.
கன்னி
வேலை மிக தாமதமாக நடக்கும். அடுத்தவர்களுக்காக காத்திருக்க நேரிடும். காகித வேலைகள் தாமதம் ஆனாலும் ஈமெயில் மூலம் செய்யப்படும் வேலைகள் சீக்கிரம் முடியும். புதிய ப்ராஜெக்ட்கள் உங்களுக்கு வர இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். திட்டங்களை விரிவு படுத்துவீர்கள். அதிக வேலை காரணமாக உணவுகளை தவிர்க்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் அறிவுரை கேட்க வருவார்கள்.
எதற்கடி வலி தந்தாய்..துருவ்வின் மென்குரலில் 50 லட்சம் வியூக்களை கடந்து சாதனை படைத்த பாடல்!
youtube
துலாம்
வேலையில் நீங்கள் பொறுப்பெடுத்து அதன் அடித்தளத்தில் இருந்து ஆற்றல் பெருகும் வண்ணம் மாற்றியமைப்பீர்கள். உங்களுடன் வேலை செய்பவர்களை பற்றிய குழப்பங்கள் இருந்தாலும் அவர்களின் எண்ணங்களை நீங்கள் விரைவில் புரிந்து கொள்வீர்கள். இப்போதைக்கு உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள் நல்லவைகள் உங்களை தேடி வரும்.குடும்ப உறுப்பினர்கள் அவரவர் வேலைகளில் இருப்பார்கள்.
விருச்சிகம்
வேலை நிரந்தரமாக இருக்கும். ஆனால் உங்கள் உறவில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டி வரலாம். நீங்கள் உங்கள் உறவிற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருப்பீர்கள். உங்கள் உணர்வுகளை ஒப்பு கொள்ள நீங்கள் விரும்பலாம். ஒரு காதல் உறவில் இணைய ஆசைப்படுவீர்கள்.அதையெல்லாம் செய்ய இன்று நல்ல நாள்தான். என்றாலும் உங்கள் கடந்த கால பாதுகாப்பின்மையை இதில் நுழைக்காதீர்கள். கண்களை கவனிக்கவும்.
தனுசு
வேலை கொஞ்சம் வேகமெடுக்கும்.முக்கிய முடிவுகளை எடுக்க தயாராக இருங்கள். சில தடைகள் இருந்தாலும் உங்கள் தெளிவான முடிவுகளால் அதனை தாண்டுவீர்கள். முதிய குடும்ப உறுப்பினருடன் உரசலை தவிருங்கள். தேவையற்ற விஷயங்களை அப்படியே போக விட ஆயத்தமாகுங்கள்.தூக்கம் விட்டு விட்டு வருவதால் மந்தமாக இருக்கலாம்.
மகரம்
வேலையில் நிறைய ஆச்சர்யங்கள் காத்திருக்கும். நீங்கள் இன்றைக்கு எந்த ஒரு மீட்டிங்கையும் மிஸ் செய்யாதீர்கள். தாமதங்களை தவிருங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் தெளிவாக அவர்களுக்கு புரியும் வகையில் பேசுங்கள். நிறைய நீர் குடிக்கவும். குடும்பத்தில் குழப்பங்களோடு நாடகங்கள் நடக்கலாம். யார் பக்கமும் இல்லாமல் இருப்பதே நல்லது.
கும்பம்
அடுத்தவர்கள் எடுக்கும் தாமதமான முடிவுகள் காரணமாக வேலை மெதுவாக நடக்கும். புதிய வேலைக்கு விரும்புபவர்கள் கொஞ்சம் தாமதிக்க நேரிடலாம்.பொறுமையாக இருக்கவும். காகித வேலைகளை ஈமெயில் தொடர்புகளை ஒழுங்குபடுத்தி வைக்கவும். உங்கள் முதுகு வலி மற்றும் கண்கள் காரணமாக உடல்நலன் குறையலாம்.குடும்ப உறுப்பினர்கள் அதிகாரம் செய்யலாம். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும்.
மீனம்
என்ன செய்தாலும் அதில் திறமையாக இருப்பீர்கள். வேலை நிலையாக இருக்கும் அதில் உங்கள் ஆதிக்கம் இருக்கும். உங்கள் சகா பணியாளர்களை ஆதிக்கம் செலுத்துவதில் சந்தோஷமடைவீர்கள். மீதமுள்ள வேலைகளை மீட்டிங்கை தாமதிக்க செய்வதன் மூலம் முடிப்பீர்கள். நீண்ட வேலைகளால் உடல்நலன் பாதிக்கப்படலாம். குடும்பத்துடன் நேரம் செலுத்த முடியாமல் போகலாம்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.