உடலில் கணவர் பெயர் : முதன் முறையாக மறைத்து வைத்திருந்த டாட்டூவை வெளிகாட்டிய சமந்தா!

உடலில் கணவர் பெயர் : முதன் முறையாக மறைத்து வைத்திருந்த டாட்டூவை வெளிகாட்டிய சமந்தா!

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தபிறகும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் முக்கிய ஹீரோக்களுடன் நடித்துள்ளார். எனினும் தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து நடிகை சமந்தாவின் படங்கள் வெற்றியடைந்து வருகின்றன. 

twitter

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மஜிலி படம் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து கடந்த வார இறுதியில் வெளியான ஓ பேபி படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. நந்தினி ரெட்டி இயக்கத்தில் வந்துள்ள இப்படத்தில் பழம்பெரும் நடிகை லட்சுமி, நடிகர் நாக சௌர்யா, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா ஜிம்மிற்கு சென்று தனது உடலை மிகவும் ஸ்லிம்மாக மாற்றியுள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து கொண்டே இருப்பார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது விலா பகுதியில் குத்தியிலுள்ள டாட்டூவை முதன்முறையாக வெளிக்காட்டியபடி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் டாட்டூ குத்தி கொள்வது சகஜமான ஒரு விஷயம் தான். 

த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளும் டாட்டூ குத்தியுள்ளனர். இந்நிலையில் நடிகை சமந்தா டாட்டூ குத்தியுள்ள புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதை என்னவென்று சரியாக படிக்க முடியவில்லை. தன் கணவரின் பெயரை குறிக்கும் வகையில் நாகா என்ற பெயர் பதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதில் நான் மறைத்து வைத்து இருந்த ஒரே ஒரு விஷயம் இதுதான். தற்போது அதையும் வெளியிட்டு விட்டேன் என்று டேக் செய்துள்ளார். 

 
 
 
View this post on Instagram
 
 

Living my best life ...😎... (the only tattoo that I’ve been hiding finally on display 🤪) @chayakkineni my husband my world ❤️

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 

என் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுநாள் வரை நான் மறைத்து வைத்த டாட்டூ. கடைசியாக தற்போது வெளியில், நாக சைதன்யா, என் கணவர்,  அவர் தான் என் உலகம் என பதிவிட்டுள்ளார். அந்த டாட்டூ நாக சைதன்யாவின் கையெழுத்து என்று சிலர் கூறுகிறார்கள். நடிகை சமந்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

twitter

இதனிடையே சந்தீப் வங்கா கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பான ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். தெலுங்கில் பெரும் வரவேற்பு பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் இந்தியில் 'கபிர் சிங்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஷாகித் கபூர், கியாரா அத்வானி, அர்ஜான் பாஜ்வா, நிகிதா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கினார். 

கடந்த ஜூன் 21ம் தேதி வெளியான இந்தப் படத்தில் நாயகன் பேசும் வசனங்கள், பெண்கள் காட்டப்பட்ட விதம் குறித்து பல்வேறு நபர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் படமோ பெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் சந்தீப் வங்கா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து சந்தீப் வங்கா கூறிய பதில்களுக்கு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Deeply Disturbing' என்று பதிவிட்டார் சமந்தா. 

இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த சமந்தா ரசிகர் ஒருவர்,  'அர்ஜுன் ரெட்டி' வெளியானபோது அந்தப் படத்தை பாராட்டி சமந்தா வெளியிட்ட ட்வீட்டையும், தற்போது சமந்தா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியையும் ஒன்றாக்கி ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துள்ள சமந்தா, ஒரு படத்தை ரசிப்பதும், ஒரு கருத்தை மறுப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். அர்ஜுன் ரெட்டி என்ற நபரின் கதை எனக்கு பிடித்தது. 

 

ஆனால் காதல் என்றால் ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று பொதுப்படையாக சொல்லப்படும் கருத்து எனக்கு பிடிக்கவில்லை என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது சமந்தா நடித்துள்ள படங்களின் சில காட்சிகளை எடுத்து, இதற்கு ஏன் நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவை எதற்குமே சமந்தா பதிலளிக்கவில்லை. ஓ பேபி திரைப்படம் வெற்றி பெற்ற களிப்பில் உற்சாகமாக இருக்கிறார் நடிகை சமந்தா! 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.