logo
ADVERTISEMENT
home / Accessories
காலேஜ் டேஸ் : கல்லூரிக்கு செல்வோருக்கு தேவையான 6 சிறந்த ட்ரெண்டி கைப்பைகள்

காலேஜ் டேஸ் : கல்லூரிக்கு செல்வோருக்கு தேவையான 6 சிறந்த ட்ரெண்டி கைப்பைகள்

விதவிதமான  ஹாண்ட் பாகுகளை விற்பனையில் பார்க்கையில் உங்களால் அதை வாங்காமல் இருக்க முடியவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு ஹாண்ட்  பாக் பிரியர் ஆவீர் ! இன்றைய ட்ரெண்டில் அணியும் ஆடைக்கு ஏற்ற ஹாண்ட் பாகுகளை கொண்டு செல்வது மிக முக்கியம் ஆகிவிட்டது. நீங்கள் கல்லூரிக்கு (காலேஜ்) செல்பவர் என்றால், உங்களுக்கு தேவையான ட்ரெண்டியான ஆறு வித்தியாசமான பைகளை (college handbag) இங்கு காணலாம். இது உங்கள் தோற்றத்தை இன்னும் ஸ்டைலாக முன்வைக்கும்! 

1. பாக் பேக் (Back Pack)

பாக் பேக் கல்லூரிகளுக்கு மட்டுமில்லாமல் பயணத்தில் எங்கு சென்றாலும் முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது ஏனெனில் இதில் இருக்கும் பல்வேறு சிறி பகுதிகள் , விசாலமான இடம் இது அனைத்தும் பல பொருட்களை வைக்க உதவுகிறது. இது போல் ஒரு பேக்கை நீங்கள் கல்லூரிக்கு எடுத்துச் சென்றால் உங்களுக்கு தேவையான புத்தகங்கள், அணிகலன்கள், மேக்கப் கிட், இவை அனைத்தையும் வெவ்வேறு பகுதிகளில் வைத்துக்கொள்ளலாம். இரண்டு தோள்பட்டை கொண்ட இந்த பாக் பேக் எடுத்துச்செல்ல மிக வசதியாக இருக்கும்.

இத்துடன் ஒரு மேட்சிங் ஜீன் பேண்ட் மற்றும் ஸ்னீக்கர் ஷூஸ் அணிந்து சென்றால் சிறப்பாக இருக்கும். 

2. டொட் பை (Tote Bag)

டொட் பாகில்  ஒரே ஒரு பெரிய பகுதி இருப்பதால் அதில் நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப எவ்வளவு பொருட்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.புத்தகங்களுக்கு இது மிகவும் பொருத்தமான ஒரு வகை பை  ஆகும். இது உங்களுக்கு ஒரு நேர்த்தியான தோற்றத்தை அளிக்க உள்ளது . ஆகையால் இதுபோல் ட்ரெண்டியான டொட் பாகை உடனடியாக வாங்குங்கள்.   

ADVERTISEMENT

இத்துடன் ஏதேனும் ஒரு காட்டன் சல்வார் கமீஸ் மற்றும் கோல்ஹாப்பூரி சப்பல் மிகவும் பொருந்தும். 

3. ஸ்லிங் பேக் (Sling Bag)

இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் சில வகை ஸ்லிங் பேக்கை உபயோகிக்க ஆரம்பித்தார்கள் ஆரம்பித்து விட்டார்கள். இது சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை வருகிறது.இது போல் ஆக்சஸரீஸ் பிரான்டை  சேர்ந்த ஒரு ஸ்லிங் பேக் உங்கள் தனித்துவமிக்க ஆளுமையை முன்வைக்கலாம். இதன் தெளிவாகத்தெரிகின்ற கவர் இந்த வகை பையுக்கு ஒரு ஸ்டைலிஷான தோற்றத்தை அளிக்கிறது! மேலும் இதில் உங்கள் கல்லூரிக்கு தேவையான பொருட்களையும் வைத்து கொள்ளலாம்.

இதை நீங்கள் ஒரு டெனிம் டாப் உடனும்  எடுத்துச் செல்லலாம் அல்லது ஏதேனும் ஒரு டிரஸ் உடன்  மேட்ச் செய்து கொள்ளலாம்! 

4. பக்கெட் பேக் (Bucket Bag)

கல்லூரிக்கு செல்லும் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான பை  இந்த பக்கெட் வடிவத்தில் இருக்கும் பேக் தான் . இதில் அதிகப்படியான பிரிவுகளும் பகுதிகளும் இல்லாவிட்டாலும் இதன் முக்கிய பகுதியில் அதிகபட்சமான பொருட்களை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.  புத்தகங்கள், சாப்பாடு, ஸ்னாக்ஸ், பாட்டில், மேக்கப் கிட என்று அனைத்திற்கும் இந்த பக்கெட் பேக் பொருத்தமானது! 

ADVERTISEMENT

ஏதேனும் ஒரு  ஜெஃகிங்ஸ் டீ ஷார்ட் அணிந்து  இந்த பக்கெட் பேக்குடன் உங்கள் தோற்றத்தை முழுமையாக்குங்கள். 

5. ஹோபோ பேக் (Hobo Bag)

லவீ முன்னணி ஹாண்ட்  பேக் பிராண்டுகளில்   ஒன்றாகும். பல வண்ணங்கள் நிறைந்தவையாக இருக்கும் இந்த பிராண்ட் ஹாண்ட்  பேக் நவீன பெனிற்கான சிறந்த ஹாண்ட் பேக்குகளை தயாரித்து வரும் ஒரு நிறுவனமாகும். இவர்களின் தயாரிப்பில் இந்த டூ-இன்-ஒன் ஹோபோ பேக் உங்கள் கல்லூரிக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதன் சிறப்பம்சம் இதை நீங்கள் ஒரு ஹாண்ட் பேக் ஆக எடுத்துச் செல்லலாம் அல்லது இதன் தோல் பட்டையை  இரண்டாக சேர்த்து ஒரு பாக் பேக் போலவும் இதை எடுத்துச் செல்லலாம். இதனுள் இருக்கும் விசாலமான இடம் அதிக பொருட்களை எடுத்துச் செல்ல பொருத்தமானது. 

இத்துடன் ஒரு அழகிய ஆரஞ்சு குர்தி அணிந்து உங்கள் தோற்றத்தை மேம்படுத்தலாம். 

6. ஃபாணி பேக்

இப்போதைய டிரெண்டில் இருக்கும் ஃபாணி  பேக் நிச்சயம் உங்களுக்கு உதவும்! ஒரு வேளை நீங்கள் கல்லூரியிலிருந்து ட்ரெக்கிங் அல்லது அவுட்டிங் சென்றால் இதுபோல் ஒரு சிறிய கச்சிதமான பை உங்களுக்கு அவசியம் தேவைப்படும். இதில் அத்தியாவசியமான பொருட்களை நீங்கள் வைத்துக் கொள்ளலாம் மேலும் இதை  இடுப்பை சுற்றி அணிந்து கொண்டு எங்கு வேண்டும் என்றாலும் எளிதில் செல்லலாம். 

ADVERTISEMENT

இது ஜீன்ஸ் ,டி ஷர்ட், ஸ்னீக்கர் அல்லது டிரஸ் உடன்  மிகப் பொருத்தமாக இருக்கும்.

பட ஆதாரம்  –  pixabay

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

02 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT