மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்

மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்

முகத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அழகைத் தொலையாமல் பார்த்துக் கொள்ளவும் நாம் அன்றாடம் நிறைய மெனக்கெட வேண்டி இருக்கிறது. 

க்ளென்சர், டோனர், மாய்ச்சுரைசர், சீரம், இப்போது ஆம்பியூல் (ampule) இன்னும் எவ்வளவுதான் இந்த முகத்திற்காக செலவழிப்பது என்று சில சமயம் நமக்கே சலிப்பு வந்து விடுகிறது. 

ஆனால் இவை ஒவ்வொன்றும் சருமத்திற்கு (skin) செய்கின்ற செயல்களை நீங்கள் அறிந்து கொண்டால் இப்படி சொல்ல மாட்டீர்கள். அதற்காக நீங்கள் எல்லா பொருள்களையும் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உங்கள் முகத்திற்கு என்ன தேவை என்பதை அறிந்து பயன்படுத்த இந்தக் கட்டுரை உதவலாம். 

லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள ! அசத்தலான செல்ஃபி க்கான சில கேப்ஷன்கள் மற்றும் மேற்கோள்கள்!

Youtube

டோனர் , சீரம் மற்றும் ஆம்பியூல் இவற்றிற்கான வித்தியாசங்களை நாம் முதலில் அறிந்து கொள்ளலாம். 

CTM என்பது முகத்திற்கு நாம் செய்தாக வேண்டிய தவிர்க்க முடியாத மரியாதை ஆகிவிட்டது. இதில் இரண்டாவதாக வரும் T என்பது டோனரைக் குறிக்கிறது. இதனை நமது முகத்தில் தடவுவதன் மூலம் திறந்த சருமத்துளைகள் மூடப்படுகின்றன. வெண்புள்ளிகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குகின்றன. உங்கள் சருமத்தின் Ph லெவலை டோனர் நிலைநிறுத்துகிறது. 

டோனர் எப்படி பயன்படுத்தலாம் 

திரவமாக இருக்கும் டோனரை பஞ்சில் எடுத்துக் கொண்டு முகத்தில் அழுந்த தடவ வேண்டும். முகம் முழுவதும் இதனை நீங்கள் தடவியபின்னர் உலர விடுங்கள். முகத்தில் உள்ள துளைகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத தூசுகள் எல்லாம் நீங்கி இருக்கும். 

சிறந்த டோனர் வாங்க இந்த க்ளிக் செய்யுங்கள்

டீனேஜ் பெண்களுக்கான வித்தியாச ஹேர்ஸ்டைல்கள் ! திரும்பி பார்க்க வைக்கும் அழகை பெறுங்கள் !

Youtube

எசென்ஸ் என்பது கொரியப் பெண்களுக்கான அடிப்படை அழகு செயல்முறைகளில் ஒன்று. இதன் மூலம் உங்கள் முகத்தின் நீர்த்தன்மை பத்திரமாகப் பாதுகாக்கப் படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சருமத்தின் உள்ளே சென்று அங்கிருந்து உங்கள் முகத்தை பொலிவாகவும் மினுமினுப்போடும் நாள் முழுதும் வைத்திருக்கிறது. நீங்க இதுவரை உபயோகிக்கவில்லை என்றால் உபயோகிக்க ஆரம்பியுங்கள். 

எசென்ஸ் எப்படி பயன்படுத்தலாம் 

உங்கள் முகத்தை க்ளென்ஸ் மற்றும் டோனர் செய்த உடன் எசென்ஸை எடுங்கள். உங்கள் கைகளில் கொஞ்சம் எடுங்கள். முகத்தின் தாடையில் இருந்து ஆரம்பித்து மேல் நோக்கியவண்ணம் தடவி வாருங்கள். 

முகத்தில் பட்ட உடனே அது சீக்கிரமே சருமத்திற்கும் புகுந்துவிடும் தன்மை கொண்டது. நமது சருமம், நேரடி சூரியன், பிரீ ரேடிக்கல்ஸ் , தூசு போன்ற பல விஷயங்களால் பாதிப்படைகிறது. இதனை எசென்ஸ் தடுத்து நம் முகத்தை காக்கிறது. 

சிறந்த எசென்ஸ் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

முகத்தை பொலிவாக்க பார்லர் எதுக்கு? இருக்கவே இருக்கு வீட்டு முறை அழகுக் குறிப்பு!

Youtube

சீரம் என்பது மிகவும் லேசான பதத்தில் நீர்தன்மையோடு இருக்கும். வலிமையான அழகுக்கூறுகளை உள்ளடக்கி இருக்கும். முகத்தில் குறிப்பிட்ட சரும சிக்கல்கள் இருந்தால் மங்கு, சுருக்கம் , கரும்புள்ளி போன்றவற்றை நீக்க சீரம் பெரிய உதவி செய்கிறது. டோனர் மற்றும் எசென்ஸை விடவும் செறிவான ஊட்டச்சத்துக்கள் உள்ளடக்கியது சீரம். 

பார்க்க ஜெல் பதத்தில் இருக்கும் சீரம் முகத்தில் உடனடியாகப் பரவும் தன்மை வாய்ந்தது. ஒரு துளி அல்லது இரண்டு துளிகளை முகத்தில் விட்டு முகம் முழுதும் தடவி விட்டால் போதுமானது. ஒரு அற்புதம் நிகழ்வது போல இதுவரை நீங்கள் அனுபவித்திராத ஒரு அழகில் உங்கள் முகம் ஜொலிக்கும். வயதாகும் பொது கொலாஜென் சுரப்பது நிற்க ஆரம்பிக்கும். சீரம் பயன்படுத்தினால் இந்தக் குறை இல்லாமல் பார்த்துக் கொள்ளும். 

சிறந்த சீரம் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

மினுமினுக்கும் தேகம் வேண்டுமா ? கேரள பெண்களின் அழகு ரகசியங்கள் உங்களுக்காக !

Youtube

ஆம்பியூல் என்பது கொரிய நாட்டை சேர்ந்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அழகு சாதனம் ஆகும். சீரமை விடவும் வலுவான அழகு பராமரிப்பு பொருள்களை தன்னுள்ளே அடக்கியது ஆம்பியூல். ஆனால் சீரம் போல இவைகளை அடிக்கடி பயன்படுத்த தேவை இல்லை. 

முக்கியமான விழா விஷேஷ சமயங்களில் நீங்கள் ஆம்பியூலை உபயோகிக்கலாம். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சருமத்தில் தங்கி தனது பராமரிப்பை செய்யும். உங்கள் நிஜ அழகை மீட்டெடுக்கும். இதனை வழக்கம் போல க்ளென்ஸ் மற்றும் டோன் செய்த பின்னர் சீரத்திற்கு பதிலாக உபயோகிக்கலாம். 

சிறந்த ஆம்பியூல் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களும் கொரியர்களின் கண்டுபிடிப்புகளாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் சருமபராமரிப்பை 27 முறைகளில் செய்கிறார்கள். ஆகவே சில சமயம் இவை ஒவ்வொன்றும் ஒன்றின் மேல் ஒன்றாக ஓவெர்லேப் ஆவது போல இருந்தாலும் அவரவர் வயது மற்றும் தேவைக்கு ஏற்ப என்ன ப்ராடக்ட் உங்களுக்கு அழகை நிலைநிறுத்துமோ அதனை மட்டுமே பயன்படுத்துங்கள். 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.