மாடர்ன் உடையில் மனதை கரைய வைக்கும் ப்ரியா பவானி சங்கர் : லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் மனதை கரைய வைக்கும் ப்ரியா பவானி சங்கர் : லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

கோலிவுட் திரையுலகில் இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வருபவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சின்னத் திரையிலிருந்து 'மேயாத மான்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். நாகபட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் பிறந்தவர் நடிகை ப்ரியா பவானி சங்கர் (priya bhavani). இன்ஜினியரிங் படித்து விட்டு திரையுலகம் மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாக சினிமா துறைக்கு வருகை தந்தார். முதலில் பிரபல நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். 

twitter

அதன் பிறகு கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமானார். மேய்த்த படத்தில் நடித்ததன் மூலம், சீரியல் நாயகியாக வளர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக மாறி இருக்கிறார். தொடர்ந்து தான் நடிக்கும் திரைப்படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் இவர், அறிமுகமான முதல் திரைப்படமான 'மேயாத மான்' இவருக்கு சிறந்த நாயகி என்கிற பெயரை எடுத்து கொடுத்தது மட்டும் இன்றி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. 

கவர்ச்சி உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ராசி கண்ணா: ரசிகர்கள் விமர்சனம்!

வெள்ளித்திரையில் இவரது முதல் படம் 'மேயாத மான்' ஆக இருந்தாலும், அதற்கு முன்பாகவே தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர் (priya bhavani). இதனை தொடர்ந்து இயக்குநர் பாண்டியராஜ் கார்த்தியை வைத்து எடுத்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ப்ரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் செம ஹிட் ஆனது. இந்த படத்தில் குடும்பத்து பெண்ணாக நடித்து அனைவரது மனங்களையும் வென்றார்.இந்த படத்தை தொடர்ந்து, மான்ஸ்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்  ப்ரியா பவானி சங்கர் (priya bhavani). 

twitter

இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். தொடர் பட வாய்ப்புகளால் மகிழ்ச்சியாக இருந்த பிரியாவிற்கு திடீரென ஒரு பிரச்சனை முளைத்தது. நடிகை ப்ரியா பவானி சங்கர் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தது. இதனையறிந்த அவர் மிகுந்த கோபம் அடைந்தார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், போலி கணக்கு ஒன்றிற்கு பதிலளிக்கும் வகையில், அன்பார்ந்த போலி கணக்காளரே ட்விட்டரில் எதையாவது பதிவிட வேண்டும் என்ற உங்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. 

உடலில் கணவர் பெயர் : முதன்முறையாக மறைத்து வைத்திருந்த டாட்டூவை வெளிகாட்டிய சமந்தா!

ஆனால் மணிக்கு ஒருமுறை எனக்கு தொல்லை தரும் வேலையாக அதைச் செய்யாதீர்கள் என்று குறிப்பிட்டார். அவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. பின்னர் பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஹோம்லி பெண்ணாக நடித்து வந்த ப்ரியா, தற்போது சமீப நாட்களாக செம மாடர்னாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை அவரது சமூக வளைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த ஹாட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

twitter

அவரது ரசிகர்கள் பலரும் அழகாக இருப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என மறைமுகமாக சொல்ல வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக  ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  

இந்தப் படத்தை தொடர்ந்து இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் விக்ரம். க்ரைம் த்ரில்லர் பாணியில் அதிக பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்திலிருந்து தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க இளம் நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட போது 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டது.  முதன்முதலாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இதனால் ப்ரியா பவனி சங்கர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். 

விமர்சனங்களைப் பற்றிக் கவலையில்லை ! சமீரா ரெட்டியின் அப்பழுக்கற்ற அழகு ! வைரல் வீடியோ !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.