பிக் பாஸின் முதல் நாமினேஷன் அறிவிப்பு வெளியானது : வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார்?

பிக் பாஸின் முதல் நாமினேஷன் அறிவிப்பு வெளியானது : வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார்?

பிக் பாஸ் (biggboss3) நிகழ்ச்சியில் வாரம் ஒருவரை டார்கெட் செய்து அழ வைப்பதே வழக்கமாக வைத்து உள்ளனர். கடந்த வாரம் முழுவதும்  மீராவை வெச்சி செஞ்ச ஹவுஸ் மேட்ஸ் தற்போது அந்த லிஸ்டில் மதுமிதாவை இணைத்துள்ளனர். மதுமிதா தமிழ் பொண்ணு என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்டதால் பெரிய பூகம்பமே வெடித்தது. எனினும் மதுமிதா பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

கடந்த வாரம் போட்டியாளர்களின் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை உண்மையாக பகிர்ந்து கொண்டதால் இந்த வாரம் லக்ஷூரி பட்ஜெட்டுக்கான 3200 மதிப்பெண்களையும் போட்டியாளர்கள் பெற்றுள்ளனர். கடந்த வாரம் கேப்டனாக இருந்த வனிதா, இந்த முறை மாற்றப்பட்டு மோகன் வைத்யா கேப்டனாக வாக்குகள் மூலம் நியமிக்கப்பட்டார். ஆனால் இதில் இருந்தே போட்டியாளர்களுக்கு இடையில் பொறாமை ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. 

தமிழ் பொண்ணுதான் பொண்ணா மத்தவங்கள்லாம் யாரு... பொங்கிய ஷெரின்.. கலங்கிய மதுமிதா !

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சி வழக்கம் போல் ஆட்டம் பாட்டத்துடனேயே தொடங்கியது. இந்த வாரத்திற்கான லக்‌ஷூரி பட்ஜெட்டுக்கான மொத்த மதிப்பெண்களையும் பிக் பாஸ் வழங்கியுள்ளார். இதன் மூலம் தங்களுக்கு தேவையானவற்றை அந்த பட்ஜெட்டிற்குள் போட்டியாளர்கள் பெற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து முகேன் சமைத்து கொண்டிருக்க, அபிராமி அதனை விளக்கி கொண்டிருந்தார். சாண்டி, அபிராமியை நிங்கள் வண்டி ஒட்டி சென்ற போது உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆவது போல் நடித்து காட்ட சொல்லி விளையாடிக் கொண்டிருந்தனர். 

உடன் முகேன், மோகன் வைத்யா, ஷெரின், சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர். பின்னர் லொஸ்லியாவிற்கு இதே போன்று விளையாட்டான தலைப்பு கொடுத்து மகிழந்தனர். அப்போது பிக் பாஸ் 3ன் முதல் நாமினேஷன் தொடங்க போவதற்கான அறிவிப்பு வெளியானது. கடந்த வார, மற்றும் தற்போதைய தலைவர்களான வனிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோரை நாமினேட் செய்ய முடியாது என அறிவித்தனர். இதில், மதுமிதா 6 வாக்குகளும், மீரா 8 வாக்குகள் பெற்றுள்ளனர். 

கவர்ச்சி உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ராசி கண்ணா: ரசிகர்கள் விமர்சனம்!


இவர்களில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பது மக்களின் கையில் தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் அல்லாமல் கவின், சரவணன், ஃபாத்திமா, சாக்‌ஷி, சேரன் ஆகியோரது பெயரும் அடிபட்டுள்ளது. இதில் இவர்கள் கூட மக்களால் வெளியேற்றப்படலாம் அப்படியிருக்கும் மக்கள் விரும்பாத அந்த போட்டியாளர் யார் என்பதை வரும் சனிக்கிழமை வரை காத்திருந்து தெரிந்து கொள்வோம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தற்போது ஒரு பரபரப்பான புரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஒன்னுமே தெரியாத ஊமக்குசும்பி மாதிரி இருப்பாங்களா, ஆனால் அவங்க செய்கிற காரியங்களை எல்லாம் நம்பவே முடியாது, கட்டின தாலியை கழற்றி வைத்துவிட்டு வருவாங்களாம், ஆனால் அந்த பொண்ணு ஒரு பாட்டிலை வைத்து குழந்தை போன்று காட்டினால் அதை தப்பா ப்ரொஜெக்ட் பண்ணுகிற என்று வனிதா மதுமிதாவை விளாசும் நிகழ்வுகள் அடங்கியுள்ளது. 

வனிதா பேசியதை கேட்ட மதுமிதா, அவ பண்ணினது தப்பு தான், ஓவரா தான் பண்ணுறான்னு அந்த வாய் சொல்லிச்சுல்ல அப்போ, அவ ஓவராத் தான் பண்ணுறான்னு நீ சொல்லல என்று மதிமிதா வனிதாவிடம் கேட்கிறார். ஆனால் அதனை காதில் வாங்காதவாறு பேசும் வனிதாவோ, நீ ஷட்அப் பண்ணு  என்று மதுமிதாவை பார்த்து கூறினார். அதற்கு கொஞ்சம் கூட அசராத மதுமிதா நீங்க ஷட்அப் பண்ணுங்க என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தனிமைக்கு பிறகு 15 வருடம் கழித்து காதலரை சந்தித்த சோனியா அகர்வால் !


மதுமிதா பேசியதில் தவறே இல்லை. இந்த வனிதா தேவையில்லாமல் அதை ஊதி பெரிதாக்குகிறார். தாலியை கழற்றி வைப்பது எல்லாம் இந்த காலத்தில் ஒரு பெரிய விஷயமே இல்லை. வனிதா வேண்டும் என்றே மதுமிதாவை குறை சொல்கிறார். வனிதாவுக்கு ஏற்ற ஆள் மதுமிதா தான். நீ நல்லா திட்டுமா மது, நாங்க இருக்கோம் என்கிறார்கள் நெட்டிசன்கள் மதுமிதாவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அப்படியானால் இன்று பிக் பால் வீட்டில் சுவாரஸ்யமான நிகழ்வுகள்  நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.