தமிழ் பொண்ணு தான் பொண்ணா மத்தவங்கள்லாம் யாரு... பொங்கிய ஷெரின்.. கலங்கிய மதுமிதா !

தமிழ் பொண்ணு தான் பொண்ணா மத்தவங்கள்லாம் யாரு... பொங்கிய ஷெரின்.. கலங்கிய மதுமிதா !

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை பிக் பாஸ் (bigg boss) எப்போதுமே ரொம்ப ஸ்பெஷலான ஒன்று. காரணம் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்திக்க வேண்டிய நாள். கிராம பஞ்சாயத்தை போல குடும்ப பஞ்சாயத்தை பேசி தீர்க்கும் நாள்.

கடந்த வாரம் முழுக்க போட்டியாளர்கள் வாழ்வில் ஏற்பட்ட துயர சம்பவத்தை கூற சொல்லி பிக் பாஸ் டாஸ்க் கொடுக்க.. தாங்களும் கலங்கி பார்க்கும் பார்வையாளர்களையும் கலங்கடித்தார்கள் போட்டியாளர்கள். அதில் ரேஷ்மா எனும் பெண் நடிகையின் பின்னால் இருந்த கதை மிகவும் ஆழமாக அனைவரையும் பாதித்தது.

தனது கருவறையே தனது குழந்தைக்கு கல்லறையான துயரத்தையும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை ஆட்டிசம் பாதிப்போது தற்போது வளர்த்து வருவதையும் ரேஷ்மா கூறிய விதம் நமது கஷ்டங்கள் எல்லாம் எதுவுமே இல்லை என்கிற எண்ணத்தையும் எப்படிப்பட்ட துயரங்களையும் தாங்க கூடிய வலிமை பெண்ணினத்திற்கு இயல்பான ஒன்று என்கிற உண்மையையும் நமக்கு எடுத்து சொன்னது.

போட்டியாளர்கள் ஒவ்வொருவருமே பெரிய துயரங்களை சுமந்தபடி இருந்ததை உணர முடிந்தது. அதனை வார இறுதி நாளில் கமல்ஹாசன் தனக்கே உரித்தான சாமர்த்தியத்தால் சமநிலை செய்தார். வாழ்க்கை என்பது துயரம் ஆனந்தம் என எல்லாவற்றாலும் ஆனது என்பதை நமக்கு எடுத்துரைத்திருக்கிறார் கமல்ஹாசன்.

twitter

இதே கேள்விகள் கமல்ஹாசனிடமும் கேட்கப்பட்டது. சுவையாகவும் சுவார்ஸயாகவும் அதற்க்கு அவர் பதில் அளித்தார். போட்டியாளர்கள் எந்த வித பாசாங்குகளும் இல்லாமல் வெளிப்படையாக இருப்பது கடந்த சீசன் கஷ்டங்களை மனதை விட்டு மறையவே வைத்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.

இதற்கிடையில் பாத்திமா பாபு மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரையுமே குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை செய்தியாக சொல்ல சொன்னார்கள். பாத்திமா கவனக்குறைவாக சொன்ன செய்தி ஒன்றால் வீட்டில் பூகம்பமே உருவானது. அபிராமி முகேன் இருவருக்கும் பிறந்த குழந்தை என பாவித்து ஒரு வாட்டர் பாட்டிலை வைத்து விளையாண்டதை மதுமிதா சொல்ல வேண்டாம் என்று சொல்லியும் பாத்திமா செய்தியாக கூறிவிட சம்பந்தப்பட்டவர்களே சும்மா இருக்கும்போது மதுமிதா தேவையில்லாமல் நுழைந்தார்.

இது அபிராமிக்கு பிடிக்கவில்லை. தான் விளையாட்டாக செய்த விஷயம் ஆபாசமாக்கப்பட்டதை அடுத்து அழ ஆரம்பித்தார். இது கமல்ஹாசன் முன்னிலையில் நடந்தது. அதை என்ன என்று கமல்ஹாசன் வழக்கம் போல தூண்டிவிட உள்ளே பற்றி கொண்டது. மதுமிதா தமிழ் பொண்ணு என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்டது பெரும் சிக்கலை கிளப்பினாலும் தான் பேசியது சரி என்றே நின்று கொண்டிருந்தார்.

மற்றவர் விஷயத்தில் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை வனிதா அழகாகவும் அழுத்தமாகவும் எடுத்து கூறினார். வனிதாவின் வார்த்தைகளில் இருந்த நேர்மை நம்மை மட்டுமல்ல கமலையும் அசர வைத்தது. பின்னர் சேரன் சொல்லியும் மற்றவர் சொல்லியும் கவின் தமிழ் பெண்ணான நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கிறீர்கள் என்றும் எப்படி சில திரைப்படங்களில் காதல் காட்சிகளில் நடித்தீர்கள் அதனை குடும்பங்கள் பார்க்காதா என்றும் கேட்க மதுமிதா திணற ஆரம்பித்தார்.

twitter

தமிழ் பெண் என்ற உடன் ஷெரின் பொங்கி எழுந்தார். அந்த அமைதியான ஷெரினா இவர் என்று கேட்கும் அளவிற்கு பொங்கி தள்ளிவிட்டார். ஒரு சாதாரண விளையாட்டிற்கு போய் ஒரு பெண்ணின் குணத்தை குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது அவரது ஆதங்கமாக இருந்தது. அப்போ நீங்க தமிழ் பெண் நான் கர்நாடகாவில் இருந்து வந்திருக்கிறேன் நான் பெண்ணே இல்லையா என்பதை அவர் கேட்டு கொண்டே இருந்தது பிக் பாஸ் வீட்டில் தமிழ் அரசியல் இனி இருக்காது என்பதை பறை சாற்றியது.

மதுமிதா எந்த பாட்டில் குழந்தையால் பிரச்னை என்றாரோ அதே குழந்தையோடு நேற்று விளையாடியதை நினைவுறுத்திய அபிராமி இனி மதுமிதா அருகே உறங்குவதை விரும்பவில்லை என்று லாஸ்லியாவிடம் கேட்டு மாறி கொள்ள சொன்னார். இத்தனை களேபரத்துக்கு நடுவில் மோகன் வைத்யா இந்த வார தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் கமலிடம் கேட்கப்பட்ட போது அவர் அளித்த பதில்கள் அவரை போன்றே சுவாரஸ்யமாக இருந்தது. நீங்கள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக எதை கூறுவீர்கள் என்பதற்கான கேள்விக்கு அவர் அளித்த பதில் வித்யாசமானது. மறக்க முடியாத நாள் என்பது நாம் மிக மதிக்க வேண்டிய நாள் என்பதுதான் உண்மை என்பதால் நாளை எனும் நாள் தான் தான் மிக மதிக்கும் நாள் என்று கூறினார்.

நேற்றைய பிக் பாஸின் (bigg boss)  இறுதியில் நாளைய நாள் நன்றாக அமையும் என்பதை ஒரு பெண் குரல் கூறியதோடு நிகழ்ச்சியை முடித்திருக்கின்றனர். நாளை எனும் நாள் நம் அனைவருக்கும் நலமானதாகவே இருக்க வேண்டும் என்கிற நம்பிக்கையோடு நானும் இக்கட்டுரையை முடிக்கிறேன்.

 

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.