logo
ADVERTISEMENT
home / Bigg Boss
கவின் – சாக்ஷி காதல் முறிவு, அபிராமியை எச்சரித்த முகென்… பிக் பாஸ் சுவாரஸ்யங்கள்!

கவின் – சாக்ஷி காதல் முறிவு, அபிராமியை எச்சரித்த முகென்… பிக் பாஸ் சுவாரஸ்யங்கள்!

பிக் பாஸ் (biggboss) நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளர். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில், பிக் பாஸ் ‘டிக்! டிக்! டிக்!’ என ஒரு டாஸ்க்கை அறிவிக்கிறார். யார் இந்த டாஸ்க்கில் பங்கு பெறப்போகிறீர்கள் எனக் கேட்க, மீரா தானாக முன் வந்தார். அவருடன் இன்னொரு போட்டியாளராக சாண்டியையும் உதவிக்கு சேரனையும் உள்ளே அனுப்பி வைக்கிறார்கள் ஹவுஸ் மேட்ஸ். இது 700 மதிப்பெண் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் என அறிவிக்கிறார் பிக் பாஸ். டாஸ்க் என்னவென்றால் ஆக்டிவிட்டி ஏரியாவிற்குள் 300 கடிகாரங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

twitter

அவற்றில் இரண்டு கடிகாரங்களில் அலாரம் ஆன் செய்யப்பட்டிருக்கும். 10 நொடிகளில் அவற்றை கண்டுபிடித்து ஆப் செய்துவிட்டால் 700 மதிப்பெண்கள், அதன்பின் தாமதாமாகும் ஒவ்வொரு 10 நொடிகளுக்கு 100 மதிப்பெண்கள் குறையும். 18 நொடிகள் இரண்டு கடிகாரங்களையும் சாண்டி ஆப் செய்துவிடுகிறார். 600 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுவிட்டன. இதனை தொடர்ந்து இதே போல் இரண்டாவது டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதில் தர்ஷன், அபிராமியும், உதவியாளராக லாஸ்லியாவும் சென்றனர். இந்த டாஸ்கில் 600 மதிப்பெண்கள் வென்றனர். வீட்டின்  இந்த வார தலைவரான சாக்ஷி, தவறு செய்ததற்காக 100 மதிப்பெண் குறைக்கப்பட்டது. மீதம் 1,100 மதிப்பெண்கள் இருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார். 

ADVERTISEMENT

மேலும் படிக்க – முகெனுக்கு ஐ லவ் யூ சொன்ன அபிராமி : பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த மற்றொரு காதல்!

பின்னர் முகென், சாண்டி, தர்ஷன், கவின் ஆகியோர் லிவ்விங் ஏரியாவில் இருக்கும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த அபிராமி , முகென் மீது இரண்டு காலையும் மேலே போட்டு சேரில் சாய்ந்தபடி அமர்ந்தார். இதனால் கொஞ்சம் சங்கடம் அடைந்த முகென், அபிராமியை ‘குரங் அஜார்’என்று மலாய் பாஷையில் எச்சரித்தார். இதனால் ஒன்றும் புரியாத அபிராமி திருதிருவென முழித்ததார். பின்னர் முகென் மீண்டும் அதே வார்த்தையைக் கூறி எச்சரிக்க அபிராமி, முகென் மீது இருந்து காலை எடுத்து விட்டு முகத்தை தூக்கிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு சென்று விட்டார்.

முகென், அபிராமியிடம் சென்று பேசி அவரை சமதனப்படுத்தினார். அபிராமி மகன் மீது காலை போட்டதும் முகென் கூறிய ‘குரங் அஜார்’ என்ற சொல் மலாய் மொழியாம். அப்படி என்றால் மரியாதை குறைவாக நடப்பது என்று அர்த்தமாம். என்னதான் அபிராமி மற்றும் முகென் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தாலும் ஒரு ஆண் என்றும் பாராமல் அனைவர் முன்பும் முகென் மீது அபிராமி காலை போட்டது முகெனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவரது முக பாவத்திலிருந்தே தெரிந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

பிக் பாஸ் (biggboss) நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே புது புது ரொமான்ஸ் போட்டியாளர்கள் மத்தியில் ஓடிக் கொண்டுதான் வருகிறது. அதில் தற்போது புதிதாக ஆரம்பித்ததுதான் அபிராமி மற்றும் முகென் இடையேயான ரொமான்ஸ். கடந்த சில நாட்களாகவே அபிராமி முகென் மீது அதிக அன்பு காட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த டாஸ்க் ஒன்றில் கூட அபிராமி அனைவர் முன்பும் முகெனிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லியிருந்தார். இருப்பினும் அபிராமியை ஒரு நல்ல நண்பராக தான் பார்த்து வருகிறார் முகென். 

மேலும் படிக்க – லாஸ்லியாவிற்கு போட்டியாக வருகிறார் ஆல்யா ?எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பட்டிமன்றம் போல ஒரு டாஸ்க் ஒன்றும் நடத்தப்பட்டது. அப்போது பிக்பாஸ் வீட்டில் இருப்பது நட்பா இல்லை அதையும் தாண்டி புனிதமானது என்று இரு தரப்பினரும் வாதாடினர். அப்போது எதிர் தரப்பில் இருந்த அபிராமி என்னுடன் முகென் வைத்திருப்பது நட்பு மட்டும் இல்லை, அதற்கும் மேல் புனிதமானது என்று கூறியிருந்தார். ஆனால், அதனை எதிர்த்துப் பேசிய முகென் அபிராமியுடன் நான் வைத்திருப்பது நட்பு மட்டும்தான் அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று தெளிவாகவே சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து லாஸ்லியா, கவினும் நடந்த பிரச்சனைகள் குறித்து விவாதித்தார். அப்போது சாக்ஷியிடம் தனக்கு பொஸசிவ்ன்ஸ் இருப்பதாக கவின், லாஸ்லியாவிடம் நேரிடையாகவே கூறினார். மேலும் பிக் பாஸ் (biggboss) இல்லத்தில் நாம் நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் நமது உறவை தொடரலாம் என சாக்ஷியிடன் நான் கூறினேன் என்று கவின் ஒப்பு கொள்கிறார். இதற்கு பதிலளித்த லாஸ்லியா, சீரியலில் நடிக்கும் போது இருந்தே உன்னை பிடிக்கும். 

உன்னுடன் பேசுவது புடிக்கும். ஆனால் அது காதல் இல்லை என்று கவினிடம் கூறிய லாஸ்லியா, சாக்ஷிக்கு உன்னுடன் நான் பேசுவதில் எவ்வித பிரச்னையும் இல்லை என்றால் நான் உன்னுடனான நட்பை தொடர்வேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து கவினிடம், சாக்ஷி இவ்வளவு நாள் என்னிடம் நட்பாக மட்டும் தான் பழகினாயா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கவின் ஆமாம் என்று தெரிவிக்க, பிக் பாஸ் இல்லத்திலும், அதற்கு வெளியிலும் நமக்குள் இனி எதுவும் இல்லை என்று கறாராக கூறினார் சாக்ஷி. மற்றொரு புறமோ முகென், அபிராமி பேசி கொண்டிருந்தனர். உன்னுடன் பேசாமல் என்னால் இருக்க முடியாது என அபிராமி, முகெனிடம் கூறினார்.

 

இதனிடையே இன்று வெளியாகியுள்ள புரோமோவில், ஷெரின் இதய வடிவில் சப்பாத்தி போட்டு, லாஸ் உங்க அண்ணனுக்கு போட்ட சப்பாத்தியை பாரு என்று தர்ஷனை குறிப்பிட்டு கூப்பிட்டு காட்டுகிறார். இதனை பார்த்த லாஸ்லியா, ஒரு ஸ்பூனை எடுத்து அந்த சப்பாத்தியை குத்தி விட்டு செல்கிறார். இதனை பார்த்த தர்ஷன் ஏன் அவ்வாறு செய்தாய் என்று லாஸ்லியாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு லாஸ்லியாவோ அப்படி தான் செய்வேன் என்று சொல்லி விட்டு சென்று விட்டார். இவர்கள் பேசியை கேட்ட ஷெரின், லாஸ்லியா ஒன்னும் சின்ன குழந்தை அல்ல என்று தர்ஷனிடம் கூறுகிறார். கடந்த சில நாட்களாகவே ஷெரின், தர்ஷன் ஒன்றாக சுற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த புரோமோ பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விடுகிறது.

ADVERTISEMENT

        மேலும் படிக்க –  யார் கவினின் காதலி.. லாஸ்லியாவா சாக்ஷியா..? லாஸ்லியாவின் கேள்வியால் தடுமாறும் கவின்..!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

18 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT