கோடி ரூபாய் கொடுத்தாலும் முத்தக் காட்சிகளில் நடிக்கமாட்டேன் : தமன்னா திட்டவட்ட அறிவிப்பு!

கோடி ரூபாய் கொடுத்தாலும் முத்தக் காட்சிகளில் நடிக்கமாட்டேன் : தமன்னா திட்டவட்ட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா (tamana). தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக  வலம் வருகிறார். கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகை தமன்னா அறிமுகமானார். இதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். பல்வேறு படங்களில் நடித்து வந்த நிலையில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து. 

twitter

முதலில் சாதாரண ஹீரோக்களுடன் இணைந்து நடித்த தமன்னா, பின்னர் விஜய், சூர்யா, அஜித் ஆகிய மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த பாகுபலி திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இந்தி படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 

குடிபோதை.. அரைகுறை ஆடை..நண்பருடன் லிப் லாக்.. வைரலாகும் யாஷிகாவின் லைவ் வீடியோ

மேலும் தற்போது ஹாரர் படங்களில் நடிக்க முன்னுரிமை அளித்து வருகிறார். அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கும் ‘பெட்ரொமாக்ஸ்’ படத்தில் தமன்னா பிரதான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் வெற்றி பெற்ற அனந்தோ பிரம்மா படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில், டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் தமன்னா தமிழில் நடிக்கவுள்ளார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி :

தமன்னா (tamana) மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீடு அருகிலேயே வெர்சோவா என்கிற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மிகப்பெரிய அப்பார்ட்மெண்டில் வீடு ஒன்று வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. தோராயமாக அபார்ட்மெண்டின் விலை ரூ.4.56 கோடி எனவும், மார்க்கெட் விலையை விட நான்கு மடங்கு அதிகமான தொகை கொடுத்து அந்த வீட்டை வாங்கியதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு தகவல் பரவி வந்தது. 

வீட்டிற்கு இவ்வளவு பெரிய தொகை கொடுக்க வேண்டுமா என்று விமசனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மார்க்கெட் விலையை விட அதிக தொகை கொடுத்து நான் ஏன் ஒரு வீட்டை வாங்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், இப்படியொரு தகவல் ஏன் வெளியானது என்று தனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

twitter

உண்மையில் ஒரு வீடு வாங்கி இருப்பது நிஜம். அந்த வீட்டில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தபின் பெற்றோர் மற்றும் பாட்டியுடன் அந்த வீட்டில் குடியேற உள்ளேன் கூறியுள்ளார்.தமன்னா வாங்கிய பிளாட்டானது 22 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்டுள்ளது. ஆனால் தமன்னாவோ 14வது மாடியில் இந்த புதிய வீட்டை வாங்கியுள்ளார். இந்த பிளாட் 2 கார் பார்க்கிங் வசதியுடன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கவர்ச்சிக்கு ஓகே, முத்தக் கட்சிக்கு நோ :

இதனிடையே கடந்த சில காலங்களாக அதிகமாக பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தினார். இழந்த பட வாய்ப்புகளை மீண்டும் பெறுவதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் வெளியான தேவி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தமன்னா கவர்ச்சியாக நடித்திருந்தது குறிப்பிடதக்கது. இதனால் தயாரிப்பாளர்கள் பலர் முத்தக் காட்சிகளில் தமன்னாவை நடிக்க வைக்க முயற்சி செய்கின்றனராம்.

திரைக்கு வரும் எனை நோக்கி பாயும் தோட்டா!அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களால் சந்தோஷத்தில் ரசிகர்கள்!

twitter

சில நாட்களுக்கு முன் வெளியிட்ட போட்டோஷூட்டிலும் படுகவர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அதிக சம்பளம் கொடுத்தால் கூட முத்தக்காட்சிகளில் நடிப்பது இல்லை என்ற முடிவில் உள்ளாராம் தமன்னா. கோடி ரூபாய் கொடுத்தாலும் முத்தக் காட்சிகளில் மட்டும் ஒருபோதும் நடிக்கப்போவதில்லை என திட்டவட்டமாக தமன்னா (tamana) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 
 
View this post on Instagram
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

அதே நேரத்தில் பிகினி உடை, கவர்ச்சி போட்டோஷுட் என்று தைரியமாக சில விஷயங்களை செய்து தான் வருகின்றார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், தமன்னாவா இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் கொலைகாரியான வனிதா : ஆவியாக உலா வரும் சாக்ஷி, மோகன் வைத்யா!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.