மஞ்சள் தேநீர் – பல நற்பலன்களை கொண்ட ஓர் அற்புத பானம்

மஞ்சள் தேநீர் – பல நற்பலன்களை கொண்ட ஓர் அற்புத பானம்

பொதுவாக தேயிலை தேநீர் அதிக பிரபலமான ஒன்றாக உலகளவில் இருகின்றது. அதற்கு அடுத்தபடியாக காபி மற்றும் மேலும் ஒரு சில வகை தேநீர்கள், குறிப்பாக கிரீன் டீ, இஞ்சி தேநீர் என்று பிரபலமாக உள்ளது. ஆனால், மஞ்சள்(turmeric) தேநீரை பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்காது. இருபினும், மஞ்சளை ஏதாவது ஒரு வகையில், உணவு சமைக்க பயன்படுத்துவார்கள்.

உணவு சமைபதற்கு மட்டுமல்லாமல், மஞ்சளில் தேநீரும் செய்யலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்! மஞ்சள்(turmeric) பல்லாயிரம் ஆண்டு காலமாக தெனிந்திய மக்களால் பெரும் அளவு பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இன்றளவும், தினமும் சமைக்கும் உணவில் ஏதாவது ஒன்றிலாவது மஞ்சள்(turmeric) சேர்க்கப் பட்டே சமைக்கப் படுகின்றது. இதற்கு, அதில் அடங்கி உள்ள பல நற்குணங்களே முக்கிய காரணம். பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ள மஞ்சள்(turmeric), உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் பயன் படுத்தப் படுகின்றது. இதனை சமையலில் மட்டும் சேர்க்காமல், அவ்வப்போது தேநீராகவும் செய்து பருகி வந்தால், மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.

இந்த மஞ்சள்(turmeric) தேநீரை பற்றி தெரிந்து கொள்ள, மேலும் படியுங்கள்

மஞ்சள் தேநீரை பற்றி சில சுவாரசியமான தகவல்கள்

 • மஞ்சளில் குர்குமின் என்னும் செயலி பொருட்கள் உள்ளது
 • குர்குமின் மஞ்சளுக்கு, மஞ்சள்(turmeric) நிறத்தை தருகின்றது
 • குர்குமினில் எதிர்ப்பு அழற்சி மற்றும் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் பண்புகள் அதிகம் உள்ளது
 • நேரடியாக மஞ்சள் கிழங்கில் இருந்து தயாரிக்கப் படும் மஞ்சள் தேநீர் அதிக சக்தி
 • வாய்ந்ததாகவும், பலன் தரக்கூடியதாகவும் இருகின்றது
 • இந்த தேநீரை தினமும் பரிந்துரைக்கப் பட்ட அளவில் அருந்தலாம்
 • தினமும் 1 முதல் 3 கிராம் வரையில் பச்சையாகவோ அல்லது காய்ந்த பொடி செய்ய பட்ட மஞ்சள் தூளாகவோ பயன் படுத்தலாம்
 • எனினும், நீங்கள் பயன் படுத்தும் மஞ்சள்த்தூள்(turmeric) தூய்மையானதாகவும், மற்றும் எந்த கலப்படமும் இல்லாததாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

மஞ்சள் தேநீரின் நற்குணங்கள்

மஞ்சள் தேநீரில் எண்ணிலடங்கா நற்பலன்கள் உள்ளன. இதனை தினமும் அருந்தி வரும் போது, உங்கள் உடலில் பல நல்ல மாற்றங்களை உணருவீர்கள். மேலும் உங்கள் ஆரோக்கியமும் அதிகரிப்பதை பார்ப்பீர்கள்.

வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதற்கான சூப்பர் டிப்ஸ்!

மஞ்சள்(turmeric) தேநீரில் உள்ள நற்குணங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள, இங்கே சில தகவல்கள்

மூட்டு வலியை குறைக்கும்: எதிர்ப்பு அழற்சி உள்ளதால், குர்குமின் மூட்டு வலி ஏற்படக் கூடிய வாய்ப்புகளை குறைக்க உதவுகின்றது. இந்த மஞ்சள்(turmeric) தேநீரை தொடர்ந்து எடுத்துக் கொண்டவர்கள், நாளடைவில் மூட்டு வலி குறைவதை உணருகின்றனர். மேலும் இது மருத்துவ ஆய்விலும் நிரூபிக்கப் பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகின்றது: குர்குமின் மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்றம், எதிர்ப்பு அழற்சி, மற்றும் பக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளோடு சேர்ந்து வேளை பார்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க உதவுகின்றது. மேலும் புற்றுநோய்க்கு எதிராக இது ஒரு நல்ல நோய் எதிர்ப்பு செயல்பாட்டை உருவாக்க உதவுகின்றது.

இருதய நோய் வராமல் காக்க உதவும்: பல ஆய்வுகளில், மஞ்சள்(turmeric), இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது நிரூபிக்கப் பட்டுள்ளது. இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் எதிர்ப்பு அழற்சி இருதய நோய் ஏற்படக் கூடிய வாய்ப்புகளை பெரும் அளவு குறைக்க உதவுகின்றது.

புற்றுநோய் வராமலும், குணப்படுத்தவும் உதவும்: மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகின்றது. மேலும் மஞ்சள்(turmeric) ஒரு ஆக்ஸிஜனேற்றமாகவும் எதிர்ப்பு அழற்சியாகவும் செயல் படுவதால், அணுக்கள் சேதமடைவதை தடுகின்றது. மேலும் இதனால் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்கள் வளருவதையும் தடுகின்றது.

எரிச்சல் கொண்ட குடல் நோய் குறியை போக்க உதவும்: மஞ்சள்(turmeric) பாரம்பரியமாக பல ஆயிரம் ஆண்டு காலமாக ஒரு நல்ல மருந்தாக பயன் படுத்தப் பட்டு வருகின்றது. குறிப்பாக ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்த இது பெரிதும் பயன் படுத்தப் படுகின்றது. இந்த வகையில், வயிற்றில் வலி, குடல் புண், மற்றும் வாயு பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

அல்சைமர் நோயை குணப்படுத்த உதவும்: மஞ்சளில் உள்ள குர்குமின் பல நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க உதவுகின்றது. மேலும் அதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் நோய் எதிர்க்கும் சக்தி அணுக்கள் சேதம் அடைவதை தடுத்து, நரம்பியல் பிரச்சனைகளை வர விடாமலும் பாதுகாகின்றது. மேலும் வயதாவதால் உடலில் ஏற்படும் புரத சத்து குறைபாட்டையும் குர்குமின் சீர் செய்ய உதவுகின்றது. குறிப்பாக நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை இது குணப்படுத்துகின்றது.

கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் பித்த நோய் கட்டிகளை போக்கும்: பல ஆய்வுகளின் முடிவுகள, மஞ்சளில் உள்ள குர்குமின் கலீரல் பாதிப்படையாமல் பாது காக்க உதவுகின்றது என்பதை கண்டறிந்துள்ளது. குறிப்பாக இது பித்த நோய் மற்றும் கலீரலில் நோய் தாக்கம் போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகின்றது.

வாவ் தினமும் அசத்தும் மேக்கப் எப்படி போடலாம்! சூப்பர் டிப்ஸ் இதோ!

Insta, gifskey, pexels, pixabay, Youtube

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்: பல ஆயிரம் ஆண்டுகளாக, மஞ்சளின் பயன் பாடு இருப்பதால், இது குறிப்பாக நீரழிவு நோய் ஏற்படுவதை தடுகின்றது. மேலும் இது பல ஆய்வுகளின் மூலமாகவும் நிரூபிக்கப் பட்டுள்ளது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகளை போக்கி, சர்க்கரை சீரான அளவு உடலில் இருக்க உதவுகின்றது.

நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிகின்றது: மஞ்சளில் ஆக்ஸிஜனேற்றம் அதிக அளவு இருப்பதால்  நீண்ட காலமாக இருக்கும் நுரையீரல் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகின்றது. இதில் இருக்கும் குர்குமின் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாகவும், விரைவாகவும் குணப்படுத்த உதவுகின்றது.

உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்: மஞ்சள்(turmeric) தேநீரை நீங்கள் தொடர்ந்து அருந்தி வரும் போது, உடலில் சேர்ந்துள்ள  கெட்ட கொழுப்பை வெளியேற்ற உதவுகின்றது. இதனால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பர்ச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகின்றது.

சரும ஆரோக்கியத்திற்கு

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல், மஞ்சள்(turmeric) சரும ஆரோகியத்தையும் அதிகப் படுத்த உதவுகின்றது. குறிப்பாக சருமத்தில் ஏற்படும் அரிப்பு, முகப் பரு, சருமம் சிவந்தால், தடிப்பு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது. இதனால் முகம் மற்றும் சருமம் நல்ல பொலிவை பெறுவதோடு, மேலும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகின்றது. சொரியாசிஸ் போன்ற பல நாள் சரும பிரச்சனைகளையும் குணப்படுத்த மஞ்சள்(turmeric) உதவுகின்றது.

எப்படி மஞ்சள் தேநீர் செய்வது?

பிற தேயிலை தேநீரைப் போல, மிக எளிதாக மஞ்சள்(turmeric) தேநீரை செய்து விடலாம். இதற்கு மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் தூளை உங்கள் சௌகரியத்திற்கு ஏற்றவாறு பயன் படுத்தலாம். மஞ்சள் தேநீரை எப்படி செய்வது என்று, இங்கே பார்க்கலாம்:

ஒரு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும், அதனுடன் துருவிய மஞ்சள்(turmeric) அல்லது ½ தேக்கரண்டி மஞ்சள்(turmeric) தூளை எடுத்துக் கொள்ளவும், தண்ணீரில் மஞ்சள் தூள் அல்லது துருவலை சேர்த்து 1௦ நிமிடம் வரை கொதிக்க விடவும், பின் வடி கட்டி தேவைப்பட்டால் இதனுடன் தேன், கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.

இந்த தேநீர் மேலும் பலன் தரும் வகையில், இதனுடன் சிறிது இஞ்சி, அல்லது சீரகம் மற்றும் மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.

அழகான கால்கள் மட்டும் பாதங்களை பெற என்ன செய்ய வேண்டும்!

Insta, gifskey, pexels, pixabay, Youtube

மஞ்சள் அதிகம் பயன் படுத்துவதால் ஏற்படும் சில உபாதைகள்

மஞ்சளில் பல நற்குணங்கள் இருந்தாலும், இதனை அதிக அளவில் பயன் படுத்தும் போது சில உபாதைகள் ஏற்படக் கூடும். மஞ்சளை ஒரு நல்ல மருந்தாக, சரியான அளவு பயன் படுத்தும் போதும் நல்ல பலனைத் தரும். எனினும் பரிந்துரைக்கப் பட்ட அளவு என்று ஒன்று இருப்பதால், நீங்கள் அதனை கவனத்தில் கொண்டே பயன்படுத்த வேண்டும்.

மஞ்சளை அதிகம் பயன் படுத்துவதால் ஏற்படும் சில உபாதைகளை பற்றி இங்கே பார்க்கலாம்:

 • பித்தப்பையில் பிரச்சனை மற்றும் கல் உருவாவது
 • பித்தட்டு பத்திகளை தடை செய்தல்
 • வயிற்றில் அல்சர்
 • உடலில் சர்க்கரையின் அளவு குறைவது
 • வயிற்றில் அமிலத்தன்மையை அதிகப் படுத்துவது

யார் மஞ்சள் தேநீரை அருந்தலாம்?

பொதுவாக அனைத்து வயதினரும் மஞ்சள் தேநீரை அருந்தலாம். இது எந்த பாதிப்புகளையும் தராது. எனினும், நீங்கள் ஏதாவது ஒரு உடல் நல பிரச்சனைக்காக மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன் பின் மஞ்சள் தேநீரை அருந்துவது நல்லது.

வயிற்றில் அல்சர் மற்றும் புண் இருந்தால், மஞ்சள் தேநீரை வெறும் வயிற்றில் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

முகப்பரு, மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ், வயிற்று போக்கும் கல்லீரல் பிரச்சனை, பித்தப்பை பிரச்சனை, தலைவலி, மாதவிடாய் பிரச்சனை, படர்தாமரை, தலைவலி, சிராய்புண் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சள் தேநீரை அருந்தலாம். இதனால் விரைவில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்கள் உடலில் காணலாம்.

உடல் எடையை குறைக்க மஞ்சள் தேநீர்

மஞ்சள் தேநீரை அதிக உடல் எடை உள்ளவர்கள் மற்றும் பருமனாக இருப்பவர்கள் அருந்தலாம். இதனை தொடர்ந்து அருந்தும் போது உடல் எடை குறைந்து நல்ல சீரான எடையை பெறுவீர்கள். மஞ்சளில் இருக்கும் குர்குமின் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது. அதிலும் குறிப்பாக, எந்த உபாதைகளும் இல்லாமல், எளிதாக உடல் எடை குறைய இது உதவுகின்றது.

Insta, gifskey, pexels, pixabay, Youtube

அது மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் நச்சுத் தன்மையையும் இது அகற்ற உதவுகின்றது. அதனால், எளிதாகவும், விரைவாகவும் உடல் எடை குறைய உதவுகின்றது. இதனால் நல்ல ஆரோகியத்தையும் பெறுவீர்கள்.

மேலும், பல வகை உடல் எடையை குறைக்க உதவும் மருந்துகளும், சிகிச்சைகளும் இருந்தாலும், ஒரு பாதுகாப்பான தேர்வாக மஞ்சள் தேநீர் இருக்கும்.

மஞ்சள் தேநீரை நீங்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் தேநீரை அருந்த குறிப்பிட்ட நேரம் ஏதும் இல்லை என்றாலும், பொதுவாக காலை வெறும் வயிற்றில் அருந்துவது நல்ல பலனைத் தரும். எனினும், அல்சர் மற்றும் வயிற்றில் புண் இருப்பவர்கள், ஒன்று அல்லது இரண்டு குவளை தண்ணீரை காலையில் அருந்தி விட்டு, சிறிது நேரம் கழித்து மஞ்சள் தேநீரை அருந்தலாம். அல்லது காலை உணவிற்குப் பின் சிறிது நேரம் கழித்து அருந்தலாம். நல்ல பலன் பெற வேண்டும் மற்றும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த தேநீரை எடுத்துக் கொள்வது நல்லது.

பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo