இந்தி நடிகை தீபிகா படுகோனும், பிரபல இந்தி பட நடிகருமான ரன்வீர் சிங்கும் காதலித்து வந்தனர். இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். எனினும் விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகவே சென்று வந்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் தீபிகா படுகோனும், ரன்வீரும் தங்கள் திருமண தேதியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
youtube
இதனை தொடர்ந்து அவர்களது திருமணம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 14, 15ம் தேதிகளில் விமர்சையாக நடைபெற்றது. இத்தாலியின் லோக் கோமா பகுதியில் உள்ள காஸ்டாதிவா ரிசாட் மற்றும் வில்லா தி எஸ்ட் ஆகிய இடங்களில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்து மும்பை வந்த ஜோடியை அவரது ரசிகர்கள் வரவேற்றனர்.
கலகலப்பாக நடந்த நடிகை சமீரா ரெட்டியின் சீமந்தம் : கண்கவர் புகைப்படத் தொகுப்பு!
சினிமா துறையினரும், அவர்களது ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் முடிந்து முதல் முறையாக மும்பையில் நடைபெற்ற ஸ்டார் ஸ்க்ரீன் விருது விழாவில் ஜோடியாக இருவரும் பங்கேற்றனர். இந்த விழாவில் ‘பத்மாவத்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்கிற்கு வழங்கப்பட்டது. மேடையில் விருதை வாங்கிய பின்னர் பேசிய ரன்வீர், பத்மாவதி படத்தில் நான் ஆசைப்பட்ட ராணி எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் என்னுடைய ராணி எனக்கு கிடைத்துவிட்டார் என்றார் தீபிகாவை பார்த்து பெருமையாக.
கடந்த ஆறு வருடத்தில் நான் எதையாவது சாதித்திருந்தால் அதற்கு நீ மட்டுமே காரணம். சினிமாவில் என்னை ஜொலிக்கும் அளவிற்கு செதுக்கியது நீதான் என்றும், உன்னால் கிடைத்த அனைத்திற்கும் நன்றி. ஐ லவ் யூ தீபிகா என்று கூறினார். இதனை கேட்டு நெகிழ்ந்த தீபிகா அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியில் கண் கலங்கினார். இந்த சமபவம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
ஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் பின்பற்ற வேண்டிய எளிய குறிப்புகள்!
இந்நிலையில் சென்னை தனக்கு சொந்த வீடு போல் இருப்பதாகவும், சென்னை மக்களுடன் வாழ ஆசைப்படுவதாகவும் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள வீஆர் மாலில் திசாட் (Tissot) வாட்ச் நிறுவனத்தின் புதிய ” திஸாட் பிஆர் 100 குரோனா ஸ்போர்ட் சிக் லேடி” மாடலை அறிமுகம் செய்து வைக்க தீபிகா படுகோனே வந்துள்ளார். இந்த விழாவில் பேசிய தீபிகா, சென்னை மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் கடந்த வருடம் சென்னைக்கு வந்திருந்தேன், தற்போது மீண்டும் வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினர்.
சென்னை எனக்கு சொந்த வீடு போல் உள்ளது. என் பூர்வீகம் பெங்களூருவாக இருந்தாலும், கிட்டத்தட்ட சென்னையும் என் பூர்விக ஊர் போலவே எனக்கு தோற்றுகிறது என்றார், மகிழ்ச்சியாக. மேலும் சுவையான தென்னிந்திய உணவுகள் இங்கே கிடைக்கின்றன. தென்னிந்திய உணவுகளில் தீபிகாவிற்கு பிடித்தது ரசம் சதாமாம். நான் கடைசியாக கூகுளில் தேடியது, ஹாட் சிப்ஸ் எங்கே கிடைக்கும் என்பதுதான் என்றும், ஒரே ஒருநாள் தலைமறைவாக இருந்து வாழ்வது என்றால் சென்னை மக்களுடன் வாழ்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் போட்டோசூட் நடத்தியுள்ளார். சில்வர் நிறத்தில் உடையணிந்து அழகாக காணப்பட்டார். இந்த புகைபடங்களை அவரது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். தற்போது வரை மில்லியன் கணக்கான ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு விருப்பங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது கணவர் ரன்வீர், புகைப்படங்கள் அழகாக இருப்பதாக கமெண்ட்ஸ் செய்துள்ளார். ரன்வீர் மற்றும் தீபிகா இணைந்து 83 என்ற படத்தில் நடிக்க உள்ளனர். கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி குறித்து இந்த படம் எடுக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ள முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமே அபிராமியின் காதலில் .. முதல் நாளே திட்டு வாங்கிய தர்ஷன்.. பிக்பாஸ் 3 சுவாரஸ்யங்கள்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo