கலகலப்பாக நடந்த நடிகை சமீரா ரெட்டியின் சீமந்தம் : கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

கலகலப்பாக நடந்த நடிகை சமீரா ரெட்டியின் சீமந்தம் : கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நடிகை சமீரா (sameera reddy) ரெட்டி இரண்டாவது குழந்தை ஈன்றெடுக்க உள்ள நிலையில், அவரது சீமந்தம் கோலாகலமாக நடைபெற்றது. தென்னிந்தியாவிலும், பாலிவுட்டிலும் சமீரா ரெட்டி பிரபலமான நடிகையாவார். குறிப்பாக தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

twitter

இதனை தொடர்ந்து அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். கடந்த 2014ம் ஆண்டு தொழிலதிபர்ரும், அவரது நண்பருமான அக்சய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்ட சமீராவிற்கு (sameera reddy) 3 வயதில் மகன் இருக்கிறான். திருமணத்திற்கு பிறகு திரை வாழ்க்கையில் இருந்து அவர் விலகியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் 8 மாத கர்ப்பமாக உள்ள அவர், தனது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

கலக்கலான போட்டியாளர்களால் களை கட்டும் பிக்பாஸ் வீடு !

சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் வயிறு தெரியும் வகையில் உடை அணிந்து சென்றதால் அனைவரது விமர்சனத்திற்கும் ஆளானார். இதனை தொடர்ந்து கவர்ச்சி உடை அணிந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். கர்ப்பமாக இருக்கும் போது பெரும்பாலான நடிகைகள் வெளியே தலை காட்டவே அஞ்சும் நிலையில், சமீராவோ(sameera reddy) தனது கருவை காட்டி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இதற்கு அவரது ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிகினி உடையில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சமீரா, கர்ப்பிணியாக இருக்கும் என்னை கேலி செய்கின்றனர். உங்கள் அம்மாவின் வழியாகத்தான், நீங்கள் இந்த உலகத்துக்கு வந்து இருக்கிறீர்கள். நீங்கள் பிறந்த போது உங்கள் தாய் கவற்சியாகவா இருந்தாரா என கேள்வி எழுப்பியிருந்தார். தாய்மை என்பது இயற்கையானது. அது அழகானது. முதல் குழந்தை பிறந்ததும் உடல் எடையை குறைக்க எனக்கு சில காலம் தேவைப்பட்டது. அதே போல இரண்டாவது குழந்தை பிறந்த பின்னரும் எடை குறைக்கும் முயற்சியில் இறங்குவேன் என குறிப்பிட்டிருந்தார்.

twitter

மேலும் பலர் சமீரா ரெட்டி (sameera reddy) என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரது விருப்பம். அதை கண்டிக்கும் உரிமை அவரது கணவருக்கு மட்டுமே உண்டு. மற்றவர்கள் அவரது உடை குறித்து விமர்சிக்க கூடாது என்ற கருத்தையும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனிடையே சமீபத்தில் திரைத்துறையினர் பலர் தான் கர்ப்பமாக இருக்கும் போது கூட தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை சமீரா ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தான் பிஸியாக நடித்து வந்த நிலையில் திடீரென நடிப்பிலிருந்து விலகினேன்.

பேரழகு மின்னும் பொலிவான முகம் வேண்டுமா! செலவில்லாமல் செய்யலாம் ரெட் ஒயின் பேஷியல்!

ஆனால் தான் ஏன் சினிமாவிலிருந்து விலகினேன் என யாரும் கண்டு கொள்ளவில்லை. இது தான் சினிமா என அறிந்து கொண்டேன் என வருத்தமாக கூறினார். திருமணம் ஆகி தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தும் திரைத்துரையில் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்தனர். பெண்களுக்கு சினிமா துறை பாதுகாப்பானது இல்லை. இந்த நிலை மாறவேண்டும் என்று அவர் கூறியது சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் சமீரா ரெட்டிக்கு (sameera reddy) சீமந்தம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. பாரம்பரியமாக மஞ்சள் புடவை அணிந்து அழகாக காணப்பட்டார். அவரது கணவர், மகன்கள், உறவினர்கள், நண்பர்கள் என சீமந்தம் விழாவை விமர்சையாக கொண்டாடியுள்ளனர். சிரிப்பு, விளையாட்டு, கேலி என கலகலப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வின் புகைப்படம், மற்றும் வீடியோ காணொளிகளை சமீரா தனது சமூக வலைதள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலர் புடவையில் சமீரா (sameera reddy) அழகா இருப்பதாக பலர் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
View this post on Instagram
 
 

I wanted to celebrate the people who stood by me these last few years. When I felt down and out and couldn’t get up . My husband, in laws, my family and friends were by my side. This Godh Bharai video is just not about the little one , it’s to give thanks to finding myself again . Maybe this baby gave me the strength to and for that I’m ever grateful . To my Instafam I share this with you guys because now you are part of this journey ❤️ . . Thank you to this wonderful team of storytellers who caught every moment so naturally. . #mua @namratasoni @maithily_hanamghar @filtercoffeeproductions @aka_patil7 @weddingsbyamit @photographsbyishan . . #godhbharai #secondinnings #baby #babyshower #indian #tradition #family #friends #husband #myson #momtobe #momlife #pregnant #pregnancy #blessed #instafam #video #grace #godhbharaiceremony #momtobeagain #pregnantbump #herewegoagain @jleibholz miss u!

A post shared by Sameera Reddy (@reddysameera) on

 

இயற்கையுடன் ஒரு பயணம் : இயற்கையின் பாடங்களை கற்றிட இந்தியாவின் 20 சிறந்த ட்ரெக்கிங் பகுதி!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo