ஒரு வழியாக வந்தே விட்டது அந்த ஜூன் 23ம் தேதி என்று பிக்பாஸ் (biggboss) ரசிகர்கள் கூத்திடுகிறார்கள். யாரும் எதிர்பார்க்காத ஆச்சர்யமான போட்டியாளர்கள் இந்த முறை களம் இறங்கி இருப்பதால் மூன்றாவது சீசன் சுவாரஸ்யமாகவே இருக்கும் என நம்பப்படுகிறது.
முதல் போட்டியாளராக அதிரடியாகவே நுழைந்திருப்பவர் செய்து வாசிப்பாளர் மற்றும் நடிகை பாத்திமா பாபு. மிகவும் பாந்தமான உடையணிந்து ஹோம்லியாக உள்ளே சென்றிருக்கும் பாத்திமா பாபு 100 நாட்களில் எப்படி இருக்க போகிறார் என்பது காண மக்கள் ஆவலோடு இருக்கின்றனர்.
ஐரோப்பாவில் நைட் அவுட்ஸ் – ஆர்யா சாயீஷாவின் வைரல் புகைப்படம் !
இவரை தொடர்ந்து இலங்கை செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா தனது கலக்கலான உடை பாணியோடு உள்ளே நுழைந்திருக்கிறார். யாரும் எதிர்பார்க்காதபடிக்கு இரண்டு செய்தி வாசிப்பாளர்கள் உள்ளே இருக்கின்றனர். ஊர் செய்தியை எல்லாம் வாசித்த அவர்களின் செய்திகளை நாம் இப்போது வாசிக்க போகிறோம் என்று பிக் பாஸ் மக்கள் பேசி வருகின்றனர்.
முதல் மழை நம்மை நனைத்ததே..! சென்னையின் மழைக் கொண்டாட்டங்கள் !
மூன்றாவது போட்டியாளர் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி சாக்ஷி அகர்வால். நல்ல ஒரு நடன நிகழ்வோடு தனது திறமையை நிரூபித்த பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி அகர்வால் சென்றிருக்கிறார்.
பேரழகு மின்னும் பொலிவான முகம் வேண்டுமா! செலவில்லாமல் செய்யலாம் ரெட் ஒயின் பேஷியல்!
நான்காவது போட்டியாளராக நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி நடிகை மதுமிதா சென்றிருக்கிறார். ஜாங்கிரியை பிக் பாஸ் வீட்டில் பார்க்க போகும் ரசிகர்கள் வயிறு சிரித்து சிரித்து புண்ணாகுமா எரிந்து போய் புண்ணாகுமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
முழு நிர்வாணமாக அமலா பால்.. சென்ஸார் தந்த சர்டிபிகேட்..
ஐந்தாவதாக சரவணன் மீனாட்சி புகழ் கவின் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கிறார். மூன்றாவது சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் நுழைந்த ஆண் போட்டியாளர் இவர்தான்
ஆறாவதாக மாடல் அபிராமி கலந்து கொள்ள போகிறார். முதல் சீசனில் ரைசா போல இந்த சீசனில் இவர் இருக்கிறார், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனே பசி பசி என்று கதறியிருக்கிறார். முதல் நாளே இப்படியாம்மா 100 நாள் தாங்குவாரா என்று மக்கள் ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.
ஏழாவது போட்டியாளராக நடிகர் சரவணன் சென்றிருக்கிறார். பருத்தி வீரன் படத்திற்கு பிறகு பெரிதான வாய்ப்புகள் இல்லாத நிலையில் பிக் பாஸ் மூலம் தனக்கு பிரேக் கிடைக்கலாம் என்று நினைத்து சரவணன் இதில் கலந்து கொண்டிருக்கலாம் என மக்கள் கூறுகின்றனர்
நடிகை வனிதா என்றாலே சர்ச்சை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். கணவருடன் சண்டை தகப்பனாருடன் பிரச்னை என எல்லாமே போலீஸ் ஸ்டேஷன் சென்று தான் வெளியே வந்தது. இவர்தான் எட்டாவது போட்டியாளர். தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்ய தகவல்கள் இவர் மூலம் நமக்கு கிடைக்கலாம் என மக்கள் கூறுகின்றனர்.
ஒன்பதாவது போட்டியாளர் யாருமே யோசிக்காததும் எதிர்பார்காததும் ஆன ஒருவர். இம்முறை இயக்குனர் சேரன் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். சமீபத்தில் திருமணம் என்கிற படத்தை இவர் இயக்கியிருந்தார். சேரன் மூலம் வாழ்க்கைக்கான பாடங்கள் நமக்கு கிடைக்கும் என தத்துவவாதி பிக் பாஸ் மக்கள் ஒருபக்கம் எதிர்பார்க்கின்றனர்.
பத்தாவதாக கவர்ச்சி புயல் ஷெரின் சென்றிருக்கிறார். 90ஸ் கிட்ஸ் களின் கனவுக்கன்னியான ஷெரினை பார்த்த உடன்தான் ஆண் ரசிகர்கள் பலர் நிம்மதி அடைந்ததாக தெரிய வருகிறது! அழகிய அசுரா பாடலை அத்தனை சீக்கிரத்தில் மறந்து விட முடியுமா என்ன !
11வது போட்டியாளராக நாம் எதிர்பார்த்தபடியே மோகன் வைத்யா சென்றிருக்கிறார். இவரது மகனுக்கு வாய்பேச முடியாத மகன் ஒருவர் இருப்பதை விஜய் டிவி மேடையில் தான் அறிந்து கொள்ள முடிந்தது. ஆரம்பம் அன்றே பார்வையாளர்களை நெகிழ வைத்து விட்டார்.
12வது போட்டியாளராக மேலும் ஒரு இலங்கை தமிழர் சென்றிருக்கிறார். ஐ தி துறையில் வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து சில விளம்பரப்படங்களில் நடித்திருக்கிறார்.இவர் பெயர் தர்ஷன். மாடல்.
பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காஜலின் முன்னாள் கணவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். போன சீசன் போட்டியாளர்களை தனது சிறப்பு நடனம் மூலம் கிண்டல் செய்தவர் அவரே இப்போது பிக் பாஸ் வீட்டிற்கு 13 வது போட்டியாளராக செல்கிறார் என்றால் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.
14வது போட்டியாளராக பாடகர் முகென் ராவ் செல்கிறார். இவர் மலேசியாவை சேர்ந்த தமிழர். இம்முறை பிக் பாஸ் உலகெங்கிலும் உள்ள தமிழ் பிரபலங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள் போல.
15வது போட்டியாளராக திரைப்படம் மூலம் பிரபலமான ரேஷ்மா உள்ளே செல்கிறார். இவர் ஏர் ஹோஸ்டஸ் வேளையில் இருந்தவர். ஒரு திரைப்படத்தில் சூரியின் மனைவி புஷ்பாவாக வந்து புஷ்பா புருஷனா நீ என்று எல்லோரையும் கேட்க வைத்தவர். நல்ல அழகும் திறமையும் இருந்தும் வாய்ப்புகள் இல்லை. இப்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார்.
ஆக இப்படி 15 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். பார்த்து பார்த்து விஜய் டிவி தேர்ந்தெடுத்திருக்கும் இந்த போட்டியாளர்களால் இனிமேல் தினமும் இரவு 9 மணிக்கு மேல் நமக்கு நன்றாகவே பொழுது போகும் என நம்பலாம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.