முதல் மழை நம்மை நனைத்ததே..! சென்னையின் மழைக் கொண்டாட்டங்கள் !

முதல் மழை நம்மை நனைத்ததே..! சென்னையின் மழைக் கொண்டாட்டங்கள்  !

தமிழகத்தின் தலைநகரில் சில மாதங்களாகவே வெயில் வாட்டி எடுத்து கொண்டிருந்தது. சென்னை மக்களெல்லாம் மைக்ரோவேவ் அவனுக்குள் மாட்டிய தந்தூரி சிக்கன்களாக தவித்து கொண்டிருந்தனர். 

நிலத்தடி நீர் குறைந்து ஏரிகள் எல்லாம் காய்ந்தது.. சென்னையை வெள்ளக்காடாக மாற்றிய செம்பரம்பாக்கம் ஏரி கூட வறண்டு போனது. அதில் இருந்த மீன்கள் எல்லாம் நீரின்றி இறந்து போயின.. புழல் ஏரி பூண்டி ஏரி என எல்லா ஏரிகளும் வறண்டு விட தலைநகரம் நீரின்றி தத்தளித்தது.                                           

 

Twitter

தண்ணீரை தேடி தாகத்தோடு திரிந்தது சென்னை. பலர் ஊரையே காலி செய்து கொண்டு வெளியேறி விட ஒரு சிலர் நகரம் தாண்டி குடியேறி இருக்கின்றனர். இப்படி 6 மாதமாக மழை என்பதை துளி கூட கண்ணில் பார்க்காமல் சென்னை மக்கள் மனம் நொந்து கிடந்தனர்.                                        

அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் நேற்று சென்னை முழுவதுமே நல்ல மழை பெய்திருக்கிறது. இதனை உடனடியாக #chennairains #chennairain என்று சென்னை மக்கள் கொண்டாடி தீர்த்திருக்கின்றனர். இந்திய அளவில் இந்த ஹாஸ்டேக்கள் ட்ரெண்டாகி இருக்கிறது.           

மழை விழும் போதெல்லாம் என்னை வந்து சேர்வாயா.. .. மழைக்கால ரொமான்ஸ் குறிப்புகள் !                             

சென்னை மக்களின் மழைக் கொண்டாட்டங்களை பார்க்கையில் மொத்த தமிழகமும் சந்தோஷம் கொள்வதாக முகநூலில் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கூறி வருகின்றனர்.                                           

இந்த சந்தோஷங்களை மேலும் நீட்டிக்கும் வகையில் வானிலை மையம் இன்னும் 6 நாட்களுக்கு சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யலாம் என்று கூறி இருக்கிறது. முன்பை போல இல்லாமல் இந்த வானிலை அறிக்கைகள் எல்லாம் கூறியபடியே பலிக்கின்றன என்பது கூடுதல் தகவல் !       

 முழு நிர்வாணமாக அமலா பால்.. சென்ஸார் தந்த சர்டிபிகேட்..                               

புதிதாக உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு சென்னையில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெட்டிசன்கள் இந்த நிகழ்வை மழை வருது மழை வருது குடம் கொண்டு வா என்று வழக்கமான கிண்டலோடு கொண்டாடி வருகின்றனர். chennai rain

மழை விழும் போதெல்லாம் என்னை வந்து சேர்வாயா.. .. மழைக்கால ரொமான்ஸ் குறிப்புகள் !

Twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன

Also Read பருவமழை காதல்