பிக் பாஸ் 3வது சீசன் : இரண்டு போட்டியாளர்களின் பெயர்கள் அறிவிப்பு!

 பிக் பாஸ் 3வது சீசன் : இரண்டு போட்டியாளர்களின் பெயர்கள் அறிவிப்பு!

தமிழ்நாட்டின் பிகப் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றன. பொழுது போக்கின் உச்ச கட்டமான பிக் பாஸ் ஷோ விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை இரண்டு சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் ஜூன் 23ம் தேதி மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது. ஒவ்வொரு முறை பிக் பாஸ் ஷோ முடியும் போதும் அடுத்த ஷோ எப்போது தொடங்கும் என்று நேயர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருப்பார்கள். பிக் பாஸ் ஷோவுக்கு மட்டும் சலிப்பே இல்லை என்பது நிதர்சமான உண்மை.

பிக் பாஸ் வீட்ல விசேஷங்க !

ஏனெனில் ஒவ்வொரு சீசனுக்கு புதிய பரிமாணங்கள் உண்டு. புதிய முகங்கள், புதிய குணங்கள் என ஏகப்பட்ட புதுமைகள் இதில் உள்ளன. கடந்த இரண்டு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. மேலும் மூன்றாவது சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் பிக் பாஸ் 3 (bigg boss) அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 15 நிமிடம் கொண்ட அந்த டீசரில் உலக நாயகன் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


வீடியோவில் இந்த சீசனில் 15 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர். எனவே இந்த முறை நிகழ்ச்சியில் பங்கேற்க போவது யார் யார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. கடந்த சீசன்கள் போலவே இந்த சீசனிலும் முதல் எபிசோட்டில் தான் போட்டியாளர்கள் யார் என்பதை அறிவிப்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் நடிகை மதுமிதா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடி  படத்தில் சந்தானத்திற்கு ஜோடியான இவர் ஜாங்கிரி என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

 

பிக் பாஸை இயக்கும் பெண் பாஸ் ! யாரும் அறிந்திராத பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறுபக்கம் !

மற்றொரு போட்டியாளராக பாடகர் மற்றும் நடிகரான மோகன் வைத்யா பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாடகர் மோகன் வைத்யா அன்னியன், சேது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த முறை பாடகர் ஆனந்த் வைத்தியநாதன் கலந்து கொண்ட நிலையில் இந்த சீசனிலும் ஒரு பாடகரை களமிறக்க நிகழ்ச்சி குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் மற்ற போட்டியாளர்களின் பட்டியலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. அதனை தொடர்ந்து தினமும் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இதனிடையே பிக் பாஸ் 2 (bigg boss) போட்டியாளர்கள் தங்களது ஒரு வருட பயணத்தை கொண்டாடினர். பிக் பாஸில் (bigg boss) கலந்து கொண்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் இது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ள நடிகை மும்தாஜ், 17.06.2018 இன்று தான் நாம் அனைவரும் ஒன்றுக்குள் ஒன்றான நாள். நீங்கள் அனைவரும் வெளியில் இருந்து எனக்காக வேண்டிக்கொண்டது நிகழ்ச்சியில் எனக்கு உதவியது.

 

 
 
 
View this post on Instagram
 
 

@jananiiyer @mamathichariofficial @ramyansk @shariqqqq777 #friendship #Mumtazfamily

A post shared by Mumtaz (@mumtaz_mumo) onநான் மகிழ்ச்சியாக இருக்கும் போது, நீங்களும் மகிழ்ந்தனர். நான் டார்கெட் செய்யப்பட்டபோது நீங்களும் டார்கெட் செய்யப்பட்டீர்கள். நான் கவலையாக இருந்த போது நீங்களும் அந்த கவலையை உணர்தீர்கள். நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த  போது உங்களுடைய அதிகபட்சமான அன்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. இந்த அன்பை என்னால் திருப்பி தர முடியாது. ஆனால் உங்கள் அன்பிற்கு நான் நன்றி கடன்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடிகை யாசிஹா ஆனந்த் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தத்தா தனியாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அவர்கள் இருவரும் ஒன்றாக உள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். 

நெஞ்சு வலியால் இயக்குனர்மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.


பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo