நடிகை விஷ்ணு பிரியா (vishnupriya), மலையாள தயாரிப்பாளர் ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய் என்பவரை திருமணம் செய்துள்ளார். தமிழில் செல்வா இயக்கத்தில் நாங்க என்ற படத்தில் இவர் அறிமுகமானார். இவர் மலையாளத்தில் 20கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்பீட் ட்ராக் என்ற படத்தில் அறிமுகமாகிய இவர், ராத்திரி மழா, பெண்பட்டணம், மகர மஞ்சு, கிரைம் ஸ்டோரி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது.
மேலும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். அய்யப்பா சரணம் என்ற சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனங்களை வென்றார். மலையால சினிமா இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகளை கொடுத்தாலும் தமிழ் சினிமா இவரை பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்க என்ற படத்தில் முன்னணி வேடங்களில் புதுவரவுகள் நடித்திருந்தனர்.
படத்தின் கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்திருந்தார். செல்வாவின் இயக்கத்தில் வெளியான 25 வது படமான இத்திரைப்படத்தின் கதை, திருச்சி கல்லூரியின் 1985ம் ஆண்டு படித்த மாணவர்கள் மீண்டும் 2011ல் சந்திக்கின்றனர். அப்போது ஏற்படும் சுவாரசியமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமந்திருந்தது. எனினும் இந்த படம் பெரிதாக வெற்றி பெறாததை தொடர்ந்து, புதுமுகங்கள் தேவை என்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
சிங்க குட்டி திரைப்படத்தில் நடித்த சிவாஜி தேவ், இரண்டாவது கதா நாயகனாக ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் அறிமுகமானார். இவர்களுக்கு ஜோடியாக பானு, விஷ்ணு ப்ரியாவும் நடித்தனர் மேலும் இத்திரைப்படத்தில் ராஜ்கபூர், காதல் தண்டபாணி, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், கிரேன் மனோகர் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தை மனீஷ் பாபு இயக்கியிருந்தார். இந்த படமும் படு தோல்வி அடைந்ததால், அதன் பின்னர் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.
மேலும் பரத நாட்டிய கலைஞரான விஷ்ணு பிரியா (vishnupriya) கேரளாவில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் மலையாள பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய் என்பவருக்கும், விஷ்ணு ப்ரியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த வீடியோ மற்றும் போட்டோவை விஷ்ணு பிரியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். மேலும் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் அதனை கொண்டாடும் வகையில், கேக் கட்டிங் செய்திருந்தனர். இந்த புகைப்படங்களையும் விஷ்ணு பிரியா ஷேர் செய்திருந்தார்.
இதை பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர் வினய் உடன் வெளியே செல்லும் புகைப்படங்களையும் அவ்வப்போது ஷேர் செய்வார். கேரளா டான்ஸ் லீக்கில் கேப்டனாக இருந்து வரும் நிலையில் இவர்கள் திருமணம் ஆழப்புழையில் உள்ள கேம்லாட் கன்வென்சன் மையத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
விஷ்ணு பிரியா (vishnupriya) திருமண அலங்காரத்தில் அழகாக காட்சியளித்தார். நடிகைகள் பாமா, சரன்யூ, ஸ்ருதி லட்சுமி, இயக்குனர் சித்தி உட்பட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதனை தொடர்ந்து இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 29ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு திரையுலகினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் பல்வேறு டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தொகுளிப்பாளர் மற்றும் நடுவராக விஷ்ணு ப்ரியா இருந்து வருகிறார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதே அவரது ஆசை என்று கூறியுள்ளார். அவரது கணவர் வினய் தொடர்ந்து திரைப்படங்கள் இயக்கும் முடிவில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.