கின்னஸ் சாதனை பெண் இயக்குனரும், நடிகையுமான விஜய நிர்மலா காலமானார் : திரை உலகினர் இரங்கல்!

கின்னஸ் சாதனை பெண் இயக்குனரும், நடிகையுமான விஜய நிர்மலா காலமானார் : திரை உலகினர் இரங்கல்!

தமிழ்நாட்டில் பிறந்து, தெலுங்கு சினிமாவில் நடிகை மற்றும் இயக்குனராக கலக்கிய விஜய நிர்மலா (vijayanirmala) இன்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட விஜயநிர்மலாவிற்கு தாய்மொழி தெலுங்கு என்றாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். 

youtube

சினிமா வரலாறு

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக 7 வயது சிறுமியாக இருக்கும்போது அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 15 வயதில் பார்கவி நிலையம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் தமிழில் எங்க வீட்டுபெண் படத்தில் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியான சவுகார் என்ற படத்தை விஜயா புரொடக்ஷன் எங்கவீட்டுபெண் என பெயரிட்டு தயாரித்தது. தொடர்ந்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் தயாரான பணமா பாசமா படத்தில் விஜயநிர்மலா நடித்தார்.  இந்த படம் சூப்பர்ஹிட் ஆனது. மேலும் இந்த படத்தில் இருந்த எலந்தப்பழம் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியதில், ஒரே பாடலில் புகழ் பெற்றார். 

அதன் பிறகு என் அண்ணன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு தங்கையாக நடித்தார். பிறகு சோப்பு சீப்பு கண்ணாடி என்ற படத்தில் நாகேசுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் அடிக்கடி அலேக் என்று கூறுவார். அது பிரபலமாகவே அலேக் நிர்மலா (vijayanirmala) என்று அழைக்கப்பட்டார். தமிழ் படங்களில் நடித்து வந்த போதே தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். அந்த படங்களிலும் அவருக்கு வெற்றியை கொடுக்கவே அதன் பின்னர் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். 

திருமண வாழ்க்கை

youtube

முன்னணி நடிக்கராக இருந்த கிருஷ்ணாவுடன் இணைந்து 50 படங்களில் நடித்தார். மலையாளத்தில் பிரேம் நசீர் மற்றும் ஷீமா, தமிழில் சிவாஜி மற்றும் பத்மினி போன்று தெலுங்கில் கிருஷ்ணா மற்றும் விஜயநிர்மலா ஜோடி மிகவும் பிரபலமாக காணப்பட்டனர். படங்களில் நடித்த போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஜயா நரேஷ் என்னும் மகன் உள்ளார். இவரது மகன் நரேஷூம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். 

இயக்குனர் அவதாரம்

இதனை தொடர்ந்து இயக்குனர் ஆனார் முதன் முதலாக பெசோடா பெப்புலி என்ற மலையாளப் படத்தை இயக்கினர். இந்த படத்தில் சிவாஜியையும் கணவர் கிருஷ்ணாவையும் கதாநாயகர்களாக நடிக்க வைத்து இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 

விருதுகள்

உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையை விஜய நிர்மலா (vijayanirmala) பெற்றார். இதற்காக கடந்த 2002ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். இதனையடுத்து 2008ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் பங்களித்ததற்காக 'ரகுபதி வெங்கையா' விருதினை பெற்றுள்ளார்.

youtube

இவரும், தெலுங்கு நடிகையான சாவித்திமட்டுமே புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனை இயக்கிய பெருமைக்குரியவர்கள் ஆவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியமொழிகளில் மொத்தம் 275 படங்களில் நடித்துள்ளார். 250 படங்களுக்கு மேல் நடித்து, 40 படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்து தென்னிந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக விஜயநிர்மலா இருந்தார்.

youtube

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். நேற்று இரவு ஐதராபாத் காண்டினென்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய நிர்மலா மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு தெலுங்கு, தமிழ் திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.விஜய் நிர்மலா மறைவு குறித்த பதிவிட்டுள்ள, நடிகர் மனோஜ் நீங்கள் வந்தீர்கள், யாரும் அருகில் வர முடியாத அளவிற்கு வரலாற்றை உருவாக்கினீர்கள். இப்பொது நீங்கள் எங்களை விட்டு சென்று விட்டீர்கள். நாங்கள் அனைவரும் உங்களை மிஸ் பண்ணுவோம்.  உங்கள் திரைப்படங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.