முன்னாள் காதலரை திருமணத்திற்கு அழைக்கக்கூடாது என்பதற்கான 5 முக்கிய காரணங்கள்

முன்னாள் காதலரை திருமணத்திற்கு அழைக்கக்கூடாது என்பதற்கான 5 முக்கிய காரணங்கள்

இளம் வயதில் ஒருவர் காதலில் விழுவது இயல்பு. எனினும், ஒரு சில காரணங்களால், ஏனோ அந்த காதல் திருமணத்தில்(wedding) முடியாமல் இடையிலேயே நின்று விடுகின்றது. இதனால் இருவரும் நிரந்தரமாக பிரிய வேண்டிய சூழல் எழுகின்றது. முதல் காதல் என்றும் மனதை விட்டு அகலாது என்பது போல, வேறு திருமணத்திற்கு முயற்சிகள் எடுத்தாலும், உங்களது முதல் காதலை மறக்க முடியாமல் மனம் அவதிப் படுவது இயல்பு தான். இதனால், உங்களுக்கு வேறு திருமணம்(wedding) நிச்சயம் செய்த பின், நீங்கள் உங்கள் திருமணதிற்கு உங்கள் முன்னாள் காதலரை ஒரு சில காரனங்களுக்காக அழைக்க எண்ணக் கூடும். இதனால் ஏற்படும் நன்மைகளை விட ஆபத்துகள் அதிகமாக இருக்கும்.

நீங்கள் திருமணம் (wedding)செய்து கொள்ளப் போகும் நபர், பரந்த மனப்பான்மையோடுஉங்களது முன்னாள் காதலை பற்றி தெரிந்து கொண்டு, அதனை பெரிது படுத்தாமல், உங்களுடனான இந்த திருமண வாழ்க்கையை இனிதே தொடங்க என்னலாம். இருப்பினும், நீங்கள் திருமணதிற்கு(wedding) உங்கள் முன்னாள் காதலரை அழைக்கும் போது அது அவரது மனதில் சில சங்கடங்களை ஏற்படுத்தினால், அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. அது மட்டுமல்லாது அதனால் ஏற்படக் கூடும் சில பாதிப்புகளை பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டு அதன் பின் அந்த முயற்சியை எடுப்பது நல்லது.

எப்போதும் சூழல் ஒன்று போல இறுதி வரையில் இருப்பதில்லை. அதனால் நீங்கள் எடுக்க என்னும் இந்த முடிவு உங்கள் திருமண(wedding) வாழ்க்கையை பாதித்து விடாமல் இருக்க, நீங்கள் ஏன் உங்கள் முன்னாள் காதலரை அழைக்க கூடாது என்று இங்கே சில முக்கிய காரணங்கள் பின்வருமாறு

உங்கள் முன்னாள் காதலரை திருமணதிற்கு(wedding) அழைக்கக் கூடாது என்பதற்கான 5 காரணங்கள்

1. உங்கள் கணவருக்கு சில அசௌகரியத்தை கொடுக்கலாம்

திருமணத்திற்கு முன் இருந்த உங்கள் வாழ்க்கை வேறு திருமணத்திற்கு(wedding) பின் உங்கள் வாழ்க்கை வேறு என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். என்ன தான் உங்கள் கணவர் பரந்த மனப்பானமையோடு உங்களுடன் வெளிப்படையாக நடந்து கொண்டாலும், வாழ்க்கையின் ஏதாவது ஒரு சூழலில் நீங்கள் உங்கள் முன்னாள் காதலரை திருமணதிற்கு(wedding) அழைத்தது அவருக்கு அசௌகரியத்தை தருவதாக இருக்கலாம். குறிப்பாக உங்கள் திருமணத்தன்று(wedding) நீங்கள் உங்கள் கணவரிடம் முன்னாள் காதலரை அறிமுகப் படுத்தும் வகையில் ஏதாவது சூழல் ஏற்பட்டால், அது உங்கள் கணவரின் மனதை நிச்சயம் பாதிக்கக் கூடும். மேலும் இது உங்கள் இருவருக்கும் இடையே அந்த சிறப்பான நாளில் உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியையும் பாதிக்கக் கூடும். ஒன்றை மறந்து விட வேண்டாம். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை ஏற்படுவது. அதன் நினைவுகள் விலை மதிக்க முடியாதது. அதனால், நீங்கள் முடிந்த வரை அந்த நாளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

2. பழைய நினைவுகளை கொண்டு வர வேண்டாம்

திருமணத்தன்று உங்கள் கணவரோடும், உறவினர்களோடும் உங்களுக்கு ஏற்படவிருக்கும் அனுபவம் உங்கள் வாழ் நாள்  முழுவதும் பசுமையாக இருக்கும் ஒன்று. இதனை நீங்கள் எந்த சூழலிலும் கெடுக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. நீங்கள் உங்கள் முன்னாள் காதலரை திருமணதிற்கு (wedding)அழைத்தால், நிச்சயம் உங்களுக்கு கிடைக்கவிருக்கும் அந்த அழகான நினைவுகள் பாதிக்கக் கூடும். மேலும் அது ஒரு தழும்பு போல உங்கள் நினைவில் நிரந்தரமாகவும் பதிந்து விடக் கூடும். அதனால், ஒரு போதும் உங்கள் முன்னாள் காதலரை திருமணத்திற்கு (wedding)அழைத்து உங்களது அழகான திருமண நாளை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இது உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாகும்.

கோடை கால பராமரிப்பு

wedding003

3. உங்கள் திருமண வாழ்க்கையின் ஒரு மோசமான தொடக்கமாக அமைந்து விடக் கூடும்

ஒரு திருமணத்தின்(wedding) தொடக்கம் ஒரு அழகான வாழ்க்கைக்கான அஸ்திவாரம். அப்படி இருக்கும் போது, நீங்கள் உங்கள் கணவருடன் திருமண (wedding)வாழ்க்கையை இனிதாக தொடங்க வேண்டிய அந்த நாளில், உங்கள் முன்னாள் காதலர் உங்கள் முன் தோன்றினால், நிச்சயம் அது உங்கள் மன நிலையை பாதிக்கக் கூடும். இதனால், உங்கள் மனதில் மகிழ்ச்சி இருகின்றதோ இல்லையோ, நிச்சயம் ஒரு ஓரத்தில் உங்கள் முன்னாள் காதலருடன் நீங்கள் வாழ எண்ணிய அந்த வாழ்க்கை, உங்கள் கற்பனையில் இருக்கும் போது, நிதர்சனத்தில் உங்கள் கணவருடன் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கும் அந்த நேரத்தில், அது உங்களுக்கு ஒரு குழப்பம் நிறைந்த மோசமான தொடக்கமாக அமைந்து விடக் கூடும். அதனால் உங்கள் முன்னாள் காதலரை திருமணதிற்கு அழைக்காமல் இருப்பதே நல்லது.

4. உங்கள் முன்னாள் காதலர் நிச்சயம் நண்பராக இருக்க முடியாது

மற்றுமொரு முக்கிய காரணமாக ஒன்றை கூறலாம். அது, எந்த தருணத்திலும், எந்த காரணத்தை கொண்டும், உங்கள் முன்னாள் காதலர் உங்களுக்கு நண்பராக மாற முடியாது. ஒரு முறை நீங்கள் இருவரும் பிரிந்து விட்டால், அதிலும், உங்களுக்கு வேறு ஒருவருடன் திருமணம் (wedding)நடந்து விட்டால், பின் நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் உங்கள் முன்னாள் காதலருடனான நட்பை எதிர் பார்க்காமல் இருப்பதே உங்களது திருமண வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பான சூழலை தரக் கூடும். மேலும் அப்படியே நீங்கள் நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்று முடிவு செய்து, திருமணதிற்கு (wedding)பின் நண்பர்களாக இருக்க முயற்சி செய்தாலும், நிச்சயம் உங்களது கடந்த கால நினைவுகள் உங்கள் மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். இதனால் நீங்கள் நண்பர்களாகவும் முழு மனதோடு இருக்க முடியாது. மேலும் இது உங்கள் கணவருடனான உறவையும் பாதிக்கக் கூடும். அதனால, உங்கள் திருமணதிற்கு உங்கள் முன்னாள் காதலரை அழைக்காமல் இருப்பதே நல்லது. மேலும் உங்கள் உறவையும் நிரந்தரமாக மறந்து விடுவது, உங்கள் திருமண (wedding)வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்த உதவும்.

5. கடந்த காலம் எபோதும் வருத்தத்தையே தரும்

ஒருவர் தன் வாழ்க்கையில் அதிகம் நேசித்த ஒன்றை இழந்து விட்டால், நிச்சயம் அது மனதை வருத்திக் கொண்டே இருக்கும். அதிலும், நீங்கள் மிகவும் ஆசையாக வாழ எண்ணிய ஒரு வாழ்க்கை கிடைக்காமல் போகும் தருணத்தில் அந்த எண்ணங்கள், வாழ் நாள் முழுதும் உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் மனதில் வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கக் கூடும். இந்த சூழலில் நீங்கள் உங்கள் முன்னாள் காதலரை உங்கள் திருமணதிற்கு (wedding)அழைத்தால் அது மேலும் உங்கள் மன வருத்தத்தை அதிகப் படுத்தி, உங்கள் கணவருடனான வாழ்க்கையையும் நிம்மதியாக வாழ முடியாமல் உறுத்தலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இது மகிழ்ச்சியை விட வருத்தத்தை அதிகமாக தரக் கூடும். அதனால், உங்கள் முன்னாள் காதலரை திருமணதிற்கு (wedding)அழைக்காமல் இருப்பதே நல்லது.

 

gifskey, pexels, pixabay, Youtube

மேலே கொடுக்கப்பட்ட இந்த 5 காரணங்கள் மட்டுமல்லாது, மேலும் பல உள்ளன. காரணங்கள் பல இருந்தாலும், இனி வரும் காலத்தில், திருமணத்திற்குப் (wedding) பின் உங்கள் கணவருடன் நீங்கள் வாழப் போகும் வாழ்க்கை மிக முக்கியமான ஒன்று. அதனை நீங்கள் மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.
ஷாலினி பாண்டேவின் பிகினி புகைப்படம்.. இன்ஸ்டாக்ராமை சூடாக்குகிறது !

திருமணதிற்கு (wedding) முன், நீங்கள் உங்கள் மனதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் இனி வரும் காலத்தில், உங்களது பழைய காதல் நினைவுகளை மறந்து விட்டு, உங்கள் கணவருடன் ஒரு நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை உங்களால் அமைத்துக் கொள்ள முடியும் என்று நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். எந்த சூழலிலும், உணர்ச்சிவசப் பட்டு, உங்கள் முன்னாள் காதலரின் நினைவுகள் ஏற்பட்டு, உங்களது அழகான திருமண வாழ்க்கை பாதித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வேளை, உங்கள் முன்னாள் காதலர் உங்களுக்கு வாக்குறிதி கொடுத்து, அதை நிறைவேற்றாமல் உங்களை ஏமாற்றி இருந்திருக்கலாம். இதன் காரணமாகவும் நீங்கள் இருவரும் பிரிந்திருக்கலாம். அப்படி ஒரு சூழலில், உங்களுக்கு வேறு ஒருவருடன் திருமணம் (wedding) நடக்கும் போது, உங்கள் முன்னால் காதலரை திருமணதிற்கு அழைத்தால், அது நிச்சயம் ஒரு சங்கடமான நிலையையே உங்களுக்கு திருமணத்தன்று ஏற்படுத்தக் கூடும். மேலும் இது வலி மிகுந்த சூழலாகவும் மாறலாம்.

என்றும் நினைவுகளை அழிக்க முடியாது. அதிலும், குறிப்பாக உங்கள் காதல் நினைவுகள் என்றும் உங்கள் மனதில் இருந்து நீங்காமல் இருப்பவை. உங்கள் திருமணத்திற்கு (wedding) பின், உங்கள் கணவருடனான அந்த அழகான வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் நினைவுகளை நீங்கள் உங்கள் மனதில் பதித்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகளை மறக்க முயற்சி செய்ய வேண்டும். திருமணதிற்கு (wedding)பின் உங்கள் கணவருடனான வாழ்க்கை மட்டுமே உங்களுக்கு நிரந்தரமானதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கும். இதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதே ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும்.

 

gifskey, pexels, pixabay, Youtube

முடிந்த வரை நல்ல மகிழ்ச்சியான சூழலை அமைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது, நீங்கள் உங்கள் புது வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தை பார்ப்பதோடு, அதை நீடித்துக் கொண்டு போகும் வாய்ப்பும் உங்களுக்கு பலமாகும். இதனால் உங்கள் திருமண வாழ்க்கை நீங்கள் எதிர் பார்த்ததை விட அதிக மகிழ்ச்சி தரக் கூடியதாக அமையும்.

எனினும், நீங்கள் அப்படியே உங்கள் முன்னாள் காதலரை திருமணதிற்கு அழைக்க எண்ணினால், ஒரு முறைக்கு பல முறை நன்கு சிந்தித்து பின் செயல் படுவது நல்லது. பலருக்கு, திருமணம் (wedding) செய்து கொள்ளபவரிடம் தன்னுடைய கடந்த காதலை பற்றி கூற வேண்டும் என்று தோணலாம். அதற்கு முன் நீங்கள் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, மற்றும் அப்படி கூற வேண்டியது அவசியம்தானா அல்லது, அதை பற்றி சொன்னால், உங்களை திருமணம் செய்து கொள்ளப் போறவர் அதனை எப்படி எடுத்துக் கொள்வார் என்று பல கோணங்களில் சிந்தித்து பின் செயல் பட வேண்டும். இறுதியில், எந்த வகையிலும், நீங்கள் உங்கள் முன்னாள் காதலரை அழைப்பதால், எந்த பிரச்சனையும் ஏற்படாது அல்லது திருமணத்தன்று ஏற்படப போகும் நிகழ்வுகள் உங்களது புது வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, அவரை அழைப்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.
முதல் முறையாக குழந்தையை வெளியில் காமித்த ப்ரஜின் மற்றும் சாண்ட்ரா

எதுவாக இருந்தாலும், நீங்கள் உங்கள் முன்னால் காதலரை உங்கள் திருமணதிற்கு அழைக்காமல் இருப்பதே நல்லது. புதிய மகிழ்ச்சியான உங்கள் வாழ்க்கையை தொடங்குவதே சிறந்த செயலாக இருக்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo